Jump to content

புலிகள் எதிர்ப்பு - ஜெ. உறுதி!


Recommended Posts

சில கள நண்பர்கள் ஜெயலலிதா திருந்தி விட்டதாகவும் அவரே தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர் போலவும் இங்கே சொல்லி வந்தார்கள்.... அவர்களுக்காக பின்வரும் செய்தியை இணைக்கிறேன்.... :)

கிருஷ்ணசாமி கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன்

ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு

jaya.jpg

ஆண்டிப்பட்டி, செப். 6-

விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ஆண்டிப்பட்டி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஜெயலலிதா கூறினார்.

கிருஷ்ணசாமி புகார்

அண்மையில் ஒரு கூட்டத்தில், அரசியல் ரீதியாக நடைபெற்ற கூட்டத்தில் கூட அல்ல. ஒரு திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, வேண்டாத, தேவையில்லாத, கூற்றுக்களை கூறி இருக்கிறார். மிகவும் பொறுப்பற்ற முறையில் அபாண்டமான குற்றச்சாட்டுகளை என்மீது அள்ளி வீசி இருக்கிறார்.

அதாவது விடுதலைப்புலிகள், இயக்கத்தை நான் ரகசியமாக ஆதரிக்கின்றேனாம். விடுதலைப்புலிகளோடு சேர்ந்து நான் பயங்கரமான சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டு இருக்கிறேனாம். இப்படி பேசி இருக்கிறார் கிருஷ்ணசாமி. கிருஷ்ணசாமியின் குற்றச்சாட்டுக்கு ஏதாவது அடிப்படை ஆதாரம் இருக்கிறதா?

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை அண்ணன் என்று அழைக்கின்றேனாம்? அவருடைய ம.தி.மு.க. கட்சியோடு நான் கூட்டணி வைத்திருக்கிறேனாம்.

அன்பு சகோதரர் வைகோ என்னை விட மூத்தவர் என்பதாலும், ஒரு பாசத்தோடு அண்ணன் என்று அழைக்கின்றேன். இது என்ன தவறு? வைகோவின் ம.தி.மு.க. கட்சியோடு நான் கூட்டணி வைத்திருப்பதாலேயே விடுதலைப்புலிகளுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று குற்றம் சாட்டுகிறார் கிருஷ்ணசாமி.

கடந்த கால வரலாறு

அப்படியானால் அண்மையில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதே வைகோவின் கட்சியோடு கிருஷ்ணசாமியின் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது ஏன்? அப்போது காங்கிரஸ்காரர்களும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார்களா? அதுமட்டுமா, பாட்டாளி மக்கள் கட்சியை மறந்து விட்டாரா? கிருஷ்ணசாமிக்கு கடந்த கால வரலாறு மறந்துபோய் விட்டது என்றால் நான் அவருக்கு நினைவூட்டுகிறேன்.

1993-ம் ஆண்டில் நான் முதல்-அமைச்சராக இருந்த போது, டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி சென்னை வீதிகளில் ஒரு பேரணியை நடத்தியது. அந்த பேரணியை டாக்டர் ராமதாஸ் தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். அந்த பேரணியில் பாட்டாளி மக்கள் கட்சியினர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜீவ் காந்தியை கொலை செய்த தணு, சிவராஜன் ஆகியோரின் படங்களை ஏந்தி ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை வாழ்த்தி கோஷமிட்டு சென்றார்கள். அதே டாக்டர் ராமதாஸ் தான் இப்போது காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் சம்பந்தி. அதையெல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்.

1993-ம் ஆண்டிலேயே நான் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று பாரத பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அப்போது அங்கிருந்தது காங்கிரஸ் பிரதமர்தான். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை.

அந்த பாட்டாளி மக்கள் கட்சியோடு தான் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது.

அதே பாட்டாளி மக்கள் கட்சியோடுதான் காங்கிரஸ் கட்சி அண்மையில் 2006-ம் ஆண்டு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் கூட்டணி வைத்துக் கொண்டது. ஆனால் இதையெல்லாம் மறந்துவிட்டு, கிருஷ்ணசாமி என்மீது பழி சுமத்துகிறார். நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்.

தடை

ஒன்றை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி அந்த தடை உத்தரவை பிறப்பிக்க செய்தவளே நான்தான்.

எந்த இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தாலும், அந்த தடை உத்தரவு 2 ஆண்டுகள் வரைதான் நீடிக்கும். 91-க்கு பிறகு ஒவ்வொரு முறையும் அந்த 2 ஆண்டு காலம் முடியும் போது மீண்டும் மீண்டும் மத்திய அரசுக்கு நினைவூட்டி இன்று வரை விடுதலைப்புலிகள் மீது அந்த தடையை நீட்டிக்க செய்தவளும் நான்தான்.

கடந்த மே மாதம் 2006-ல் சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவு காலாவதியாகியது. நான் முதல்-அமைச்சராக இருந்த கடைசி நாட்களில் கூட, இதை நினைவூட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, மே மாதத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவு காலாவதியாகப் போகிறது. அதை மீண்டும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கடிதமும் அனுப்பி இருக்கிறேன். அரசு கோப்புகளில் இருக்கிறது. இதை யார் வேண்டுமானாலும் எடுத்து பார்க்கலாம்.

