Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயமோகனின் இந்திய ஞானம் சுயாந்தன் ஜெயமோகனின் இந்திய ஞானம் என்ற இந்நூல் இந்திய ஞானம் பற்றி எனக்கு மேலதிக தேடலையும் புரிதலையும் உண்டாக்கிய ஒன்று என்றே கூறுவேன். அவருடைய "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்" என்ற நூல் வழங்கிய அறிதலையும் புரிதலையும் வேறு எந்தவொரு நூலும் இந்து ஞான மரபு பற்றி தெளிவாக்கியதில்லை. அந்த நூலில் இடம்பெற்ற ஆறுதரிசனங்கள் பற்றிய பிரக்ஞை இன்றும் என் ஞாபகத்தில் அறையப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பல படைப்புக்களை என் பார்வையில் அணுகவும் வழி செய்தது. படைப்புக்களை வாசிப்பதற்கும் புனைவல்லாத கட்டுரைகளைப் படித்து அறிவைத் தெளிவு படுத்திக் கொள்வதற்கும் இடையில் உணர்வு மற்றும் அறிவு இரண்டும்தான் எல்லையாக உள்ளது.இந்திய ஞானம் என்ற ஜெமோவின் இந்த நூல் அறிமுக…

  2. வரும் ஜனவரி வெளியாக இருக்கும் ஆறாவடு நாவலைக் குறித்தான நேர்காணல் ஒன்று அண்மையில் தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த காணொளியை நேரடியாக இங்கே இணைக்கத் தெரியவில்லை. இந்த இணைப்பில் பார்க்கலாம்

  3. மார்க்சியப் பார்வையில் அத்வைதம் விமர்சனம்.! இடதுசாரிகளிடையே தத்துவ விவாதங்கள் மிகமிகக் குறைவாக நடக்கின்ற இக்காலத்தில் தோழர் பி.இளங்கோ சுப்பிரமணியன் எழுதிய “மார்க்சியப் பார்வையில் அத்வைதம்” என்ற நூல் வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கதே. தொடங்கினால் தான் நிறைகுறையை அறிந்து நீக்கிக் கொள்ள முடியும். தோழர் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. இந்தியத் தத்துவங்களில் ஒன்றான அத்வைதத்தை இந்நூலில் விமர்சித்துள்ளார். அத்வைதம் ஒரு முன்னாள் தத்துவம். அது நவீன உலகின் தத்துவம் அல்ல (பக்கம் -47), என்பதே தோழரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருக்க நவீன உலகில் காணப்படும் தத்துவத்தை விடுத்து இந்த அத்வைதத்தை ஏன் எடுத்து விமர்சித்துள்ளார் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. “பிரம்மம் ஒன்ற…

  4. 2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்! விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார். தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த ம…

    • 7 replies
    • 5.1k views
  5. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…

  6. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் - எதற்கு ஈழம்? PRAY FOR MY LAND ஈழத்து கவிஞரும் ஊடகவியலாளரும் குளோபல் தமிழ்செய்திகளின் எழுத்தாளருமான தீபச்செல்வனின் மூன்றுபுத்தகங்கள் தமிழகத்தில் சென்னையில் தற்பொழுதுநடைபெற்று வரும் 36ஆவது சென்னைப் புத்தகக்கண்காட்சியில் வெளிவந்துள்ளன. ஈழத்து மக்களின்பிரச்சினைகளைப் பற்றிய இந்தப் புத்தகங்கள் முக்கியத்துவம் கொண்டவையாக அமைந்துள்ளன. கிளிநொச்சி – போர் தின்ற நகரம் தனது சொந்த நகரான கிளிநொச்சியின் யுத்தத்திற்குப் பின்பானஅழிவு நிலையை உண்மையின் பதிவுகளாக குளோபல் தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையத்தில் தீபச்செல்வன்எழுதியிருந்தார். அவ்வாறு, கிளிநொச்சியில் சந்தித்தமனிதர்களையும் சம்பவங்களையும் பற்றி வெவ்வேறுசந்தர்ப்பங்களில் அவர் எழு…

  7. http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1369:2013-03-07-01-08-26&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

  8. வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் [ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:39 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. இந்நூல் பற்றியதான அறிமுகம் Links International Journal of Socialist Renewal என்னும் தளத்தில் Chris Slee எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. « ஒரு நாடானது பௌதீக ரீதியான அழிவுகள், ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்ட அழிவுகள், மக்கள் ஒ…

  9. “இலங்கை மண்ணின் தோற்றோர்” ஆங்கில நூல் ஐந்து மொழிகளில் வெளியீடு வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “இலங்கை மண்ணின் தோற்றோர்” எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. யேர்மன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசு, பொலிஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள குறித்த நூல் உலகின் பிரபல்யமான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிரபல சிங்கள எழுத்தாளரான புண்ணியகாந்தி விஜயநாயக்கவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “காத்திருக்கும் பூமி” எனும் நூலினை விமர்சித்து எழுதப்பட்ட இந் நூல் சமூக முன்னேற்றத்திற்காக இலங்கை மக்கள் எதிர் கொண்ட தனிமனித மற்றும் சமூக பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இலங…

  10. Started by விசுகு,

    முகடு - ஓலை 2 வாங்கினேன்.... வெளியில் நன்றாக வந்துள்ளது...... உள்ளே வாசித்துவிட்டு எழுதுகின்றேன்...

