யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம் புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......
-
- 22 replies
- 3.2k views
-
-
அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…
-
- 22 replies
- 2.5k views
-
-
யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …
-
- 22 replies
- 1.9k views
-
-
எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்.. நண்பர். திரு உடையார் அவர்கள் நான் எழுதிய எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி, அதற்கு புத்திமதி கூறியிருந்தார். மிக்க நன்றிகள், அதற்குத் தெரிவிக்கும் அதே வேளை, …
-
- 22 replies
- 3.7k views
-
-
யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
-
- 21 replies
- 3.5k views
- 1 follower
-
-
அண்ணோய் வணக்கம் - ! உங்களதான் - மோகன் அண்ணோய் -! ஏனுங்க இம்புட்டு சட்டதிட்டம் எல்லாம் வச்சிருக்கிங்க - இங்க -! எவராவது - வந்து - எங்க இனத்துக்கு எதிராய் - பொறுமை கடக்கிற அளவிற்கு- தலைப்பு கூட ஆரம்பிச்சு - அவங்க பாட்டுக்கு ஏதும் பேசி போனால் கண்டுக்கிறீங்க இல்ல - ஏன்? லக்கி லுக் என்னு வாறாங்க - ராஜாதிராஜானும் வாறாங்க - இரண்டு பேரும் வேற என்னும் சொல்லுறாங்க - லக்கி லுக் என்பதை - ஒரு ஆணுக்கு சார்பாய் மொழி பெயர்த்தால் - ராஜாதிராஜானு - வருமோ என்னமோ! அது ஒரு பொருட்டல்ல திரு .மோகன் அண்ணோய் - சும்மா கோமாளி கூத்து ஆடுற இவங்களுக்கு - கோவத்தில பதில் சொல்ல போய்- எங்க விடுதலையை ரொம்ப நேசிக்கிற - தமிழக - உறவுகளுக்கும் - இவர்களுக்கு சொல்லபோ…
-
- 21 replies
- 3.1k views
-
-
மேற்கோள் அன்பின் கள உறவுகளே, யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். நன்றி - நன்றி!! தாங்கவே முடியல - சில இடங்களில் ... நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .....…
-
- 21 replies
- 3.4k views
-
-
யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன. யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது. உல்லாசப் பயணம் போற வழியிலும் சந்திப்பு.. தனிநபர்களின் பிரத்தியேகக் கொண்டாட்டங்களிலும் சந்திப்பு.. வீதில சந்திப்பு.. கோயிலில சந்திப்பு இப்படி என்று சந்திப்புக்க…
-
- 21 replies
- 3.5k views
-
-
யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி. உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும். தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும், கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் . 1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? 2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்க…
-
- 21 replies
- 3.6k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்…
-
- 21 replies
- 3.7k views
-
-
வெட்டுங்க வெட்டுங்க ! நிறைய கடமை உணர்வு உங்களிடம்! அதில தப்பு இல்ல- கொஞ்சம் நெருடல் - எல்லா இடத்திலையும் - அது கடைப்பிடிக்க படுமா? எச்சிகலை= எச்சில் இலை என்பதுதானே அர்த்தம்?? அதை தணிக்கை செய்யுமளவிற்கு - இருந்த - உங்கள் கடமை உணர்வு எல்லா இடங்களிலும் - பாகுபாடு இன்றி செயற்பட்டுதா? இருந்தால் - எங்கே இந்த இணைப்பில - நீங்க பார்க்கிற கருத்தில - எதுவும் உங்களை நோகடிக்காதா? http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=11221&start=15 இல்லவே இல்லையா? அப்பிடி என்றால் என்ன சொல்ல .... அது உங்க சொந்த பிரச்சினை! மத்தும் படி - ஒன்றை சொல்லுறன் - இங்க அசிங்கமா கருத்து எழுதி - எனக்கு எதிரானவர்களை - முகம் தெரியாத இணைய கருத்தாடலில் -எதிர் கொள…
-
- 21 replies
- 3.5k views
-
-
யாழில், சில நாட்களாக ஒரே செய்தியை பல பேர், இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. செய்தியை இணைக்கும் அவசரத்தில், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள விடயத்தைக் கவனிப்பதில்லை போலும். அதை கவனித்து இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்! அதை விட, கருத்துக் கூறப்படாத ஆக்கங்களும், நிறையவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றமுடியாதா?
-
- 21 replies
- 3.3k views
-
-
இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்.. நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும் இந்த உறுப்பினர் கணக்கு (account id) புதிது.. பொது பகுதிகளில் திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!! இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!! திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!! இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது... உதவிகிடைக்குமா????
-
- 21 replies
- 1.6k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்க…
-
- 20 replies
- 3.7k views
-
-
யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107 தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. நன்றி மோகன்
-
- 20 replies
- 2.1k views
-
-
எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.
-
- 20 replies
- 4.4k views
-
-
எனது பெயரில் உள்ள ,இது வரை பதிந்த சிறுகதை, கவிதைகளை எப்படி தொகுப்பாக பார்ப்பது.எவற்றை அழுத்த(கிளிக்)வேண்மென்று அறியத்தரவும் கருத்துக்கு இடது பக்கம் காண்பிக்கும் உங்கள் பெயரினை click செய்து அதில் Find Member's Posts அல்லது Find Member's Topics என்பதில் click செய்து தொடங்கிய கருத்துக்களையோ, பதில்களையோ பார்வையிடலாம்.
