நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
சுண்டக்காயின் மருத்துவ குணம்..! சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் ...கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான…
-
- 0 replies
- 2.1k views
-
-
(Aloe vera) கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது. இயற்கையான மருத்துவப்பொருட்கள் நமக்கு தான் நிறைய தெரிவதில்லை என்று கூறுவதைவிட அறியவைக்க ஆள் இல்லை என்றால் பொருத்தமாகும். கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எ...த்தனை மருத்துவக் குணங்கள். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ…
-
- 12 replies
- 5k views
-
-
[size=4]சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம்செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு.[/size] [size=4]மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.[/size] […
-
- 0 replies
- 395 views
-
-
பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மட்டும் தான் பற்கள் வெள்ளையாகுமா என்ன? இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது. மற்றொன்று, இப்போது எங்காவது வெளியூருக்குச் செல்லும் போது சில சமயம் பிரஸை மறந்து விடுவோம். அப்போது ஒரு சில உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும். அது என்னென்ன உணவுகள் என்று படித்துப் பாருங்கள்... ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசி…
-
- 0 replies
- 618 views
-
-
*****மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன. **** சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது. ******சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்க…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
[size=6]இளமையைத் தரும் ஆலிவ் ஆயில்!!![/size] [size=4]வயது ஆக ஆக முகத்தில் சுருக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் முப்பது வயது ஆகிவிட்டால் போதும் கிழவி என்றே பெயர் வைத்து விடுவர். அவ்வாறெல்லாம் தெரியாமல் அழகாக இளமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறீர்களா? அதற்கு சிறந்த வழி ஆலிவ் ஆயில். இது உடலுக்கு சிறந்த அழகைத் தரக்கூடிய ஒரு அழகு சாதனப்பொருள் மற்றும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்றும் கூட சொல்லலாம். இத்தகைய சிறப்பை உடைய ஆலிவ் ஆயிலை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!![/size] [size=4]1. உண்ணும் உணவில் பயன்படுத்தும் சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமமானது பளபளப்புடன் மிருதுவாக இருக்கும். மேல…
-
- 0 replies
- 665 views
-
-
டீசல் புகையும் புற்றுநோயும் உலக சுகாதார சபையின் அறிக்கை ஒன்றின்படி டீசல் வாகன புகையால் சுவாசப்பை புற்றுநோய் வரும் சாத்தியங்கள் உள்ளன எனக்கூறப்பட்டுள்ளது. தரம் குறைந்த டீசல்கள் மூலம் இதன் சாத்தியங்கள் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதன் தாக்கங்கள் அஸ்பெஸ்டஸ் ஊடாக வரும் சுவாச புற்றுநோயுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. Diesel engine exhaust fumes can cause cancer in humans and belong in the same potentially deadly category as asbestos, arsenic and mustard gas, World Health Organization experts said on Tuesday. The (expert) working group found that diesel exhaust is a cause of lung cancer and also noted a positive association with an increased risk of bla…
-
- 0 replies
- 467 views
-
-
ஏழைகளின் ஆப்பிள்! மருத்துவ உலகில் நீண்ட நெடுங்காலமாக ஒரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நரை, திரை, மூப்பு, மரணம் இவற்றைத் தள்ளிப்போட்டு நீண்ட காம் ஆரோக்கியமாக வாழும் வழி என்ன? என்பதே அந்த ஆராய்ச்சியின் நோக்கம். தமிழ்நாட்டுச் சித்தர்கள் சுருக்கமாக இந்த ஆராய்ச்சியை காயகல்ப ஆராய்ச்சி என்றனர். காயம் என்றால் உடம்பு; கல்பம் என்றால் உடம்பைக் கல் போன்று இறுக வைத்து நீண்ட காலம் வாழவைத்தல். ஆக, காயகல்பம் என்றால் ஆரோக்கியமான நீண்ட ஆயுள் என்று அர்த்தம். இந்த காயகல்ப ஆராய்ச்சிக்குப் பிள்ளையார்சுழி போட்டவர்கள் நம் தமிழ்நாட்டுச் சித்தர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே குமரிகண்டத்தில் வாழ்ந்த அறிவர் என்ற சித்தர்கள் (சித் என்றால் அறிவு: சித்தர் என்றால் அறிவர்) 108 …
-
- 5 replies
- 1.6k views
-
-