அபாண்டம்

சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த உடனேயே மீண்டும் விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அதற்கு காரணமே என்னுடைய நினைவூட்டல் தான். என்னுடைய முயற்சிகள் தான். ஆகவே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதைவிட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு இருக்க முடியாது.

அதற்கு மாறாக சில நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், இலங்கை தமிழர்கள் பற்றிய பேச்சு வந்தபோது, இன்றைய அரசின் முதல்-அமைச்சர் கருணாநிதி தான் விடுதலைப்புலிகள் மீது உள்ள தடை தேவையா? இல்லையா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார்.

என்னை பொறுத்தவரை விடுதலைப்புலிகள் எதிர்ப்பில் நான் என்றைக்குமே தெளிவாக இருந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு எந்த தடுமாற்றத்தையும் நான் மேற்கொண்டதே இல்லை.

இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் நான் செயல்பட்டு இருக்கிறேன். தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நான் எதிர்த்து வந்திருக்கிறேன்.

ஏமாற்றப் பார்க்கிறார்கள்

ஆனால் கிருஷ்ணசாமி நான் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருப்பதாக சொல்கின்றார். இன்றைய தினம் இந்த விஷயத்தில் மீண்டும் மீண்டும் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு இருக்கின்ற அவருடைய கூட்டணி பார்ட்னர் கருணாநிதி, விடுதலைப்புலிகள் மீது தடை உத்தரவு வேண்டுமா, வேண்டாமா, இது தேவையா, இல்லையா இதுவே விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்கிறார்.

ஜெயின் கமிஷன்

அப்படி பேசுகின்ற கருணாநிதியோடு காங்கிரஸ் கட்சி மத்தியிலும் கூட்டணி வைத்து இருக்கிறது. இங்கு மாநிலத்திலும் கூட்டணி வைத்து இருக்கிறது. இந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள். கடந்த கால வரலாற்றை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மறந்துவிட்டார்களா?

முன்பு குஜ்ரால் தலைமையில் மத்தியில் கூட்டணி அரசு இருந்த போது அவருக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது. அப்போது ராஜீவ் காந்தி படுகொலையை விசாரிக்க ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஜெயின் கமிஷன் தன்னுடைய இடைக்காலஅறிக்கையை சமர்ப்பித்தது. அந்த இடைக்காலஅறிக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதி கொடுத்த ஆதரவு தான் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமாக அமைந்தது என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.

அதனால் வெளியில் குஜ்ரால் அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சி அன்றைய தினம் தன்னுடைய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது. அதனால் தான் 1998-ல் அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெற்றது. இவையெல்லாம் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது. இவற்றையெல்லாம் கிருஷ்ணசாமியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் மறந்து விட்டார்களா?

ஆதரிக்க மாட்டேன்

அதே கருணாநிதியோடு, கருணாநிதியின் தி.மு.க.வோடு அதே காங்கிரஸ் 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல்களில் கூட்டணி வைத்துக் கொண்டது. 2006-ம் ஆண்டு மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டது. தன்னுடைய கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை காங்கிரஸ் கட்சி எப்படி நியாயப்படுத்துகின்றது? இதை முதலில் மக்களுக்கு விளக்கி சொல்லட்டும்.

இன்று திரு.கருணாநிதியை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக என் மீது அபாண்டமான பழிகளை, குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்கள் மனசாட்சியை தொட்டுப்பார்க்க வேண்டும்.

தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டேன்

என்னை பொறுத்தவரை நான் பாரத நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, உண்மையான தேசப்பற்று உள்ள இந்திய நாட்டின் மகள். பாரத நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் ஊறுவிளைவிக்கும் எந்த தீவிரவாத, பயங்கரவாத அமைப்பை என்றைக்கும் நான் ஆதரிக்க மாட்டேன்.

ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகளை நான் உறுதியாக எதிர்த்து இருக்கிறேன். அந்த எதிர்ப்பில் தளர மாட்டேன். தொடர்ந்து எதிர்ப்பேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த பயங்கரவாத, தீவிரவாத அமைப்புக்கும் ஆதரவு அளிக்காது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

வரவேற்பு

முன்னதாக ஜெயலலிதா ஆண்டிப்பட்டி செல்ல நேற்று பகல் 1.35 மணிக்கு விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் அவரது தோழி சசிகலாவும் வந்திருந்தார். விமானநிலையத்தில் டி.டி.வி தினகரன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், தளவாய்சுந்தரம், உள்பட ஏராளமானோர் அவரை வரவேற்றனர்.

வரவேற்பிற்கு பிறகு விமானநிலையத்திலிருந்து ஜெயலலிதா காரில் புறப்பட்டார். விமானநிலையத்துக்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் புரட்சித்தலைவி வாழ்க, தங்கத்தலைவி வாழ்க என்று கோஷம் எழுப்பினர். கூட்டத்தினரை பார்த்து ஜெயலலிதா கையை அசைத்தபடி பெருங்குடி வழியாக வில்லாபுரம் வந்தார்.

