சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
சும்மா இருப்பவள் ~ லறீனா ஏ. ஹக் ~ சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று. என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு ‘நிறுவனம்’ என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப்பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. நம்முடைய சமூக அமைப்பில் கணவன் – மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்ட…
-
- 0 replies
- 897 views
-
-
நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்” என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது. “தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்” என்று மன உறுதி கொண்…
-
- 1 reply
- 895 views
-
-
வணக்கம்! நான் தான் முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமரம், முற்றத்து மாமரம். முத்தண்ணா, முத்து என்பது அவரது பெயர், பெயருக்கு ஏற்றவாறு ஒரு முத்தான மனிதர் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் எனது நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் கூறியிருக்கிறார்கள். முத்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கிடைபதற்கு அரிதான ஒன்று என்பது மட்டும் தெரியும். காரணம், ஒருநாள் முத்தக்கா, முத்தண்ணாவின் மனைவி ராணி, முத்தண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘முத்தக்கா’ என்றுதான் அழைப்பார்கள், முற்றத்தில் அமர்ந்து வானொலிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது ‘ஆழ்கடலில் முத்தெடுத்து’ என்ற பாடலைக் கேட்டவுடன் ‘இஞ்சேருங்கோ’ என்று முத்தண்ணா…
-
- 0 replies
- 895 views
-
-
சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்... இன்று ஈழத் தமிழனுக்கு ஒரு புதுமைத் தீபாவளி..! நாமெல்லாம் புது மனங்களுடன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு அட.. நமக்கும் தீபாவளி இருக்கிறதா என்று சிந்திககிறார்கள்… தீபாவளியை நாம் கொண்டாடலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்ற எண்ணங்கள் பலரிடையே இன்றும் இருக்கிறது. புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வரும் தொலைக்காட்சிகளும், இணையங்களும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி அட.. தீபாவளி நடக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகின்ற…
-
- 1 reply
- 894 views
-
-
அந்த கால கட்டத்தில் அமராவதியை கல்வி கற்பதற்காக குலோத்துங்கச் சோழ மன்னன் கம்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அமராவதியும் தினமும் கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் கம்பன் ஒரு அவசர வேளையாக வெளியூர் செல்லவேண்டியது இருப்பதால் நான் வரும் வரை எனது மகன் அம்பிகாபதி உங்கள் மகளுக்கு கல்வி கற்றுத் தருவார் என்று மன்னனிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அப்பொழுது கம்பரை விட அவரின் மகன் கவியில் சிறந்து விளங்கி இருக்கிறார் அதுதான் இந்த பொறுப்பை அவரிடம் கொடுக்க காரணமாம். கம்பன் சென்ற பிறகு அவர் சொன்னது போலவே பாடத்தை நடத்தத் தொடங்கினார் அம்பிகாவதியும். சில தினங்களில் அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் பாடம் தொடங்கிவிட்டதாம். கம்பர் திரும்பி வந்து பார்த்தபொழுது…
-
- 1 reply
- 894 views
-
-
25 வருடமாக இருவரும், மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த படங்கள்..பார்த்துக் கொண்டே போங்கள்... கடைசிப் படத்தில்... உங்களது கண்ணில் நீர் கசிந்தால்.... நாம் பொறுப்பல்ல.. 1987 மகனின் முதலாவது பிறந்த நாள் அழகான ஒரு கவிதைத்தனமான ஓவியம்...
