மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான். அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வ…
-
- 1 reply
- 3k views
-
-
ஒர் ஊரில் செல்வந்தன் இருந்தான். அவனிடம் அளவுக்கு செல்வம் அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்லை. இந்த வாழ்க்கை வீண் என்று, துறவறத்தில் இறங்கினான். அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், பணம் எல்லாவற்றையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கொண்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான். அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த செல்வந்தன், அந்த மூட்டையை துறவியின் காலடியில் வைத்து விட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு துறவியின் அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்." என்றான். எல்லாவற்றையும் கேட்ட துறவி, "அணைத்தையும் பூரணமாக அர்ப்பணித்து விட்டாயா?" என்று …
-
- 0 replies
- 1.3k views
-
-
- பாவண்ணன் 'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னு…
-
- 0 replies
- 841 views
-
-
அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள் அமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- http://kanichaaru.blogspot.in/2014/10/blog-post_17.html திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில், பாயிரம் துவங்கி ஒன்பதாந் தந்திரம் வரை 30047 பாடல்கள் உள்ளன. நோயற்ற வாழ்விற்கு வழி சொல்லும் நூல். ஆணும் பெண்ணும் எப்படியெப்படிச் சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச் சவால் விடும் அற்புதத் தமிழ்நூல்.ஆடிற்கு ஒரு பாடல்வீதம் பாடப்பட்டதாகவும், திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் சைவர்களின் நம்பிக்கை. பூலோக கைலாசம…
-
- 0 replies
- 3.4k views
-
-
இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிக்கும் இசுலாமியர்கள் கொண்டாடும் EID MUBARAK (Fête de Mouton) ஆடுவெட்டும் விழாவுக்கும் ஏதாவது தொடர்புண்டா??? கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் இரண்டும் வருகிறது....
-
- 6 replies
- 1.2k views
-
-
புகழ்பெற்ற ஜென் குரு ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம். அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான். மிகத் திறமைசாலி. அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன. குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே! நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார். உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும். சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப் பேசினார். அப்போது குரு,''அப்படியா, அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே! அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.…
-
- 0 replies
- 871 views
-
-
"தீபாவளி" எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா? தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? தீபாவளி என்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவ…
-
- 7 replies
- 4.6k views
-
-
புத்தர் ஞானமடைந்தபின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான். அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான். ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான். ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான். ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது. சிலர் புத்தரைக் கேட்டார்கள்,''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'' புத்தர் சொன்னார், ''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன. கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன். அந்த கர்மசங்கிலித் தொடரின் பிரதிபலி…
-
- 0 replies
- 836 views
-
-
முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம். மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிர…
-
- 15 replies
- 6.8k views
-
-
