நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
ஆஸ்திரேலிய நூலகத்திற்கு தடுப்பு முகாம் அகதியின் நூல் நன்கொடை .! ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி. பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார். ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கும் இந்நூலின் 10 பிரதிகளை Ballina Region for Refugees எனும் அமைப்பு ஆஸ்த…
-
- 0 replies
- 384 views
-
-
பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது. யுத்த களத்தில் எதிரிகளால் பிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல் 'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட…
-
- 1 reply
- 597 views
-
-
மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப் பெற்றுள்ளது. புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும் கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும் இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது. மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும் நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்ப…
-
- 0 replies
- 361 views
-
-
லண்டனில் ஆதி லட்சுமி சிவகுமாரின் நாவல் அறிமுகம். ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஞாயிறு நடக்கும் அறிமுக விழாவில் கலந்து கொள்ளலாம்.
-
- 0 replies
- 643 views
-
-
புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 1 | கனலி கனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற புத்தாண்டு 2020 ல் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தோம். “இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்? ஏன் அந்த புத்தகம் ?” இந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த பரிந்துர…
-
- 3 replies
- 2.1k views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ நாவல். தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நாவல் இரண்டாம் பதிப்பு சென்னை புத்தக கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் காட்சியறையில் கிடைக்கின்றது. கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஆடுகளம் திரைப்பட உதவி இயக்குனர் ஹஸீன் ஆகியோர் பிரதிகளை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி சென்னையில் கண்காட்சி வளாகத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.. ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
எஸ்.பொவின் 'சடங்கு' இளங்கோ-டிசே 1,எஸ்.பொ எனப்படுகின்ற எஸ்.பொன்னுத்துரையின் புனைவுகளில் பரவலாக வாசிக்கப்பட்ட நாவலாக 'சடங்கே' இருக்கக்கூடும். 1966ல் சுதந்திரன் பத்திரிகையில் தொடராக வந்து, பின்னர் சுதந்திரனால் நூலாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றது. அன்றையகாலத்தில் ஒரு வருடத்துக்குள்ளேயே சடங்கு, 2000 பிரதிகள் விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியாவில் ராணி வாராந்திரி வெளியீடு சடங்கை 80களின் தொடக்கத்தில் மலிவு விற்பனையில் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றது. இந்தவகையில் இலங்கையில் மட்டுமில்லை, இந்தியாவிலும் 'சடங்கு' பெருமளவு வாசகர்களால் வாசிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறியமுடிகின்றது. சடங்கை எஸ்.பொ எழுதத்தொடங்கியது தற்செயலான நிகழ…
-
- 11 replies
- 2.4k views
-
-
-
1) காமதேனுவின் முத்தம் இன்று தான் படித்து முடித்தேன் கோவூர் எனும் கிராமத்தில் பெரியவீட்டுகாரர் என அழைக்கப்படும் குடும்பத்தில் கற்பிணிப்பெண்களின் கண்ணில் காம தேனு காட்சிகொடுக்கும் அக்கற்பிணிப்பெண்களுக்கு காமதேனு அம்சம் உள்ள பெண்குழந்தை பிறக்கும் அதன் பின் உள்ள மர்மங்கள் பற்றிய கதை காலசக்கரம் நரசிம்மா எழுதியது 2) ரோலெக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் 3) மாயப்பெருநிலம் - சென் பாலன் 4) 5 முதலாளிகளின் கதை - ஜோதியி 5) வஜ்ரவியூகம் 6)சாம்ராட் 7) மஹாபாரதத் தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம் 8)வெண்முரசு ( பாரதப்போரின் துரியோதனன் இறப்பு வரையான பகுதிகள் (கார்கடல்..இருட்கனி.