காய்ச்சல், தலைவலி ரேஞ்சுக்கு மக்களுக்கு அறிமுகமான ஒரு உடல்நலப் பிரச்சினை சைனஸ். லேசாக ஜலதோஷம் பிடித்து மூக்கில் சளி ஒழுகிக் கொண்டிருந்தாலே டாக்டர்... எனக்கு சைனஸ் பிரச்சினை...!' என்று தீர்மானமான முடிவோடு வந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு நம் மக்களின் சிந்தனையில் ஐக்கியமாகி விட்ட ஒரு வார்த்தை சைனஸ். பெரும்பாலான மக்கள் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனஸ் ஆகிவிடாது. சைனசுக்கு ஜலதோஷம் தான் வித்திடுகிறது. ஜலதோஷத்தின் ஆபத்தான இன்னொரு பக்கம் தான் சைனஸ் என்றாலும் கூட இரண்டுக்கும் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. ஜலதோஷம் என்பது மூன்று நாளிலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரத்திலோ குணம் அடைந்து விடக்கூடிய விஷயம். இந்த குறிப்பிட்ட காலம் கடந்தும் அது குணமாகவி…
-
- 0 replies
- 3k views
-
-
ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!! முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது. முருங்கையின் நன்மைகள் : 1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி…
-
- 1 reply
- 670 views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.6k views
-
-
மனித வாழ்வை திசைமாற்றும் ஆரோக்கியமின்மை வீட்டிற்கு அஸ்திவாரம் போல், மனிதனுக்கு ஆரோக்கியம் முக்கியமானது. அந்த ஆரோக்கியத்தை வழங்குவது அவன் சாப்பிடும் உணவு. மனிதனுக்கு தேவைப்படும் ஆரோக்கியமான உணவை, குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாக வழங்கிவரவேண்டும். பிறந்த குழந்தைக்கு மிகச் சிறந்த உணவான தாய்ப்பாலை ஒரு வருடம் வரை கொடுப்பது அவசியம். அதன் மூலம் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கு கிடைக்கும். தாய்ப்பால் போதுமான அளவில் இல்லை என்றால், பசும்பால் கொடுக்கவேண்டும். அரைத்த பாதம்தூளை கால் தேக்கரண்டி எடுத்து பாலில் கரைத்து குழந்தைகளின் எடைக்கு பொருந்தும் அளவில் மருத்துவர் ஆலோசனைப்படி கொடுத்துவந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் உயரமாக வளர்வார்கள். ஐந்தாவது மாதத்…
-
- 0 replies
- 361 views
-
-
கத்தரிக்காயின் சுவையை கி.மு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே மக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது அங்கும் விளைவிக்கப்படுகின்றது.இது காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கு அழற்சியினைப் போக்க வல்லது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இதன் மருத்துவ குணங்களுக்கு அடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
CT ஸ்கான் என்று அழைக்கப்படும்.. computerised tomography ஸ்கான்.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி செய்யப்பட்டு வந்தால்.. மூளை மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில் பல்கலைக்கழக ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது. உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய் தொற்றுக்களை அறிய CT ஸ்கான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் பரிந்துரையின் பிரகாரம்.. CT ஸ்கான் இயக்கத்தின் போது பாவிக்கப்படும் கதிரியக்கம் ஆபத்தான அளவை விட மிகக் குறைவாக தேவைக்கு ஏற்ப பாவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அடிக்கடி CT ஸ்கானை பாவிப்பதை தவிர்ப்பதும் நன்றென கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் இது தொடர…
-
- 1 reply
- 431 views
-
-
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம...்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன்சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும். தூக்கமின்றி அவதிப்படுபவர்கள …
-
- 5 replies
- 1.1k views
-
-
''தண்ணிப்பால்தான் நல்ல பால்!'' சூரியன் இல்லாமல்கூட ஒரு நாள் நமக்கு விடிந்துவிடும். பால் இல்லாமல்? காபி, டீ, தயிர், மோர்... ஏதாவது ஒரு வடிவில் பாலை நாம் எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், பாலை எப்படிக் குடிக்க வேண்டும்; எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? பாலில் என்ன இருக்கிறது? பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். பால் தண்ணீரைப் போல இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனெனில், பாலில் 87 சதவிகிதம் தண்ணீர்தான் இருக்கிறது; 13 சதவிகிதம்தான் இதர வேதிப்பொருட்கள். இதில் நான்கு சதவிகிதம் கொழுப்பு; ஒன்பது சதவிகிதம் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள். இந்த நிலையில் உள்ள பால்…
