நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிட…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாழைப்பூவைப் பற்றி அறியாத தமிழர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவிலும் இலங்கையிலும் வீட்டுத் தோட்டமாகவும், பெரிய தோட்டங்களாகவும் வளர்க்கின்றனர். வாழைத் தடல், வாழைத்தார், வாழை இலை, வாழைக்காய், வாழைப் பழம் என எல்லாமே அன்றாட சாப்பாட்டுப் பொருளாகவும், பூசைப்பொருளாகவும் பாவனையில் உள்ளன. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. இது செடி இனத்தைச் சேர்ந்தது. மரம்போல் நெடித்து வளர்வதால் வாழைமரம் என அழைக்கின்றனர். வாழைப்பூவில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் சித்தர்கள் குணப்படுத்தியுள்ளனர். வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொண்டால் வையித்தியரிடம் செல்லாமலே சில நோய்களில் இருந்த…
-
- 4 replies
- 5.2k views
-
-
உடல்நலம், மருத்துவம்: நீண்ட நாட்களாக பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்கிறீர்களா? ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை பிலிப்பா ராக்ஸ்பி சுகாதார செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பல மாதங்களாக தொடர்ந்து, இதை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி ம…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. குறப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிபோகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து க…
-
- 1 reply
- 630 views
-
-
உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை கட்டுரை தகவல் எழுதியவர்,மேத்யூ ஹில் பதவி,சுகாதார செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ ஸ்டெம் செல் சிகிச்சை தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார் குழந்தை பிறக்கும்போது இருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார். …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
உணவே மருந்து! * நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம். * ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட். * பூண்டு சாப்பிட்டீர்களெ…
-
- 0 replies
- 661 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மே 2025, 04:42 GMT உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், 'நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க' என நீங்கள் கேட்டால், ஆம் போதாது. நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது பட மூலாதாரம், GETTY IMAGES சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
அலர்ஜி என்றால் 'ஒவ்வாமை' என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக `இம்யூன் சிஸ்டம்� என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல், இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு …
-
- 0 replies
- 3.7k views
-
-
இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவா…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இரவு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி
-
- 28 replies
- 2.7k views
-
-
அடிக்கடி எச்சில் துப்புபவரா? * பான், குட்கா விபரீதம் உஷார் * “சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக் கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’ * “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட் டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ * “பத்து வருஷமா போட்டுண்டு வர் றேன்; எனக்கு ஒண்ணும் இதுவரைக்கும் வரலே; சும்மா ஏதாவது டாக்டருங்க சொல்லிண்டு இருப்பாங்க…!’ இப்படி படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இப்போது தூங்கி எழுந்ததில் இருந்து புத்துணர்ச்சி கிடைக்க பான், குட்கா சமாச்சாரங்களை வாயில் அடக்கிக்கொண்டு, நாகரிகத்தை எல்லாம் காற்றில் பறக்க…
-
- 0 replies
- 534 views
-
-
பிஸ்கட் பிடிக்கிறதா? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்... 'ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு. ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது. இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ... ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி. பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தால…
-
- 0 replies
- 877 views
-
-
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி. ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது. அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின…
-
- 0 replies
- 359 views
-
-
ஞாபக மறதி டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ஷியா ” என்ற நோய் இருக்கலாம். இது உண்டானால் அவர்களால் தங்களது அன்றாட வேலைகளைச் செய்வதில்கூட சிரமத்தை எதிர்நோக்குவர். இதில் ” ஆல்ஸைமர் நோய் ” என்பது ஒரு வகை. இதில் தங்களையே யார் என்பதைக்கூட…
-
- 1 reply
- 719 views
-
-
பக்கவாதம் ஏன் வருகிறது கேள்வி- பக்கவாதம் ஏற்படக் காரணம் என்ன? எஸ்- மூர்த்தி தெல்லிப்பளை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள் இறக்க நேரிடும். கலங்கள் இறந்தால் முளையின் அந்தப் பகுதி எதைஎதையெல்லாம் இயங்க வைக்கிறதோ அவை செயலற்றுவிடும். உதாரணமாக உடலின் வலது பக்கத்தை இயங்க வைக்கும் கலங்கள் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்க கைகால்கள் இயங்காது. மாறாக பேச்சுத் திறனுக்கான பகுதிக்கான இரத்த ஓட்டம் தடைப்படால் பேச முடியாமல் போய்விடும். எங்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதுடன் முளையின் எவ்வளவு இடம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். மிகச் …
-
- 1 reply
- 4.6k views
-
-
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனைய…
-
- 0 replies
- 754 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லி ஜோன்ஸ், லாரா ஃபாஸ்டர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும். புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்த…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள். குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும். தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். …
-
- 24 replies
- 6.7k views
-
-
பெண்களளுக்கு ஏற் படும் வயிற்று வலியானது பல காரணங்களுக்காக வர முடியும். ஆனால் பல பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க அதனை எண்ணி அது எதனால் வருகிறது என நினைத்து பலதையும் யோசித்து பயப்படுவது இன்னொரு புறமாக உள்ளது. அதிலும் பெண்களது வயிற்று வலி அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தின் சமநிலையையும் குழப்பி விடக்கூடியதாக அமைந்து விடுகின்றது. அதாவது குடும்ப பெண் வயிற்று வலியால் துன்பப்படும் போது அவரை சார்ந்த மற்றைய குடும்ப அங்கத்தவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே பெண்களுக்கு வயிற்று வலி ஏன் ஏற்படுகின்றது? இதற்கான பின்னணி என்ன? இதற்கு தீர்வுகள் எவை என்பது குறித்…
-
- 0 replies
- 25.8k views
-
-
-
குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? கூடுதலாக நித்திரை கொள்ளும் போதுதான் அவதானிக்க முடிகிறது. இப்போது இங்கு குளிர் காலம். இருந்தும் நாங்கள் வெப்பநிலையை அதிகம் கூட்டுவதில்லை. 22 - 23 பாகை செல்சியஸ் தான் இருக்கும் இருந்தும் அவனின் தலையில் மிகவும் வியர்வை கசிந்து உள்ளது. இது சில குழந்தைகளுக்கு பொதுவென கூகிள் தேடலில் அறிந்தேன். இதுபற்றி இங்கு யாருக்காவது தெரியுமோ? நன்றி.
-
- 8 replies
- 6.3k views
-
-
உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி 7 சதவீதம் பேர் சக்கரை நோயால் அவதியுறுகின்றனர். மரபு வழி வரும் டைப் 1 அல்லாமல், மோசமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாததால் வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர். உலகளவில் 42 கோடியாக உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2045-ல் 62…
-
- 0 replies
- 361 views
-
-
பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்படுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய . ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்கிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக…
-
- 3 replies
- 1.4k views
-
-
கருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. source: http://kuruvikal.blogspot.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
புற்றுநோய் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Prof. Dr. S. Subramanian MD., MRCP., (UK)
-
- 0 replies
- 442 views
-