நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும் ஜெயமோகன் jeyamohanJanuary 6, 2023 சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது. ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக…
-
- 1 reply
- 334 views
-
-
தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது அவர் எழுதியுள்ள 'எனது பயணம்' நூல். இதில் இளைய தலைமுறை அறிந்துகொள்ள நிறைய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம். நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்த ஓவியங்களை வரைந்து அழகு சேர்த்திருக்கிறார் பிரியா செபாஸ்டியன். நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கு பகிரப்படுகிறது: எங்கள் ஊரின் சிறிய மக்கட்தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் குறைவான எண்ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது. வெளியுலகின் பிரிவினைகளும்…
-
- 0 replies
- 495 views
-
-
இன்று பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகள். இந்நிறுவனங்கள் இன்று பெருமளவில் உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வரலாற்றைப் பற்றி 'முகமற்றவர்களின் அரசியல்' என்ற புத்தகத்தில் கே.எம்.சரீப் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரச்சினையை அல்லது ஒரு புதிய செய்தியை முன்வைக்கிறது. கடற்கரையோர முஸ்லீம்கள் பற்றி 'நீண்ட கரையின் மிக நீண்ட கதை' என்ற கட்டுரையில் கடலோர முஸ்லிம் கிராமங்களைப் பற்றிய நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமண சமயத்தை தழுவியவர்களாகவே இருந்தனர். தூய தமிழ் சொற்களான தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா …
-
- 1 reply
- 646 views
-
-
புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! தமிழில் எத்தனையோ புத்தகங்கள் தற்போது மறுபதிப்பு இல்லாமல் நின்று விட்டது. ஆங்கிலத்தில் கிடைக்காத புத்தகங்களையும் வாங்குவதற்கு வசதி உள்ளது. தமிழிலும் இது போன்ற வசதியை ஏற்படுத்த http://tamilbookmarket.com/ என்ற வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. புதிய புத்தகங்கள், அரிதான புத்தகங்கள், அதிகளவில் பிரபலம் இல்லாத புத்தகங்கள், பரவலாக அறியப்படாத எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் என அனைத்துப் புத்தகங்களையும் இந்த "தமிழ் புத்தகச் சந்தை' வெப்சைட்டில் வாங்க முடியும்.
-
- 3 replies
- 5.1k views
-
-
தவறவிடக் கூடாத புத்தகங்கள்: சந்தி பிரிக்கப்பட்ட பாரதி பதிப்பாசிரியர்: பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து… ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு ஆகிவிட்ட பாரதி கவிதையில் அவர் என்ன நவீனமான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் இன்றைய நவீன வாசகனுக்குப் பொருள் தெரியாத சொற்கள் அதிகமாக இருக்கின்றன. பழந்தமிழ்ச் சொற்கள், தமிழாகிய சம்ஸ்கிருதச் சொற்கள், சித்தாந்த சொற்கள், சென்ற நூற்றாண்டில் மிகுதியும் பயன்படுத்தி, இந்நூற்றாண்டில் வழக்கு குறைந்த சொற்கள் என அவை பலவாறு அமையும். பழந்தமிழ் சொற்களில் சில அல், எல், அளி, முரல், வாலை, நால்வாய், தூத்திரை என்பன சில சான்றுகள். தமிழாகிய சம்ஸ்கிருத சொற்களில் சில கன்னன் (கர்ணன்), வன்னக் களஞ்சியம் (வர்ணக்களஞ்சியம்) போன்றன. தொடக்க காலத்தில் க…
-
- 12 replies
- 3.5k views
-
-
* இந்த மதிப்பீட்டில் ‘தி இந்து’ வெளியீடுகள், ‘தி இந்து’ குழுமத்தைச் சார்ந்தவர்களின் நூல்கள் சேர்க்கப்படவில்லை. பளிச் புத்தகம் புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட! மீண்டும் காந்தி காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்…
-
- 8 replies
- 1.6k views
-
-
700 அரங்குகள் | 5,00,000 தலைப்புகள் | 20,00,000 வாசகர்கள் புத்தகக் காதலர்கள் ஆவலுடன் காத்திருந்த திருவிழா கொண்டாட்டத்துடன் நேற்று தொடங்கியது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. 38 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமும் அக்கறை யும் மிக்க சில பதிப்பாளர்கள், புத்தக விற்பனை யாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). வாசகர்களிடம் புத்தக வாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயங்…
-
- 11 replies
- 3.5k views
-
-
புத்தகப்பண்பாடு அருகி வருகிறதா? இன்று உலக புத்தக தினம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் நல்ல புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்றும் நல்ல புத்தகங்களே சிறந்த வழிகாட்டிகள் என்றும் வாசிப்பே மனிதனைப் பூரணப்படுத்துகின்றது என்றும் பேசப்பட்ட கால கட்டம் மெல்ல மெல்ல நழுவிச் செல்வதைப் போல இருக்கிறது. ஒரு கால கட்டத்தில் புத்தகங்களை பதிப்பிப்பதும் புத்தகங்களைப் பெறுவதும் மிகவும் அரிதாக இருந்தது. அப்போது வாசிப்பும் புத்தக தேடலும் புத்தக பாதுகாப்பும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தொடர்பாடலில், பதிப்புத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளும் பாய்ச்சல்களும் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் புத்தக வாசிப்பு மிகவும் கவலைக்கிடமாகவல்லவா இருக்கிறது? இன்று உலக புத்தக தினமாகும். இதனை பத…
