வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும். புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னமும் அறியப்படவில்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய…
-
- 3 replies
- 844 views
-
-
யேர்மனியில் Krefeld நகரத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் நல் வாழ்த்துக்களுடன் 2020 ஆம் ஆண்டை வரவேற்க விரும்பினார்கள். ஆனால் அவர்களது அந்த விருப்பம் Krefeld மிருகக் காட்சிச் சாலைக்கு ஒரு பேரழிவைத் தரும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 2020 புத்தாண்டு தினத்தில் Krefeld நகரில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் இறந்து போயின. அந்த தீ விபத்துக்கான காரணம் இப்பொழுது வெளியே வெளிவந்திருக்கிறது. அறுபது வயது ஒரு தாயும் அவரின் நடுத்தர வயது இரு மகள்களும் ஐந்து வெளிச்சக் கூடுகளை இணையத்தளத்தில் வாங்கி புது வருடத்தில் வாழ்த்துக்களை இணைத்து வெளிச்சக் கூடுகளை அவர்கள் வானத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் ஒரு வெளிச்சக் கூடு மிருகக் காட்…
-
- 6 replies
- 1.6k views
-
-
லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை: இதனால் ஏற்பட்ட மாற்றம்! லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே இந்த தவறு காரணமாக உயிரிழந்துள்ளது. லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூச்சுக் குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயிற்று உணவைக் கொண்டு செல்லும் குழா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம் விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்த ஓடியோ பதிவை பேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டுள்ளார். விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்வது தன்னுடைய நீண்டகால எண்ணம் என்றும் அதற்கு அனுமதி கொடுத்த விமானத்தின் கப்டனுக்கு நன்றி தெரிவித்தும் அந்த பதிவில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குற…
-
- 0 replies
- 994 views
-
-
அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (National Science Foundation) தலைவராக அதிபர் டிரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க தமிழர் திரு. சேதுராமன் பஞ்சநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! பேராசிரியர் பஞ்சநாதன் அவர்களுக்கு 2015-ம் ஆண்டு சான் ஹோசே விழாவில் Tamil American Pioneer (TAP) விருது வழங்கி கவுரவித்ததில் பேரவை பெருமிதம் கொள்கிறது. https://www.nature.com/articles/d41586-019-03924-3 “Dr. Panchanathan′s commitment, creativity, and deep insights will be instrumental in leading the National Science Foundation on its continued path of exploration and discovery,” said Kelvin Droegemeier, Trump′s science adviser and the head of the White House O…
-
- 1 reply
- 697 views
-
-
ரொறென்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை! கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு …
-
- 0 replies
- 959 views
-
-
ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…
-
- 0 replies
- 753 views
-
-
-
பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…
-
- 0 replies
- 951 views
-
-
வடக்கு பிரிட்டனில் உள்ள பிராட்போர்ட் நகரில் காஷ்மீர் பற்றி எதாவது குறிப்பிடாமல், உரையாடலோ அல்லது விவாதமோ முழுமையடையாது. இங்கு, ஆலயமோ, மசூதியோ, ஒருவரின் வீடோ அல்லது தேர்தல் பிரச்சாரமோ எதுவாக இருந்தாலும் காஷ்மீரை புறக்கணிப்பது கடினம். இந்தியாவில் இருந்து 6,500 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டனில் தேர்தல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது காஷ்மீர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி, இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் 370 வது பிரிவை அகற்றி அதன் தனித் தன்மையை முடிவுக்கு கொண்டுவந்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக ஆக்கியது. இதனால், பிராட்போர்டில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தான் சமூகங்களிடையே, இது பிரச்சனையாக பெரிய அளவில் உருவெடுத்தது மட்ட…
-
- 1 reply
- 694 views
-
-
இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பணயம் வைக்கப்பட்டுள்ளது - துரித நடவடிக்கை எடுக்க கோரி பிரித்தானிய தமிழர் பேரவை இந்திய பிரதமருக்கு அவசர கடிதம் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் தற்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா உடன் எடுக்காது விட்டது எதிர்காலம் இருள்சூழந்ததாகிவிடும் என்று சுட்டிக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை இந்தியப் பிரதமர் மோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களின் நோக்கு எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இல…
-
- 0 replies
- 565 views
-
-
வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…
-
- 0 replies
- 888 views
-
-
கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில் நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன் ‘புலம்பெயர்தல்’ என்ற சொற்பதம் அன்றுதொட்டு பயன்பாட்டில் இருந்தாலும் தமிழர்கள் போரின் காரணமாக இடம்பெயர்ந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து ஊடகவியலாளர்களால் புலம்பெயரிகள் என்று தாய்நாட்டை விட்டு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறிப்பிடப்பட்டார்கள். போரின் காரணாமாக உயிரைக் காத்துக் கொள்வதற்காய், வறுமையின் காரணமாக, திருமணத்திற்காய், வெளிநாட்டு மோகத்தில், கல்வி கற்பதற்காய் என பல காரணங்களுக்காக அவர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் மீண்டும் தாய்நாடு திரும்பி வாழ முடியாத ஒரு பாதுகாப்பற்ற நிலையை போர் தோற்றுவித்திருந்தது. பதினாறு பதினேழு வயதுதொட்டு ஐம்பது கடந்தவர்கள் கூட புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்ச…
-
- 53 replies
- 7.1k views
-
-
லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது. தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது . தலை…
-
- 11 replies
- 2.9k views
-
-
கனடாவில் தமிழ் பெண்ணைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம் கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான தஸ்மி ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ரொரன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு மிட்லன்ட் அவென்யூ மற்றும் எக்லின்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் கடைசியாக இவர் காணப்பட்டுள்ளனர். 5 அடி உயரமும் 120 பவுண்ட் எடையும் கொண்ட அவரது தலைமுடியின் நிறம் கருப்பு என்று பிரவுன் நிற கண்கள் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். தகவல் தெரிந்தவர்கள் 416-808-4100 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 1.2k views
-
-
டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜோன்சன், கோர்பின் விவாதம் 650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது. ட…
-
- 0 replies
- 678 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா AdminNovember 27, 2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மான மறவர்களை நெஞ்சிருத்தி வணக்கம் செலுத்தும் நாளே மாவீரர் நாளாகும். 1989ம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் முதற்களப் பலியாகிய லெப்.சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த (1987) நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினர். இத் தேசிய மாவீரர் நாளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்கினை மூத்த தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஒழுங்கமைத்து 1991 நவம்பர் 27ம் நாளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! தாய் மானம் வாழ என்றே தம்மையே தந்துள்ளோர்கள்! ஊர் வாழ வேண்டும் என்றே உன்னத ஆர்வம் கொண்டோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! ஏராளமான துயர் எண்ணங்கள் தாங்கி நின்றோர்! மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்! மதம் சொல்லி மொழியை சொல்லி மரபுகள் இனங்கள் சொல்லி வதம் செய்யும் ஆட்சி தன்னை.. உதைத்திட எழுந்ததீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்.. உதைத்திட எழுந்த தீரர் சிதைந்தது மானம் என்றால் சினந்திடும் வீரவான்கள்…. சுதந்திரம் உயிர் மூச்சென்றே துணிந்தெழும் ஞானவான்கள்! துணிந்தெழும் ஞானவான்கள்! (மாவீரர்….) தேசிய உரிமை வாழ்வின் சின்னமாய் மின்னுவோர்கள் வீ…
-
- 6 replies
- 1.5k views
-
-
இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அடுத்த மாதம் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரகடயர-பரயஙகவன-வழகக-ஒததவபப/175-241248
-
- 0 replies
- 763 views
-
-
காணவில்லை பாரதி பாலசுந்தரம் (42) என்ற பெண்ணை செப்டெம்பர் 25, 2019 இலிருந்து காணவில்லை. கடைசியாக, ரொறன்ரோ Queen Street East / Victoria Street பகுதியில் காணப்பட்டார். அவர் பற்றிய தகவல் இருப்பின் ரொறன்ரோ காவற்துறையினரை அழைக்கவும். Bharathy Balasundaram, 42, was last seen on Wednesday, September 25, 2019, in the daytime hours, in the Queen Street East and Victoria Street area. She is described as 5’2", thin build, with shoulder-length black hair, and brown eyes. There are no clothing descriptions at this time. Police are concerned for her safety. Anyone with information is asked to contact police at 416-808-5100, Crime Stoppers ano…
-
- 0 replies
- 877 views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…
-
- 6 replies
- 1.5k views
-
-
பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம். அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது. இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்.. பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை :…
-
- 1 reply
- 1.1k views
-
-
கனடா நாட்டில் அதிகம் விளையாடப்படும், பிரபல விளையாட்டு - ஐஸ் ஹாக்கி. அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நீண்டகாலமாக முதலாவது 20 நிமிட விளையாட்டின் பின்னர் ஆய்வாளராக பணிபுரிவர் - டொன் செரி. இவருக்கு வயது 85. கடந்த சனிக்கிழமை நடந்த விளையாட்டில், அவர், புலம்பெயர்ந்து வாழும் மக்களில் அதிகமானோர் கார்த்திகை 11 ஆம் திகதி அன்றை நோக்கிய நாட்களில் மறைந்த வீரர்களை நினைவு கூர்ந்து 'பொப்பி' என்ற பூவை அணிவதில்லை என்றும் அதற்காக இரண்டு டாலர்களை தருவதும் இல்லை என்று கூறினார். மேலும், "நீங்கள் இந்த நாட்டிற்கு வந்து இந்த சுதந்திரங்களை உருவாக்க தமது உயிர்களை தந்தவர்களை நினைவுகூருவதும் இல்லை", என்று கூறினார். இது, நாட்டில் பல வேறு மக்களின் கருத்துக்களமாக மாறியது.…
-
- 0 replies
- 819 views
-