  11. ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா நிறைவை ஒட்டி, கொரிய அரசாங்கம், சாகித்ய அகாடமியின் பரிந்துரைகள் வழியாக இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு 'தாகூர் விருது’ வழங்கியது. அந்த எட்டு எழுத்தாளர்களில், நம் எஸ்.ராமகிருஷ் ணனும் ஒருவர். 'யாமம்’ நூலுக்காக விருது பெற்றுள்ள எஸ்.ரா, தென்னிந்திய மொழிகளில் தாகூர் விருது பெற்றுள்ள ஒரே எழுத்தாளர்! ''விருது பெற்ற மனநிலை குறித்தும் விருதுகளோடு எழும் சர்ச்சைகள் குறித்தும் சொல்லுங்களேன்?'' ''ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப் பவனுக்கு குளூகோஸ் தருவதைப்போலத் தான் இந்த விருதுகள். மேலும் ஓடத் தூண்டும் என்பதற்கான குளூகோஸே தவிர, 'ஓடியது போதும், ஓய்வெடுங்கள்’ என்பதற்கான சமிக்ஞை அல்ல விருதுகள். நூற்றாண்டுகளைக…

    • 0 replies
    • 1.1k views
  12. தூய அடிபணிவின் மகிழ்ச்சியற்ற தருணங்கள்: மாஜிதாவின் ‘பர்தா’ ஜிஃப்ரி ஹாசன் July 1, 2023 முஸ்லிம் பெண்களின் ஆடை (குறிப்பாக பர்தா, அபாயா போன்ற ஆடைகள்) குறித்த பார்வைகள் முஸ்லிம் சூழலில் தூய அடிபணிவிற்கான மதப் புனித ஆடையாகவே கருதப்பட்டு வருகிறது. அதன் மீது எந்தவொரு மாற்றுப் பார்வையும் ஏற்புடையதல்ல எனும் கருத்துநிலை தீவிரமாக உறைந்துள்ள ஈழத் தமிழ் முஸ்லிம் சமூக அமைப்பிலிருந்து எழுந்த மாஜிதாவின் பர்தா ஒரு புதிய உடைப்பாகக் கவனத்தை ஈர்க்கும் படைப்பு முயற்சியாகத் தோன்றுகிறது. சென்ற வருடம் வெளியான தமிழ் நாவல்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அதிகப் பிரதிகள் விற்பனையான நாவல்களின் பட்டியலில் பர்தாவுக்கும் ஓர் இடம் உருவாகி இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் இந்நாவலின் பேசுப…

  13. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்கு வதாக இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல் களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (Font), குறியீட்டாக்கம் (Enco ding), விசைப் பலகை (Keyboard) குறித்தும் இம்மூன்று அடிப் படைக் கூறுகளுக்கான ஒருங் குறி (Unicode) பங்களிப்பு குறித் தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் தமிழ் மென் பொருள்களின் அவசியம், உரு வாக்கம், பயன்பாடு குறித்து விரிவான செய்திகள் தரப்பட் டுள்ளன. இந்நூல் தமிழ் மொழி வளர்ச்சியில் தமிழ் மென் பொருள்களின் …

    • 0 replies
    • 855 views
  14. இவ்வாரம் முதல் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், எம்மவர்களால் வெளியிடப்படும் முதலாவது உலகத் தரம் வாய்ந்த தமிழ் சஞ்சிகையாக 'பரபரப்பு ஜனரல்' வெளிவருகிறது. இலண்டனில் வியாழக்கிழமையில் வெளிவரும் இச் சஞ்சிகை 'பரபரப்பு வாரப்பத்திரிகையின்' சகோதர வெளியீடாகும்.

  15. நண்பர்களை உருவாக்குவதற்கான போர்… அகரன் வீட்டின் பின்புறத்தில் மூங்கில் தடிகளை வெட்டி வீட்டுத்தோட்டத்திற்கு வேலி போட்டபடி இருந்தேன். மகள் என்னுடன் நிற்பதற்கு விரும்பினாள். அப்படி நிற்பதென்றால் நான் செய்யும் வேலையை நிறுத்தவேண்டும். வீட்டில் உள்ள சேவல் தன்னை கொத்திவிடும் என்று கத்துவாள். ஒரு சேவலுக்கு ஆறு பேடுகள் அவசியம் என்று எமக்கு கோழிகளை விற்ற பிரெஞ்சுப்பெண் சொன்னாள். இளம்பருவ சேவல் வளர்ந்து வர்ணங்களை வளர விட்டதோடு சண்டித்தனத்தை எங்களிடமும் காட்ட ஆரம்பித்திருந்தது. மகளைக்கண்டால் திரத்த ஆரம்பித்துவிடும். மகள் பெரிய தடியை வைத்திருந்தாலும் அதை தாக்கப் பயன்படுத்த மாட்டாள் என்பதை சேவல் எப்படியோ அறிந்து விட்டது. மகளுக்கு எப்போதும் ‘நீ பயம் கொள்வதை அறிந்…