-
- 2 replies
- 894 views
-
-
செஞ்சிக்கு போகும் வழியில்............ மதிய உணவுக்காக காரை நிறுத்தியபோது தான், அவரை கண்டேன், அந்த பெரியவருக்கு அறுபது வயதிருக்கும்... கையில் சிக்னல் ஸ்டிக் லைட்டும், வாயில் விசிலுமாய், ஹைவேஸில் போகின்ற வண்டிகளை அழைத்துக் கொண்டிருந்தார்... வயோதிகம் காரணமாகவோ, நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, கால் வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்... உணவுண்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை. நாச்சியாவோடு சில செல்பிகள் எடுத்துக் கொண்டே மீண்டும் கவனித்தபோதும், அவர் அமரவே இல்லை. இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம். அருகே சென்று, தோள் தொட்டு திருப்பி, மதிப்புள்ள ஒற…
-
- 4 replies
- 893 views
-
-
அலுவலகத்தில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்லும் பெண் வீட்டில் தன் மாமியாரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே ஏன்? அலுவலகத்தில் எல்லோருடனும் இனிமையாகப் பழகுபவள் மாமியாரிடமும், நாத்தனார்களிடமும் பகைமை பாராட்டுவது ஏன்? யாருக்காகவும் நான் மாறமாட்டேன் என்று சொல்லுபவள் திருமணம் ஆனவுடன் கணவனை மாற்ற நினைப்பது ஏன்? குழந்தைகளுக்காகவே தன் வாழ்வை தியாகம் செய்வதாகச் சொல்லுபவளுக்கு அந்தக் குழந்தைகளுடன் செலவழிக்க நேரமில்லாமல் போவதேன்? ஆண்களுடன் சம உரிமை வேண்டுபவள் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, தனிச் சலுகைகளை ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இறைவன் கொடுத்திருக்கும் இயற்கை அழகை மறந்துவிட்டு, செயற்கை முறையில் அழகுபடுத்திக் கொள்ள நினைப்பதேன்? அடுத்தவர் குறைகளை …
-
- 3 replies
- 893 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'அப்பா, ப்ளீஸ்… நோ' நானும் என் மகனும் விளையாடும்போது, நான் அவனை பிடித்துவிட்டால் அவன் இப்படித்தான் சிணுங்குகிறான். 'அப்பா, ப்ளீஸ்… நோ' என்ற வார்த்தை நன்றாக வேலை செய்கிறது என்பதை அவன் நன்றாக புரிந்து கொண்டதால் அதை தொடர்கிறான். நானும், என் மனைவியும் இதற்காக ஒரு 'ஒப்பந்தம்' செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தை சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டு விடவேண்டும். பல மணி நேரங்கள் கழித்து பார்த்தாலும், அவனை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மனம் துடி…
-
- 0 replies
- 893 views
-
-
தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி March 5, 2020 - யாழி · சமூகம் செய்திகள் கட்டுரை இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும். கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில க…
-
- 5 replies
- 892 views
-
-
மூன்று பெண்களின் வாழ்வை மாற்றிய ட்ரெக்கிங் அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பொதுவாக ஒருவரின் வாழ்வின் துயரமான சம்பவங்களோ அல்லது கடினமான தருணங்களோதான் அவர்களது வாழ்வை பெரும்பாலும் மாற்றியமைக்கும். ஆனால் தாங்கள் பொழுபோக்காக நினைத்த ஒன்று தங்கள் வாழ்வையே புரட்டி போட்டிருப்பதாக கூறுகின்றனர் இந்த பெண்கள். Image captionஉடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்ளிங் செய்யும் …
-
- 0 replies
- 891 views
-
-
தோல்வி என்பதே இல்லை வெற்றி வெளிச்சம் - இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் அத்தனைபேருமே தோல்விகளை பல முனையில் சந்தித்து, அதையும் மீறி வந்தவர்கள்தாம். ”என்னதான் இருந்தாலும் உங்க சாதனை அற்புதம் சார்” என்று பாராட்டும் போது, ”அய்யோ. அதெல்லாம் இல்லீங்க. கூட்டு முயற்சி. ஆண்டவன் செயல்” என்று அவர்கள் சொல்லும்போது, ”ஆஹா. என்ன ஒரு அடக்கம், பெருந்தன்மை” என்று மேலும் அவரைப் பாராட்டுவோ…