அங்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் மச்சக்குமார் மற்றும் ஏராளமானோர் நாதசுரம் முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தெற்கு வாசலில் அலங்கரிக்கப்பட்ட யானைகளுடன் செண்டை வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுப்பட்டது. காஜிமார் தெருவில் ஏராளமான முஸ்லிம்கள் கூடிநின்று வரவேற்றனர். பண்டியவேளாளர் தெரு, மேலமாசிவீதி வழியாக யானைக்கல் வந்தார்.

அங்கு மேம்பாலம் அருகே மாநகர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் மற்றும் பலர் வரவேற்றார்கள்.தல்லாகுளத்தில

Link to comment
Share on other sites

அப்ப உதுக்கு தானே வைகோ,சசிகலெ,ஜெயலலிதா எல்லாரும் ஒரே விமாணத்தில் மதுரை சென்றார்களா!!!!தற்ச்தமிழில் பார்த்தனான்

Link to comment
Share on other sites

அவர் இப்படி நிலைதடுமாறுபவர் என்பது தெரிந்த விடயம் தானே. அரசியல்வாதிகளிடம் ஒரு நிலையான கொள்கை இருக்குமா என்ன..! கள்ளக் கையெழுத்துப் போட்ட ஆளாச்சே..! அதுக்குப் பிறகு கையெழுத்தே போடுறதில்லையாம். ஆயிரக் கணக்கான கோப்புக்கள் இவரின் ஆட்சிக்காலத்தில் இவரின் கையெழுத்துக்காகக் காத்துக்கிடந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவரெல்லாம் பாரத மாதாவின் மகள்..??! மக்களின் அம்மா...! :wink: :P :)

Link to comment
Share on other sites

அவர் இப்படி நிலைதடுமாறுபவர் என்பது தெரிந்த விடயம் தானே. அரசியல்வாதிகளிடம் ஒரு நிலையான கொள்கை இருக்குமா என்ன..! கள்ளக் கையெழுத்துப் போட்ட ஆளாச்சே..! அதுக்குப் பிறகு கையெழுத்தே போடுறதில்லையாம். ஆயிரக் கணக்கான கோப்புக்கள் இவரின் ஆட்சிக்காலத்தில் இவரின் கையெழுத்துக்காகக் காத்துக்கிடந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இவரெல்லாம் பாரத மாதாவின் மகள்..??! மக்களின் அம்மா...! :wink: :P :)

அப்ப உம்மட கொள்கையும் ஜெயாவிண்ட கொள்கையும் ஒண்டுதானே???? அட அதை நான் சொல்லலையப்பா, ஐ.நா சபையில கதைச்சாங்க, உமக்கு அவாடு கூட தரப்போறாங்களாம், உலகத்தில நடுநிலமை, யாதார்த்தம் புரிஞ்சு கதைக்கிற ஒரே ஒரு ஆளாம் நீர்??? :oops: :wink: :D

அப்படியே மதி (கெட்ட) தாத்தாவுக்கு ஒஸ்கார் விருதும் குடுக்கபோறாங்களாம். :wink: :D

Link to comment
Share on other sites

யாழ்களத்திலேயே பலர் நிலைதடுமாறும்போது. அரசியலில் நிலைதடுமாறுவது பிழையா? நான் அறிந்த வரைக்கும் கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் ஜெயலலிதா?

நேரடியாகவே புலிகளை எதிர்ப்பவர். அன்றும்சரி இன்றும் சரி.

Link to comment
Share on other sites

கிருஸ்னசாமி ராஜீவ் கொலையில் தொடர்பு பற்றி விசாரிக்க சொல்லி கேக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவர் சும்மா இருந்திருப்பார்.....

எத்தினை வளக்குகளை, விசாரணகளையும்த்தான் சந்திக்கிறது...??? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா...??

Link to comment
Share on other sites

கிருஸ்னசாமி ராஜீவ் கொலையில் தொடர்பு பற்றி விசாரிக்க சொல்லி கேக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவர் சும்மா இருந்திருப்பார்.....

எத்தினை வளக்குகளை, விசாரணகளையும்த்தான் சந்திக்கிறது...??? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா...??

சும்மா பகிடி விடாதீங்கப்பு செண்ணைக்கும் பங்களூருக்கும் கேசுக்கு என்று அலைந்தே பாதி சொத்து அழிஞ்சு போச்சு :P :P :P

Link to comment
Share on other sites

லக்கி

என்ன லக்கி உங்கள் தலைவரும் ஒரே குட்டையில் ஊறியவரா தமிழ் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்களை சந்திக்க நேரமில்லாத அவருக்கு சூரியாவின் கலியாண வீட்டுக்கு கலை 6.30 போக முடியுது.காலை 6.3 மணிக்கு போகமுடிந்தவருக்கு காலை 6.30 மணிக்கு சந்திக்க முடியும் தானே.

