நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
ஊழல், உளவு, அரசியல் சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் வ…
-
- 2 replies
- 927 views
- 1 follower
-
-
கதை நடக்கும் வருடம் 3612,எழுநூறு கோடியாக இருந்த சனத்தொகை உலகப்பேரழிவினால் 35 கோடியாக சுருங்கி விட்டது பேரழிவிலிருந்து எஞ்சியிருப்பது தென் இந்தியாவும் இன்னும் சில தீவுக்கூட்டங்களும் கிட்டத்தட்ட லெமூரியா கண்டம் அளவில் அதற்கு ஒரு அரசன் அரசனுக்கு கீழ் பிரபுக்கள், கிட்டத்தட்ட அடிமையான மக்கள்.அரசனுக்கு பின்இருந்து அவனை ஆட்டுவிக்கும் தொழில்நுட்பத்தினை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சகலகலாவல்லவன். வெட்டாட்டம் நூலிற்கு பிறகு ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம் இன்று காலையில் தான் கிண்டிலில் டவுன்லோடினன் .. இப்போது முடித்தாச்சு...:) நல்ல ஒரு இயக்குனர் கையில் கிடைத்தால் தமிழில் சுப்பரான ஒரு sci-fi படம் கிடைக்கும் வெட்டாட்டத்தினை நோட்டா ஆக்கி கொத்து பரோட்டா போட்டதை போல …
-
- 5 replies
- 1.4k views
-
-
அனைத்து யாழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறேன்
-
- 24 replies
- 2.9k views
- 1 follower
-
-
‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நுால் அறிமுகம்) ‘தூக்கிலிடுபவரின் குறிப்புகள்’ (நூல் அறிமுகம்) ஆசிரியர்: சசி வாரியர் தமிழாக்கம்: இரா.முருகவேள் இந்த வாழ்வின் அருமை எப்போது தெரிகிறதெனில், சாவுக்கு நாள் குறிக்கப்படும்போதுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, முதுகு முள்ளந்தண்டினுள்ளிருக்கும் தண்டுவடத்தில் கட்டி என்று வைத்தியர் சொன்ன கணத்தில், என்னால் இழக்கப்படவிருந்த உலகம் சட்டென அழகாகிப்போனதைப் பார்த்தேன். நோயாகட்டும் மரணதண்டனையாகட்டும் ‘இதோ முடிந்துவிடப்போகிறது’எனும்போதே வாழ்வின்மீதான காதல் பெருக்கெடுக்கிறது; குறைகள், குற்றப்பட்டியல்கள் சிறுத்துப்போகின்றன. அதிலும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் எரிதழலில் தினம்தினம் கருகும்போது…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தெய்வீகன் February 17, 2019 ஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. ஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், இன்னும் சொல்…
-
- 1 reply
- 581 views
-
-
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா) pro Created: 04 October 2018 போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
அம்பேத்கரது எழுத்துக்களை காலவரிசைப்படி தொகுக்க வேண்டும்: வசுமித்ர நேர்காணல் ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற விமர்சனத்துக்கு உரிய ஒரு நூலை எழுதியிருக்கிறார் வசுமித்ர. இந்த நூல் எழுத வேண்டிய அவசியம், தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளின் நழுவல்வாதம், அம்பேத்கரை மறு வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம், அடையாள அரசியல் என பலவற்றைக் குறித்து இந்த நேர்காணலில் வசுமித்ர பேசுகிறார். ந.முத்துமோகன், அருணன், எஸ்.வி.ராஜதுரை, கி.வீரமணி, பெரியார்தாசன் என பலரைக் குறித்து இதில் பேசுகிறார். சிந்தன் பதிப்பகத்தில் அவரை அவரை த டைம்ஸ் தமிழ். காமிற்காக நேர்காணல் செய்தவர் பி.பீட்டர் துரைராஜ். கேள்வி : ‘அம்பேத்கரும் அவரது தம்மமும்’ என்ற உங்களுடைய நூலை வாச…
-
- 0 replies
- 1k views
-
-
உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார். அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவ…
-
- 6 replies
- 4.1k views
-
-
ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் -நூல் அறிமுக விழா : February 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் நேற்று சனிக்கிழமை 9 ஆம் திகதி காலை மன்னாரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் நகர மண்டபத்தில் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனும்; விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 603 views
-
-
படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்! " ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக…
-
- 2 replies
- 1.5k views
-
-
பாரதத்தில் பாண்டவர்கள் துரியோதனன், கர்ணன், பீஷ்மர் துரோணர் அபி மன்யு கடோத்கஜன் அசுவத்தாமன் தவிர எமக்கு தெரிந்து பெரிதளவில் கொண்டாடப்பட்ட வீரர்கள் மிகக் குறைவு.தமிழ் பதிப்புகளில் அவற்றின் நீளம் கருதியோ..போதியளவு தகவல்கள் இல்லாமல் போனதாலோ அவர்கள் பற்றிய எந்த தகவல்களை தெரிவிக்காமலே முடித்து விடுகின்றனர்.. ஆனால் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசில் அவர்கள பற்றிய ஏராளமான தகவல்களை கொட்டுகிறார்..அவர்களின் வம்சாவளி ,நாடு, அவர்களின் மனைவி,பிள்ளைகள், இப்பிடி பல அவர்களில எனக்கு பிடித்த வீரர்களாக சாத்யகி,பூரிசிரஸ்வஸ்,பகதத்தன்,பாஹ்லீகர்..போன்றவர்களை குறிப்பிடலாம்.. வெண்முரசில் இப்போது 12ம் நாள் போர் நடந்து கொண்டிருக்கிறது.பீஷ்மர் 10ம் நாளில் விழுந்து விட 11ஆம் நாளில் துரோணர…
-
- 0 replies
- 530 views
-
-
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு "உணர்வுகள் கொன்றுவிடு" யாழ் இணையத்துக்கே சமர்ப்பணம்.
