சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஆண்கள் எப்போதும், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள். அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது. முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் எ…
-
- 17 replies
- 1.6k views
-
-
”சைட் அடிக்கப்படும் பெண்டுகள்” என்ற தலைப்பில் எழுதப்படும் இப் பதிவிலுள்ள விடயங்களானது பல ஆண்களின் பார்வையில் உள்ள விடயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ”சைட் அடிக்கும் பெண்டுகள்” எனவும் இதனை எழுதலாம். ஏன்னா, "அவங்க சைட் அடிக்கிறதும், நம்மளை மறைந்திருந்து பார்க்கிறதும்" எங்களுக்குத் தானே தெரியும்! ஹி..ஹி.... சினிமாவில ஹீரோ பார்த்திருப்பம். அவர் பாடுவார், ஆடுவார், சண்டைபோடுவார், ரொமான்ஸ் பண்ணுவார். ஹீஹீ இப்பிடியெல்லாம் செய்தால் தான் அவர் ஹீரோ. அதே வேலையை நாங்களும் செய்தம் எண்டா எங்களை ”பைத்தியக்காரன், விசரன், லூசன்” (எல்லாம் ஒண்டு தானோ!?) எண்டெல்லாம் பேசுவாங்க. அப்ப நாங்க ஹீரோ ஆகவே முடியாதா?.. முடியும். அதுக்கு சரியான இடம் தான் கோவில் திருவிழாக்கள். அ…
-
- 6 replies
- 1.8k views
-
-
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்…
-
- 23 replies
- 3.2k views
-
-
புண்ணியம் சேர்ப்பதற்காக பணத்தை சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். சேர்த்த பணத்தை வைத்து புண்ணியம் சேர்ப்பவர்கள் இருக்கிறார்கள். பணத்தை சேர்ப்பதாலேயே பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். புண்ணியம் சேர்ப்பதாக நினைத்து பாவம் சேர்ப்பவர்களும் இருக்கிறார்கள். பணம் சேர்ப்பதே புண்ணியத்துக்காக என்பது தேவையில்லை தான், ஆனால் புண்ணியத்துக்காக என்று செலவழிக்கும் பணத்தையாவது புண்ணியத்துக்காக செலவழிக்கலாமே? பணத்தை சேர்க்கும் தொழிலே புண்ணியமும் சேர்ப்பதாக அமைந்துவிடுகிறது சிலருக்கு. பாவம் சேர்க்கும் தொழிலையே பணம் சேர்க்கும் தொழிலாக வைத்திருக்கிறார்கள் சிலர். பாவம் மூலமாகவோ, புண்ணியம் மூலமாகவோ எப்படி சேர்த்த பணத்திலும் நமது சந்தோஷத்துக்காக செலவழித்தது போக, புண்ணியம் சேர்க்க செலவழிக…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்முறை உளவியல் - ராம் மகாலிங்கம்-யமுனா ராஜேந்திரன் உரையாடல் 06 நவம்பர் 2012 ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். இந்த உரையாடலில் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள், வன்முறை குறித்த உளவியல் ஆய்வுகள், உயிர்க்கூற்றியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்புகள், குழந்தைகளின் உளவியலில் பாலியல் வேறுபாடுகள், சாதியக் கருத்துக்களின் உருவாக்கம், சாதிய நீக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின உளவியல் சிக்கல்கள் போன்றவை தொடர்பான தனது ஆய்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு பொதுவாக மனிதர்களின் சமூக வளர்ச்சிப் பயணத்தில் உளவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பது குறித்தும் தனது அனுபவங்களை முன்வைக்கிறார். ஒரு மனிதனுட…
-
- 0 replies
- 1.9k views
-
-
முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 04 நவம்பர் 2012 இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன. இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும் சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நின்று ஆராய வேண்டிய தேவ…
-
- 0 replies
- 868 views
-
-
[size=6]பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்[/size] ஆர்.அபிலாஷ் [size=2][/size] [size=4]கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர், வேலைக்கு ஆண் பேராசிரியர்களைக் குறிப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்கத் தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால், பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களைக் க…
-
- 17 replies
- 2.5k views
-
-
[size=5]'ஹீரோயி'சத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகும் சிறுவர்கள்..![/size] [size=4] [/size] [size=4]உலகில் உள்ள எல்லா சிறுவர்களும் தூய வெள்ளைக் காகிதங்களைப் போன்றவர்கள். அந்த காகிதங்களை அர்த்தப்படுத்துவதாய் நினைத்துக் கொண்டு நாம் நமது எண்ணங்களை அதில் எழுதுகிறோம். அந்த எண்ணங்களைப் போல அவர்களின் வாழ்க்கையும் அமைய வேண்டும் என விரும்புகிறோம். சிறுவர்களில் சிலர், பெரியவர்களினால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்பற்றி, அவர்களைப் போல தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவதும் உண்டு. இவ்வாறு சிறுவர்கள் தங்களின் முழுத் தேவையையும் பூரணப்படுத்த பிறரிலேயே தங்கியுள்ளனர். அவர்களின் உள்ளம் கள்ளமற்றது. கள்ளமில்லா இந்த வெள்ளை உள்ளங்களில், இன…
-
- 0 replies
- 590 views
-
-
இதிலே வந்து செல்வியைப் பற்றி எழுதி இந்தத் திரியை சுடு பறக்கச் செய்யும்படி அர்ஜுன் அவர்களை அன்புடன் அழைக்கிறேன்.
