உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னை, சேலம், மதுரையில் நடத்திய ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாடுகளில் தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகு பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரைகளிலிருந்து. இப்போது ஈழத்திலே நடக்கும் பேச்சு வார்த்தைக்கான சூழலை உருவாக்கியதே விடுதலைப்புலிகள் தான். நாங்கள் அமைதிக்காக நிற்கிறோம். நாங்கள் போர் வெறியர்கள் அல்ல. நாங்கள் ஆயுதங்களை காதலிக்கிறவர்கள் அல்ல என்று இந்த உலகத்திற்கு மெய்ப்பிக்கிற விதத்திலே அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். பேசுகிறாயா பேசத் தயார். அந்த பேச்சு வார்த்தையிலே நீ என்ன தீர்வைச் சொல்லப் போகிறாய் சொல் என்றார்கள். கடந்த காலத்திலே தந்தை செல்வா சிங்கள ஆட்சிகளோடு பேசினார். கடந்த காலத்திலே தமிழர் அய்க்கிய விட…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழச் சிக்கலைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து திசை திருப்பி வருகின்றன. என்ன நடந்தாலும் தமிழினம் அமைதி காக்கவேண்டுமென விரும்புகின்றன. 2001 டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டபோது, மாபெரும் வெற்றியின் வாசலில் நின்று கொண்டுதான் அதைச் செய்தார்கள். அமெரிக்க ஆயுதங்கள் ஒருபுறம், இந்திய நெருக்குதல்கள் மறுபுறம் - இவற்றுக்கிடையே தான் மாபெரும் ஆனையிரவு இராணுவ முகாமைத் தகர்த்து, 14 பயணிகள் விமானங்களையும் அழித்து, 50,000க்கும் மேற்பட்ட போர்த் தளவாடங்களைக் கைப்பற்றி - சமநிலை இராணுவ பலத்துடன் கிறிஸ்துமஸ் நாளில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிங்கள ராணுவம் செல்லக் கூடாது, துரோகக் குழுக்களின்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிடல் காஸ்ட்ரோ கடந்த அரை நூற்றாண்டு காலமாக உலகின் ஆகர்சமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிவரும் கியூபாவின் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ கடந்த வாரம் சத்திர சிகிச்சைக்கு உள்ளாகுமுன்னர் ஆட்சியதிகாரத்தை சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தமை பெருமளவு ஊகங்களுக்கும் ஆரவாரங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 80 ஆவது வயதை எட்டவிருக்கும் கம்யூனிஸ்ட் தலைவரின் மறைவைக் காண்பதற்கு அங்கலாய்த்துக் கொண்டிருப்பவர்கள் அமெரிக்க அதிகார வர்க்கத்தினரும் அமெரிக்காவில் அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருக்கும் கியூபர்களுமே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அமெரிக்காவின் கோடிப்புறத்தில் எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவில் சோசலிச ஆட்சியை நிலைநிறுத்தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
இலங்கை காவலர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் : கருணாநிதி! வெள்ளி, 4 ஆகஸ்ட் 2006 (13:55 ஐளுகூ) கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சிறிலங்க காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார்! தமிழக சட்டப் பேரவையில் இன்று உயர்கல்வி மானியத்தின் மீது விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறிய கருணாநிதி இத்தகவலை வெளியிட்டார். கோவையில் உள்ள மத்திய கூடுதல் காவற்படை பயிற்சி மையத்தில் சிறிலங்க காவல் அதிகாரிகள் 44 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று சட்டப் பேரவை உறுப்பி…
-
- 12 replies
- 2k views
-
-
வணக்கம்! இத்தால் உங்கள் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் :wink: வீடு கட்ட சிலபேர் காசு குடுத்திட்டுக் காவல் இருக்கிறீங்களே ....அட அதுதான் நம்ம செவ்வாய்க்கிரகம். திருவாளர் செவ்வாய் இந்த மாதம் இருபத்தேழாம் திகதி மிகவும் பிரகாசமாகக் காட்சி தரப்போறாராம்.அதாவது எங்கட வெற்றுக்கண்ணால பார்க்கக்கூடிய அளவுக்கு எங்கட வெண்ணிலாக்கா அளவுக்கு பெருசாக் காட்சி தரப்போறாராம். பூமிக்குக் கிட்ட 34.65m அளவு தூரத்தில் ஆவணி இருபத்தேழாம் திகதி அதிகாலை 12.30 இந்த செவ்வாய் தோன்றும்பொழுது வானிலிரு வெண்ணிலாக்கள் காட்சியளிப்பது போலிருக்குமாம்.இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் 2287 ம் ஆண்டுதான் கிடைக்குமாம்.சத்தியமா நீங்கள் யாரும் இன்னும் 281 வருசம் உயிரோட இருப்பீங்கள் என்ற நம்பிக்க…