-
- 11 replies
- 1.4k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2019ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் கடைகள், விற்பனை போன்றவை இருந்தாலும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஏற்பாடு இன்னும் மேம்பட வேண்டும் என்கிறார்கள். சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை புத்தகக் கண்காட்சி பார்க்கப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 810 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 4 முதல…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்' சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள் கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன். புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள். அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை). அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். 'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திர…
-
- 3 replies
- 1.5k views
-
-
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் January 12, 2019 சென்னையில் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர்களாகிய வெற்றிச்செல்வி, தீபச்செல்வன், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, நிஜத்தடன் நிலவன் போன்றோரின் புத்தகங்களும் பிபிசி தமிழோசையின் வடமாகாண செய்தியாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்தின் புத்தகமும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கண்காட்சி 20 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. வெற்றிச் செல்வியின் போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதிநாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய நூல்களும், தீபச்செல்வனின் நடுகல் நாவல், வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகாவின் (லதா கந்தையா) கவிதைத் தொகுப்பாகிய…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை ஆர்.மணி மூத்த பத்திரிகையாளர் The India Today Group (இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் ) சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது '42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (B…
-
- 2 replies
- 1.3k views
-
-
வாசித்திராத கதைவெளி க.வை. பழனிசாமி கள்ளக் கணக்கு (சிறுகதைகள்) ஆசி கந்தராஜா வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 பக். 128 ,ரூ.145 புலம் பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது ஏற்படுத்துகிற தாக்கமும் நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்துகிற தாக்கமும் தமிழைத் தற்கால வாழ்வுக்கானதாக மாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி புதுப்பிக்கப்படுவதாகவும் கருதலாம். கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தமிழ் இலக்கியத்தில் நம் வாசகன் அறிந்திராத வாழ்வெளிப் பரப்பை அறிமுகம் செய்கிறது. அவசரம் பற்றிக்கொள்ளாமல் நிதானமாக உரையாடுகிற நவீன கதைசொல்லியாக கந்தராஜாவைப் பார்க்கிறோம். இவர் தேர்வு செய்யும் மனிதர்கள் எப்படி படைப்பின் பாத்திரமாக உருமாறுகிறார்கள் என்பது இவரது ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை' -எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவேபிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும்எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும்எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக்காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும். -சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில்புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர். கருணாவின் பிளவு உருவாகிய2004 வரை, 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின்முதலமைச்சரும் ஆகியிருக்கின்றார். -சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்துகைவிலங்கிடப்பட்டு திருக…
-
- 0 replies
- 785 views
-
-
இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் (அலெக்சாண்டர் சொல்செனிற்சின் , 1962) அலெக்சாண்டர் சொல்செனிற்சின் எனும் ரஷ்ய எழுத்தாளர் பற்றி நான் முதலில் கேள்விப் பட்ட அதே காலப் பகுதியில் கம்யூனிசத்தின் சின்னமான பெர்லின் சுவர் இடிந்து, சோவியத் யூனியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தது. அவரது மொழிபெயர்க்கப் பட்ட எழுத்துக்களை அவ்வப்போது குறுங்கட்டுரைகளாகப் படித்ததோடு சரி. சுருக்கமாக, முன்னாள் சோவியத் செம்படைக் கப்ரனான அலெக்சாண்டர், ஜோசப் ஸ்ராலினை தனது தனிப்பட்ட கடிதமொன்றில் விமர்சித்த காரணத்தினால், எட்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டு சைபீரியாவின் கடூழிய முகாமுக்கு அனுப்பப் பட்ட ஒருவர். பல மில்லியன் பேர் இந்தக் குலாக் எனப்படும் கடூழியத் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு அனுப்ப…
