நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
பீட்ரூட் பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். பீட்ரூட் மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும். 100 கிராம் பீட்ரூட்டில் C…
-
- 13 replies
- 1.3k views
-
-
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஏப்ரல், 2013 - 16:06 ஜிஎம்டி Facebook Twitter பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக மலேரிய கொசு கம்போடியாவின் மேற்குப்பகுதியில் உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மலேரியாவை தோற்றுவிக்கும் ஒட்டுண்ணிகளில் இல்லாத புதுரக மலேரிய ஒட்டுண்ணியை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் தாய்லாந்தில் இருக்கும் மஹிடால் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டிருப்பதாக இயற்கை மரபணுவுக்கான மருத்துவ சஞ்சிகையில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது மலேரியாவை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் தலைமுறை மருந்துக்கு பெயர் ஆர்டிமிசினின…
-
- 1 reply
- 546 views
-
-
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என…
-
- 0 replies
- 541 views
-
-
வான் பயணதில் கால் வீக்கம் ஏன்? வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருபவர்கள் பலரை இப்பொழுதெல்லாம் மருத்துவ ஆலோசனை மனையில் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இவர்களில் சிலராவது கால் வீக்கத்துடன் வருவார்கள். 10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் (விமானப்) பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலர் வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் செய்வதால் இது மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி விடுகிறது. வான் பயணத்தால் மட்டுமின்றி நீண்ட தூரப் பயணங்கள் யாவற்றாலும் இது ஏற்படலாம். இங்கிருக்கும் உள்ளுர்வாசிகளும் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான். பெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thr…
-
- 4 replies
- 1.3k views
-
-
தொற்றுதல் இல்லாமல் மனிதர்களுக்கு அதிகமாக மரணத்தைக் கொண்டு வரும் உயிர்கொல்லிப் பிரச்சனைகளாக இருப்பன மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் போன்றவையாகும். பிரச்சனைகள் மேலே: காரணிகள் வேராக மறைந்து கிடக்கின்றன அவை வருவதற்குக் காரணங்கள் என்ன? வற்றாத சுனைகளாக என்றும் மனித உடல்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மருத்துவச் சிக்கல்கள் சிலதான் காரணமாகின்றன. நீழிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல் அதீத எடை ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன? கொழுப்புச் சாப்பாடுகளும் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும்தான் என எல்லோரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் ஏதாவது அடிப்படைக் காரணம் உண்டா? ரெசிஸ்டின் எனும் புதிய…
-
- 0 replies
- 891 views
-
-
உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை. மீன் எண்ணெய் என்றால் என்ன? இந்த எண்ணெய்…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் உடல்நல கேடுகள்- ஆலோசனைகள்
-
- 0 replies
- 595 views
-
-
நான் ஒரு ஆங்கில வைத்தியத் துறை சார்ந்தவன் அல்ல எனது தந்தையார் ஒரு ஆயுர் வேத சித்த வைத்தியரே நான் படித்த 4 கட்டுரைகளின் தொகுப்பே இது இதில் இடம் பெறும் விடயங்கள் மிகவும் சிந்திக்க வைக்கிறது. இது வைத்தியத் துறை சார்ந்த எவரதும் மனதைப் புண்படுத்தும் நோக்கமல்ல இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை..! இந்த கட்டுரையை தொகுக்க உதவிய சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்களுக்கு நன்றி. "இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!" என்ற கட்டுரையைப் படித்தேன். இந்த விரிவான விளங்களை அதற்கான விமர்சன கட்டுரை வடிவில் வடிக்கிறேன்... இது உண்மையில் நல்லதொரு உணர்ச்சியைத் தூண்டும் விழிப்பறிவுணர்வு கட்டுரைதான். விழிப்பறிவுணர்வு கட்டுரைகள் எல்லாம் சரியான விழிப்பறிவுணர்வை ஊட்…
-
- 7 replies
- 5.9k views
-
-
மூக்கு தோண்டுது ஒரு கேட்ட பழக்கமாகவும், அப்படி செய்பவரை அசிங்கமாக பார்ப்பதும் சமூக பழக்கம். மூக்கில் இருக்கும் சளி போன்ற பதார்த்தம் மூக்கை பாதுகாப்பதுடன், பக்ரீரியாக்கள், தூசு என்பவை உடலினுள் செல்லாமல் தடுத்து வருகிறது. மூக்கை தோண்டி அதை உண்ணும் பொது உடலினுள் செல்லாத பக்ரீரியாக்கள் உடலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு செயன் முறையை தூண்டி விடும் சாத்தியம் அதிகரிக்கிறது. இப்படி கனடாவின் சஸ்கச்சுவான் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் சொல்கிறார். இது இன்னும் விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்படவில்லை. அவர் இதை ஒரு கருதுகோளாகவே பிரேரித்து உள்ளார். http://www.ctvnews.ca/health/picking-your-nose-could-be-good-for-you-says-sask-scientist-1.1255167
-
- 1 reply
- 795 views
-
-
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், * முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார். * வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு …
-
- 11 replies
- 1.1k views
-
-
மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள். மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்…
-
- 12 replies
- 1.7k views
-
-
