Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில்! அசத்தும் எலோனின் திட்டம்!! (காணொளி) உலகின் எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட்டுக்கும் ஒரு மணி நேரத்தினுள் பயணிக்கக் கூடிய புத்தம் புதிய தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக, பிரபல ரொக்கெட் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’இன் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த ரொக்கெட் மணிக்கு 27 ஆயிரம் கிலோமீற்றரில் பறக்கும் என்றும், இதன்மூலம் லண்டனில் இருந்து டுபாய்க்கு 27 நிமிடங்களில் பறக்கமுடியும் என்றும், ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்தை வெறும் ஒர…

  2. லண்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிப்பு! லண்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றினால் 30 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடுவோம் என்பதுதான் உண்மை’ என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாங்கள் ஒரு பெரிய சம்பவத்தை அறிவிக்கிறோம், ஏனெனில் இந்த வைரஸ் எங்கள் நகரத்திற்கு அச்சுறுத்தல் நெருக்கடி நிலையில் உள்ளது. இப்போது நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்கள் என்ஹெச்எஸ் (தேசிய சுகாதார சேவை) அதிகமாகிவிடக்கூடும். மே…

  3. லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்! லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார். மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மியன்மார் தூதர் க்யாவ் ஸ்வார் மின், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் அவர் வெளியேற்றபட்டுள்ளார். தூதர் க்யாவ் ஸ்வார் மின், தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிஸாரோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தூதர் க்யாவ் ஸ்வார் மின் கூறுகையில், ‘நான் வெளியேற்றப்பட்டு…

  4. லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற மணிக்கூண்டு கட்டிடமான, "பிக் பென்'னுக்கு அரசி, எலிசபெத் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத், அரியணையில் அமர்ந்து, 60 ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும், பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பார்லிமென்டில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, "பிக் பென்' கட்டிடத்துக்கு, ராணி எலிசபெத்தின் பெயர், நேற்று, சூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஜான் பெர்கோ, ராணி எலிசபெத் பெயர் பொறித்த பலகையை திறந்து வைத்தார். உலகப் புகழ் பெயர் பெற்ற, இந்த மணி கூண்டு கட்டிடம், கடந்த, 1858ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நான்கு புறமும், நேரத்தை காட்டும் வகையில் அமைந்தது. இதில் உள்ள மணி, 13 ஆயிரத்து 500 கிலோ எடை கொண…

  5. லண்டனில் வீடுகளிலும் கடைகளிலும் வாங்கும் பொருட்களில் ௦20 % சதவீதம் விரயமாவதை தடுக்க பல்வேறு உத்திகளை உணவுப் பொருட்களின் அளவைக் குறைக்க அரசாங்கம் கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது. உலகின் மதிப்புமிக்க வளங்களைப் பயன்படுத்தி இந்த உணவுப் பொருட்களைத் தயாரித்துவிட்டு, அதைப் பிற்பாடு எவருமே பயன்படுத்தவில்லை என்பது வளங்களை வீணாக்குவதற்குச் சமமானது. எனவே உணவு விரயமாவதைத் தடுக்க வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக் குழுவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாதிட்டுள்ளனர். பிரிட்டனில் மக்கள் வாங்குகின்ற உணவு மற்றும் பானங்களில் இருபது சதவீதத்தை அவர்கள் பயன்படுத்தாமலேயே குப்பையில் வீசுவதாக மதிப்பிடப்படுகிறது. 1. உணவு உற்பத்த…

  6. மத்திய லண்டன் பகுதியில் கட்டட பணியில் இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம். 16 அலுவலகம் இருப்பதால் இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் மத்திய லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு பகுதியில், கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதியது. இதில் தீப்பிடித்த அந்த ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து லண்டனின் முக்கிய பகுதியான வாக்ஸ்ஹால் பகுதியில் …

  7. லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். லண்டனில் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸார் பாலத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து பொதுமக்களை மீட்பதையும் பின்னர் மிக அருகிலிருந்து அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன. அருகிலுள்ள புகையிரத நிலையத்தின் பணியாளர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாகவும் புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நபர் ஒருவர்…

    • 26 replies
    • 2.5k views
  8. கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து லண்டனின் முக்கிய சாலைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவை சேர்ந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா போலீஸ் அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனின் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போலீஸார். இது தொடர்பாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா வீராசாமி பிபிசி செய்தி நிறுவனத்திடம், “அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை லண்டன் உள்ளிட்ட பிற உலக நாடுகள் அறிந்து …

