நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகா சமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில் அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமே என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், பல்வர் கால, சோழர்கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் என்ன இந்த ஆழ்ந்தகன்ற சமுத்திரத்தில் ஒரு துளியாவது நம்மவர்கள் அறிவார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல இக்காலப் பல்கலைக்கழகப் படைப்பாளிகள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. பழந்தமிழ் இலக்கியம் பற்றிப் பேசு…
-
- 1 reply
- 5.4k views
-
-
அந்தரம் sudumanalJune 28, 2015 நாவல் அறிமுகம் இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல். “தேவடியா பயலுக… அகதி நாய்ங்க. அவன் அக்கா தங்கச்சியை போய் ஏறவேண்டியதுதானே. அதான் சிங்களவன் இவன்கள சுட்டு கொல்லுறான். இந்த அகதி நாயளுக்கு நாம பாவம் என்று அடைக்கலம் கொடுத…
-
- 0 replies
- 514 views
-
-
லண்டனில் ஆதி லட்சுமி சிவகுமாரின் நாவல் அறிமுகம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஞாயிறு நடக்கும் அறிமுக விழாவில் கலந்து கொள்ளலாம்.
-
- 0 replies
- 643 views
-
-
ஐமீல் ஹத்மலிடம் ஒரு விசித்திரமான பழக்கமிருந்தது, அவன் கண்ணாடி முன் அமர்ந்தபடி தன் பிம்பத்தின் முன்பாகப் பகடையை உருட்டி சூதாடிக்கொண்டிருப்பான். சில வேளைகளில் அவனுடன் சூதாடுவதற்கு வரும் உமர் கேட்டதுண்டு “ஜமீல் உன்னோடு நீயே ஏன் சூதாடுகிறாய்.” “ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு ஏமாற்றாத துணை ஏதிருக்கக்கூடும்.” “தன்னை ஆராதிப்பவர்களைக் கண்டிருக்கிறேன், இது என்ன பழக்கம், தன்னைத் தானே பழிவாங்கிக் கொள்வதா?” “உமர், இது சிறு வயது பழக்கம். கண்ணாடி பார்க்கத் தொடங்கிய முதல் நாளை நீ மறந்திருப்பாய், என்னால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை, நான் இப்படித்தானிருப்பேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது விளக்க முடியாத அதிர்ச்சி. ஆனால் மெல்ல ந…
-
- 0 replies
- 410 views
-
-
மறுநாள் வழுக்குப் பனிபெய்யும் அபாயம் இருப்பதாக அன்றிரவு எச்சரிக்கை அறிவிப்பு தொலைக்காட்சியில் விட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு ரொறன்ரோ பகுதியில் அன்று மாலை ஏற்பட்ட ரொர்நாடோ எனப்படும் உறிஞ்சும் சுழற்காற்றின் உக்கிரம் குறித்த காட்சியும் விரிவான தகவலும் ஒளிபரப்பாயின. சுபத்திரா அப்போது கீழே இருந்துகொண்டிருந்தாள். உறிஞ்சு சுழற்காற்று பற்றிய செய்தி கண்டதும் திடுமென எழுந்து ஒரு விநாடி அப்படியே உறைந்து நின்றாள். மறுகணம் தும்தும்மெனப் படிகளதிர மேலே ஓடினாள். மையம் கொண்ட இடத்தில் அகப்பட்ட யாவற்றையுமே ஒரு பூதம்போல் உள்ளுறிஞ்சிக்கொண்டிருந்தது அது. கார்கள் மோதுண்டன, ஒன்றின் மேலொன்று எற்றுண்டன, சிலது பாலங்களுக்குள் கவிழ்ந்து விழுந்தன. அந்தச் சுழிக்குள் அகப்படாத…
-
- 0 replies
- 396 views
-
-
சிவகாமியின் சபதம் “கல்கி” என்றாலே அனைவருக்கும் “பொன்னியின் செல்வன்” தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன்னுடைய மந்திர எழுத்துக்களால் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். “பொன்னியின் செல்வன்” விமர்சனம் எழுதிய போது அனைவரும் “சிவகாமியின் சபதம்” படிங்க அதுவும் இதே போல அசத்தலான நாவல் என்று கூறினார்கள். “பொன்னியின் செல்வன்” நாவல் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே! அதில் சோழர் பெருமை பற்றி என்றால் இதில் பல்லவர்கள் பற்றி. இரண்டுமே வெவ்வேறு களம் ஆனால், இரண்டிலுமே நாம் சம்பந்தப்பட்டு இதில் ஒரு அங்கமாக மாறி விடுவோம். அதாவது நாம் சோழ, பல்லவ குடிமக்களாகவே மாறி விடுவோம். பரஞ்சோதி பரஞ்சோதி என்ற சாதாரண நபர் ஆரம்பத்தில் நாவலை துவக்கி …
-
- 1 reply
- 4.5k views
-
-