-
- 20 replies
- 3k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக…
-
- 20 replies
- 2.8k views
-
-
ஐயகோ ஐயகோ எல்லாம் போச்சு கோதாரி விழுவார் ஓய் யார் செய்தது எண்டு தெரியாது ஆணால் ஐ நா மட்டும் போய் உந்தப் பிரச்சனையை வைக்காமல் விட மாட்டன் மரியாதையா அதுவும் ஆர் செஞ்சதோ தெரியாது வருசப் பிறப்பான் நாத்து தம்பி மோகன் என்ர குஞ்சு பாரப்பு எங்கையாவது இருக்கும் கடவுளே ஓய் சின்னாவை கிளப்பாதைங்கோ சொல்லிப்போட்டன் வாறன் ஒருக்கா க கொ போட்டுவந்து கதைக்கிறன்
-
- 20 replies
- 1.6k views
-
-
நேற்று யாழ் களம் பிரகடனம் யாழுக்கு வந்த சிலர் செய்த பிரகடனம் 1. அரட்டைகள் அற்ற யாழ். 2. எல்லாரும் சீரியஸா எழுத வேணும். 20 பேர் அரட்டை அடிக்கிறதிலும் 2 பேர் உருப்படியா எழுதிறது மட்டும் போதும். 3. தீவிர சிந்தனையும் விவாதங்களும் இடம்பெற்று சமூகத்தைத் தலை கீழாக்க வேணும். அது யாழின் புதுமை. 4.ஆங்கில ஆக்கங்களை மொழிபெயர்த்துப் போடுறது யாழுக்கு அவசியமில்லை. யாழில உள்ளவங்கள் எல்லாரும் டமிழர்கள். 5. வசனனடையில் கவிதை என்று சும்மா பம்மாத்துக் காட்ட வேண்டாம். பேசாம கவிதையைத் தலைப்பை கதைக்குள்ள மூவ் பண்ணிடுவோம். 6.வலிய வம்புக்குப் போய் கொழுவல் போட்டு துரோகிகளை இனங்காட்டுவோம். தனிமடல்களில் நாயே பேயே என்று எழுதி எங்கள் வல்லமையைக் காட்டுவம். ஆளாளுக்…
-
- 20 replies
- 3.3k views
-
-
... அரோகரா .... அண்மையில் நண்பரொருவருக்கு(?) ஓர் காதல் கடிதம் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட தபாலில் வந்ததாம், உடைத்தால் ஆங்கிலீசில் எழுத்துக்களாம்! வாசிக்கத் தொடங்கலாம் என்றால், அவரது 10 வயது மகன், அதனை பறித்து வாசித்து விட்டு, மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ... "அப்பா, வெட்கம்! எழுத தூண்டியவர்கள் தமிழர்கள்! எழுதியது ஓர் தமிழ் அமைப்பிற்காக! தமிழிலேயே இக்கடிதத்தை எழுதி இருக்கலாமே???? அதை விடுத்து ஏனப்பா உடைந்த முறிந்த ஆங்கிலத்தில் இக்கடிதத்தை எழுதுவான்?" ... ... நண்பரும்(?), அக்கடிதத்தின் காதல் வசனங்களை பார்த்து விட்டு, அதனை அவரது சட்டவாளராக கடமையாற்றும் இன்னொரொரு நண்பருக்கு காட்டியபோது, அவரும் அதனை படித்து விட்டு, கிழித…
-
- 20 replies
- 1.7k views
-
-
ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
-
-
- 20 replies
- 852 views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் சூட்ட ஆசை படுகிறேன். பல நாட்கள் தேடியும் என் மனதிற்கு பிடித்த பெயர் கிடைக்கவில்லை. நல்லதொரு பெயர் சூட உங்களின் உதவி தேவை. நான் வெளிநாட்டில் உள்ளதால் பெயர் சற்று எளிதாக இருந்தால் நன்று, குறிப்பாக "ழ" கரம் இல்லாமல்.
-
- 20 replies
- 13.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது. நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்கள் நக்கல்களிற்கு நன்றி!
-
- 20 replies
- 4k views
-
-
வணக்கம், குழந்தைகள், சிறுவர்களுக்கான ஓர் தமிழ்த்தளத்தை வலையில் உருவாக்குவது சம்மந்தமாக சிறிதுகாலமாக சிந்தித்தோம்; குழந்தை வளர்ப்பு, தமிழ்மொழி கற்பித்தல்.. குழந்தைகள், சிறுவர்களுக்கான இதர அடிப்படை விடயங்களை பகிர்ந்து கொள்ளுதல், அறிவூட்டுதல் போன்றவை. பொழுதுபோக்கு, பகுதிநேர அடிப்படையில் செயற்படக்கூடிய ஆர்வம் உள்ள உறவுகளின் இயக்கத்தில் இப்படியான ஓர் வலைத்தளத்தை விரைவில் இயங்க வைக்கலாம் என்று யோசிக்கின்றோம். இணைந்து செயற்பட விரும்புகின்ற யாராவது ஆர்வம் உள்ள யாழ் உறவுகள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரங்களில் குறிப்பிட்ட இந்த வலைத்தளத்தில் ஆக்கங்கள் எழுதி போடலாம். மற்றும், வடிவமைப்பு, மற்றும் இதர விடயங்களிலும் பங்காற்றலாம். யா…
-
- 20 replies
- 1.6k views
-