சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
பெண்: மகள்… சகோதரி… காதலி… துணைவி… மனைவி…. தாய்… மாமி… அம்மம்மா அம்மா அவரது மகளுடன் வாழ்ந்து வருகின்றார். அவரைச் சந்திப்பதற்காக போனபோது குசினியில் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் இருப்பது எனக்கு ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் அவர் கூறியவாறு சிறுவயது முதல் இதைத்தான் செய்து வந்திருக்கின்றார். எனக்குத் தெரிந்தவரையிலும் அம்மா தனது பெரும்பான்மையான நேரங்களை குசினியில் தான் கழித்திருக்கின்றார். ஆகவே அவர் குசினியில் இல்லாதிருந்தாலே ஆச்சரியமாக இருந்திருக்கும். நான் இங்கு போகின்றபோதும் “என்ன சாப்பிடுகின்றாய்” என எப்போதும் கேட்பதற்கு மறந்ததில்லை அவர். இவ்வாறு கேட்டுவிட்டு இருக்கின்ற சாப்பாடுகளின் வகைகளை காட்டிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருப்பா. என் மீது இவ்வாறு அக்கறை…
-
- 8 replies
- 919 views
-
-
இலங்கையில் திருமணம் முடித்த பெண்களில் 61 சதவீதமானவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழவில்லை என கணிப்பீட்டில் தெரியவந்துள்ளது. திருமணம் முடித்த 39 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கை வாழ்வதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கை பிரிவு பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களின் திருமண வயது 20 தொடக்கம் 30 ஆகும். 36 சதவீதமான பெண்கள் மகிழ்ச்சியுடன் இந்த வயதெல்லையில் திருமணம் முடித்துக் கொள்வதாகவும் அவர்களில் 33 சதவீதமான பெண்களுக்கு இரு குழந்தைகள் வீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாட்டினால் திருமணம் முடித்த 45 சதவீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கணவனின் குட…
-
- 0 replies
- 646 views
-
-
அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்? அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்? யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்? குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்? ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்? அடுத்தவர் குறைகளை …
-
- 3 replies
- 891 views
-
-
வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை? எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை? பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று? புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆம் அவளது அறையில் …
-
- 1 reply
- 906 views
-
-
அண்மையில் மலேசியாவில் சீமான் அவர்களது பேச்சைக்கேட்டபோது......... நீங்கள் என்ன மதமாகவும் இருக்கலாம் நீங்கள் என்ன சாதியாகவும் இருக்கலாம் அவற்றை பின்னால் வையுங்கள் முதலில் நாம் தமிழர்கள் அதன் கீழ் ஒன்றுபடுவோம் அதன் பின் உங்கள் மதம் சார்ந்து உங்கள் சாதி சார்ந்து சிந்திக்கலாம் என்று ஒரு வசனத்தை அவர் பாவித்தார். தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த மதத்தை சேர்ந்தவன் தமிழர் என்ற தேசியஇனத்தில் நான் இந்த சாதியைச்சேர்ந்தவன் என்றார். இதன்படி சீமான் தனது சீற்றத்தை குறைத்து அல்லது இவற்றோடு முட்டி வெல்வதைவிட அவற்றை அங்கீகரித்து செல்ல முற்படுகின்றாரா??? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லது கேளுங்கள். (6 இலிருந்து 8 நிம…
-
- 2 replies
- 809 views
-
-
எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர். நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால், தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?. இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும…