யவன ராணி சரித்திர நாவல் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால் நம் தமிழகத்தின் பெருமையை அதன் வீரத்தை படிக்கப் படிக்க நாம் எவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பிறந்து இருக்கிறோம் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் வாழ்கிறோம் என்று பெருமையாக உள்ளது. Image Credit – blaftblog.blogspot.com இதற்காகவாவது வரலாற்று நாவல்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சாண்டில்யன் வரலாற்று நூல்களைப் பற்றிச் சிறு வயதில் இருந்தே அறிந்து இருக்கிறேன் என்றாலும் தற்போது தான் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. சாண்டில்யன் யவன ராணி, கடற்புறா நாவல்கள் பலரிடையே பாராட்டுப் பெற்ற நாவல்களாக உள்ளன. இனி யவன ராணி சோழநாட்டில் யவனர்களின் (கிரேக்கர்கள்) ஆட்சியை அமைக்க அந்த நாட்டு சோ…
-
- 1 reply
- 2.7k views
-
-
நடந்த இறுதிப் போரில் சிறைபிடிக்கப்பட்ட போராளிகள் அனுபவித்த சித்திரவதைக் கொடுமைகளின் பின்னணியில் ‘விடமேறிய கனவு’ என்ற நாவலை எழுதியிருக்கிறார் குணா கவியழகன். ஈழத்தில் களத்தில் நின்று போராடியவர்கள் கடைசியில் இயக்கத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்திக்குக்கூடக் காது கொடுக்காமல் தங்களது உயிரைக் காத்துக்கொள்வதற்காகச் சோற்றுப் பொட்டலங்களுக்கும் தண்ணீர் பாட்டிலுக்கும் கையேந்தி நிற்கிறார்கள். ஐ.நா.அமைப்போ, செஞ்சிலுவைச் சங்கமோ தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்துப்போனது. எதிரிகளாக இருந்தவர்களிடமே சரணடைந்து அவர்களிடம் உயிரை இரந்து நிற்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். இரவில் விலங்கிடப்பட்டும் பகலில் சித்திரவதைகளுக்கு ஆளாகியும் மரணத்தின் முன்னால் அவர்களது வாழ்…
-
- 2 replies
- 1.5k views
-
-
புத்தக அறிமுகம் நூலாசிரியர்: காசியபன் நாவல் யாரைப் பற்றியது? வெற்றிகரமாகவும் சாமர்த்தியமா கவும் சமூகத்தில் கவுரவமாகவும் வாழ்வதுகுறித்துப் பல அறிவுரைகளும் முன்னுதாரணங்களும் எப்போதும் சொல்லப்பட்டுவருபவைதான். பெரும் பாலான மனிதர்கள், சமூகத்தில் நிலவும் பொதுநடை முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். வாழ்நாள் முழுக்கத் திட்டமோ உத்தியோ சாமர்த்தியமோ இல்லாமல் விதிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றால் அதிர்ஷ்டசாலி என்றும், தோல்வியடைந்தால் அசடு என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட அசடு எனக் கருதப்படும் கணேசன் என்ற மனிதனின் கதை இது. வாழ்நாள் முழுவதும் ஓட்டல் பரிசாரகனாகவே வேலைபார்த்தவன். ஆனால், சாம்பா…
-
- 0 replies
- 444 views
-
-
ஜோர்ச் ஓவலின் '84', டாஸ்ற்றாஎவ்ஸ்க்கியின் 'த இடியற்' மற்றும் 'கிறைம் அன்ட் பணிஷ;மன்ற்' ஆகிய மூன்று நாவல்களையும் வாசித்து முடித்த கையோடு, நான்காவதை ஆரம்பிக்கை நினைக்கையில் வேதாளம் தோளில் ஏறி அமர்ந்துகொண்டது. இருபது வருடங்கள் பழக்கமான வேதாளம் தான். 'இங்கிலீசு புத்தகம் தான் படிக்கிறீங்கள் போல...ம் படியுங்கோ படியுங்கோ...அண்ணை தமிழோ...' என்ற தோரணையிலேயே வேதாளம் பேசும். வேதாளத்தோடு விவாதம் சரிப்படாது. விதண்டாவாதத்தில் நேரத்தைச் செலவழிப்பதிலும் ஒரு சில தமிழ் நூல்களைப் படித்து விட்டு நகர்ந்தால் வேதாளம் மறைந்து தொலையும். சோபாசக்த்தி புதிதாய் எதையும் எழுதியதாய்த் தெரியவில்லை. ஜெயமோகனின் எழுத்தில் இப்போது அலுப்புத் தட்டத் தொடங்குகிறது—'டார்த்தனியம'; எழுதிய ஜெயமோகன் இறந்து விட்…
-
- 1 reply
- 745 views
-
-