சாதாரண நடிகரின் கலியாண வீட்டுக்கு குடுக்கப்படும் மரியாதையளவுக்கு நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்

எம்மவரின் சோகத்தை விட ஒரு கூத்தாடி முக்கியமாக போய்விட்டாரோ அவருக்கு தயவு செய்து கோவப்பட வேண்டாம் உண்மையைத்தான் எழுதுகின்றேன்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவள்தான் ஒரு கன்னடச்சி! எனினும், கன்னடம், கேரளம், ஏன் ஆந்திராவில் கூட ஈழத்தமிழருக்கு காட்டும் அனுதாபம் ஏன் தமிழ்நாட்டு கருணாநிதி, ஞானசேகரன், ராஜு போன்றவர்களுக்கில்லை! கிருட்டின சாமி ஒரு ஆசாமி! ஆனால், தமிழின் காவலன் என தன்னையே கூறிக்கொள்ளும் கருனாநிதிக்கு, அவரின் பெயரில் ஒழிந்திருக்கும் எட்டப்பனைத் தூக்கி எறிய முடியாதநிலை. ஏனெனில் பதவிமோகம்! இந்தப் பதவிமோகம் ஈழத்தமிழரை புறக்கணிக்கும் நிலைக்கு போய் விட்டது!

சாதாரண நடிகரின் கலியாண வீட்டுக்கு குடுக்கப்படும் மரியாதையளவுக்கு நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்

எம்மவரின் சோகத்தை விட ஒரு கூத்தாடி முக்கியமாக போய்விட்டாரோ அன்புடன்

ஈழவன்

ஈழவனின் கூற்றுப்படி, இப்படி ஈழத்தமிழரால் தெரிவுசெய்யப்பட்டவர்களை பின் தள்ளுவது எட்டப்பர்களின் செயல் அல்லவா! உவர்கள் தங்கள் தனிப்பட்ட கோபதாபங்களால் தமிழரையல்லவா காயப்படுத்துகிறார்கள். தன் கடைசிநாட்களில் கருணா நிதி ஈழத்தமிழருக்குத் துரோகமிழைத்தாரானால், தமிழினமே அவர்மேல் காறித்துப்பும் என்பதை இப்பவே அவர் உணரவேண்டும்! அரசியல் வேறு! தமிழனின் வாழ்வு வேறு!

அடுத்தது, இந்தக்கூத்தாடிக்கு 2500 மக்கள் கொடூரமாக இறந்த நாளில்தானா கலி ஆடவேண்டும்!

Link to comment
Share on other sites

கூத்தாடி என்பதெல்லாம் ஓவர். நடிப்பு சூரியாவின் தொழில். அதை அவர் திறம்பட செய்கிறார். உளறுவது என்று முடிவெடுத்து விட்டால் எப்படியெல்லாமோ உளறலாம்....

Link to comment
Share on other sites

அட விடுங்கப்பா...! கலைஞர் நீண்டகாலத்துக்கு முன்னமே செய்திருந்த நேர அட்டவணைப்படி போய் வந்திருப்பார்....! பின்னேரம் ஜெயலலிதா அம்மையார் போக இருந்த்ததால் காலையில் போய் வந்திருப்பார்..! சிவகுமார் நல்ல தமிழ் பற்றாளராய் வாழ்பவர்... அவர் வீட்டு கல்யாணத்துக்கு போக மறுப்பது கலைஞ்ருக்குத்தான் இழுக்கை கொண்டு வந்து இருக்கும்... தமிழ் நாட்டில் தேவை இல்லாத வறட்டு கௌரவத்தை காட்ட வேண்டுமா என்ன...???

கூட்டமைப்பினர் வரும் 17ம் திகதிவரை இந்தியாவில்த்தான் தங்குவதாய் ஏற்பாடு... அதனால் கூட கலைஞர் அவர்களை சந்திப்பதை பிற்போட்டு இருக்கலாம்...!

மற்றது ஈழத்தில நடக்கிறது கலைஞ்ருக்கு தெரியாது.... ஈழத்து கூட்டமைப்பினர் போய்த்தான் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்...!

எவ்வலவோ பிரச்சினைகள் இருக்க சும்மா வேண்டாததுக்கு ஏன் மல்லுக்கு நிக்கிறம் எண்டுதான் எனக்கு விளங்கேல்லை...!

Link to comment
Share on other sites

மல்லுக்கு நிக்கவில்லை சரி லக்கி நாங்கள் கூத்தாடி என்று சொல்லவில்லை ஆனால் சாதாரண நடிகரின் வேண்டுகோளை ஏற்று சென்றவருக்கு எமது வேண்டுகோளை ஏற்கமுடியாதா

சூரியாவின் தங்கை கலியாணத்துக்கு ஜெயலலிதா தாலி எடுத்துகொடுத்தார் அப்போ அவ்ர் ஆட்சியில் இருந்தார் இப்போ கருணாநிதி ஆட்சியில் இவர் தாலி எடுத்துகுடுக்கிறார்.இது சுத்த கேனத்தனமாக இல்லை.அப்போ கலியாணம் என்பது அரசியல் சித்து விளயாட்டுக்காக பாவிக்கப்படும் ஒரு சித்து விளையாட்டுதானே!!!

