சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஒரு பிள்ளையுடன் நிறுத்தி விடும் பல குடும்பங்களை தற்போது காணகூடிதாக உள்ளது. கேட்டால். Career, படிப்பு என பல ஏதோ காரணங்களை சொல்கிறார்கள். எனது பொதுவான கருத்து பெண் என்பவள் பிள்ளை பெத்து தள்ளும் ஒரு இயந்திரம் இல்லை. இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
-
- 40 replies
- 4.4k views
-
-
இது இந்தியர்களுக்கான கட்டுரை எனிலும் பல விடயங்கள் சர்வதேச எல்லைக் கோடுகளை தாண்டியும் பொருந்துகின்றன என்பதால் இணைக்கின்றேன் ------------------------------- ஆறு மாத பணக் கையிருப்பு அவசியம்! திருமணத் தேதி குறித்தவுடனே ஆறு மாதங்களுக்குத் தேவையான குடும்பச் செலவு எவ்வளவு என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கடனாக வாங்கக் கூடாது. திருமணத்துக்குப்பின் ஏற்படும் அவசர கால செலவுக்கு இந்த சேமிப்பு நிச்சயம் உதவும். ஆயுள் காப்பீடு அவசியம்! திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் …
-
- 11 replies
- 6.1k views
-
-
அவநம்பிக்கையும் அறிவியல் கூறும்-1 நோவா ‘உடைந்த கண்ணாடியை ஏன் பார்க்க கூடாது’ ‘இரவானதும் நகம் ஏன் வெட்ட கூடாது’ ‘ஒற்றைக் காலில் ஏன் நிற்க கூடாது’ ‘இரவில் விசில் ஏன் அடிக்க கூடாது’ ‘கொடிக்கம்பிகளுக்கு அடியில் ஏன் நடக்கக்கூடாது’ ‘இரவில் உப்பை ஏன் வாங்க கூடாது’ ‘கர்ப்ப காலத்தில் கூந்தல் ஏன் வெட்டக்கூடாது’ என் முதல் கட்ட ஆராய்ச்சியை எனது அம்மாவிடமே ஆரம்பித்தேன். அடுத்து நண்பர்கள் மத்தியில். அதை அடுத்து எனது மாணவர்களிடையே இந்த ஆராய்ச்சி தொடர்பான கேள்விகள் தொடர்ந்து கேட்க பட்டன. இதையெல்லாம் நான் கேட்ட போது குறிப்பிட்ட ஒரே ஒரு உணர்வு மட்டும் எல்லாரிடமும் மேலோங்கி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதாவது இந்த நம்பிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஏ…
-
- 3 replies
- 9.2k views
-
-
சமூகத்தின் பாலியல் சிக்கல்கள் வா. மணிகண்டன் இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஒரு படத்தை தடை செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. பேசாமல் விட்டுவிட்டால் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் வந்த சுவடு தெரியாமல் அடங்கிவிடும். ஆனால் இவர்கள் தடை செய்கிறேன் பேர்வழி என்று விளம்பரத்தைக் கொடுத்துவிடுகிறார்கள். ஓரிரு நாட்களிலேயே லட்சக்கணக்கானவரகள் பார்த்துவிடுகிறார்கள். நேற்று பிபிசி எடுத்த ‘India's daughter' என்கிற ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அரசாங்கம் தடை செய்திருக்கும் ஆவணப்படம். scoopwhoop என்ற தளத்தில் வெளியிட்டிருந்தார்கள். ஒரு மணி நேர ஆவணப்படம். இந்தப் படம் எதற்காக தடை செய்ப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் „heart“-Emoticon #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். #இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். #மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். #நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். #ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். #ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து…
-
- 0 replies
- 971 views
-
-
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….! வசதியாகத்தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம். பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது! முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்! இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது நீ விடுதியில் தங்கிப் படித்த கால…
-
- 3 replies
- 1.6k views
-
-
சாமத்தியவீடு என்பதன் நோக்கம் ஒரு பெண்ணின் பெற்றோர் தன் பெண் பிள்ளை கல்யாணம் கட்டுவதற்கு தயார் என அறிவிக்கும் ஒரு நிகழ்வு. இது எங்கள் கலாச்சாரத்துக்கு தேவைதானா?
