நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என்கின்றனர் அமெ ரிக்க விஞ்ஞானிகள். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது. அந்த குழுவுக்கு விஞ்ஞானி நிர் பர்ஜிலய் தலைமை வகித்தார். அவர்களது கண்டுபிடிப்பின்படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும், நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது. அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்கின்றன. இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத் தடுக்கிறது…
-
- 4 replies
- 799 views
-
-
நாம் நம்மை கவனித்துக் கொள்வதில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். எனினும், நம்முடைய ஆரோக்கியத்திற்கான சவால்களை எதிர்கொள்வதில், பிரம்மாண்டமான முயற்சிகளை செய்ய வேண்டியுள்ளது. Fruits and Vegetables நாம் ஏன் சில எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது ஆரோக்கியத்தை உடனுக்குடன் பேணிக் கொள்ளக் கூடாது? இதன் மூலம் நமது நெடுநாளைய குறிக்கோள்களும் நிறைவேறும் அல்லவா? இந்த கட்டுரையில், நமது தலை முதல் பாதம் வரையிலான உடலின் பல்வேறு பகுதிளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில வழிமுறைகளை கொடுத்துள்ளோம். மூளைக்கு மீன் வேண்டும் Fish curry ஒமேகா-3 கொழுப்புகள் உள்ள சாலமன் அல்லது மக்கெரல் போன்ற எண்ணைய் மிகுந்த மீன்களை வாரந்திர உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், மூளை சுருங்குவதை குறைக்…
-
- 7 replies
- 1.8k views
-
-
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. *குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். *மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. *அதேபோல மிளகுக்கும் அதீத மருத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…
-
- 0 replies
- 2.1k views
-
-
நெஞ்சு எரிச்சல் பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம். நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள…
-
- 0 replies
- 5.7k views
-
-
நெஞ்சு எரிச்சல் பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்‘ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesophagal என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நோயைப் பற்றி நோக்குவோம். நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொர…
-
- 5 replies
- 1.5k views
-
-
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சம…
-
- 4 replies
- 2.5k views
-
-
நெஞ்சு நோ அல்லது நெஞ்சு வலி (Chest pain or angina) தொடர்ச்சியாக அல்லது விட்டுவிட்டு அடிக்கடி ஏற்படுகிறதா நிச்சயம் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டியவர் என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு. பல நெஞ்சு நோக்கள் இதய நோய்க்கான அறிகுறிகள் என்று குறிப்பிடும் மேற்படி ஆய்வு புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தோடு வாழ்பவர்கள் மத்தியில் இதன் தாக்கம் அதிகம் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் மத்தியிலும் இவ்வாறான நெஞ்சு நோக்கள் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். எனவே நெஞ்சு நோ என்றால் சாதாரணம் என்று எண்ணிடலாகாது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குடும்ப அல்லது உறவுகள் அல்லது தொழில் பிரச்சனைகளால…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தைரியமாக ஆரஞ்சு பழத்தையோ அல்லது சாறு குடிக்கலாம்.இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது. ஆரஞ்சு சாறில் உள்ள விட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். இதில் ஏ, பி, சி ஆகிய விட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாக…
-
- 0 replies
- 661 views
-
-
HeartBurn | AcidReflux | GERD - Causes, Symptoms & Prevention - Dr.P.Sivakumar (In Tamil)
-
- 0 replies
- 603 views
- 1 follower
-
-
உடலுழைப்பு இல்லாத வேலையும் காரணம்!டேக் கேர் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனுநீதி மாறன்: நெஞ்செரிச்சல் பாதிப்பு, தற்போது அதிகரித்து வரும் நோயாக மாறி வருகிறது. முன்பு, 35 - 40 வயதுக்கு மேல் காணப்பட்ட நிலையில், தற்போது, 20 - 25 வயதிலேயே, இந்தப் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.இதற்கு, மாறிவரும் உணவுக் கலாசாரம் தான் முக்கிய காரணம். இதனால், உணவுக்குழாயும், இரைப்பையும் இணைகிற இடத்தில், ஒரு வால்வு பாதிப்படைகிறது.நெஞ்சுக்குள் கீழே உள்ள பகுதி தான் இரைப்பை; நடுவில் இருப்பது வால்வு. உணவுப்பையில் உண்டாகிற ஹைட்ரோ குளோரிக், செரிமானத்துக்கான ஒரு அமிலம். அதைத் தாங்கும் சக்தி, இரைப்பைக்கு உண்டு; ஆனால், உணவுக்குழலுக்கு இல்லை.அதனால், அங்…
-
- 2 replies
- 1.2k views
-
-
நெடுநாள் ஆரோக்கியத்திற்கு தேவை நீண்ட தூர நடைப்பயிற்சி! தினமும் காலையில் ஈரமான புல்வெளியையும், சுத்தமான காற்றை சுவாசிக்கவும் நாம் நடப்பது என்பது எல்லோர் வாழ்விலும் ஏற்படும் ஒரு அனுபவமாகும். இந்த `நடக்கும்' தியானத்தை நாம் தினமும் செய்து வந்தாலே போதும். நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை நாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம். நடப்பது என்ற செயல் ஒரு உடற்பயிற்சி தொடர்புடைய செயல் ஆதலால் நம்முடைய தினசரி பழக்கங்களுடன் இதையும் நாம் சுலபமாக நுழைத்து விடமுடியும். தினமும் சில மைல்கள் நடக்க வேண்டுமா? கீழ்வரும் ஒரு 10 வழிகளை கடைபிடியுங்கள் : முதலில் அனுமதி பெறுங்கள் : நீங்கள் இதுவரை உடற்பயிற்சியோ அல்லது நடப்பதை ஒரு உடற்பயிற்சியாக செய்யாதவராகவோ இருந்தால், …
