உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
சென்ற ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் கா…
-
- 0 replies
- 734 views
-
-
கடற்படை தளபதியோடு கருணாநிதி பேச்சுவார்த்தை கருணாநிதி : வாங்க சர்மா. எப்படி இருக்கீங்க ? சர்மா : நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க ? கருணாநிதி :நான் உங்கள வரச்சொன்ன விஷயம்… சர்மா : தெரியும் சார். மீனவர்கள் கொல்லப் படுகிற விவகாரம் தானே… அதுல என்னன்னா ? கருணாநிதி : நான் வரச் சொன்ன விஷயம் அது இல்லை. சர்மா : வேற என்ன சார்…. ? கருணாநிதி : இளைஞன் படம் பார்த்தீர்களா ? சர்மா : சார் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் நான் படம் பார்ப்பதில்லை கருணாநிதி : இளைஞன் படம் பார்க்க தமிழ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் தான…
-
- 0 replies
- 805 views
-
-
''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES Image captionமைக் பாம்பியோ மற்றும் கிம் வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட…
-
- 0 replies
- 319 views
-
-
போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற…
-
- 47 replies
- 3.5k views
-
-
இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…
-
- 3 replies
- 423 views
-
-
குடியேறிகள் விவகாரம்: "அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்" - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படு…
-
- 0 replies
- 362 views
-
-
ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து: 2,000 தங்குமிடங்கள் தீக்கிரை! பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். காக்ஸ் பஜார் என்று அழைக்கப்படும் முகாமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவிய தீ, முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு தீ பரவத் தொடங்கியது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அண்டை நாடான மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பிய 12,000பேர் இப்போது வீடற்றவர்களாக உள்ளதாக, பங்களாதேஷின் அக…
-
- 1 reply
- 278 views
-
-
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…
-
- 1 reply
- 814 views
-
-
காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. …
-
- 22 replies
- 1.7k views
-
-
"அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ (World Forum for Proximity of Islamic Schools of Thought) என்னும் அமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32ஆவது கருத்தரங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26 திகதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறும். இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், மு…
-
- 3 replies
- 1.2k views
-
-
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார். காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ச…
-
- 0 replies
- 467 views
-
-
http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்…
-
- 4 replies
- 775 views
-
-
தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த கவர்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னராக ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கே. ரோசய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இதேபோல் கேரள மாநில கவர்னராக, ஜார்கண்ட் மாநில கவர்னராக இருக்கும் எம் ஓ எச் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச கவர்னராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் நரேஷ் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னர் சையத் அகமது ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வி.புருஷோத்தமன் மிசோரம் மாநில கவர்னராக நியமிக்கப்பட்…
-
- 0 replies
- 281 views
-
-
புதுதில்லி உயநீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு இரண்டு பேர் பலி. 07 செப்டம்பர் 2011 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த புதுதில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் ஐந்நாம் நுழைவாயிலில் இன்று காலை 10-17 மணிக்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்கள், வழக்கு தொடர்புடையோர் நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் இந்த குண்டு வெடித்துள்ளது இந்த குண்டு வெடிப்பின் காரணமாக சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேர் மரணித்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு எந்த அமைப்பும் இது வரை பொறுப்பேற்க முடியாத நிலையில் மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. சென்ற ஏழாம…
-
- 14 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இறைதூதர் முகமதுவின் கார்ட்டூன் படங்களை வரைவதற்கான போட்டி ஒன்று நடந்த இடத்திற்கு வெளியே துப்பாக்கியால் சுட்ட ஆயுததாரிகள் இருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் அங்கே கிட்டத்தட்ட இருபது முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் சொன்னார்கள். பாதுகாப்பு ஊழியர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். பொலிசார் இந்த இடத்தை பாதுகாப்பாக சூழ்ந்துகொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை அருகிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்கும் வலதுசாரி அமைப்பான அமெரிக்க சுதந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற அமைப்பு, டல்லாஸ் நகர புறநகர்ப் பகுதி …