-
- 19 replies
- 2.1k views
-
-
அண்மையில் சில செய்திகளும் கருத்துக்களும் என்னில் சில கேள்விகளை விதைத்தன... சிறுவர்களை வைத்து வியாபாரங்கள் நடக்கின்றன சிறுவயதிலேயே பிலபல்யம் ஆக்கப்படுவதால் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது சிறுவர்கள் அவர்களை அறியாமலேயே ஆபத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை பார்க்கமுடிந்தது. இதை யோசித்துப்பார்த்தபோது இது தமிழர்களுக்கு மட்டும் பிரச்சினையான ஒன்றில்ல. அண்மையில் நானும் ஒரு கேள்வியை எனது பிள்ளைகளிடம் எழுப்பியிருந்தேன் ஒரு கார் விளம்பரத்துக்கு ஒரு சிறுவன் விளம்பரம் செய்வது பிரெஞ்சுத்தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது மக்களிடம் கேட்டேன் இதற்கு அவருக்கு சம்பளம் கொடுக்கப்படும் அப்படியாயின் சிறுவர்களை தொழிலாளர்களாக பாவித்தல் தடை என்…
-
- 8 replies
- 1.7k views
-
-
பெண்களின் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (அண்மையில் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய இராமநாதன் மகளீர் கல்லுரியின் நூற்றாண்டு விழா மலரில் இந்தக் கட்டுரை வெளிவந்திருக்கிறது) மக்களின் கல்வியறிவு, உலகத்தில் நடக்கும் எந்த மாற்றத்திற்கும் அடித்தளமாகிறது. அது சமயத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம் அல்லது விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாகவிருக்கலாம்,அவைகளின் வளர்ச்சிக்கம் மாற்றங்களுக்கும் ஒரு சமுதாயம் மேற்கொள்ளும் கல்வி அமைப்பு இன்றயமையாததது. அதிலும் பெண்களின் கல்வி ஒரு காத்திரமான அறிவுத்தளத்தில் சமுதாயம் வளர உதவுகிறது. சமுதாயத்தின் மூலமான ஒரு குடும்பம் நல்லமாதிரியமைய அந்தக்குடும்பத்தைக் கொண்டு நடத்தும் பெண்ணின் அறிவு உதவி செய்கிறது. இன்றைய கால கட்டத…
-
- 3 replies
- 5.7k views
-
-
பெண்களை வருணிப்பதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்தான்..! அவருடைய படைப்புக்களில் அனேகமாக பெண்ணின் அங்கங்கள். அதன் அசைவுகள், அழகுபற்றியே பக்கம் பக்கமாக எழுதியிருப்பதை அவதானிக்க முடியும். அதேநேரம் பெண்ணுடைய குணாதிசயங்களையும் அவர் குறிப்பிடும்போது அது அவருடைய அறிவைக் கொண்டதா? அனுபவத்தால் வந்ததா? கற்பனையின் ஓட்டமா? என்பதுபற்றி அவரும் எழுதவில்லை, அவர் படைப்புகளுக்கு முகவுரை எழுதியவர்களும் குறிப்பிட்டதில்லை. யாழ்கள உறவுகளின் சிந்தனையில் பெண்பற்றி ஓடும் எண்ணங்கள் சாண்டில்யனை இவ்விடயத்தில் எங்கு வைத்துப் பார்க்க விரும்புகிறது என்பதை அறியும் ஆவலில் இதனை இங்கு பதிகிறேன். முதலில் உன் அபிப்பிராயத்தைக் கூறடா தடியா என்று அவனோ! அவளோ! அதட்டுவது கேட்கிறது.! 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொ…
-
- 4 replies
- 1.1k views
-
-
பெண்கள்... பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள் பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள் இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள் உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் அவளின் கடைசி மூச்சு வரை உங்களுக்கு அனைத்தையும் செய்கிறாள், சமையல், வீட்டை பராமரிப்பது, உங்கள் பெற்றோரை கவனிப்பது, குழந்தை வளர்ப்பு, சம்பாதித்தல், உங்களுக்கு ஆலோசகராக, நீங்கள் ஓய்வெடுக்க, உங்கள் உறவினர்களின் உறவை பேண இவையனைத்தையும் செய்கையில் தன்னை வருத்தி, பொலிவ…
-
- 23 replies
- 2.6k views
-
-
படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா?? சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது. அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள் படித்து பட்டம் பெற்று தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் அனுபவரீதியாக எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது... இது பற்றி பேசலாம்.... அதற்கு முன் கிருபன் நிழலி Justin நெடுக்கு... இவர்கள் எழதிய கருத்து இவை.. இன்றல்ல என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது அதேநேரம் ஒரு காலத்தில் பணம் குவிக்கும் பட்டமாக இருந்த வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா?? அல்லது வேறு பட்டங்கள் அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் லாபகரமாக ஓடுகின்றனவா.....?? இங்கும்…
-
- 17 replies
- 2k views
- 1 follower
-
-
காட்சி 1 அதிகாலை நேரம் இருள் விலகத்துவங்கியிருக்கிறது திருநெல்லி மலைப்பகுதி வயநாடு மாவட்டம் கேரளம் வளைந்து நெளிந்து கரடுமுரடான மலைப் பாதைகளுடன் மல்லுக்கட்டி, முகடுகளை நோக்கி இரைந்துசெல்லும் ஒரு வெள்ளை நிற அம்பாசடர் கார். அதில் ஐந்துபேர் நெரிசலாக அமர்ந்திருக்கிறார்கள். தோ பிகா ஜமீன், மதுமதி, ஆனந்த், செம்மீன் போன்ற இந்திய சினிமாவின் எக்காலத்திற்குமுறிய படங்களுக்கு அதிசய இசையமைத்த மாமேதை சலில் சௌதுரி, பல தேசிய விருதுகள் பெற்ற செம்மீன் திரைப்படத்தின் இயக்குநர் ராமு காரியாட், அவரது துணை இயக்குநர் கே ஜி ஜார்ஜ், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது பெற்ற எஸ் எல் புரம் சதானந்தன். இவர்களுடன் பெஞ்சமின் பாலநாதன் மகேந்திரா எனும் இளைஞன். வரும் காலத்தில் ஒரு சி…
-
- 0 replies
- 674 views
-
-
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( " பாலுங்கசந்ததடி சகியோ படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உ…
-
- 1 reply
- 606 views
-
-
சாதிக்க துடிப்பவர்களின் வாழ்வில் சிலசமயம் சறுக்கி விழுவது போன்ற விபத்துகள் நேர்கின்றன. அது காலத்தின் கோலமாகவும், கவனக்குறைவின் விளைவாகவும் உடலியல் பின் உபாதைகளாகவும் பலநேரங்களில் உருவெடுத்து நிற்கின்றன நம்மில் பலருக்கும். நாட்டியத் தாரகையாக மின்னவேண்டிய 7 வயதேயான தமிழகத்தின் சுபிக்ஷா சந்திரனுக்கு கல்லீரல் பழுதாக ஆரம்பித்ததால் அவளது உற்சாகம் பாதியில் அறுந்துவிடுகிறது. தடகளப்போட்டியில் தங்கம் வெல்லத்துடிக்கும் 19 வயதேயான பஞ்சாப் வீராங்கனை ரூபிசிங்கின் இதயம் ஏனோ திடீரென செயலிழக்க ஆரம்பித்துவிட வெற்றி, ஆசைகள் வெற்று ஆசைகளாகும் ஆகிவிடுகிற வேதனை. காண்போர் கண்களுக்கு விருந்தளிக்க விரும்பி கனவுகளைக் குழைத்து காட்சிகளாய்த் தீட்டும் 37 வயதான மேற்கு வங்கத்தின் வண்ணத் தூரிகைக் …
-
- 0 replies
- 545 views
-
-
சமீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எ…
-
- 12 replies
- 1.8k views
-
-
ஆர்மீனியாவில் வசிக்கும் நியூசிலாந்துகாரரான சாமுவேல் பாரெஸ்ட் நெகிழ்ச்சியாலும், மகிழ்ச்சியாலும் திக்குமுக்காடிப்போயிருக்கிறார். அதற்கு காரணம் முதல் முறை தந்தையான மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு சோதனை வந்தபோது இணையம் மூலம் பலர் உதவி செய்திருப்பதுதான். குட்டி லியோவுக்காக அவர் இணையம் மூலம் கோரிக்கை விடுத்ததும் அதை ஏற்று இணையவாசிகள் 4 லட்சம் டாலர்களுக்கு மேல் நிதியை அள்ளிக்கொடுத்திருப்பதும் உண்மையில் நெகிழ வைக்ககூடியது தான். ஆனால் அதற்கு முன் குட்டி லியோவுக்கு ஏற்பட்ட சோதனையும் அதனால் அப்பா சாமுவேல் பாரெஸ்ட்டிற்கு ஏற்பட்ட நெருக்கடியையும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை லியோ பிறக்கும் போதே டவுன் சிண்ட்ரோம் எனும் குறைபாட்டுடன் பிறந்தது. இதன் காரணமாக குழந்தைய…
-
- 0 replies
- 964 views
-
-