இங்காலயும் பாடி அங்காலயும் பாடும் சிவக்குமாரும் அவரின் புதல்வரும் கூத்தாடி என்றுசொன்னதில் ஒரு தப்பும் இல்லை என்பது என் பணிவான கருத்து.இது யாருக்கு புண்படுத்தியிருந்தால் என்னை தயவுகூர்ந்து மன்னித்துகொள்ளுங்கள்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தமிழ் மன்றத்தில் "திரைக்கூத்து" என்ற விடயத்தலப்பில், சூரியா திருமணமென்றிருக்கிறதே! கூத்தாடி என்றால் நடிகன் தானே. இதில் என்ன கௌரவப் பிரச்சினை! கூத்தாடத் தொடங்கிவிட்டால் கூத்தாடி என்றால் என்ன நடிகன் என்றால் என்ன! கூத்தாடி என்பது இருபாலாரையும் குறிக்கும் சொல்! நடிகன், நடிகை என்பது தனித்துகுறிக்கும் சொல்! கூத்தாடி என்றாலே கோபம்வருகிறதே! தமிழரை இலங்கையில் "ப..தெமலா" என்று தினம் தினம் வசம்பாடுகிறானே! எப்படி இருக்கும் எமக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கெடுத்தாலும் இந்தியாத் தமிழர்களிடம் குறை சொல்லும் எம்மவர்கள் முதலில் எங்களுக்குள் இருக்கும் அழுக்குகளினைப் பாருங்கள். எங்களுக்குள் இருக்கும் எட்டப்பர்களினை விடவா இவர்கள் குறைவானவர்கள்??

Link to comment
Share on other sites

எதற்கெடுத்தாலும் இந்தியாத் தமிழர்களிடம் குறை சொல்லும் எம்மவர்கள் முதலில் எங்களுக்குள் இருக்கும் அழுக்குகளினைப் பாருங்கள். எங்களுக்குள் இருக்கும் எட்டப்பர்களினை விடவா இவர்கள் குறைவானவர்கள்??

இல்லை கந்தப்பு நான் அவர்களை குறை சொல்லவில்லை ஒரு நடிகனுக்கு இருக்கும் மதிப்பு எங்கள் பால் கலைஞர் வைக்கவில்லையே என்ற ஆதங்கம் :x

Link to comment
Share on other sites

ஒழுங்காக விவாதம் செய்பவர்களாக இருந்தால் விவாதம் செய்யலாம்....

கூத்தாடி மாதிரி வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் ஈழவன் மற்றும் அல்லிகா போன்றவர்களிடம் என்னத்தை விவாதம் செய்வது? :)

தமிழுணர்வு கொண்டவரும், புலிகள் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மீது பாசம் கொண்டவருமான சிவக்குமாருக்கு கிடைத்தப் பட்டம் "கூத்தாடி".... பலே... பலே.... உங்கள் நாகரிகம் வியக்க வைக்கிறது.....

மற்றவர்களை குறைச் சொல்லி இன்பம் காணும் இந்த நண்பர்கள் தமிழீழ தேசியப் போராட்டத்துக்கு இதுவரை என்னத்தை கிழித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

வாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?

கலைஞருக்கு ஈழத்தமிழர் மீது பற்றிருக்கிறதா இல்லையா என்பதை சின்னக்குடி, கந்தப்பு மாதிரி அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்லட்டும்.... எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நண்பர்கள் கொஞ்சம் நிதானமாக தங்கள் கருத்துக்களை வைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.....

தேவையில்லாமல் சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் ஈழவன் பதிந்த அமைதிப்படை குறித்த பதிவு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்....

ஒரு கருத்தை சொல்லும்போது காலம், நேரம் பார்த்துச் சொல்ல வேண்டும்.... அவசரப்பட்டு ஏதாவது சொல்லிவிட்டு எதிர்காலத்தில் அவதிப்படுவானேன்?

Link to comment
Share on other sites

ஒழுங்காக விவாதம் செய்பவர்களாக இருந்தால் விவாதம் செய்யலாம்....

கூத்தாடி மாதிரி வார்த்தைகளைப் பிரயோகம் செய்யும் ஈழவன் மற்றும் அல்லிகா போன்றவர்களிடம் என்னத்தை விவாதம் செய்வது? :)

தமிழுணர்வு கொண்டவரும், புலிகள் அமைப்பு மற்றும் ஈழத்தமிழர் மீது பாசம் கொண்டவருமான சிவக்குமாருக்கு கிடைத்தப் பட்டம் "கூத்தாடி".... பலே... பலே.... உங்கள் நாகரிகம் வியக்க வைக்கிறது.....

மற்றவர்களை குறைச் சொல்லி இன்பம் காணும் இந்த நண்பர்கள் தமிழீழ தேசியப் போராட்டத்துக்கு இதுவரை என்னத்தை கிழித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

வாயிருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசி விடுவதா?