-
- 16 replies
- 2k views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...chandran/04.htm
-
- 0 replies
- 816 views
-
-
அமெரிக்க ஏகாதபத்திய அரசுகளின் நெருக்கடிகளுக்கு அடிபணியாது..கியுப தேசத்தை நிர்வகித்து வரும்..பிடல் காஸ்ரோவுக்கு..உணவுக்கால்வாய்
-
- 0 replies
- 948 views
-
-
இஸ்லாமிய உலகை அழிக்க இஸ்ரேலை பயன்படுத்தும் அமெரிக்கா [30 - July - 2006] [Font Size - A - A - A] * ஹிட்லரிடமிருந்து பாதுகாத்து உயிருக்கு உத்தரவாதம் வழங்கிய சமூகத்தையே கொன்றொழிக்கிறது இஸ்ரேல் -எம்.ஏ.எம்.நிலாம்- உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்றொரு நாடு இடம்பெறாத கால கட்டமிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் எஹுதிகள் என வர்ணிக்கப்பட்ட, இன்று இஸ்ரேலியர் எனக் கூறப்படும் மனித கூட்டத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் ஹிட்லர் தனது முழுப் பலத்தையும் பாவித்த வரலாறு மறக்கப்பட முடியாததொன்றாகும். நாதியற்று, நாடிழந்து தவித்த இந்தச் சிறிய கூட்டத்துக்கு வாழ்வளித்தவர்கள் முஸ்லிம்களே. உயிர்காத்து வாழ்வளித்தவர்களுக்கு இஸ்ரேல் இன்று செய்யும் "நன்றிக்கடன்" மனித சமுதாயத்தால் மன்னிக்கப்பட மு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்ச்சோலை வானொலிக்காக தன் கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளிற்கு அருட்தந்தை ஜெகத் கஸ்பார் வழங்கிய தன்னிலை விளக்கம். "....தமிழீழ விடுதலையை கொச்சைப் படுத்துவதற்காகவோ அல்லது அதை தவறாக மக்களிற்குக் காட்டுவதற்காகவோ அல்ல. அப்படி யாரும் நினைக்கவும் வேண்டாம், அப்படி நினைக்கிறவர்கள் ஏமாந்து போவார்கள், அப்படி நினைக்கிறவர்களிற்கு மீண்டும் ஒருமுறை எனது ஆழ்ந்த அனுதாபங்களை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். அது நடக்காது; ஏனென்றால் இந்த தமிழீழ விடுதலைக்காக நான் ஐந்தாறு ஆண்டுகாலம் உலகம் முழுதும் நின்று பேசியவன், போராடியவன், களங்களில் நின்றுகொண்டிருக்கிற, இன்று கூட கனடாவாழ் தமிழ்மக்களோடு நான் நேரில் வந்து சந்திக்க முடியவில்லை என்றால் அந்த நாட்டில் வருவதற்கு என…
-
- 0 replies
- 894 views
-
-
பலவீனத்திற்கான பரிசு -அருஸ் (வேல்ஸ்)- மத்திய கிழக்கில் நடைபெறும் சமர்தான் தற்போது உலகின் ஊடகங்களை ஆக்கிரமிக்கும் செய்திகள். ஆடி 12 ஆம் நாள் ஹிஸ்புல்லா போராளிகளால்; லெபனானின் எல்லையில் இருந்து 2 கீ.மீ தொலைவில் உள்ள இஸ்ரேலின் எல்லைப்புற நகரமான ளூவரடய மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட இரண்டு வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 18 வருடங்கள் லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல் 2000 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர் நிகழ்ந்த முக்கிய சம்பவம் இது. சீற்றமடைந்த இஸ்ரேல், லெபனான் மீது விமான, கடல், தரை தாக்குதல்களை அதே நாளில் ஆரம்பித்தது, பேரழிவுகள் இன்றுவரை தொடர்கின்றன. யார் இந்த ஹிஸ்புல்லா? 1982 இல் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடம்பெயர்ந்…
-
- 0 replies
- 973 views
-
-
அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு வேண்டுகோள் அவுஸ்திரேலிய அரசு தனது மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. தனது நாட்டின் பொருளாதாரம் அதிக மக்கள் தொகையை பொறுத்துள்ளது என்றும் கூறி உள்ளது. அவுஸ்திரேலியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்ட ஒரு காலத்தில், தங்கள் நாட்டினர் `தாய்க்கு ஒன்று, தந்தைக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று' என்று மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டால் போதும் என்று அவுஸ்திரேலிய பொருளியலாளர் பீற்றர் காஸ்டேலோ வலியுறுத்தினார். ஆனால், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட புதுக் கணக்கெடுப்பு மக்கள் தொகை எண்ணிக்கையை குறைவாக காட்டுவதை உணர்ந்த அவர் தற்போது அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தன் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகளை சீர்திருத்த பாதுகாப்புச் சபையே தடையாகவுள்ளது * இந்தியா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளை சீர்திருத்தும் திட்டத்துக்கு, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்தான் தடையாக இருக்கின்றன என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால் தான் அது இன்றைய உலகைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால், உலக வரலாறே 1945 ஆம் ஆண்டுடன் முடிந்துபோய்விட்டதைப் போல அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் கருதிக் கொண்டிருக்கின்றன என்றும் இந்தியா விமர்சித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் சீர்திருத்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் த…
-
- 1 reply
- 905 views
-
-
சிறிலங்காவில் செயற்பட்டு வரும் இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்த திருகோணமலை எண்ணெய்க் குதங்களை பறிக்க சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் திருகோணமலை சீனன்குடா எண்ணெய்க்குதங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இந்த எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்குமாறு தற்போது சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜாலிய மெதகமவிற்கு சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தின் போது கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரினால் எழுத்து மூலம் இந்த எண்ணெய்க்குதங்கள் இந்திய நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தன. அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய பெற்றோலியக…
-
- 0 replies
- 823 views
-
-
தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்! இலங்கைத் தமிழர் : · அதிகரித்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட ரூ.35.53 கோடி நிதி ஒதுக்கீடு. · அகதிகள் தற்போது மாதந்தோறும் பெற்று வருகின்ற மத்திய அரசின் நிதியுதவியான ரூ.200 என்பதுடன் தமிழக அரசின் சார்பாக ரூ.200 சேர்த்து ரூ.400 ஆக வழங்கப்படும். · நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. · பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள் இடையே பழனி திருக்கோயில் நிர்வாகத்தால் கம்பிவட ஊர்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட ஆய்வு. · வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி…
-
- 1 reply
- 1k views
-
-
வலுõர்: வேலுõர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி முருகன் வரைந்த படத்திற்கு "இந்திரா காந்தி' தேசிய விருது வழங்கப்படுகிறது.ராஜிவ்காந்த
-
- 1 reply
- 1.5k views
-
-
இயற்கைக்கு முரணாக பசுவுடன் புணர்ந்த இளைஞருக்கு தண்டனை கன்று ஈன்ற பசு ஒன்றுடன் இயற்கைக்கு முரணான விதத்தில் புணர்ந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து மூன்று வருடக் கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது குருநாகல் மேல் நீதிமன்றம். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு பிள்ளையின் தந்தையான ஏ.பி. சுனில் (வயது30) என்பருக்கு குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி டியூடர் தயாரத்ன இந்தத் தண்டனையை விதித்தார். மேற்படி சம்பவத்தைக் கண்டவர் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரினதும், விலங்கு வைத்தியர் சாட்சியத்தின் …
-
- 5 replies
- 1.8k views
-
-
இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் ஐந்தாவது நினைவுதினம். இதனையொட்டி அவரது உருவச்சிலையை அவரது நெருங்கிய நண்பரும் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் இன்று புகழ்பெற்ற மெரினாக்கடற்கரையின் அருகில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திரையுலகமும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர். அப்போது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்புரை. அவன் ஒரு சரித்திரம் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவருக்கு ஒரு நினைவிடமோ, சிலையோ அமைக்கப் படாமல் இருந்தது கண்டு லட்சோப லட்சம் ரசிகர்கள் மனம் வெதும் பினர். இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே சிவாஜிக்கு மணிமண்டபம், சிலை அமைக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