சாது ஒருவர் மாலைநேரம் நகரத்தை நோக்கி காட்டுவழியாக குதிரையில் போனார். வழியில் ஒருவன் மயங்கி விழுந்து கிடந்தான்! அவனை தூக்கி தன் குதிரைமீது ஏத்தினார். உடனே அவன் கடிவாளத்தை உலுக்கி குதிரையோடு பறந்தோடி மறைந்தான். அப்போதுதான் அவன் திருடன் என்பதை சாது உணர்ந்தார். மெல்ல நடந்து மறுநாள்காலை நகரசந்தைக்கு போனார். அங்கே குதிரை விற்கும் இடத்தில் அந்த திருடனை கண்டார்! அவன் சாதுவை கண்டதும் பயத்தில் மிரண்டான்! சாது மெல்ல சிரித்து அவன் அருகே சென்று, "குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் அதை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. ஏன் என்றால் சாலையில் யாராவது உண்மையில் மயங்கி விழுந்தாலும் எவரும் உதவமுன் வரமாட்டார்கள். புரிந்ததா..?" என்று சாது கூறிவிட்டு போக, திருடனின் கண்களில் கண்ணீர் துளிகள் …
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவத்தின் 16ஆம் நாள் நிகழ்வில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. http://virakesari.lk/articles/2014/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
-
- 6 replies
- 2.4k views
-
-
-ற.றஜீவன் வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் புதன்கிழமை (08) இடம்பெற்றது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2010-08-09-09-39-45/129796-2014-10-09-05-42-25.html
-
- 13 replies
- 1.4k views
-
-
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளியுள்ளார். கடந்த மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆழ்வாரின் பெருந்திருவிழாவில் இன்று காலை 8 மணியளவில் வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்று தொடர்ந்து ஆழ்வார் தேரேறி பக்தர்களிற்கு அருள் பாலித்துள்ளார். தொடர்ந்து நாளை 8 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் சமுத்திர தீர்த்த திருவிழா பூரண சந்திர கிரகணத்தை முன்னிட்டு இம்முறை வழமையை விடவும் முன்னதாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை பிற்பகல் 1 மணிக்கு வசந்தமண்டபப் பூஜைகள் நடைபெற்று 2.30 மணிக்கு ஆழ்வார் தீர்த்தமாட புறப்பட்டுச்செல்வார். 3.30 மணிக்கு தீர்த்தமாடி முடித்துக்கொண்டு 5.00 மணியளவில் ஆலயம் திரும்ப…
-
- 3 replies
- 942 views
-
-
ஞானி தெருவில் வந்து கொண்டிருந்தார். எதிரே ஒரு குடியானவன் வயலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தான். அவன் தன கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடந்து வர கயிற்றால் கட்டப்பட்ட மாடு அவனுடன் கூட வந்து கொண்டிருந்தது. ஞானி சிரித்தார். வினோதமான அந்தச் சிரிப்பு அவனை ஈர்க்கவே என்ன என்று கேட்டான். ஞானி கேட்டார். "நீ பசுவுடன் வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா?" இதைக்கேட்டு குழம்பிப்போன குடியானவன், "இது என்ன பைத்தியக்காரத்தனம்? பசுதான் என்னுடன் வருகிறது." "அப்படியானால் கயிறு எதற்கு? விட்டு விடு.!" "கயிற்றை விட்டுவிட்டால் பசு ஓடிவிடுமே!" என்றான் குடியானவன். "அப்படியானால் அது தான் உன்னைப் பிணைத்துள்ளது. நீ அதைப் பிணைக்கவில்லை!" என்றார் ஞானி. ஏதும் புரியாமல் விழித்தான் கு…
-
- 0 replies
- 897 views
-
-
ஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட…
-
- 3 replies
- 2.9k views
-
-
நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண் டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம். இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம். ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது. ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
கெளதம புத்தர் தனது சிஷ்சியரான ஆனந்தாவுடன் பிட்ஷை எடுக்கபோனார். ஒரு வீட்டில் பிட்ஷை கேட்ட போது ஒரு பெண் "முட்டாளே உனக்கு பிட்ஷை எடுக்க வெட்கமாக இல்லையா..?" என்று பலவாறு திட்ட தொடங்கினாள். ஆனந்தருவுக்கு மிகவும் கோபம் வந்தது. அந்த பெண்ணை திட்ட முயன்றார். புத்தர் ஆனந்தாவை தடுத்து அவ்விடத்தில் இருந்து எதுவும் பேசாது விலகி வந்த பிறகு, தனது திருவோட்டை ஆனந்தாவிடம் கொடுத்து "இதை மாலைப்பொழுதில் திருப்பி கொடு..!" என்றார். மலைபொழுது வந்ததும் ஆனந்தா புத்தர் கொடுத்த திருவோடை திருப்பி கொடுத்தார். அதற்கு புத்தர் "இல்லை இதை நீயே எடுத்து கொள்..!"என்றார். இரவானதும் தூங்கச்செல்லும் முன் ஆனந்தாவை பார்த்து "இந்த திருவோடு யாருடையது..?" என்று கேட்டார் . "என்னுடையது..!" என்றார் ஆனந்தர். "ஆனந்…
-
- 0 replies
- 974 views
-
-