கலைஞருக்கு ஈழத்தமிழர் மீது பற்றிருக்கிறதா இல்லையா என்பதை சின்னக்குடி, கந்தப்பு மாதிரி அனுபவம் வாய்ந்தவர்கள் சொல்லட்டும்.... எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் நண்பர்கள் கொஞ்சம் நிதானமாக தங்கள் கருத்துக்களை வைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.....

தேவையில்லாமல் சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் ஈழவன் பதிந்த அமைதிப்படை குறித்த பதிவு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்....

ஒரு கருத்தை சொல்லும்போது காலம், நேரம் பார்த்துச் சொல்ல வேண்டும்.... அவசரப்பட்டு ஏதாவது சொல்லிவிட்டு எதிர்காலத்தில் அவதிப்படுவானேன்?

ஆக அமைதிப்படை அமைதியாக இருந்தது எண்டுதன் சொல்கிறீர்கள். :roll:

Link to comment
Share on other sites

ஆக அமைதிப்படை அமைதியாக இருந்தது எண்டுதன் சொல்கிறீர்கள். :roll:

ஈழவன்!

அமைதிப்படையை பற்றி என் கருத்தை பலமுறை கூறிவிட்டேன்....

பாண்டிபஜார், கோடம்பாக்கம் படுகொலைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

90ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது என உங்களுக்கு தெரியுமா?

91ஆம் ஆண்டு திருப்பெரும்புதூரில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் உயிரிழந்த திமுகவினர், அன்று ஒரு நாளில் சொத்து, சுகத்தை எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்த திமுக காரர்களின் கதை உங்களுக்குத் தெரியுமா?

தி.மு.கழக முன்னோடி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் தடா சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என உங்களுக்குத் தெரியுமா?

தவறு என்பது இருபுறமும் இருக்கும்.... தேவையில்லாமல் கடந்த கால கசப்புணர்வுகளையே மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்வதால் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியவற்றின் நோக்கம் திசைமாறிப் போகும் என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்....

Link to comment
Share on other sites

தமிழர்கள் ஒரணியில் சேருவதற்கான ஏதுவான சூழ்நிலை உருவாகி இருக்கும் இந்தநிலையில் இதுபோன்ற விவாதங்கள் அவசியமா??????????

கொட்டிய அரிசி மணிகளை கூட அள்ளி விடலாம் எழுதிய வார்த்தைகளை??? வார்த்தை பிரயோகங்களில் நாகரீகம் அவசியம், அதுவும் தமிழர் கலாசாரத்தில் ஒரு பகுதிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்

வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி

ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்

தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து

தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்

தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்

கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்

கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே!

சிவபெருமானேயே கூத்தாடி யெனும்பொழுது,

சிவகுமாரனை கூத்தாடியென்றால் வருகுதே கௌரவப்பிரச்சினை!

"எங்களுக்குள் இருக்கும் அழுக்குகளினைப் பாருங்கள்" எங்கேயப்பா இங்கே அழுக்கு இருக்கு கந்தப்பா? தமிழில் இவர்களையெல்லாம் எம் பாட்டனார் கூத்தாடிகள் என்றுதானே கூறுவர். விவாதத்தில் என்னயா பிழை என்று சொல்லுங்கள், கேட்டு விட்டு தவறிருந்தால் திருந்துவோம்! அதை விட்டுவிட்டு உண்மை உறைக்கிறதென்றவுடன், விவாதிக்கத்தெரியாதவங்கள், அழுக்குகள், கிழித்திருக்கிறார்கள், உளருகிறார்கள் என்று அநாகரீகமாக எழுதி கிண்டல் பண்ணுவது யார்? தம்ழ்நாட்டு அரசியல் பற்றி நன்கறிவோம் நாம்! ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பட்டங்கள் சூட்டுவதையும், அவ இவருக்கு பதில் பட்டங்கள் சூட்டியதையும் கேட்டோமே கடந்த தேர்தலில்!

சாத்திரியின் "அவலங்கள்" இல் இருந்து பின் வருகிறது, நாம் என்னத்தை "கிழிச்சோம்" மற்றவர் என்னத்தைக் "கிழிச்சார்" என்று

உதாரணத்திற்கு சில இலங்கைக்கும் இந்தியாவிற்கும் சட்டபடி எந்தவித நாடுகடத்தல் ஒப்பந்தமும் இன்றி ஈழவிடுதலை போராட்டத்தில் ஆரம்பகாலத்து போராளிகளில் ஒருவரான குட்டிமணியை 1973ம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டு கோளிற்கு இணங்க தஞ்சாவூரில் கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். பல ஆண்டுகளின் பின்னர். நீலன் திரு செல்வத்தின் கொலையுடன் சம்பந்த பட்டவர் என இலங்கையரசால் தேடப்பட்டவர் தமிழ்நாட்டில் சட்டப்படி அங்கு எந்த வித பிரச்னையும் இன்றி இருந்தபோது சி.பி.ஜ யினால் கைது செய்யபட்டு அவரை நாடு கடத்த கருணாநிதியிடம் ஒப்புதல் கோரபட்டபோது சட்டத்திற்கு புறம்பாக நாடு கடத்தும் அனுமதியை கொடுத்தார். ஆனால் தமிழ் நாட்டில் வங்கி கொள்ளையிலும் மற்றும் ஒரு கொலையுடனும் நேரடியாக சம்பத்தபட்டு இந்திய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்ட டக்ளஸ் தேவானந்தாவோ இவர் ஆட்சியின்போது தமிழ் நாட்டில் போய் நட்சத்திர விடுதியில் படுத்திருந்து பத்திரிகைக்கு பேட்டியும் கொடுத்துவிட்டு வருகிறார்.

