Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் முரசம்

கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..

  1. வணக்கம், நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றவர்களின் அந்தரங்கங்களை எட்டிப் பார்த்து மலினமான ரீதியில் ஒளிபரப்பப்படும் விஜய் ரீவியின் தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ காணொளிகளையோ யாழில் இணைப்பதை முற்றாக தவிர்க்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் இவ்வாறான வேறு நிகழ்ச்சிகள் (உதாரணமாக நடிகர் ஆர்யா பங்குபற்றிய சுயம்வரம் போன்ற நிகழ்சிகள்) வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் போது அவற்றை தவிர்க்குமாறு எம்மால் கேட்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். நன்றி

  2. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 20ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2019) 21ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளி…

  3. வணக்கம், 2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  4. வணக்கம், இவ்வருட ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில் யாழ் கருத்துக்கள பகுதிகளை மீளாய்வு செய்து காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைப் புகுத்த கள நிர்வாகம் தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக "ஊர்ப்புதினம்" பகுதியில் இருந்த உப பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த உபபிரிவுகளில் இருந்த திரிகள் பொருத்தமான பிற பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. ஊர்ப்புதினம் பகுதியில் நீக்கப்பட்ட உப பிரிவுகள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள். ஏற்கனவே உள்ள திரிகள் ""வாழும் புலம்"" பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. புறக்கணி சிறீலங்கா: சிறீலங்…

  5. வணக்கம், யாழ் இணையம் ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முகமாக சில மாற்றங்களைச் செய்யவுள்ளது. முதற்கட்டமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கருத்துக்களத்தில் கருத்துகள் வைக்காது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பவர்களை 'கருத்துக்கள உறுப்பினர்கள்' எனும் புதிய குழுமத்திற்குள் நகர்த்த முடிவு செய்துள்ளோம். அத்துடன் விருப்புக் குறிகள் இடும் வசதியை தவறாகப் பயன்படுத்தும் பாவனைப் பெயர்களையும் இனம் கண்டு அவர்களையும் இக் குழுமத்திற்குள் நகர்த்தவுள்ளோம். இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவர்களுக்கு 'கருத்துக்கள உறவுகள்' இற்கு இருக்கும் வசதிகளில் விருப்புக் குறிகளை இடும் வசதியும், திண்ணை அனுமதியும் நீக்கப்படுகின்றன. எனினும் இக் குழுமத்திற்குள் நகர்த்தப்பட்டவ…

  6. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 19 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2018) 20 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் இருபது ஆண்டுகளாகத் தமிழர்களுக்கென ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னைத் தொடர்ந்தும் புதுப்…

  7. வணக்கம், 2017 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  8. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 18 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2017) 19 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் பல மேடு பள்ளங்களைக் கடந்து தனித்துவமான தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களைத் தாங்கும் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் உள்ளது. எமக்கு என்றென்றும் பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் இணையம் தனக்கெனதோர் தனித்துவத்துடன் மிளிர்ந்து கொண்டிருக்கவேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்…

  9. வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன

  10. மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 17ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2016) 18ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக ம…

  11. வணக்கம், 2015 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  12. சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையுள்ளதால் அடுத்த சில மணி நேரங்களுக்கு யாழ் இணையம் இயங்க மாட்டாது.

  13. சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை விடுத்து சீண்டல் கருத்துக்களை தொடர்ச்சியாக வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  14. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 3.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 15 டிசம்பர் 2014 ஞாயிறு முதல் (15.12.2014 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதும், பதிவர்கள் மீதும் மட்டுறுத்துதலும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். அ) உறுப்பின…

  15. அனைவருக்கும் வணக்கம், எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை (21-Feb-2014) யாழ் இணையம் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சேர்வரில் (Server) இருந்து புதிய சேர்வரிற்கு மாற்றப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு யாழ் இணையத்தில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை அறியத்தருகின்றோம். சேர்வர் மாற்றத்தின் பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற் கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வழக்கம் போன்று உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இம் மாற்றத்தினை செய்ய தீர்மானித்துள்ளோம். அன்புடன், யாழ் இணையம்

  16. வணக்கம் அனைவருக்கும், யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள், மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள், உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள், கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள் போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்! நன்றி

  17. வணக்கம், 2013 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.