இது, எந்தப் பாடசாலை சீருடை? ஒரு தாய், தனது காணமல் போன மகளை கடந்த அந்து வருடமாக தேடிக் கொண்டுள்ளார். அண்மையில்... அவரின் புகைப்படம் பத்திரிகை ஒன்றில் வெளிவந்ததன் மூலம், சிறு நம்பிக்கை ஒளி தென்பட்டிருக்கின்றது. உறவுகளே.... உங்களுக்கு, இந்தச் சீருடை கொழும்பிலுள்ள எந்தப் பாடசாலைக்கு உரியது என்று தெரிந்தால்..... அறியத் தாருங்களேன். http://www.yarl.com/forum3/index.php?/topic/153230-மைத்திரியுடன்-எனது-மகளைக்-கண்ட/
-
- 3 replies
- 1.3k views
-
-
என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் . இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் …
-
- 17 replies
- 2.4k views
-
-
தங்களுக்கு வருகின்ற Boy friend எப்படி எப்படியெல்லாம் இருக்கணும்?? d26fd02743b38688f6bd9a5706320ebe
-
- 0 replies
- 529 views
-
-
தெரிதலும், புரிதலும்..! ஒரு குடும்பம் அவர்களுக்கு ஒரு சிறு குழந்தை.. ஒரு நாள் வேலை விடயமாக அம்மா வெளியே சென்றுவிட, வீட்டில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை தந்தை ஏற்கிறார். குழந்தையும் சமர்த்தாக தன்னுடைய விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட ஆரம்பித்தது.. அதில் உறவினர் ஒருவர் பரிசளித்த பொம்மை "காஃபி செட்" குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். தந்தை வரவேற்பறையில் அமர்ந்தவாறு தினசரிகளை படிக்கத் தொடங்கினார்.. சிறிது நேரத்தில் குழந்தை பொம்மை "காஃபி செட்டை" தந்தையிடம் நீட்டி, "அப்பா,.! இந்தா..நான் போட்ட டீ., குடி..!" என்றது. அந்த பொம்மையினுள்ளே சிறிது தண்ணீர் இருந்தது. தந்தையும் குழந்தையை கொஞ்சியவாறு " ஆஹா..செல்லம்.., நீ தயாரித்து கொடுத்த டீ மிகப் ப…
-
- 6 replies
- 864 views
-
-
குஷி எழுந்திருந்தாள். எழுந்தவுடன் உடனே படுக்கையை விட்டு எழமாட்டாள். சற்றுநேரம் சும்மா படுத்திருப்பாள். ஏதோ யோசிப்பாள். இன்றும் நினைத்ததுபோல் எழுந்துவிட்டாள். மெல்ல நெருங்கினேன். இப்போதெல்லாம் கனமாகிவிட்டாள். ஒன்பது வயது முடியப்போகிறது. மெல்ல தூக்குவது போல் தூக்கி ”இந்தா உன் கிஃப்ட்” என்றேன். “பத்து வருஷமா இதையே சொல்லு. கிஃப்ட்டை மாத்தாதே” அனு சிரித்தாள். ஹேப்பி அன்னிவெர்சரி. பத்து வருடங்கள் போனதே தெரியவில்லை. கல்யாணம், தனிக்குடித்தனம், சிறிய அப்பார்ட்மெண்ட், சினிமா முடிந்து தியேட்டர் வாசலில் “நாள் தள்ளிப்போயிருக்கு”, கையில் பூவாய் குஷி, சுற்றிய ஊர்கள், ஊர்/நாடு நகர்தல்கள், முதல் தனி வீடு என ஒரு புத்தகத்தின் நூற்றுக்கணக்கான பக்கங்களை விரல்களால் விர்ர்ரென …
-
- 4 replies
- 943 views
-
-
பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும் பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறா…
-
- 0 replies
- 638 views
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 999 views
-
-
சிறந்த படம் சதுரங்க வேட்டை 'பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’- 'சதுரங்க வேட்டை’யின் பொளேர் ஒன்லைன் இது. மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம்., ஈமு கோழி... என சமீபகாலத்தில் தமிழர்கள் கடந்த அத்தனை மோசடிகளின் பின்னணி மீதும் பளீர் வெளிச்சமிட்ட படம். 'ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது’ - மாஸ் ஹீரோ சொல்லாமலேயே பட்டிதொட்டியெங்கும் பரவியது படத்தின் இந்த பன்ச். பெரும் பணம் சம்பாதிக்கப் பேராசைப்படும் தமிழர்களின் மனதைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காண்பித்து, அதில் அறுவடை செய்யத் துடிக்கும் ஜித்தர்களின் குறுக்குவழிகளையும் அம்பலப்பட…
-
- 0 replies
- 2.2k views
-