மற்ற பகுதிகளின் பெயர் நினைவில்லை) 9)கௌரவன் ( இன்னும் முடிக்கவி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இனிதே அரங்கேறிய செந்தூரனின் ’மனப்பாரம்’ சிறுகதை நூல்.! ஈழத்தின் இளம் எழுத்தாளர் கனகபாரதி செந்தூரன் எழுதிய மனப்பாரம் சிறுகதை நூல் வெளியீடு கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2019) சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சி கண்ணகைநகர் இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய கனகபாரதி செந்தூரன் கொட்டகல ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் கல்வியை பயின்று வருகிறார். கிளிநொச்சி பரந்தனை பூர்வீகமாகக் கொண்ட இவர் கனகரத்தினம் செந்தூரன் என்ற இயற்பெயரை கொண்டவர். இவர் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுதியே மனப்பாரம். இந் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறிதரனும் சிறப்பு …
-
- 0 replies
- 854 views
-
-
-
மீனா’ தெலுங்குப் படத்துக்கும் தமிழ் நாவல் உலகில் எண்டமூரி விரேந்திரநாத் பெயரில் நடந்த மோசடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்டமூரி விரேந்திரநாத்? ஆம். 70 - 80 - 90ஸ் கிட்ஸின் ஹாட் கேக். 1980களில் தமிழ் வெகுஜன தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். ‘துளசி தளம்’, ‘மீண்டும் துளசி’ ஆகிய எண்டமூரி விரேந்திரநாத்தின் நாவல்கள் சுசீலா கனகதுர்க்காவின் மொழிபெயர்ப்பில் தமிழகத்தில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இவ்விரு நாவல்களின் வெற்றியை தொடர்ந்து எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய பல நாவல்கள் தமிழ் வார இதழ்களில் தொடர்கதைகளாகவும் நேரடி நாவல்களாகவும் வெளிவந்தன. லெண்டிங் லைப்ரரியில் தவறாமல் இடம்பெற்று வாசகர்களின் ஆதரவை பெற்றன. அப்படி வெள…
-
- 12 replies
- 7.3k views
-
-
The Road of Lost Innocence எனது பெயர் சோமாலி மாம்..சோமாலி என்றால் “ கன்னி வனத்தில் தொலைந்த பூச்சரம்” பெயரின் அர்த்ததைப்போலவே எனது வாழ்க்கையும் என்று ஆரம்பிக்கிறது இந்த புத்தகம். கடும் போக்ககுடைய கம்னீயூஸ்ட கட்சி ஆட்சியிலிருந்த (Khmer Rouge) சமயத்தில் பிறந்த சோமாலி(1971?), பெற்றோர்களை தெரிந்திருக்கவில்லை, தாய்வழிப்பாட்டியும் இவரை காட்டில் விட்டுவிட்டு மாயமாகிவிட, Taman எனும் முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்படுகிறார். 9 வயதாகும் சமயத்தில் திடீரென பாட்டனார் எனக்கூறி வந்த ஒருவரால் கூட்டி செல்லப்படுகிறார், பின்பு பாட்டனாரினாலும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு சீன வியாபாரியால் பலாத்காரப்படுத்தபடுகிறார். அப்போது இருந்த கம்போடியாவில் பெண்களை சிறுவர்களை(பெரும்பாலும் சி…
-
- 0 replies
- 612 views
-
-
-
நூல் அறிமுகம்: ஒரு புது வெளிச்சம் யசோதா.பத்மநாதன் காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் - போர் காலம் - போருக்குப் பின் - என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி. வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்…
-
- 0 replies
- 785 views
-
-
#மாயப்பெருநிலம் கிண்டிலின் உதவியினால் வாசித்து முடித்தாயிற்று வாசித்து முடிக்கும் வரையிலும் உண்மையில் மிக விறு விறு ப்பா இருந்தது அதுவும் அந்த போலியானவர்களின் கையில் போய்ச்சேர்ந்துவிடுமோ, இவர்களை இலகுவாக நம்பி விட்டாரே பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்ற தவிப்பு இருந்து கொண்டே வந்தது. நம்பர் 002 உண்மையில் இருக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு அநேகமானவர்களிடம் இருப்பது போல் பேராசிரியரிடமும் இருந்ததில் வியப்பு இல்லை. எங்களவர்கள் எழுதும் கதைகளில் போராட்டத்தின் இழப்புகள் சார்ந்த ஒருவித சோக இழையோடும் கதைகள் அதிகமாக வந்திருக்கின்றன அல்லது நான் படித்திருக்கிறேன் அவற்றுடன் ஒப்பிடும் போது இப்படியான கதைகள் புதிய களத்தினை திறந்து வைத்திருக்கின்றது எனலாம்.. கதாசிரியர் இடையிடையே…
-
- 7 replies
- 1.4k views
-
-
பொயற் ஐயாவும் இடையில் கூட்டத்தை தன் கையில் எடுக்கப்பார்த்தார் (24 ஆவது நிமிடத்தில் இருந்து). ஆனால் ஷோபாசக்தி ஒரு மாதிரி தனது கலந்துரையாடலுக்குள் கொண்டுசேர்த்துவிட்டார்.