-
- 33 replies
- 2.1k views
-
-
[size=4]முதல் உலகப் போர் முடியும் தறுவாயில் தான் ஈராக்கின் முதல் தேசிய எழுச்சி துவங்கியது. அந்தப் போரில் தோல்வியுற்ற ஓட்டோமன் சாம்ராஜ்யத்திடமிருந்து ஈராக்கை பங்கு போட்டுக் கொள்ள பிரிட்டனும், பிரான்ஸூம் துடித்துக் கொண்டிருந்தன. அமீர் பைசல்-ஐ ஈராக்கின் மன்னராக முடிசூடும் முயற்சியில் இறங்கியது பிரிட்டன். 1920 இல் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது. ஆனால் சர்வதேச சங்கம் பிரிட்டிஷ் ஆட்சியை பிரகடனப்படுத்த பரிந்துரைத்தது. ஈராக் முழுவதிலும் பிரிட்டிஷார் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. ஈராக்கில் உள்ள பல குழுக்கள் ஒன்றிணைந்து புனிதப் போருக்கான அறைகூவலை விடுத்தனர். புதிய மன்னர் பொறுப்பேற்பது சுலபமானதாக் இல்லை என பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டனுக்கு பல தடிதங்கள் எழுதினார்கள். லஞ்சம், ம…
-
- 0 replies
- 733 views
-
-
சின்மயி பிரச்சினை : பெண்ணிலைவாதமும் இன்னபிறவும் - யமுனா ராஜேந்திரன் 30 அக்டோபர் 2012 பெண்ணிலைவாதம் எனும் இடத்தில் எவரும் வர்க்கம், பாலினம், சாதி, இனம், மொழி, சூழலியல் என வேறு வேறு சமூகப் பகுப்புகளை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் அடையாள அரசியலும் சிறுபான்மையினர் உரிமைகளும் விடுதலை அரசியலின் பகுதிகளாகிவிட்ட இன்றைய நிலையில் இப்பிரச்சினைகள் அனைத்தும் ஒன்றையொன்று ஊடறுத்துத்தான் செல்கின்றன. ஓரு குறிப்பிட்ட தருணத்தில் 'இதில் எந்த முரண்பாடு மேலொங்கியிருக்கிறது' எனப் பார்ப்பதும், 'அதிகாரத்தில் இருப்போர் எந்தப் பிரச்சினையின் சார்பில் நிலைபாடு எடுக்கிறார்கள்' எனப் பார்ப்பதும், ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் ‘மேலதிகமாக’ ஒடுக்கப்பட்டவர் எவர் எனப் பார்ப்…
-
- 6 replies
- 3.1k views
-
-
இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்! -கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed - திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஒருவருடைய வாழ்வில் மிக இனிமையானதும் மங்களகரமானதும் மறக்க முடியாததுமான விடயம் தான் திருமணம். திருமணத்தின் போது ஒருமை ஓரங்கட்டப்பட்டு பன்மை பதவிக்கு வருகிறது. ஈருயிர் ஓருயிராகிறது. மூன்றாவது உயிர் பிறக்கிறது. சட்ட ரீதியான முறையிலும் சமயம் மற்றும் குடும்ப சமூக அங்கீகாரத்துடன் ஆண் பெண் ஜோடி இணைந்து வாழ்வதற்கு திருமணம் புரிவது அவசியமாகிறது. மேலும் பல காரணங்களும் உள்ளன. திருமணம் புனிதமானதும் மனித தேவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தனிப்பட்ட சுதந்திரம் ?. இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ...... " நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்" இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கி…
-
- 8 replies
- 1.1k views
-
-