-
- 1 reply
- 402 views
-
-
டிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரான்ஸ் வரலாற்றில் முதன் முறையாக! பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக மிகவும் இளம் வயதில் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 34 வயதான இவர், கடந்த 20 மாதங்களாக பிரதமராக பதவி வகித்த Élisabeth Borne இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365465
-
- 4 replies
- 678 views
- 1 follower
-
-
1995 அளவில் கியுபெக்கை கிட்டத்தட்ட இறையாண்மைக்கு இட்டுச்சென்றவரும் கியுபெக்கின் முன்னாள் முதல்வருமான Jacques Parizeau தனது 84-வது வயதில் காலமானார். இச்செய்தியை திங்கள்கிழமை பிற்பகல் எட்டு மணிக்கு சிறிது முன்னராக அவரது மனைவி Lisette Lapointe முகநூலில் எழுதியுள்ளார். 1995ல் இவரது தலைமையின் கீழ் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பில் 50.6% வாக்குகள் இல்லை எனவும் 49.4 %ஆம் எனவும் கிடைக்கப்பெற பணம் மற்றும் இனவழி வாக்குகளும் தோல் விக்கு காரணமென தெரிவித்து அடுத்த நாள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது தலைமுறையினரில் கியுபெக்கினரிடையே மிகவும் செல்வாக்கு மிக்கவர்.ஒரு போதும் வார்த்தைகளை துண்டு துண்டாக வெட்டமாட்டார். இவருக்கு இசபெல்லா -ஒரு வழக்கறிஞர் மற்றும் பேனாட்- ஒரு டா…
-
- 0 replies
- 427 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வரைந்த வியட்நாம் - ஈராக் சமாந்தரம் அமெரிக்கா அதன் சரித்திரத்திலேயே வியட்நாம் போரில்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா சம்பந்தப்படுகின்ற இராணுவ நெருக்கடிகளில் எல்லாம் வியட்நாம் அதிர்ச்சி அனுபவம் அமெரிக்கர்களையும் வெள்ளை மாளிகையையும் இடையறாது உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. நாலரை வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் தீவிரமடைந்திருக்கும் கிளர்ச்சியை வியட்நாம் போருடன் ஒப்பிட்டுச் செய்யப்பட்ட விமர்சனங்களை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இதுவரை ஒருபோதுமே ஏற்றுக் கொண்டதில்லை. இரு நெருக்கடிகளுமே முற்றிலும் வேறுபட்டவை என்பதே அவரது வாதமாக இருந்து வந்தது. ஆனால், முதற்தடவையாக புஷ் கடந்த வாரம் வியட்நாம்…
-
- 0 replies
- 753 views
-
-
டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை நீதிமன்றங்களில் இருந்து உயிர்நாடி மற்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் முதல் குற்றவியல் விசாரணைக்கான விசாரணை தேதி ஆகிய இரண்டையும் பெற்றார், ஒரு ஜோடி தீர்ப்புகள் அவரைச் சுற்றியுள்ள சட்ட சாட்டையடியைத் தாக்கின. திங்களன்று இரட்டை தீர்ப்புகள், ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் வந்தவை, ட்ரம்பின் பிம்பத்திற்கும் அவரது புகழ்பெற்ற வணிக சாம்ராஜ்யத்திற்கும் சவால்களின் குறுக்குவெட்டு, அவர் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க முயன்றார். ட்ரம்பின் நியூயார்க் ஹஷ் பண வழக்கில் அவருக்கு எதிரான வரலாற்று குற்றவியல் விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் தொடங்கும் என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் திங்கள்கிழமை தெரிவித்தார், ஆவண…
-
-
- 2 replies
- 575 views
- 1 follower
-
-
உடையும் இந்தியா இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா-கனடிய ஆராய்ச்சியாளர்களால் சமூக பரிசோதனையாக உருவாக்கப்பட்ட தானியங்கி இயந்திர மனிதன் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. கனடா பூராகவும் பயணம் செய்ததுடன் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து கொண்டது.அமெரிக்காவில் சுற்று பயணத்தை மேற்கொண்டிருந்த சமயம் அதன் அழிவை சந்தித்துள்ளது.மசசுசெட்டில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கோ செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் முடியாது போய் விட்டதாகவும் கூறப்பட்டது.இதனை உருவாக்கியவர்களிற்கு அழிக்கப்பட்ட றோபோவின் படம் அனுப்பபட்டுள்ளது. ஆனால் அதன் பற்றறி செத்து விட்டதால் இடத்தை கண்டிறிய முடியவில்லை.ஏன் எங்கே அழிக்கப்பட்டதென தெரியவில்லை. ஏராளமான சிறுவர்கள் இதனை பெரிதும் விரும்பினர் எனவும் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட…
-
- 0 replies
- 604 views
-
-
ஜப்பானில் 200 ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி அவர் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) பதவி விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. 85 வயதான பேரரசர் தனது வயது மற்றும் உடல்நலக் குறைவு என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது வயது மூப்பின் காரணமாக தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் உடல்நிலை நலிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் கடந்த இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதலாவது பேரரசர் இவர் ஆவார். அதற்கமைய அவரது புல்வர் முடிக்குரிய இளவரசர் நறுஹிட்டோ அரியணையை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும்…
-
- 1 reply
- 543 views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு! ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக…
-
- 0 replies
- 532 views
-