-
- 4 replies
- 824 views
-
-
உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு(மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 753 views
-
-
தலைவலி, முதுகுவலி மாதிரி பரவலாக பலரையும் தாக்கக்கூடிய ஒரு பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது கிட்னி ஸ்டோன் எனப்படுகிற சிறுநீரகக்கல். யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சிறுநீரகக் கல் பாதிப்பின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்தன். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியே சிறுநீர் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆ…
-
- 0 replies
- 597 views
-
-
பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் 7 இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கரு…
-
- 1 reply
- 614 views
-
-
வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும். * இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். * வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். * பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வை…
-
- 28 replies
- 6.2k views
-
-
பாட்டி வைத்தியம் - நரை முடி அகல முருங்கைக் கீரை சாதாரணமாக வீடுகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக முடி உதிர்வது நிற்கும்.முடி நீண்டுவளரும். நரை முடி அகலும்.தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது. அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம். முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிய…
-
- 1 reply
- 3.5k views
-
-
பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர். தோட்டங்களிலும் சாகுபடி செய்கின்றனர். வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அகத்தியர் பெருமான் குணபாடத்தில் எட்டு வகை வாழையைப் பற்றியும் அதன் குணங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். முன்னோர்கள் பொதுவாக வாழையை பெ…
-
- 4 replies
- 962 views
-
-
இப்போது, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் என்ற புதிய பிரச்னை வந்துள்ளது. அதாவது, கணினியில் வேலை பார்ப்பவர்களுக்கு கண்கள் உலரும் பிரச்னை வரலாம். ஒரு நிமிடத்தில் 16 முதல் 18 முறை கண் சிமிட்ட வேண்டும். கணினியையே பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் அளவு அவர்களை அறியாமலேயே குறைந்துவிடுகிறது. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் ரத்தம் வழியாகத்தான் ஆக்சிஜன் செல்கிறது. ஆனால், ...கருவிழிக்கு ரத்த விநியோகம் கிடையாது. கண்கள் இந்தக் கண்ணீரில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன. கணினியைப் பார்க்கும்போது, கண்ணீர் அளவு குறைந்து, உலர்ந்துபோகிறது. கருவிழிக்கு செல்லும் ஆக்சிஜன் குறைகிறது, இதனால் எரிச்சல், மணல் போட்டு அறுப்பது போன்ற வலி இருக்கும். கண்ணில் தண்ணீர் வழிந்துகொண்…
-
- 0 replies
- 443 views
-
-
நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் பிறர் பேசும்போது அடிக்கடி மறுபடியும் சொல்லுமாறு கேட்பதை, தொலைபேசியில் பேசும்போது சிரமப்படுவதை, ரேடியோ அல்லது டி.வி. உரையாடலை கேட்பதில் கஷ்டப்படுவதை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உரையாடலை கேட்டுக் கொள்வதை அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டால் அது காது கேளாமையின் ஓர் அடையாளமே! காது கேளாமை குறித்தும் அதற்கு உள்ள தீர்வுகள் குறித்தும் சீமன்ஸ் காது மிஷின்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள ராஜ் ஹியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் கூறிய சில தகவல்கள்... ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது பிரச்சினையை அறிதலே அதை சரி செய்ய நாம் எடுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாச்சாரம் மிக அதிகமாக அதிகரித்து விட்டது. மசாஜ் செய்வதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் தான் இந்நாடுகளிடையே தற்போது போட்டி நிகழ்கிறது. பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை முகத்தில் விட்டு மசாஜ் செய்கின்றனர். ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில் இதற்கென்ற பிரத்யேகமான “நத்தை மசாஜ் கிளப்” உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். இது குறித்து மசாஜ் கிளப் உரிமையாளர் கூறுகையில்…
-
- 14 replies
- 1.2k views
-