எம்பரசிங் பாடீஸ் (Embarrassing Bodies) சானல் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. உடலில் ஏற்படும் பல்வேறு தர்மசங்கடமான உபாதைகளைப் பற்றியும் அவற்றிற்கான சிகிச்சைகள் பற்றியும் விளக்கும் சுவாரசியமான மருத்துவத் தொடர். தொடரின் இறுதியில், ´´ ... ஒருசிலரை ஒப்புநோக்கையில் நாம் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள் தான் ´´ என எண்ணும் அளவிற்கு, சராசரி வாழ்வோடு போராடும் ஒருவரை தன்னம்பிக்கைக்கு முன்னுதாரணமாக முன்னிருத்துவர். இந்த வார உதாரணம், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது பெண்மணியைப் பற்றியது. அவர் தனது பருவ வயதை எட்டியிருந்த பொழுது அவரது உடலின் எதிர்ப்புசக்தியே அவரது இரு சிறுநீரகங்களையும் (கிட்னி) தாக்கி அழித்துவிட்டது. உடலில் சேரும் கழிவுகள் நச்சுக்களை உதிரத்தில் இருந்து ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை.. எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோ…
-
- 41 replies
- 6.8k views
-
-
.லண்டன்: வசீகரிக்கும் சிவப்பு நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என, அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து, அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி, ஆராய்ச்சி நடத்தினர். அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர். மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள் கருதுகின்றனர். இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல்…
-
- 37 replies
- 3.4k views
-
-
விழிப்புலனற்றவர்களுக்கு துணையாக இருப்போம்: சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று! உலகிலே உயிர் பெற்ற அனைத்து ஜீவராசிகளின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். அதேவேளை கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும். உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக ம…
-
- 0 replies
- 2.9k views
-
-
திருமணமானவர்களுள் ஆண்கள் அனைவரும் தன் மனைவியை ஒரு பெரிய இராட்சசி என்று சொல்வார்கள். ஏனெனில் எப்போது பார்த்தாலும் மனைவிகள் அனைவரும் அவர்கள் கணவர்களை கோபத்தால் திட்டிக் கொண்டே இருப்பதால், ஆண்கள் பலர் தன் மனைவிகளை பற்றி மனதில் தவறாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு நடப்பதற்கு உங்கள் மீதுள்ள பாசம் தான் காரணம். அதனால் தான் அவர்கள் உங்களுடன் அவ்வாறு நடந்து கொள்கின்றனர். மேலும் உண்மையான பாசம் இருக்குமிடத்தில் தானே கோபம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும்…
-
- 9 replies
- 2k views
-
-
நீடித்த உழைப்பு சலவை செய்ய வேண்டியதில்லை துணி வெளுத்துப்போனாலும் அதுவும் ஒரு பேஷன் ஆகிவிடும் ஒப்பீட்டளவில் மலிவானது Guess Jeans Diesel Levi's Seven Jeans Apple Bottoms Von Dutchஎன பல பிராண்ட் களில் வருகிறது இது இரண்டு நூற்றண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்து விட்டது ஸான்ஃப்ரான்சிஸ்கோவில் வாழ்ந்த ஜெர்மனியாரான levistrauss என்னும் வணிகரால் 1850 களில் அடிமைத் தொழிலாளிகளான சுரங்கத்தொழிலாளிகளின் பாவனைக்காகத்தான் இந்த கரடு முரடன துணி முதலில் உருவாக்கப்பட்டது ... denim இது பிரெஞ்சு வார்த்தையில் இருந்து தோன்றியது பிரான்ஸ்சில் nimes நகரத்தில் பட்டு நூலையும் கம்பளியையும் கலந்து நெய்து serge-de-nimes என்ற பெயரில் தடித்த துணியை தயார் செய்தனர் de -nimes என்றால் நிம்சில்…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம். ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது. பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவர…
-
- 33 replies
- 4k views