ஒரு கவிதைப் படைப்பானது எப்போது உணர்வுகளை ஊடுருவிச் செல்கின்றதோ அப்போதே அது ஒரு வெற்றிபெற்ற படைப்பாகிறது. அப்படியானதொரு படைப்பினை வெறுமனே கற்றுக் கொள்வதாலோ அல்லது அனுபவத்தாலோ உருவாக்கிவிடமுடியாது. ஒரு நிகழ்தலின் உண்மையை உணர்ந்து, உணர்ச்சிகளால் ஊடுருவி பார்க்கும் பார்வை யாருக்கு வாய்கிறதோ, அந்த பார்வையில் ஒரு அழகியல் கலந்து உணர்வுகளை தளம்பச்செய்யும் வகையில் யாரால் வெளிவிட முடிகிறதோ அவரால் மட்டுமே வெற்றிபெற்ற ஒரு கவிதையை பிரசவிக்க முடியும். அந்தவகையில் “நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்” என்ற காரண கரியத் தொடர்புகளை தன்னிலை சார்ந்து வெளிக்கொண்டுவந்துள்ளார் பூங்குழலி வீரன். அவர் தன்னிலை சார்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்த போதிலும் ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்தி ஒருமுறை தம்…
-
- 1 reply
- 579 views
-
-
வாசிப்பு என்பது எழுத்தாளனின் திறமைக்கப்பால் வாசகனின் மனநிலையிலும் தங்கியுள்ளது. அதுவும், வாசகன் ஓரு நூலினை வாசிப்பதற்கு முன்னதாக என்ன நூலினை வாசித்தான், நூல் வாசித்துக் கொண்டிருக்கையில் வாசகனின் வாழ்வின் நகர்ச்சி எவ்வாறு இருந்தது எனப் பல விடயங்கள் ஒரு வாசிப்பினை நிர்ணயிக்கின்றன. எதிர்பாரா விதமாக, நிக்கலோ மக்கியவேல்லியின் 'த பிறின்ஸ்' நூலினை வாசித்து முடித்த கையோடு கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலினை வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒன்றோடு மற்றையது முற்று முழுதாக முரண்படும் இவ்விரண்டு நூல்களோடும் எனக்கு உடன்பாடு உணரப்பட்டபோது, சில நாட்கள் அது பற்றிச் சிந்திக்கத்தோன்றியது. அவ்வாறு சிந்தித்தபோது ஒரு பதிவிடத்தோன்றியதால் இப்பதிவு. இந்த மாபெரும் நூல்கள் இரண்டையு…
-
- 28 replies
- 3.9k views
-
-
இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள். அப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான்.…
-
- 11 replies
- 1.3k views
-
-
நினைவு நதியின் மேல் வீசப்பட்ட கல் - எஸ்.வி.வேணுகோபாலன் மூன்றாம் பிறை, வாசித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்ல வைக்கிற புத்தகம் அல்ல. யாரிடமாவது அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை என்று ஆக்கி வைத்துவிட்ட அந்தப் பிரதியைப் பற்றி என்ன சொல்ல.... அல்லது சொல்லாது எப்படி இருக்க? மலையாள நடிகர் மம்முட்டி (பிரபல என்ற வழக்கமான அடைமொழியை அந்த நூலின் வாசிப்பு தவிர்க்க வைத்திருப்பது அவரது நூலின் ஆளுமை!) அவர்களது சுயசரிதைப் பிரதியான காழ்ச்சப்பாடு நூலின் மொழிபெயர்ப்பு தான் மூன்றாம் பிறை. வம்சி புக்ஸ் வெளியீடு. மம்முட்டியின் எளிமை எப்போதும் பேசப்படும் ஒன்று. அதை அவரது நூலும் பேசுவதுதான் ரசமானது. அடிக்கொருதரம் தான் யார் என்று தன்னை அகக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும…
-
- 1 reply
- 849 views
-
-
பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கு நன்றி நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவ…
-
- 0 replies
- 466 views
-
-
எனது கவிதைத் தொகுப்பு இன்று இந்தியாவில் பூவரசியால் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகின்றது. நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ, இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும், மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவாக்குகின்றன சூழல் என்பது கவிதை உருவான சூழலாகவும் வாசிப்பவரின் சூழலாகவும் இருக்கிறது. வாசிக்கப்படும் கவிதைக்குள் செயல்ப…
-
- 14 replies
- 1.3k views
-
-
நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் - யுவால் ஹராரியை முன்வைத்து எந்த ஒரு திருவிழாவிலும், அதன் உற்சாகத்திற்கு மத்தியில் சிலரை நாம் நிச்சயம் காணவேண்டியிருக்கும், ஒரு குழந்தைக்கு பஞ்சுமிட்டாய்காரனும் , பலூன்காரனும் போல. பெரியவர்களை குறிவைத்து திருவிழா தோறும் செல்பவர்கள், நிமித்திகர்கள். கிளிஜோசியம் , கைரேகை , எலிஜோசியம், சோளி உருட்டி ஜாதகம் கணிப்பவர், குடுகுடுப்பைக்காரர். என, அது ஒரு முக்கியமான குழு. தம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே தெரிந்தவற்றையோ, அல்லது உண்மை என நம்பாவிட்டாலும் வருங்காலத்தை பற்றியோ , அல்லது நடப்பு சிக்கலுக்கான பரிகாரம் என, எதோ வடிவில் மனிதர்களுக்கு நிமித்திகர்கள் சொல்லால் கேட்பதில் அலாதி விருப்பம் இருக்கவே செய…