எப்போதுமே நக்கலும் நளினமாகவுமே பேசிபழக்கபட்ட கருணாநி எமது மக்களின் பாரிய பேரழிவுகளும் போராட்டமும் கூட அவருக்கு நக்கலாய் தெரிந்திருக்கவேண்டும் அதனால் ஒரு பத்திரிகை பேட்டியின் போது சொன்னார் தமிழீழம் கிடைத்தால் சந்தோசம் ஆனால் புலிகளை ஆதரிக்கமாட்டேன் என்றார். அதற்கு தேனிசை செல்லப்பா பாரீசில் நடந்த ஒரு நிகழ்சியின் போது அவரது பாணியிலேயே பதிலடி குடுத்தார். கருணா நிதியின் மகள் கனி மொழிக்கு பிள்ளை பிறந்தால் சந்தோசம் ஆனால் திருமணம் செய்வது கருணாநிதிக்கு பிடிக்காது என்று. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்றால் பின்வரும் இணையத்தளத்தை பாருங்கள்!

http://sathriii.blogspot.com/

(என்ன பழசை இந்த நேரத்தில் கிழறுகிறார்கள், ஐயையோ, சுப்புசாமி கேட்டால், இந்தியா நமக்கு ஆதரவு தராதே என்பார்கள். இதெல்லாம் கேட்டு கேட்டு புளித்துப்போய்விட்டது. உண்மைத்தமிழர்களின் ஆதரவு எப்பவும் இந்தியாவில் எமக்குண்டு என்பதுஎன் கருத்து!)

"வாலி, பொடிப்பயலை எல்லாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தாய்" என இருமுறை சொன்னது, கருணாநிதியைப் புகழ்வதுபோல் இகழ்வதாயிருந்தது. தயாநிதிக்கு கட்டாயம் கடுப்பு ஏறி இருக்கும்

"சேது சமுத்திரத்துக்கு நீ கண்ட தீர்வைக்கோ...

உன் தீர்க்க தரிசனப் பார்வைக்கோ...."

இன்னும் சில 'வைக்கோ' என்று முடியும்படியான சில வரிகளின்பின்

"ஈடாகுமா ஓர் வைக்கோ?"

என்றார். கூட்டம் துள்ளிக் குதித்தது. மீண்டும் படிக்கும்படி வந்த கூச்சல்களுக்குள் வாலி மீண்டும் அவ்வரிகளைப் படித்தார்.

"பம்பரம் விட்ட பயல்களையெல்லாம்" என்று தொடங்கி ஏதோ சொன்னார்.

"மேயில் உனக்குச் சிம்மாசனம்"

என்றார். தொடர்ந்து,

"அம்மாசனத்தை வெல்லுமோ அம்மா சனம்?" என்றார்....ம்ம்ம் இப்படி கவிதைகளாலேயே பெரியவர்கள் உளறும் பொழுது, நாம் நடிகனை கூத்தாடி என்றுவிட்டோமாம். இதற்கு கந்தப்புவும் வீணாக தன் நேரத்தை எம்மைப் பார்த்து "எட்டப்பர்" "அழுக்குகள்" என்கிறார். நடிகனை கூத்தாடி என்றால் நாம் எட்டப்பரோ?

என்னய்யா?

தமிழர்கள் ஓரணியில் சேரவேண்டும்தான், வாசகன்! நாம் சேர்ந்துவிட்டோம். அவர்கள் அல்லவா நாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை அலட்சியம் செய்கிறார்கள். நீங்கள் நினைக்கிறீர்களா கருணாநிதி ஒன்று சேர்ப்பார் என்று? நல்லா கனவு காணுங்கள்!

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்றுதான் நான் சிறுவயதில் இருந்து கேட்டு நான் ஒரு தமிழன் என்று பெருமைப் பட்டேன். இங்குதான் அது மாறியிருக்கிறது! எங்கள், பிரதிநிதிகளை உதாசீனப்படுத்துபவர்கள், எப்படி ஒன்றுபடுவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமைதிப்படை செய்த அட்டூளியங்களினை மறக்கக்கூடாது.

உங்களைப்பார்த்து எட்டப்பர்கள் என்று நான் ஒருக்காலும் சொல்லவில்லை. சங்கரி, டக்லஸ் போன்ற எட்டப்பர்களினைத்தான் இங்கே குறிப்பிட்டேன்.