நாளாந்தம் தொலைக்கட்சிகளில் பல்வேறு பட்ட விளம்பரங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்/ பார்ப்பீர்கள். அவற்றில் பல உணவு பொருட்களை விளம்பரப்படுத்துபவை. கனடாவில் அப்படியான உணவு விளம்பரங்களில் பல மக்களை ஏமாற்றி பொருகளை விற்கும் தந்திரம் கொண்டவையாக இருக்கிறன. அதில் முதல் பத்து இடங்ககளை பெற்ற உணவு விளம்பரங்களை கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் பட்டியல் இட்டுள்ளது. 1. Maple Leaf Foods' Natural Selections இந்த உணவு தயாரிப்பு நிறுவனம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகையை விற்கிறது (sausage/hotdog, ham, salami etc). இறைச்சி பதப்படுத்தலுக்கு நைத்திரேற்று சேர்க்கப்படுவது வழக்கம். இந்த நைத்திரேற்று இறைச்சிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் பொருளுடன் (மயொகுளொபின் ) சேர்ந்து புதிய ஒரு சே…
-
- 2 replies
- 2k views
-
-
பொன்னான பொன்னாங்கண்ணி *தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர். *கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம். *இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்…
-
- 11 replies
- 1.8k views
-
-
குறட்டை வராமல் தடுக்க குறட்டை விடுவதால் பக்கத்தில் உறங்குபவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மீது கடும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. குறட்டையை குறைக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன, இதனை தடுப்பதற்கு சில கருவிகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. மேலும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜ…
-
- 2 replies
- 7.6k views
-
-
ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம். 100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம். 17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம்…
-
- 4 replies
- 6.9k views
-
-
முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம். அது என்னனு கேக்குறீங்களா எல்லோர் வீட்டிலேயும் உபயோகபடுத்துறது தான். வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்த…
-
- 0 replies
- 651 views
-
-
இதயத்தை பாதுகாக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள் மனித உடலில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமானதொரு உறுப்பு என்றால் அது இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாக்க தவறியதன் விளைவாக உலகம் முழுவதும் இதய நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதயத்தை காக்க மக்கள் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதயத்துக்கு உகந்தது ஆப்பிள் என இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்க்கு முக்கிய காரணமான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்புச்சத்தை அழிக்கும் திறன் ஆப்பிள் பழத்துக்கு உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதய குழாய்களில் (தமனிகளில்) ஏற்படும் அடைப்பை தடுக்கும் திறனும், மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலு…
-
- 0 replies
- 608 views
-
-
எடைக் குறைப்பும் தூக்கமும்: "மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்." "தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்." "அதிகத் தூக்கம் நல்லதல்ல" பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள். உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்ப…
-
- 0 replies
- 914 views
-
-
பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில்…
-
- 0 replies
- 678 views
-
-
புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியதுதான் புற்று நோய்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எந்ந நோய்க்குப் பயப்படாதவனும் புற்று நோயென்றால் கதிகலங்கவே செய்வான். அந்நோயால் பாதிக்கட்டவர்கள் படும் அவஸ்தையைக் கண்டும் கேட்டும் ஏற்படும் பயம் அவ்வளவு வலுவானது. புற்றுநோய் என ஒருமையில் சொன்னாலும் அது பல்வேறு வகைப்பட்டது. தோன்றக் கூடிய ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கு ஏற்ப அது பலநூறு வகைப்படும். ஆனால் இப்பொழுது புற்றுநோய்களுக்கு நல்ல சிகிச்சை வந்துள்ளன. ஓரளவு ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் பூரணமாகக் குணமாக்க முடியும். நோய் முற்றியவர்களும் வலி வேதனையின்றி வாழக் கூடியவகையில் சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்…
-
- 0 replies
- 900 views
-
-
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து க…
-
- 9 replies
- 3.3k views
-
-
நீரிழிவு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள்... [Wednesday, 2013-04-17 19:45:11] உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண…
-
- 2 replies
- 761 views
-
-
நம்மில் பலர் உடம்பிற்குத் தேவைப்படும் வைட்டமின்களை தினமும் மாத்திரை வடிவிலோ அல்லது மருந்து வடிவிலோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வருகிறோம். இவை நல்லதா , கெட்டதா என்பது ஒருபுறமிருக்க உணவின் வழியே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இவற்றை ரசாயனக் கலப்பு உள்ள மாத்திரைகள் வழியாக எடுத்துக் கொள்கிறோமே. இது தேவைதானா என்பதே வாதம். எந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது. குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்ட…
-
- 0 replies
- 979 views
-
-
உலக ஹீமோபிலியா தினம் இன்று 17-04-2013 அனுசரிக்கப்படுகிறது. ‘50 ஆண்டுகளில் அனைவருக்கும் நவீன சிகிச்சை’ என்பதைமைய கருத்தாக கொண்டு இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை (டிபிள்யு ஹெச் எப்) கடந்த 1963&ல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த 1989 முதல் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17&ல் உலக ஹீமோபிலியா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய். சாதாரணமாக மனித உடலில் ஏதாவது காயம் ஏற்படும்ப…
-
- 0 replies
- 984 views
-
-
ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும். சரித்திரம்: - வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது. சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சா…
-
- 0 replies
- 1.1k views
-