-
- 0 replies
- 442 views
-
-
நியூசிலாந்தில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழா ——————————— நியூசிலாந்து, ஓக்லாண்ட்(Auckland) மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபம், 13 வது மே சாலை…
-
- 0 replies
- 129 views
-
-
நிர்வாணத்தின் நிழலும் மனமும் அ. முத்துக்கிருஷ்ணன் (http://www.keetru.com/literature/essays/muthukrishnan_9.html) ஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தை பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ருபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழிலாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்த புத்தகம் fiction என்.எஸ்.மாதவன் மற்றும் non-fiction எம்.பி.பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது) கணவனின் மரணத்துக்கு பிறகு தனது மாமியார் ஜமீ…
-
- 1 reply
- 2.2k views
-
-
நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமர் தம்பி 14 NOV, 2022 | 12:25 PM முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் எழுதிய ‘இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்’ நுால் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை 13ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்திய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திகள் கிளையின் பணிப்பாளர் எஸ். முரளிதரன், கொழும்பு, நாவல திறந்த பல்கலைக்கழக சட்டக்கல்விப்பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான யசோதரா கதிர்காமர் தம்பி மற்றும் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூ…
-
- 0 replies
- 321 views
-
-
நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோ…
-
-
- 3 replies
- 696 views
- 1 follower
-
-
எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி. 2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள். ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம். கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் : https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு ந…
-
- 3 replies
- 643 views
-
-
இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம் நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய க…
-
- 3 replies
- 828 views
-
-
வரும் 20ஆம் திகதி ஞாயிறு அன்று கிளிநொச்சியில் "தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை"யின் ஏற்பாட்டில், தியா காண்டீன் எழுதிய "நீ கொன்ற எதிரி நான்தான் தோழா" கவிதை நூல் வௌியீட்டு விழா நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம், உங்கள் ஆதரராவையும் பேரன்பையும் தாருங்கள். நாள்: 20.08.2023 நேரம்: பிற்பகல் 3.10 இடம்: கரைச்சிப் பிரதேச சபை மண்டபம் …
-
- 13 replies
- 1.3k views
-
-
நீங்கள் எல்லாம் எழுத்தாளராய்யா? வா. மணிகண்டன் கே.என்.செந்திலைப் பற்றிய கட்டுரையை பதிவேற்றிவிட்டு நேற்று மதியத்துக்கு மேல் தபாலில் வந்திருந்த காலச்சுவடு இதழைப் புரட்டினால் அதில் கே.என்.செந்தில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரையின் ஒரு பத்தியில் எனது பெயரும் வந்திருக்கிறது. திட்டியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். நேற்று பாராட்டி எழுதிய அதே விரல்களால் இன்று சண்டைக்காக தட்டச்சு வேண்டியதாகிவிட்டது கட்டுரையில் அந்தப் பத்தி இப்படி இருக்கிறது- முகநூல் மற்றும் வலைப்பக்கம் வைத்திருப்பவர்களின் தாக்கத்தை இந்தப் புத்தகச் சந்தையில் அதிகமாகவே உணர முடிந்தது. படைப்பாளிகள் பல ஆண்டுகள் எழுதி அதன் வழி உருவான வாசக எண்ணிக்கையை விளம்பரங்களால் இவர…
-
- 3 replies
- 1.5k views
-