  18. யாழ் களத்தின் இணைய வழங்கியில் சில தொழில்நுட்ப வேலைகள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியத் தந்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரவும் (14-May-2013) நாளையும் (15-May-2013) யாழ் இணையத்தில் சில தடங்கல்கள் ஏற்படலாம் என கள உறவுகளுக்கு அறியத் தருகின்றோம். நன்றி.

  19. வணக்கம், கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக இன்றில் இருந்து நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல் இவை: ---------------------------------------------- குழுக்களாக இயங்குதல் தொடர்பான முக்கிய அறிவித்தல் யாழ் இணையத்தின் கருத்துக் களத்தில் குழுக்களாகச் சிலர் இணைந்து இயங்குவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழில் கடந்த சில மாதங்களாக இடம்பெறுகின்ற பல விரும்பத்தகாத விடயங்களுக்கு முக்கிய காரணமாக இந்த குழுக்களாக சேர்ந்து இயங்கும் தன்மையே அமைகின்றது. இந்த நிலை தொடர்ந்து அனுமதிக்கப்படுவது கடுமையான ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும் என்பதால் உடனடியாக இத்தகைய குழுக்களாக சேர்ந்து இயங்குவதை தவிர்க்குமாறு கோருகின்றோம். …

  20. வணக்கம், காலத்துக்கு காலம் யாழின் வடிவங்களிலும், பகுதிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்று இப்பொழுதும் யாழில் உள்ள பகுதிகளில் (Sections / Categories) சில மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளோம். சில புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல், சில புதிய உப பிரிவுகளை உருவாக்குதல், இருக்கும் பகுதிகள் சிலவற்றை ஒன்றாக்குதல் மற்றும் வேறாக்குதல் போன்ற மாற்றங்கள் இவற்றில் அடங்கும். இத்தகையக மாற்றங்கள் தொடர்பான பொது அறிவித்தலுக்காக இந்த திரி பயன்படுத்தப்படும். இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக கருத்துகளை வழங்க விரும்புகின்றவர்கள் மற்றும் சந்தேகங்களை கேட்க விரும்புகின்றவர்கள் நாற்சந்தியில் அதற்கான ஒரு பொதுவான திரி திறக்கலாம். எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் ப…

  21. வணக்கம். அன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள். இந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள் மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம். யாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம். புதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்க…

  22. 'இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்' என்ற தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

  23. வணக்கம், அண்மைக் காலமாக யாழ் களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு இணையும் உறுப்பினர்களை இலகுவாக உள்வாங்கிக் கொள்வதற்காக, இணைந்தவுடன் உடனடியாக பதில் எழுதும் உரிமையை வழங்க உத்தேசித்துள்ளோம். அதாவது புதிதாக இணைந்து கொண்டவர்கள் அரிச்சுவடியில் தம் ஆரம்பப் பதிவுகளை இட்டு பின் அதனை நிர்வாகப் பிரிவினர் பார்த்து அனுமதிக்கும் முறையில் மாற்றத்தினைக் கொண்டுவந்து, இணைந்தவுடன் அவர்களை எல்லாப் பகுதிகளிலும் பதில் எழுத அனுமதிப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். இதன்படி புதிதாக இணைந்து கொண்டவர்கள், உடனடியாக திரிகளுக்கு பதில் எழுத முடியும். ஆனால் கள பொறுப்பாளர்களில் ஒருவர் அனுமதிக்கும் வரை புதிதாக திரிகளை திறக்க மு…

  24. வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கள விதிகள் சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் நாளையிலிருந்து (11.04.2012 - 00:00 மணி) நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீதோ, பதிவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்கப்படும். 1. கருத்து/விமர்சனம் கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும். தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங…

  25. திண்ணை தொடர்பான விதிகள்: யாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள் யாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள் 1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு 2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது 3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.