-
- 0 replies
- 890 views
-
-
போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது? ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை அடுத்தே ஊடகக் கல்வியறிவு என்ற விடயம் கவனத்திற்கு வந்தது. சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, அதனைத் தூண்டும் வகையிலான பொட்ஸ்கள் டுவிட்டரில் பிழையான தகவல்களை பரப்ப ஆரம்பித்தன. அதேபோல போலியான கணக்குகள், பக்கங்களைக் கொண்டு பேஸ்புக் ஊடாக இனவாதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிலும் இனவாதிகள் ஈடுபட்…
-
- 0 replies
- 889 views
-
-
தோடுடைய செவியர்காள்! உங்கள் இலட்சியம்தான் என்ன? நாளுக்கு நாள் எங்கள் கலாசாரக் கோலங்கள் மாறிவருகின்றன. வெளிநாட்டு கலாசாரம் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையின் தாக்கமும் எங்கள் மீது மோதிக் கொள்வதை உணர முடியும். எதுவாயினும் எங்கள் தமிழினம் ஒன்று தான் தனது உயர்ந்த கலாசாரத்தை மிக எளிதாக மறந்துவிடக் கூடியது என்பது நிரூபணமாகி விட்டது. எங்கள் இளைஞர்களில் பெரும்பாலானவர்களின் ஆடை அலங்காரங்களை நினைக்கும் போது இலவசக் கல்வியின் பயன்பாடு தமிழர்களுக்கு பெரிதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது. ஒரு இனத்தின் எதிர்காலம் என்பது அந்த இனத்தின் இளம் சமூகத்தின் கையில் உள்ளது என்பது பொதுவான முடிபு. இந்த முடிபு சரியானது என நாம் நினைத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் அந்த …
-
- 0 replies
- 889 views
-
-
பிகினி வா. மணிகண்டன் சில வருடங்களுக்கு முன்பாக ஆஸ்டின் நகரத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஐடிக்காரன் அமெரிக்கா சென்று வந்தால்தான் மரியாதை என்று நம்பிக் கொண்டிருந்ததால் அதிபயங்கரமான சந்தோஷத்தில் இருந்த காலம் அது. டெக்ஸாஸ் மாகாணத்தில்தான் நிறுவனத்தின் தலைமையகம் இருந்தது. பதினைந்து நாட்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இந்த மாதிரி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பகல் முழுவதும் உள்ளூர் ஆட்களோடு சுற்ற வேண்டும் என்பதும் இரவில் எங்கே செல்கிறேன், எப்பொழுது அறைக்குத் திரும்புகிறேன் என்பதெல்லாம் யாருக்குமே தெரியக் கூடாது என்பதும் என்னுடைய சதுரங்க வேட்டை விதிகளில் முக்கியமானவை. பக்கத்தில் இருப்பவனுக்குத் தெரியாமல் தகிடுதத்தங்களைச் செய்வதில்தான் அலாதி இன்பம் இருக்கி…
-
- 0 replies
- 888 views
-
-
Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால…
-
-
- 2 replies
- 888 views
- 1 follower
-
-
உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டு-தானிருக்கிறது. அரசுகள் முயன்று-கொண்டிருப்-பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? _ எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான். தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்-கிறார்கள…
-
- 0 replies
- 887 views
-
-
இது இங்கே இன்னுமொரு இடத்தில் இணைக்கப்பட்ட செய்தி. "உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?' நாங்களும் பல சந்தர்பங்களில் கதைத்துள்ளோம், எமக்கிடையே உள்ள மத, சாதி இன்ன பிற வேறுபாடுகளை பற்றி. எனக்குள்ள ஒரு குழப்பம், எல்லா விரல்களும் ஒன்று மாதிரி இல்லை என்பதுபோல், எமக்கிடையும் பல பிணக்குப்பாடுகள் உண்டுதானே. நிறைய பிரிவுகள் எமக்கிடையே உண்டு, இந்த ஊர், இந்த பள்ளிக்கூடம், இந்த கோயில்கார், இந்த சாதி.....ஒரே சாதிக்குள்ளும், வேறு வேறு பிரிவுகள்.. என்ன விதத்தால் இவைகளை இல்லாமல் செய்யலாமா தெரியாது, ஆனால் அப்படி இல்லது செய்தாலும் அவை மீண்டும் எதோ ஒருவழியில் வரும் அல்லது இருக்கத்தான் செய்யும். உதரணத்துக்கு மேலுள்ள நி…