-
- 1 reply
- 2.6k views
-
-
நெட்டி முறித்தல் ஆபத்தா அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்? எஸ். பிரணவி, சாவகச்சேரி பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன. அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன. நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள்…
-
- 5 replies
- 5.5k views
-
-
மறுவாழ்வு தந்த மயோபதி மருத்துவம் பிரேமா நாராயணன் , படங்கள் : எல். ராஜேந்திரன் பூப்போல சிரித்து, தத்தித் தத்தி நடந்து வளரும் மழலையின் ஒவ்வொரு பிறந்தநாளும் பெற்றோருக்கு மகிழ்ச்சியின் திருநாள். ஆனால், மருந்தே இன்னும் கண்டுபிடிக்கப்படாத மஸ்குலர் டிஸ்ட்ரபி’ எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு மட்டும், என் பிள்ளைக்கு வயது ஏறாமல் இப்படியே இருந்திடக்கூடாதா?’ என்று கண்ணீர்விட்டுக் கலங்கும் நாளாக, அவர்களின் பிறந்த நாள் அமைந்துவிடுகிறது. அப்படிப் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களுள் ஒருவர், பிரபல நடிகரும் முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் ஜெயசுதா தம் பதியினர். இவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்தத் துயர அத்தியாயத்தை, நம்மிடம் பகிர்ந…
-
- 0 replies
- 1k views
-
-
நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன. அதே சமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். …
-
- 0 replies
- 2.2k views
-
-
ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம் உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், …
-
- 7 replies
- 1.2k views
-
-
நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக? மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான் வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போத…
-
- 7 replies
- 8.6k views
-
-
நெல்லிக்கனிசாறு ஒரு நெல்லிக்கனி 6 ஆரஞ்சுகளுக்கு சமமாம்....தினமும் நெல்லிக்கனிசாறை (குறைந்தது 3 மாதங்கள்) தொடர்ந்து அருந்திவந்தால் கிடைக்கும் 7 பலன்கள்.... 1. உடலில் வைட்டமின் C பெருகும் 2.முடிவிழுதல் நிற்கும்...புதிதாக முடிகள் வளரும் ... 3.கண் பார்வை கூர்மையாகும்..மாலைக்கண் வியாதி நீங்கும்... 4.தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும் 5.மதிய உணவிற்கு பின்னர் , இந்த சாரை பால்,தென் மற்றும் நெய்யுடன் சேர்த்து அருந்திவந்தால், பைல் (PILES ) விலகிபோகும் .. 6.மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்.... 7.ரத்தத்திலுள்ள சிவப்பணு க்களை பெருக செய்து,ரத்தம் சுத்தமடையும்.. …
-
- 0 replies
- 390 views
-
-
நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு: [Friday 2016-07-08 07:00] நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற…
-
- 0 replies
- 377 views
-
-
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் என்ன நன்மை? உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால்…
-
- 0 replies
- 8.5k views
-
-
ஏழைகளின் ஆப்பிள்! மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம். இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 …
-
- 5 replies
- 1.5k views
-
-
“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது” மூக்கால் சளி சிந்தவில்லை. வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குiறாயாகச் சொன்னார் அந்த அம்மணி. இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது, “வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார். தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை. போதுமென்ற மனசு போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம். “எனது கோப்பையில் தண்ணீர் அரைவா…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆன்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவது நம்மில் பலருக்கும் தெரியாது. ஒரு செயற்கையான நிகழ்வினால், உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகிறது. மேலும், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உடலின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் துர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகிறது. சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை சாப்பிட்டதும…
-
- 0 replies
- 555 views
-
-
ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும் நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 'நாம் செயல்படுவோம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர வேண்டும் என்ற அக்கறைதான் இதற்கு அடிப்படைக் காரணம். நொறுக்குத்தீனி கடைகள் X நல்ல உணவுக்கான கடைகள் இந்த லட்சியத்தை எட்ட, எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தோம். ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல்பூர…
-
- 0 replies
- 372 views
-
-
உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன படியுங்களேன். ஒரு புண்ணியமும் இல்லை பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லையாம். உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 300 பெண்கள் பங்கேற்பு இந்த ஆய்வுக்காக 18 முதல் 35 வயது வரையிலான 300 பெண்களின் மார்பகங்கள் அளந்து பார்க்கப்பட்டன. பிரா அணிந்த நிலையிலும், பிரா அணியாத நிலையிலும் இந்த ஆய்வுகள் நடத்த…
-
- 5 replies
- 3k views
-