-
- 5 replies
- 1.5k views
-
-
சென்னையில் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வெளியீடு! December 31, 2018 ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெறுகின்றது. சென்னை, கே.கே. நகரில் உள்ள டிஸ்கவரி புக் பலஸில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. தமிழகத்தில் இன்று இரவு இடம்பெறும் புத்தக விழாவில் வெளியிடப்படும் இந்த நாவல் 2019 – சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இயக்குனர் கவிதா பாரதி தலைமையில் நடைபெறும் சிறப்பு வருகையாளராக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கலந்து கொள்கிறார். இதேவேளை இந்த நிகழ்வில், இயக்குனர் மீரா கதிரவன், தமிழக கவிஞர் மண்குதிரை, ஊடவியலாளர் செல்வ புவியரசன், எழு…
-
- 0 replies
- 548 views
-
-
குற்றப்பரம்பரை - வேல. ராமமூர்த்தி வலைத்தள நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் பத்துப் புத்தங்கள் வாங்கியதாக ஞாபகம், அதில் முதலில் வாசிக்க வேண்டும் என்றெண்ணியது "குற்றப்பரம்பரை" நாவல். நாவலின் முன்னுரையில் 'பெருநாளாய் தீ வளர்த்தேன்', பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்' என்று ஆசிரியர் குறிப்பிட்டதை வாசித்த போது நாவலின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக உயர்ந்தது. இந்நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி அவர்கள். இவரை சமீப கால தமிழ்த் திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடியும். எழுத்துலகில் மட்டுமின்றி நடிப்பிலும் தன்னுடைய திறமையை நன்கு வெளிபடுத்தி வருகிறார். முன்னுரையிலிருந்த…
-
- 0 replies
- 8.8k views
-
-
15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியான இந்த ஆண்டை உண்மையில் நாவலுக்கான பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிகமாகக் கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் பற்றிய மீள்பார்வை. இலக்கியத்தில் எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு நாவலின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மூத்த எழுத்தாளர்களின் நாவல்கள் தொடங்கி புதிதாக வந்தவர்களின் நாவல்கள், கவிஞர்களாக மட்டுமே இருந்தவர்களின் நாவல்கள் எனப் பலரது நாவல்கள் அடங்கும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிக கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் எவை என பார்க்கலா…
-
- 0 replies
- 1.3k views
-
-
சங்க காலத் தமிழ்ச் சமூகம் - இராஜ்கௌதமனுக்கு மறுப்பு . இராஜ்கௌதமன் அவர்களின் சங்ககாலத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வுகள் ஆழமாகவும், நுட்பமாகவும், தனித்தன்மையோடும் இருக்கின்றன. தமிழ் அறிவு மரபு பற்றிய அக்கறை கொண்டு இயங்கிவரும் தமிழர்கள் தனது கருத்துகளோடு வினை புரியவேண்டும் என்கிற அவருடைய நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்கி அவர் சங்ககாலம் பற்றியும், அக்கால வேந்தர்களின் காலம் குறித்தும் கூறியுள்ள சில கருத்துக்களுக்கு வினை ஆற்றியுள்ளேன். “பதிற்றுப் பத்து - ஐங்குறுநூறு, சில அவதானிப்புகள்” என்கிற தனது நூலில் திரு.இராஜ்கௌதமன் கீழ்க்கண்ட 9 விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். தரை மற்றும் கடல்வழி வணிகம், வேளாண் மற்றும் தொழில்சார்ந்த பொறியியல், அரசாட்சி, நி…
-
- 0 replies
- 2k views
-
-
மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று வெளியிடப்பட்டது. வவுனியா கோயில்குளம் அருளகத்தில் நிகழ்வு நடைபெற்றது. நாவல் வெளியீட்டின் பின்னர், கோயில்குளம் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களிற்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சு.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிரேஸ்ட சட்டத்தரணி தயாபரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/16/மூங்கிலாகும்-முட்புதர்-நாவல்-வெளியீடு.html
-
- 0 replies
- 553 views
-
-
மெல்பனில் நடந்த “நிழல்வெளி” நூல் வெளியீடும் தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச்சந்திப்பும்!… தெய்வீகன். அகரன்November 27, 2018 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் ஊடாக பேசிய அரசியல், அறம் ஆகியவை குறித்து தமிழகத்தின் படைப்பாளுமை தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் அவர்கள் எழுதிய நிழல் வெளி நூல் அறிமுக நிகழ்வும் அவருடனான சந்திப்பும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறன்று மெல்பனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த படைப்பாளியும் அரங்கச்செயற்பாட்டாளருமான தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் தனது குட…
-
- 1 reply
- 826 views
-