-
- 1 reply
- 886 views
-
-
ஆட்டோ ஓட்டுவது வருமானம்... பசியாற்றுவது சந்தோஷம்..! கோவை மருத்துவமனையில் ஓர் அன்னபூரணன் பசித்த ஏழை ஒருவனுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து வயிற்றை நிரப்புவதைவிட பெருங்கொடை ஏதேனும் இருக்க முடியுமா? ஒரு சான் வயிற்றுக்காகத்தானே இவ்வளவு பாடும்?! கோவையைச் சேர்ந்த ராஜா சேது முரளி, ஏழைகளுக்கு சோறு போடுவதையே தன் வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் அற்புத மனிதர்! ‘சிகிச்சைக்காக வெளியூர்களிலிருந்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் தங்கியிருக்கும் ஏழைகளுக்கு, ‘பசியாற சோறு' என்ற பெயரில் இலவசமாக மதிய உணவு கொடுத்து உதவுகிறார் ராஜா சேது முரளி' என்ற தகவல் அறிந்து அவரைத் தொடர்புகொண்டோம்... “நான் சாப்பாடு கலெக்ட் பண்றதுக்காக வடவள்ளி வரைக்கும் வந்திருக்கேன்.…
-
- 0 replies
- 885 views
-
-
ஆதங்கம் - உஷா கனகரட்ணம் 30 மே 2014 சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது. நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா…
-
- 4 replies
- 885 views
-
-
http://www.storypick.com/cute-10-minute-film-deaf-mute-girl-will-warm-heart/
-
- 3 replies
- 883 views
-
-
லிஸ் கிளெமென்ட்ஸ் பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதே நிரம்பிய இளம்பெண், திருமணத்துக்கு முன் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமான வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் ஃபரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயதான இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். திருமணம் செய்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை என்று அவர் கதறினாலும், ஃபராவின் பேச்சை அவரது அம்மா கேட்பதாக தெரியவில்லை. அத்துடன் நிற்காமல், தமது மகளை சுத்தமானவள் என்று சமூகத்துக்கு நிரூபிக்க, ஃபராவின் தாய் அவரின் கன்னித்தன்மையை பரிசோதி…
-
- 1 reply
- 883 views
- 1 follower
-
-
சிறுவர் உளநலம் : சில அவதானங்கள் by vithaiNovember 29, 2020 சிறுவர்களிற்குக் கல்வியுரிமையும் வாழும் உரிமையும் மிக அடிப்படையானது. இரண்டிற்கும் அவர்களின் மனதின் நிலை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். சிறுவர்களின் உளவியல் சார்ந்து அவர்களின் உரிமைகள் சார்ந்து புத்தகங்களிலும் சட்டங்களிலும் முன்னேற்றகரமான திருத்தங்கள் உருவாகி வருகின்ற போதும் நடைமுறையில் இன்னமும் அவர்களை அந்த அறிதல்கள் சென்று சேரவில்லை அல்லது அதிலிருந்து கிடைக்க வேண்டிய பயன்களை அவர்களால் இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. இதற்கான அடிப்படைக் காரணம் அவர்களின் உரிமைகளை நம் சமூகம் மதிப்பதில்லை. பெரும்பாலானவர்களுக்குத் தாம் ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறோம் என்பது தெரிவதில்லை. …
-
- 0 replies
- 881 views
-
-
சாதலும் புதுவது அன்றே! - சோம. அழகு “சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே” எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்! நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து ச…
-
- 5 replies
- 881 views
- 1 follower
-
-
20 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2020 இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர். யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி? தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி…
-
- 2 replies
- 880 views
-