-
- 15 replies
- 4.5k views
-
-
குலாத்தியாச்சே போர்( ஒரு குலாத்திக் குழந்தை) இந்த புத்தகம் மிகவும் வினேதமான சமூகத்தை அறிமுகப்படுத்தியதால் அதை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன். குலாத்தியாச்சே போர்: மராத்திய மொழியில் உருவான ஒரு தலித் காவியம். ஆசிரியர்: மறைந்த டாக்டர் கிஷோர் சந்தாபாய் காலே. ஆங்கில மொழிபெயர்ப்பு: சந்தியா பாண்டே தமிழில்: குலாத்தி ( தந்தையற்றவன்). ஆங்கிலம் வழி தமிழில்: வெ. கோவிந்தசாமி. “ வித்தியாசமான முரசொலியை கேட்பதால்தான் ஒரு மனிதனால் தன் சக நண்பர்களுடன்சமநடை போடமுடியவில்லை போலும்” என்று தோரோ எழுதியுள்ளார். வித்தியாசமான முரசொலியை கேட்கும் திறன் பெற்ற, அதன் இசைக்கு எதிர்வினை செய்கின்ற, மனிதர்களால் மட்டுமே தாங்கள் …
-
- 0 replies
- 733 views
-
-
புளியமரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே.... தங்கதுரையின் தற்கொலை ஜோக் புக் வெளியீடு. கலக்கப்போவது யாரு புகழ் புளியந்தோப்பு தங்கதுரை தன்னுடைய ஜோக்குகளை தொகுத்து தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார் தங்கதுரை. பொதுவாக கவிஞர்கள், எழுத்தாளர்கள் புத்தகம் வெளியிடுவார்கள் அவர்களுக்கு மத்தியில் தங்கதுரை நகைச்சுவை புத்தகம் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். புளிய மரத்து அடியிலே, புஷ்பலதா மடியிலே என்ற ஒரு அர்த்தம் புரியாத ஜோக்கை சொல்லி வேற லெவலில் ரீச் ஆன காமெடி நடிகர் யார் தெரியுமா. விஜய் டி.வியின் கலக்கப்போவது யாரு ஷோவின், முதல் சீசன் ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம் நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள…
-
- 5 replies
- 1.1k views
-
-
நந்தி கடல் பேசுகிறது நூல் அறிமுக விழா.
-
- 1 reply
- 1.2k views
-
-
FB ல வஜ்ர வியூகம் பற்றிய பகிர்வுகளை பார்த்து கிண்டிலில் தேடியபோது ப்ரீ என காட்டியது . டவுன்லோடியதும் என்ன தான் இருக்கு என சில பக்கங்களை பார்ப்பம் என உள்நுழைந்ததுதான்..பரவாய் இல்லையே என தொடர்ந்து முடித்து விட்டு தான் நிமிர்ந்தேன்.. ரொம்ப நல்லது என்றும் இல்லை சுமார்என்றும் இல்லாமல்.. ஓகே ரகம் எனலாம்.. அதிக கதாபாத்திரங்கள் வருவது கொஞ்சம் ஆர் எவர்கள் என நினைவில் வைத்திருப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. கதை என்று பார்க்கும் போது ரவுடிகளால் துரத்தப்படும் ஒரு பிச்சைகாரன் ,ரோட்டினை கடக்கும் போது ஒருபெண் பொலிஸ் அதிகாரியின் வாகனத்துக்கு முன் விபத்துக்குள்ளாகி் இறக்கிறான் அவன் உடமைகளை சோதனை செய்யும் போது ஒரு செல்போனும் மெமரிகாட்டும் கிடைக்கிறது அன்றிரவு அந்தப்பெண…
-
- 0 replies
- 1k views
-
-
அலெக்ஸாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பு உண்மையாகவே அவனின் உலகத்தை பிடிக்கும் ஆசையின் பகுதியா? அல்லது வேறு ஏதோ ஒரு இரகசியத்தை தேடி வந்தானா? அப்படி 25000 மைல்கள் வரை வந்தவன் சிந்து நதி தீரம்(இன்றைய பஞ்சாப் /பாகிஸ்தான் பகுதிகள்?) உடன் திரும்பியதற்கான காரணம் என்ன? அவன் தேடி வந்த இரகசியத்தை அவன் கண்டறிந்து அதை அடைந்து விட்டதனாலா? அல்லது அவனின் படையினரின் எதிர்ப்பா? களைப்பா? ####################### ஒலிம்பியாஸிடம் ( அலெக்ஸாண்டரின் அம்மா) தூரதேசத்து துறவி ஒருவரினால் 5 கட்டளைகள் எழுதப்பட்ட கன சதுரமும் ஆட்டு தோலில் எழுதிய குறிப்பு மற்றும் வரை படங்களும் கொடுத்து இவற்றை அவன் சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படி நிறைவேற்றுவானாயின் அவள் எதிர்பார்ப்பதை அவன் அடைவான் அ…
-
- 0 replies
- 595 views
-
-
-க. அகரன் இறுதி யுத்த காலத்தில், குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விவரங்கள் அடங்கிய நூல் ஒன்று, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று (01) வௌயிடப்பட்டது. சிறுவர் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (01) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, இந்த நூல் வெளியிடப்பட்டது. http://www.tamilmirror.lk/வன்னி/உறவுகளால்-நூல்-வெளியீடு/72-239430
-
- 0 replies
- 352 views
-