கனடா சென்ற போது நான் பார்த்தேன், பல கடைகளின் விழாக்களுக்கு தமிழக நடிகர்களினை கூப்பிட்டிருந்தார்கள். நாடக நடிகர் அபிசேக்கை 2 கிழமைக்கு முதல் அழைத்திருந்த விளம்பரத்தினைப் பார்த்தேன். சிட்னியில் ஜேசுதாசினை ஒக்டோபர் மாதத்தில் கூப்பிடுகிறார்கள். அன்னிகழ்ச்சிக்கு மக்கள் 70,100 என்று குடுத்துக்கொண்டு போகினம். ஆனால் தாயக சம்பந்தமான நிகழ்வுகள் சிட்னியில் நடக்கும் போது ஒரு சிலரே பங்களிப்புச் செல்கிறார்கள். இதனைப்பார்க்க எவ்வளவு வேதனையாக இருக்கிறது.இதனைத்தான் அழுக்குகள் என்று குறிப்பிட்டுள்ளேன். செஞ்சோலைப்படு கொலை நடந்து மறுகிழமை கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் ஆடிப்பாடித்திரிந்தார்கள். இதனைத்தான் அழுக்குகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் மனதினைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் ஞாயிறு இந்தியப் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17.09.06) சந்திக்கவுள்ளனர்.

சந்திப்புக்கான அழைப்புக்கடிதம் இந்தியப் பிரதமரின் அலுவலகத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சென்னையில் தற்போது தங்கியிருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமையளவில் புதுடில்லிக்கு செல்லவுள்ளனர்.

புதுடில்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

அதேவேளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இச்சந்திப்புக்களில் கலந்து கொள்வதற்காக கொழும்பில் தற்போது இருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் புதுடில்லி செல்லவுள்ளார்.

ஆதாரம்: வீரகேசரி

-புதினம்

Link to comment
Share on other sites

புதன் கிழமை சந்திக்கட்டும் அதுக்கு பிறகுதான் அதை நம்பலாம்.கந்தப்பு சொன்னது உண்மைதான் மெல்பேர்ண்லும் ஜேசுதாழ்வருவதாக 3மாதத்துக்கு முன்னமே விளம்பரம் செய்யதொடங்கிவிட்டார்கள் இப்ப இங்க டிச்கெட் முடிங்சுதாம்.ஆனால் இங்கு நடைபெறும் செஞ்சோலைகலை மாலை (செஞ்சோலை மாணவருக்காக) அதவது வெறும் 5 டொலர்க்கு வாங்கமுடியவில்லை எம்சனம் எப்போதும் ஒன்றுபடாடு அது மட்டும் உண்மை.

அதுமட்டுமல்ல என்னை அமைதிப்படையை பற்றி எழுதவேண்டாம் என சொல்ல எவருக்கும் உரிமை இல்லை எனக்கௌ நடந்தவற்றையும் கண்ணால் கண்டவற்றையும் எழுதவேண்டாம் என சொல்ல ஒருவருக்கும் அருகதை இல்லை.அதற்கு நேரம் காலம் பார்க்கத்தேவை என்பது புல்சிற்.

என்ன நாம் பொய்யையாக எழுதிறம் எல்லாம் கண்ணூக்கு முன்னுக்கு நடந்தவையைதானே அதில ஏன் சங்கடபடவேண்டும் தெவைஇல்லையே.நாம் அமைதிபடையால் பட்ட சங்கடங்களை விடவா நாம் இப்போ எழுதும் போது அவர்கள் படப்போகின்றார்கள்.அவர்களால் இழக்கப்பட்டம் எம் உறவிகளை நினைவுகூர்ந்தால் என்ன குற்றவுணர்வா நான் நிறுத்திவைதிருந்தன் ஆனால் லக்கிதான் திருப்பி தொடங்க வைத்தார்

என்னிடம் எந்தபிழையும் இல்லை என்பது எனக்கு நன்குதெரியும் ஆனாலும் என்கருதுக்கள் யாரின் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள்

அன்புடன்

ஈழவன்

Link to comment
Share on other sites

ஈழவன்!

அமைதிப்படையை பற்றி என் கருத்தை பலமுறை கூறிவிட்டேன்....

பாண்டிபஜார், கோடம்பாக்கம் படுகொலைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

90ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி ஏன் கலைக்கப்பட்டது என உங்களுக்கு தெரியுமா?

91ஆம் ஆண்டு திருப்பெரும்புதூரில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? அதனால் உயிரிழந்த திமுகவினர், அன்று ஒரு நாளில் சொத்து, சுகத்தை எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்த திமுக காரர்களின் கதை உங்களுக்குத் தெரியுமா?

தி.மு.கழக முன்னோடி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் தடா சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என உங்களுக்குத் தெரியுமா?

தவறு என்பது இருபுறமும் இருக்கும்.... தேவையில்லாமல் கடந்த கால கசப்புணர்வுகளையே மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்வதால் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியவற்றின் நோக்கம் திசைமாறிப் போகும் என்பதை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்....

அப்போ அமைதிப்படை இலங்கையில் அட்டூழியங்கள் செய்யும் போது கலைஞர் என்ன விரல் சூப்பிக்கொண்டா இருந்தார் :evil: :evil: :evil: :x :x :twisted: :twisted: :roll: :roll: :roll: :?: :?: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.