-
- 19 replies
- 3.3k views
-
-
வன்பாலுறவும் பெண்நிலைவாதமும் யமுனா ராஜேந்திரன் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில்…
-
- 0 replies
- 771 views
-
-
அலைபேசி மணி ஒலிக்கிறது. மறுமுனையில் நோர்வே தொலைக்காட்சியான என்.ஆர்.கே நிறுவனத்தில் இருந்து நண்பர் ஒருவர் பேசுகிறார். சிந்து பைரவி படத்தில் வரும் பாடல் ´´ நானொரு சிந்து காவடிச் சிந்து ´´என்கிற பாடலின் சில வரிகளின் தமிழாக்கம் மற்றும் அதன் உள்ளூடே விளங்கும் அர்த்தங்களை விளக்குமாறு வினவுகிறார். விளக்கியதும்,பணி நிமித்தம் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. ஏன் இந்தப் பாடலை இவர்கள் கேட்கிறார்கள் என குழம்பியவாறே இருந்தேன் பிறகுதான் அதற்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டேன். கடந்த 2003 ஆம் ஆண்டு புலிப்படையில் இணைத்தவர் வினோதா நேசராஜா. ஆறு மாதம் கழித்து தன் தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பில் வந்துள்ளார். நான்கு பிள்ளைகள் கொண்ட நேசராஜா தம்பதியினரின் மூத்த பிள்ளை என்பதால், …
-
- 2 replies
- 844 views
-
-
வழமையாக பார்த்துள்ளேன் தும்மினால் நூறாண்டு வாழ்க என குழந்தைகளை வாழ்த்துகின்றனாங்கள் அதே மாதிரி வெள்ளையலும் தும்மின உடனே "bless you" என்பார்கள் இப்படி வாழ்த்துவதனால் என்ன பயன்?
-
- 6 replies
- 1k views
-
-
பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ?? வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் . அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ?? என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , …
-
- 31 replies
- 3.8k views
-
-
எப்பையோ இதைப் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தன். இப்பவாவது கதைப்பம் என்று நினைக்கின்றன். இது ஒரு மிக மிக சாதாரண விடயம். ஆனால் இந்த விடயம் கூட விவாதிக்க வேண்டி இருக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம். என் அப்பா எனக்கு சொல்லித் தந்த முக்கியமான சில பழக்கவழக்கங்களில் ஒன்று 'நீ சாப்பிட்ட கோப்பையை நீயே கழுவு" என்பதும் ஒன்று. என் அப்பா ஒருக்காலும் தான் சாப்பிட்ட கோப்பையை அம்மாவை கழுவ விடமாட்டார். "ஏன் நான் இவ்வளவு நேரமும் சாப்பிட்ட கோப்பையை என்னால் கழுவ ஏலாதா" என்று கேட்டு கழுவுவார். "ஒருவரின் எச்சிலை இன்னொருவர் கழுவுவது பாவம்" என்பார். ஒரு நாள் நான் சின்ன வயதில் என் கோப்பையை கழுவாமல் அம்மாவிடம் கொடுத்த போது அப்பா விட்ட பொய்ட்டார் (அடி என்பதை இப்படியும் …
-
- 36 replies
- 2.4k views
-
-
(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள். இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது. அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோ…
-
- 23 replies
- 3.8k views
-
-
நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள், "அப்பா, அது என்ன?" "இது ஒரு பரிசு" "இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???" "இல்லம்மா" "அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???" "இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க" "அப்பா, காதல்னா என்ன???" மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். "உனக்கு பப்பியைத் தெரியும் தானே?" "தெரியும்ப்பா!!!" "பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடிய…
-
- 62 replies
- 6.1k views
-
-
திரைப்படங்கள் பெண்களை பெருமைப்படுத்துகிறதா சிறுமைப்படுத்துகிறதா??
-
- 0 replies
- 744 views
-
-
-
தயவுசெய்து பொறுமையாக முழுமையாகப் பாருங்கள். விளங்கும்.