நான்காம் பங்கு! நாட்டில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்..?” என்று அறிந்து கொள்வதற்காக அரசர் மாறுவேடத்தில் வந்தார். ஒரு தோட்டத்தில் விவசாயி உற்சாகமாக வேலை செய்து கொண்டிருந்தான். அரசர் அவனிடம், “உன் உழைப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தோட்டத்தில் உற்சாகமாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே.. என்ன காரணம்?” என்று கேட்டார். ”இந்த விவசாயத்தின் மூலம் நான்கு பங்குக்குத் தேவையான வருமானம் வேண்டியிருக்கிறது” “அதென்ன நான்கு பங்கு?” என அரசர் கேட்டார். “ஆமாம்.முதல் பங்கு கடன் அடைப்பதற்குத் தேவை. இரண்டாவது பங்கு வட்டிக்குத் தேவை. மூன்றாவது பங்கு தருமம் செய்யத் தேவை. நான்காவது பங்கு என் கடமைக்காகத் தேவை” என்றான் விவசாயி. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அவனிடமே …
-
- 4 replies
- 1.6k views
-
-
அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது. ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு நகை கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார். அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார். மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்…
-
- 0 replies
- 902 views
-
-
ஜென் துறவி லீன்சீ படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர். அவரிடம் ஒரு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார். சில வேளைகளில் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது. "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப…
-
- 0 replies
- 941 views
-
-
மாட்டிறைச்சியும் மதமும் வணக்கம் ஜெயமோகன் நான் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு சிலமுறை கேள்வி கேட்டுள்ளேன். இந்து மதம்தொடர்பாக நீங்கள் விரிவாக எழுதியுள்ளதால் இதை இதை உங்களிடம் கேட்கிறேன்.ஏன் இந்து மதத்தில் பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் தரப்படுகிறது. என்னை பொருத்த வரை புலால் மறுத்தல் தன் அனுபவத்தின் மூலம்வரும் என்றால் மதிக்கதக்கதுதான். ஆடு மாடு போல தானே பசுவும். அதுவும் இவைகள் மாதிரி ஒரு உயிர் தானே. ஆனால் மற்ற உயிர்களை விட நமது முன்னோர்கள்பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் கொடுப்பது ஏன்? அதுவம்மாட்டுக்கறி சாப்பிடுவோரை பெரிய பாவிகள் மாதிரி மற்றவர்கள் பார்ப்பதுமனசை உறுத்துகிறது. என்னமோ நம்ம எல்லாம் பெரிய புத்தர் மாதிரி. இதற்குபதில…
-
- 0 replies
- 1.4k views
-
-
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன. அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும…
-
- 79 replies
- 7.1k views
-
-
ஒரு கிராமத்தில் வயதான ஏழைக்கிழவன் இருந்தான். அவனிடம் அழகான வெண் குதிரை ஒன்று இருந்தது. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்பதை அவன் கண்டான். முழு கிராமமும் ஒன்று திரண்டு, “உனக்கு இது ஒரு கெட்டநேரம், இது ஒரு சாபம்” என்றனர். அந்த கிழவன், “அதிகம் பேச வேண்டாம். குதிரை லாயத்தில் இல்லை என்று மட்டும் கூறுங்கள். இதுதான் உண்மை மற்ற அனைத்தும் அனுமானங்களே. இது அதிர்ஷ்டமா இல்லையா என்பது யாருக்கு தெரியும்? எப்படி உங்களால் முடிவு செய்ய முடியும்?” என்றான். மக்கள், “இதற்குத் தத்துவம் எதுவும் தேவையில்லை. அரிதான ஒன்று காணாமல் போய்விட்டது. அது கெட்டநேரம் என்பது மிக சாதாரண உண்மை.” என்றனர். அந்த கிழவன், “லாயம் காலியாக உள்ளது, குதிரை போய்விட்டது என்பது உண்மை என நானும் ஒத்துக்கொள்கிறேன்…
-
- 0 replies
- 2k views
-
-
அலையும் மனதை ஒருநிலைப்படுத்த தியானம் என்பது எளிமையாகத் தெரியும். காற்றில் ஆடாமல் நேராக உள்ள சுடர் போல் புறத்தொல்லைகளில்லாமல் மனதை ஒருநிலைப்படுத்துவதே தியானம்.எவர் ஒருவர் தியானத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் சிறந்தவர்களாவார்கள்.தியானம் ஒரு வாழ்க்கை முறை. அது தவத்தின் படிக்கல். புத்தர் பல ஆண்டுகள் தியானம் செய்து ஞானம் பெற்று மக்களுக்கு நன்னெறி போதித்தார். ஒரு மதமே உருவாகியது. புத்தரின் உருவத்தைக்கூட நாம் தியான உருவமாக்கத் தவக் கோலத்தில்தான் காண்கிறோம். சிவபெருமானும் அனுமனும் தியான நிலையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் பரவசத்தை உண்டாக்குகின்றன. தேவர்களும் முனிவர்களும் அரசர்களும் தியானத்தால் பெற்ற பலன்கள் ஏராளம். சிவன் தன்னைத் தியானித்தவர்களுக்கு வேண்டு…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?v=Si-X_EDfGzU
-
- 0 replies
- 855 views
-