    • 0 replies
    • 293 views
  9. லண்டனில் காரல்மார்க்ஸின் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது February 6, 2019 லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை இனந்தெரியாதோர் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறி தங்கியிருந்த நிலையில் 1885-ம் ஆண்டு 64-வது வயதில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து வடக்கு லண்டனில் உள்ள கல்லறை அங்கு நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருவதுடன் பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமான இந்த கல…

  10. மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm

  11. லண்டன் : லண்டனில் உள்ள உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக, இந்திய மாணவர்கள் இங்கிலாந்து செல்வது ஆண்டு தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. லண்டனில் சர்வதேச தரம் வாய்ந்த, உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் இருப்பதால், அமெரிக்கா, இந்தியா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஹாங்காங், கிரீஸ், நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகளவில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வரிசையில் சீன மாணவர்கள் முதலிடத்தையும், அமெரிக்க மாணவர்கள் 2வது இடத்தையும், இந்திய மாணவர்கள் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிலவரப்படி, லண்டன் பல்கலைகழகங்களி…

    • 0 replies
    • 1.4k views
  12. லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம் லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பதிவு: ஜூன் 26, 2020 06:41 AM லண்டன் இங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்த சென்று தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர் . அப்போது ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகளை மிரட…

  13. லண்டனில் கெளரவமிக்க விருதை வென்ற சென்னையின் 'வேதனை' புகைப்படம்! அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த 'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் …

  14. லண்டனில் கைதானார் தொழிலதிபர் விஜய் மல்லையா! கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, லண்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தவில்லை. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கடனாக வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவைக் கைதுசெய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. இதனிடையே, கடந்த 13-ம் தேதி விஜய் மல்லையாவுக்கு, பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்தது. அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக, விஜய் மல்லையா மீத…

    • 12 replies
    • 1.3k views
  15. லண்டனில் சப்பாத்தி கட்டையால் அடித்து மாமியாரை கொன்ற மருமகள் Published on Saturday, 21 July 2012 12:59 லண்டனில் மாமியாரை சப்பாத்திக் கட்டையால் 20 முறை அடித்து கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 121 கி.மீ. தூரத்தில் உள்ளது சவுத்தாம்டன். இங்கு வசிப்பவர் இக்பால் சிங். இவருடைய தாய் பல்ஜித் கவுர் பட்டார் (56), மனைவி ராஜ்வீந்தர் சிங் (36). 2010 ஆகஸ்ட் மாதம் சவுத்தாம்டன் வந்தார் பல்ஜித். மகன், மகளுடன் 6 மாதம் தங்கி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், வீட்டுக்கு வந்ததில் இருந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் தினமும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. 2011 பிப்ரவரி 27 அன்று இந்தியா திரும்ப இருந்தார் பல்ஜி…

  16. வைப்புப் பணத்திற்கு அதிகூடிய வட்டி தருவதாக வாக்களித்து லண்டனில் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சிங்களவர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வைப்புத் தொகைகளுக்கு நூற்றுக்கு நாற்பத்தி எட்டு வரை உச்ச வட்டி வழங்குவதாகக் கூறி ஆறு போ் கொண்ட குழுவொன்று லண்டனில் ஒரு கோடி பவுண்களை அதாவது நூற்றி எழுபத்தாறு கோடி ரூபாவை மோசடி செய்துள்ளது. அதன் தலைவராக இலங்கைச் சிங்களவரான விபவ பொன்சேக்கா என்பவர் செயற்பட்டுள்ளார். அவரின் கீழ் இன்னும் இரண்டு இலங்கையரும், ஒரு பாக்கிஸ்தானியரும், இரண்டு வெள்ளையரும் செயற்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி கறுப்புப் பணத்தை சட்டபூர்வமான பணமாக்கிக் கொடுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவர்கள் சட்டத்தின் முன…

    • 2 replies
    • 822 views
  17. லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்ற…

  18. லண்டனில் சிறுவர் படையமைக்க முயற்சி செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை… லண்டனில் சிறுவர்களை கொண்டு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த படையை அமைக்க முயற்சி செய்த இங்கிலாந்து வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 வயதான உமர் அகமது ஹக் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் முறையாகப் பயிற்சி பெறாமல் மதம் சர்ந்த பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றிய போது ; சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோப்படங்களை காண்பித்து அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது அது மட்டுமின்றி, லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக…