-
- 1 reply
- 1k views
-
-
புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது? சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார். பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கல…
-
- 3 replies
- 937 views
-
-
புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 1 | கனலி கனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற புத்தாண்டு 2020 ல் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தோம். “இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்? ஏன் அந்த புத்தகம் ?” இந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த பரிந்துர…
-
- 3 replies
- 2.1k views
-
-
புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன் பூங்குன்றன் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல், பயங்கரவாதி நாவல்கள் வாயிலாக பெரும் கவனம் பெற்ற தீபச்செல்வன், நடுகல் சிங்கள மொழியாக்க நாவல் வாயிலாக சிங்கள மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தான் எழுதும் புதிய நாவலான சைனைட் குறித்து புத்தாண்டு தினத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறியீடாக கருதப்படும் சைனைட், போராளிகளின் கழுத்தில் தொங்கும் முக்கிய ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் …
-
- 0 replies
- 387 views
-
-
அனைவரையும் மீண்டும் ஓர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி, அதிகம் யோசிக்கவேண்டாம்.. மேலுள்ள 'புத்தியுள்ளவனை முட்டாளாக்கி, முட்டாளை புத்திமானாக்கி, நெத்தலிப்பயில்வானை நிஜப்பயில்வானாக்கி..' என்கின்ற தலைப்பு 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' எனப்படும் பெயரில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களால் எழுதப்பட்ட நாவலில் வருகின்ற என்னைக்கவர்ந்த ஓர் வசனத்தின் ஒரு பகுதி. நான் கடந்தமாதம் வடலி வலைத்தளம் ஊடாக வாங்கிய மேற்குறிப்பிட்ட நாவல் நீண்டபயணம் செய்து அண்மையில் வீடுவந்து சேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் நாவலை முழுமையாக படித்து முடித்தேன். முதலில், இந்த நாவலின் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், நாவலை வெளியிட்ட வடலி பதிப்பகத்திற்கும் எனது நன்றிகளும், பாராட்டுக்களும். …
-
- 36 replies
- 7k views
-
-
புத்துயிர் ஊட்டட்டும் 2017 புத்தகக் காட்சி! சென்னை புத்தகக் காட்சி-2017 நேற்று தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவிலேயே பெரிய புத்தகக் கொண்டாட்டம் இது. பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ஊடகங்கள் என்று ஒருசேரக் கொண்டாடும் பெருநிகழ்வு! பல ஆண்டுகள் சிறிய அளவில் நடந்துகொண்டிருந்த இந்த விழா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக உருவெடுத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான சமூக மாற்றம் என்றே கருத வேண்டும். வலைப்பூக்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் வருகையும் கூட இந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம். ஊடகங்களில் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைப்பது சாத்தியமில்லை என்னும் நிலையில், …
-
- 13 replies
- 1.7k views
-
-
புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024 அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்…
-
- 1 reply
- 327 views
-
-
அறம் சார்ந்து வாழ விரும்புகிற மனிதர்கள் பெரும்பாலும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். அறம் குறித்த சிந்தனையே இல்லாத இடத்தில் எனக்கான வாழ்க்கை எது? அறத்துக்கும் அன்புக்கும் சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் உள்ள இடம் எது? இந்தக் கேள்விகள் உருவாக்கும் வெளி அவற்றின் பதிலைவிட மேலானது. ஜோ டி குருஸின் 'அஸ்தினாபுரம்' நாவல் இப்படியான வெளியில் வாசகர்களைப் பயணிக்க வைக்கிறது. 'அஸ்தினாபுரம்' நவீன வாழ்க்கையின் யுத்த பூமி. இந்த யுத்தம் மறைமுகமானது. ஆகவே சிக்கலானது. எதிரியைத் தனித்து அறிய முடியாத இடத்தில் நடக்கிற வேறு யுத்தம். வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் தவிர்க்க முடியாதவை. அதுபோல அழிவும் ஆக்கமும் உண்டு. யாருக்கு வெற்றி, யாருக்கு வாழ்வு? என்ப…
-
- 0 replies
- 772 views
-
-
புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு. சுயாந்தன் எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன். பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும். அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீ…
-
- 0 replies