-
- 3 replies
- 987 views
-
-
ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவ…
-
- 1 reply
- 620 views
-
-
என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா? என்று ஒரு கவிஞன் பாடல் இயற்றினான். அந்தப் பாடல் வரிகள் குறித்து சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. அந்த மாற்றம்: என்னினமே என்சனமே உன்னை உனக்குத் தெரிகிறதா? என்பதாக இருந்திருக்க வேண்டும்? உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குரு நாதன் என்ற தவத்திரு யோகர்சுவாமியின் திருவாக்குக்கு அப்பால் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவையில்லை. எனவே என்னை நான் அறிதல் என்பது மிக வும் முக்கியமானதாகும்.எனினும் தமிழ் மக் களாகிய நாம் எங்களை நாங்களே அறிதல் என்பதில் தவறிழைத்து விடுகிறோம். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த த…
-
- 0 replies
- 929 views
-
-
பதின்மத்தின் பரிதவிப்பில்…………. பவள சங்கரி குழந்தைப் பருவம் மற்றும் காளப் பருவம், ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு அழகிய, நுண்ணிழைகளால் நெய்யப்பட்டதொரு மெல்லிய பருவம் இந்த ‘டீன் ஏஜ்’ என்கிற பதின்மப் பருவம்! ஆம் அதிகமாக உணர்ச்சிவயப்படுதலும், அச்சம் கொள்ளுதலும், ஊசலாடும் உள்ளமும், கோபம் கொள்ளுதலும், கை வந்த கலை இந்தப் பருவத்தினருக்கு. பெற்றோராகிய நாமும் சில காலம் முன்புதான் இப்பருவத்தைக் கடந்து வந்தவர்களாக இருப்பினும், ஏனோ பல சமயங்களில் இன்று நம் குழந்தைகளின் அப்பருவத்திற்கேயுரிய பிரச்சனைகளைக் கண்டு, அச்சம் கொண்டு, அதனை விட்டுப் பிடிக்காமல், அவர்கள் மீது மேலும் அழுத்தம் ஏற்படுத்த எத்தனிக்கிறோம். பெற்றோர் தம் குழந்தைகளுடன் நல்ல நண்பர்களாகப் பழக முயற்சிக்க வேண்டும். …
-
- 0 replies
- 571 views
-
-
திருமதி கொப்பலின் குற்றச்சாட்டு by noelnadesan திருமதி கொப்பலானின் ஆறடி உயரமும் ஆண்கள் போன்ற இடைவெளிவிடாத இடையமைப்பும் கடுகடுப்பான முகமும் எனது கவனத்தை ஈர்த்தது. அவருக்கு பின்னால் பதினாலு வயது இளம்பெண் தாயின் மறுபதிப்பாக சிறிய ரெரியர் நாய்க்குட்டியை மார்புடன் இறுக்கமாக அணைத்தபடிவந்தாள். இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துசென்றேன். தங்களது மிருகவைத்தியரிடம் அப்பொயின்மன்ட் கிடைக்காததால் வந்தோம் என தாயார் கூறினார். அவர்கள் வார்த்தையில் உள்ள தொனியை ரசிக்கமுடியவில்லை. ஆனாலும் அந்த இளம் பெண்ணிடம் நாய்க்குட்டியை எனது மேசையில் வைத்துவிட சொன்னேன். எனது வேண்டுகோளை அலட்சியம் செய்தாளோ அல்லது புரியவில்லையோ? அந்த நாய்க்குட்டியை மேலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். ஏதாவது மனநல குறை…
-
- 0 replies
- 578 views
-
-
மாலை நேரம். வீட்டுக்கு வருகிறீர்கள். நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிட உட்காருகிறீர்கள். மேசையில் உணவு ஏதுமில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள். ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள். இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள். ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள். உங்கள் விடை என்ன? உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும். `ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும். `இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள். கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவ…
-
- 17 replies
- 3.8k views
-
-
உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. * உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா. * இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன. * இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது. * இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06…
-
- 8 replies
- 2.6k views
-
-
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது ! சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு... "பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்…
-
- 15 replies
- 3k views
-
-
உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்' என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்' மஞ்சித் எஸ்.கில். "முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமா…
-
- 7 replies
- 1.4k views
-