      • Thanks
      • Like
    • 7 replies
    • 851 views
  16. இருள் தின்ற ஈழம் தேவஅபிராவின் 'இருள் தின்ற ஈழம்' கவிதைத் தொகுப்பை முன்வைத்து... 1. கவிதைகளை எவ்வாறு வாசிப்பது என்பது நம் எல்லோருக்கும் முன்னாலுள்ள கேள்வி. இன்று தமிழ்ச்சூழலில் எழுதப்படும் வகைமையில் கவிதைகளே நிறைய எழுதப்படுகின்றன . மேலும் கவிதைகளுக்கு சங்ககாலம் தொடக்கம் நீண்டகால தொடர்ச்சியும் தொன்மையும் இருக்கின்றன. ஆகவே நீண்டகால பராம்பரியம் உள்ள கவிதை உலகில், இவற்றில் எவற்றை வாசிப்பது என்னும்போதே நம்மையறியாமலே நாம் சில தேர்வுகள் செய்து கொள்ளத் தொடங்குகின்றோம். அந்தத் தேர்வுகளின் அடிப்படையில் எது நல்ல கவிதை, எது நல்லது அல்ல என்கின்ற பிரிப்புக்களை நம்மையறியாமலே ஏற்படுத்திக் கொள்கிறோம். நான் இப்போது அந்த பிரிப்புக்களில் இறங்க விரும்பவில்லை. நம் வாசிப்பிற்கும் இரசனைக்கும…

  17. 'மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தத்தினாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது’ - ஈழத்தின் இன்றைய நிலைகுறித்த யோ.கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் நடந்த கலங்கவைக்கும் நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டுவருகிறார். படிக்க முடியாத அளவுக்கு நெஞ்சு பதறும் காட்சிகள் இவை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர். போரில் ஒரு காலை இழந்தவர். 'தேவ…

  18. பிரமியின் ’கனதி’ சிறுகதை நூல் வெளியீடு Posted on June 30, 2023 by தென்னவள் 11 0 ‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணாமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்திபனும், கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தமும், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் க.ராஜனும் க…

    • 0 replies
    • 279 views
  19. யூதரும் தமிழரும் http://youtu.be/_1fIlGeg4MQ

  20. லண்டனில் ஆதி லட்சுமி சிவகுமாரின் நாவல் அறிமுகம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஞாயிறு நடக்கும் அறிமுக விழாவில் கலந்து கொள்ளலாம்.

  21. வரலாற்றின் தன்னிலைகள் ராஜ் கௌதமன் சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்…

  22. குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்னும் நாவல் இரு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தாலும் இப்பொழுதுதான் எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலின் பெயர் எல்லோரையும் வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு. வாசிக்கும் முன்னர் அதுபற்றிய விமர்சனங்கள் பலவற்றை வாசித்ததில், எனக்குள்ளேயே அதுபற்றிய மிகைப்படுத்தப்பட்ட கற்பனையும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. திரு பாலகுமாரனின் முன்னுரை சிறிது நீண்டதாக இருந்தது எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்தியிருந்த ஒரு தோற்றம் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மை. அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம். அவரின் எழுத்து, முதல் நூல் என்று கூறமுடியாதவாறு விபரிக்கும் விதம் அரும…

  23. கனடாவில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் சிறீறஞ்சனியும் அவரது மகள் சிவகாமியும் எழுதிய நூல். நூலின் பெயர் "சிந்துவின் தைப்பொங்கல்" ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு மொழியிலும் வெளியாகிறது. https://www.amazon.ca/dp/B08S7KTBNH புத்தகம் பற்றிய ஒரு கருத்துரை. “சிந்துவின் தைப் பொங்கல் உண்மையிலேயே ஒரு கனடாக் கதையாகும். புலம்பெயர் வாழ்க்கை, குடும்பம், பாரம்பரியம் என்பவற்றின் யதார்த்தத்தை இது தெளிவாகப் படம் பிடித்துக்காட்டுகிறது. எம்மை நிலைநிறுத்தும் இருமுகத்தன்மை, வருடாந்த அறுவடை மற்றும் குடும்பத்தவரிடையே இருக்கும் அன்பு ஆகியவற்றை இந்தக் கதை கொண்டாடுகின்றது. தனிமயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இத்தகைய பொதுமையான கருப்பொருள்களை நாம் புரிந…

    • 0 replies
    • 629 views
  24. இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும் ஓலங்களையும் தன்னத்தே வைத்திருந்தது. கடல் அப்படித்தான் அறிமுகமானது. அப்படித்தான் பழகியது. இந்த நாவல் இப்போதைய தலைமுறைக்குத் தெரிந்திராத ஒரு கடலை கதை முழுதும் அலைகளால் நிரப்புகிறது. முப்பது வருடங்களுக்கு முன்னால் இலங்கையின் வடபகுதியின் கடற்கரை கிராமங்களில் ஊடுபடிந்திருந்த கதைமாந்தர்களை அவர்களது உணர்வுகளை வாசகர்களோடு பேச விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.