- 505 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையிலான போரில் கட்டாயமாக உட்படுத்தப்பட்டு, பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள் பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார் இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ். சிறார்களின் எதிர்கால நம்பிக்கை இந்தக் கவிதைகளையும் ஓவியங்களையும் பார்க்கும் போது எல்லா சோகங்களையும் இழப்புகளையும் மீறி அந்தச் சிறார்களின் நம்பிக்கை துலக்கமாகத் தெரிகிறது. அந்த முகாம்களில் வாழும் சிறார்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினரில் ஒருவரையாவது இழந்தவர்கள்; வீடிழந்து, உறவிழந்து, வாழ்விழந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்லாத பெரும் தவறுக்கு பலியாகி இன்று நிற…
-
- 0 replies
- 472 views
-
-
புலம்பெயர் இலக்கியம் முனைவர் க.பூரணச்சந்திரன் பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகர…
-
- 0 replies
- 3.7k views
-
-
புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர் [புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘ப…
-
- 3 replies
- 2.4k views
-
-
இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில…
-
- 3 replies
- 1.3k views
-
-
புதிதாக ஒரு கதைக்களனைத் தேர்ந்தெடுக்கும்போதே, ஒரு நாவல் பாதி வெற்றியடைந்து விடுகிறது. சொல்ல வந்ததை சரியாகச் சொல்லி விட்டால் முழு வெற்றியையும் பெற்று விடுகிறது. பல எழுத்தாளர்கள் புதியதொரு கதைக்களனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, சொல்லும் முறையில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால், கதைக்களன், சொல்லும் முறை இரண்டிலும் கோட்டை கட்டியிருக்கிறார் குணா.கவியழகன். appal oru nilamகிளிநொச்சியை சிங்களர்களிடமிருந்து மீட்க, புலிகள் மேற்கொண்ட வேவு நடவடிக்கைகள்தான் கதையின் களம். இதைச் சுற்றி விடுதலைப் புலிகளின் அன்றாட வாழ்க்கை, பயிற்சி முறைகள், இயக்க செயல்பாட்டு முறைகள், போர்க்குணம், போரினால் அலைக்கழிந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை ஆகியவற்றை மிக நெருக்கமாக நம்முன் காட்சிப்படுத்துகிறார் குணா.கவ…
-
- 0 replies
- 668 views
-
-
புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்:- இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக்கொண்டிருந்த பின்னணியில் நிலாந்தன் திசை பத்திரிகையில் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார். அதிலிருந்து தொடக்கி இருபத்தியேழு ஆண்டுகளாக எழுதிவரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் ,உதயன் ஆகிய பத்திரிகைகளில் எழுதியுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தினக்குரலில் வரும் அவருடைய கட்டுரைகள் பின்னர் குளோபல் தமிழ் செய்திகள், பொங்குதமிழ், மாற்றம் Jds Lanka(Journalist for Democracy in SriLanka)போன்ற பல இணையத் தளங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றன. போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒ…
-
- 0 replies
- 586 views
-
-
புலிகளும் படைப்பாளிகளும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முடிவிற்குப்பிறகு ஈழத்துக் கலை இலக்கியச்செயற்பாடுகளின் போக்குகள் தொடர்பாக அண்மைக்காலங்களில் பல கவலைகள் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஈழத்துப்படைப்பாளிகளின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. 80 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த போது ஈழத்து இலக்கியங்கள் அறிவூட்டல் அல்லது பொழுது போக்கு என்ற நோக்கத்தைக் கடந்து சமூக விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தி, இன ஒடுக்கு முறையைக் கேள்விக்குட்படுத்தி மக்களைப் போராட்டம் ஒன்றுக்கு தயார்படுத்தும், சமூக அசைவியக்கத்தை தூண்டும் நோக்கத்தைக் …
-
- 23 replies
- 1.7k views
-
-
புலிகள் மீது சேறும், இராஜீவ் காந்திக்கு சல்யூட்டும் அடிக்கும் சவுக்கு புத்தகம் அரிசி மூட்டையில் ஓரிரு கற்கள் கலந்திருந்தால் அதைப் பிரித்தெடுக்கலாம். ஆனால், ஒரு மூட்டை மணலில் கைப்பிடி அரிசியைப் பொறுக்குவது? ராஜீவ் சர்மா எழுதிய 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி' நூலிலிருந்து நமக்கு சாதகமான செய்திகளைப் பெறுவதும் அப்படி அரிசி பொறுக்குகிற வேலைதான். ஈழப் போராட்டம், விடுதலைப் புலிகள், ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் - இவை அனைத்திற்கும் எதிரான ஒரு புத்தகத்தை பொருட்படுத்தி விவாதிக்க வேண்டிய காரணம் அந்தப் புத்தகத்தை பதிப்பித்திருப்பது நமது தோழர் சவுக்கு என்பதால்தான். வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் நமது தோழ…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு. கலக்கப்போவது யாரு புகழ் புளியந்தோப்பு தங்கதுரை தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்ற ஒரு அர்த்தம் புரியாத ஜோக்கை சொல்லி வேற லெவலில் ரீச் ஆன காமெடி நடிகர் யார் தெரியுமா. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவின், முதல் சீசன் ம…
-
- 0 replies
- 2.1k views
-