  19. லண்டன், பிரிட்டனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்ற அதிகளவில் முயற்சி செய்துவருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள முக்கிய அரசியல்வாதிகளை கொல்ல தனியாக ஒரு தற்கொலைப்படையையே ஐ.எஸ். தீவிரவாதிகள் உருவாக்கியிருப்பதாக சண்டே எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிரியாவுக்கு சென்று மீண்டும் திரும்பியுள்ள சந்தேகத்திற்குரிய 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பிரிட்டனில் சர்வ சாதாரணமாக வீதிகளில் உலா வருவதாக அங்குள்ள பாதுகாப்பு ஏஜென்ஸிகள் எச்சரித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்டு வரும் எம்.பி.க்களை குறிவைத்து பட்டியல் போட்டு கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் மெட்ரோபோலிடன் பகுதிகளில் உள்ள மந்திரிகளுக்கு உச்ச…

  20. லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில் லண்டனின் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும் இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம் லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதை கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர். சுமார் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிய…

  21. இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்! - வீடியோ இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் - சொல்லிவிட்டுச் செல்லும் கருத்தியல் அவ்வளவு அழகானது. முதலாம் உலக மகா யுத்தத்தை அடிப்படையாக கொண்ட கிரிஸ்துமஸ்த் விளம்பரம் இது. ஒரு கிரிஸ்துமஸ் விடுமுறை எவ்வளவு பெறுமதியானது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. இப்படியே உலகம் இருந்திருந்தால், என எண்ணத் தோன்றுகிறது இவ்விளம்பரத்தை பார்த்து முடிக்கையில். ஆனால் இவ்விளம்பரத்திற்கு எதிராக 240 முறைப்பாடுகள் பதியப்பட்டிருக்கின்றன. காரணம் இவ்விளம்பரத்தை உருவாக்கிய Sainsbury நிறுவனம் இங்கிலாந்தின் பிரபலமான சூப்பர்மார்க்கெட் கூட்டுச்சங்கமாகும். தமது பெயரை பிரபலப்படுத்த உலகமகா யுத்தத்தை தேவையில்லாமல் துஷ்ப…

  22. மத்திய லண்டனில் சொத்து வாங்கும் வெளிநாட்டுக் காரர்களில் இந்தியர்களே முதலிடம் பெறுவதாக CBRE என்னும் ரியல் எஸ்டேட் துறை ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய லண்டனில் கிட்டத்தட்ட 40 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியர்கள் முதலீடு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டாவது காலாண்டில் இந்தியர்கள் 55 சதவீதம் பங்குகளை வாங்கியிருக்கிறார்கள். பெரிய வணிக வளாகங்கள் வாங்குவதிலும் இந்திய நிறுவனங்களின் கையே ஓங்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய லண்டனின் முக்கியப் பகுதியான மேஃபேர் பகுதியில் ஹேஙோவர் ஸ்கொயரில் இந்திய நிறுவனமான இண்டியா புல்ஸ் சொத்து வாங்கியுள்ளது. இது ஆக்ஸ்ஃபோர்டு சர்கஸுக்கு அருகில் உள்ள பகுதி. இந்தன் விலை 26 கோடி அமெரிக்க டாலர் என C…

  23. லண்டனில் உள்ள குரொய்டன் பகுதியில் இன்று காலை டிராம் வண்டியொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் உயரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. டிராமை வேகமாக ஓட்டி வந்தமைதான் விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என உள்ளு}ர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது ஒரு பாரிய விபத்து என லண்டன் போக்குவரத்து பிரிவினர் விவரித்துள்ளனர். டிராம் தடம்புரண்டதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர் http://globaltam…

  24. அண்மைய மாதங்களாக லண்டனில் வகை தொகையின்றித் தொடரும் கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் தற்போது லண்டன் வாழ் தமிழர் தரப்பை மீண்டும் பதம் பார்க்க ஆரம்பித்துவிட்டது. தெற்கு லண்டனில் 17 வயதான தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் தெருச் சண்டையொன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இன்று மரணமடைந்துள்ளார். இக்கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மன்ஜெஸ்ரர் நகரில் இன்று 16 வயது வெள்ளையின இளைஞனும் கத்திக் குத்துக்கு இலக்காகி பலியாகியுள்ளார். http://news.bbc.co.uk/1/hi/england/london/7565004.stm

    • 6 replies
    • 2.2k views
  25. லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை பார்ப்பதாக பிபிசியின் அரசியல் பிரிவின் தலைவர் தெரிவிக்கிறார். பயங்கரவாத தாக்குதல் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வாள் போன்ற ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்திய இருவர் மற்றொருவரை தாக்கியதாக நேரில் பார்த்தவர…

    • 7 replies
    • 841 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.