-
-
தம்பதியரிடையேயான பிரச்சினைக்கு மூல காரணமே அன்பை சரியான அளவில் வெளிப்படுத்தாமல் விடுவதுதான். மனதில் டன் கணக்கில் அன்பும், பாசமும் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம். நான் இங்கே தவிக்கிறேன். அவருக்கு என்மேல அக்கறை இல்லாம இருக்கிறாரே என்று நினைத்தாலே போதும் விரிசலின் விதை ஊன்றப்பட்டு விடும். எனவே ஆண்களே உங்களின் மனைவி மீதான பிரியத்தை ஏதாவது ஒரு விதத்தில் வெளிப்படுத்துங்கள் ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான் என்கின்றனர் நிபுணர்கள். கணவரிடம் இருந்து மனைவி என்ன எதிர்பார்க்கிறார்? அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து மனைவியின் இதய சிம்மாசனத்தில் இடம் பெறுவது எப்படி என்றும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன். …
-
- 36 replies
- 3.6k views
-
-
மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - கவிஞர் கண்ணதாசனின் குறிப்பு. [sunday, 2012-10-07 08:30:15] மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு …
-
- 10 replies
- 23.9k views
-
-
தங்கம் இன்றைக்கு விற்க்கும் நிலையில் வீட்டில் உள்ள அனைத்து சொத்தையும் விற்று தங்கத்தை வாங்கி அதனுடன் கார் இருக்கின்ற அனைத்து சாமான்களை வாங்கி பெண்ணை கட்டி கொடுத்தால் கட்டினவன் ஆண்மையற்றவனாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள் ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை. நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க…
-
- 53 replies
- 10.2k views
-
-
எமது சமுதாயத்தில் இரு மதத்தவர் இடையே திருமணம் நடப்பது சாதாரணமானது. ஏமது ஈழ சமுதாயத்தில் இது பெரும்பாலும் கிறிஸ்த்தவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் தான் நடக்கும். இவ்வாறான சந்தர்ப்பஙளில் பெரும்பாலும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பவர் சைவ மத்தவராகவே இருப்பார். இது ஏன்? ஏன் சைவ மக்களால் தமது மதத்தை விட்டுக் கொடுத்து திருமணம் செய்ய தயங்குவதில்லை, அவர்களது பெற்றாரோ அல்லது சகோதரரோ ஏன் அவர்களுக்கு அறிவுறை கூறுவது இல்லை.எம்மைத் திருமணம் செய்பவரின் மதத்தை மதிப்பது முக்கியம் தான், அதற்கு இரு மத முறைப்படியும் திருமணத்தை நடத்தலாம், ஆனால் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் பலர்,முழுமையாக அல்லவா தமது மதத்தை விட்டுக் கொடுகின்றனர், …
-
- 1 reply
- 892 views
-
-
உறவுகளே இந்தப்படங்களை கொஞ்சம் பாருங்கள் மிருக வதையின் உச்சக்கட்டமாக இது தெரியவில்லையா? உலக ஐனநாயக அல்லது வளர்ந்த அல்லது மனித மற்றும் உயிரினங்களின் வதையை வெறுக்கின்ற நாடுகளிலேயே இவை செய்யப்படுகின்றன. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்மையில் பிரான்சில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தும்அது நிறை வேற்றப்படாது போய் விட்டது. ஏனெனில் ஆதரவு பாராளுமன்றத்தில் இல்லை. அன்று வானொலியில் வந்த அமைச்சர் ஒருவர் இந்தக்கேள்விக்கு தான் பதிலளிக்கவிரும்பவில்லை என்று பலமுறை மறுத்தும் வானொலி நடாத்துனரின் பிடிவாதத்தால் இறுதியில் ஒன்றைக்குறிப்பிட்டார். இந்த விளையாட்டு என்பது பல சமூக கலாச்சார இசை நடனம் என பலவற்றை பிரதி பலிக்கின்றது என்று. அத்த…
-
- 3 replies
- 1.1k views
-