கிண்டல் எழுத்துகளுக்கு முற்றுப்புள்ளி [20 - July - 2006] [Font Size - A - A - A] -மார்வான் மாக்கான் மரிக்கார்- பாங்கொக்,சிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணி ஒருவர் அங்கு வாங்கக் கூடிய பிரபலமான T- சேட்டுகளில் டங்- இன்- சீக் (Tongue- in- Cheek) ஒன்றாகும். அதாவது, செல்வச் செழிப்புள்ள தீவு நாடான சிங்கப்பூர் ஒரு `சொர்க்க பூமி' என்று இந்த வசனம் வர்ணிக்கிறது. இந்த சேர்ட்டின் பின் பக்கத்தில் காரணங்கள் ஆக்கபூர்வமாக பொறிக்கப்பட்டுள்ளன. சூயிங் கம் மிட்டாய்க்கு எதிராக சட்ட விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது அபராதம் வீதிக்கப்படும். மலசலகூடத்தை பயன்படுத்திய பின் தண்ணீரை பீச்சாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட வலியுறுத்தி மலேசியா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது. மலேசிய நாடாளுமன்றில் கடந்த திங்கட்கிழமை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினரான எம்.குலசேகரன் தாக்கல் செய்தார். இருதரப்பினரையும் பேச்சு மேசைக்கு மலேசிய அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இக்கோரிக்கைக்கு மலேசிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்துல் ஹமீத் அளித்த பதில்: இலங்க…
-
- 1 reply
- 948 views
-
-
http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/19.htm :x :evil:
-
- 2 replies
- 1k views
-
-
உண்மையை உலகுக்கு வெளியிடுவதே ஊடக தர்மம்! - தமிழன்பன் (சென்னை) கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டு ஊடகங்கள் குறித்தும் தென்னிலங்கை ஊடகங்கள் குறித்தும் ஈழத்தமிழர் நடத்துகின்ற ஊடகங்கள் பலவற்றில் பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் என்னுடைய கருத்தையும் பதிவு செய்கின்றேன். பெரும்பாலான தென்னிலங்கை ஊடகங்கள் சிங்கள இனவாதிகளால் நடத்தப்படுபவைகள். இலங்கையில் ஊடகத்துறையினர் பலர் உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்கள் என்பதால் சிங்கள இனவாத சக்திகளால் முதலில் கொலை பயமுறுத்தலுக்கு உள்ளாகி, அதையும் மீறிச் செயற்பட்டதால் படுகொலை செய்யப்பட்டதும், பல ஊடக அலுவலகங்கள் மிக மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டதும் செய்திகள் வாயிலாக அனைவரும் அறிந்ததே. சிங்கள அரசும் அதன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தநோசியாவின் யகார்த்தாவின் தென்கடலில் ஏற்பட்ட நில அதிர்வில் உருவாகிய சுனாமியில் இதுரை 86 பேர் கொல்லப்பட்டு 40 பேர் காயப்பட்டு 77 பேர் காணாமல் போய் உள்ளார்கள். இன்று தமிழீழ நேரப்படி 1.39.30 பிற்பகல் எற்பட்ட நில அதிரிவைத்தொடந்து சுனாமி உருவாகியது இவ் நில அதிர்வு 7.7றெக்ரர்; ஆக பதிவாகியது. இவ் அதிர்வு நிலத்துக்கு கீழ் 10கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது இதனைத்தொடர்ந்து குறைந்த அளவுகளில் பல அதிர்வுகள் அடிக்கடி எற்பட்டன இதன் முழுமையான சேதவிபரம் இன்னும் தெரியவில்லைஸ இவ் சுனாமி அலை 500m உட்புகுந்து உள்ளது நன்றி அன்புடன் வெற்றி தகவல் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவில் புளாக்கர்கள் எல்லாம் எழுதமுடியாது இழுத்துபூட்டப்படுகிறது என இணைய வலைப்பூக்களில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள், காரணம் தெரியவில்லையாம் எல்லாமே மேலிடத்து உத்தரவாம் :roll: :roll: :roll: அதுபற்றி செய்தி வந்த வலப்பூக்கள். :wink: http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html http://icarus1972us.blogspot.com/2006/07/b...in-chennai.html http://gragavan.blogspot.com/2006/07/blog-...9163033283.html http://icarus1972us.blogspot.com/2006/07/b.../blog-post.html http://icarus1972us.wordpress.com/ http://eebarathi.blogspot.com/ நம்ம நண்பர் மடிப்பாக்கம் லக்கிலுக்குக்கும் தடை விழுந்திட்டுதாம். :cry: :cry: :cry:
-
- 9 replies
- 1.6k views
-
-
"சுமங்கலி திட்டம்'னு சொல்லிட்டு, எங்க கிராமத்து வயசுப் பொண்ணுகளை புரோக்கர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ஏழ்மையின் காரணமாகப் பெற்றோரும் பொண்ணுகளை வெளியூருக்கு அனுப்புறாங்க. மூணு வருசம் அங்க அடைப்பட்டுக் கிடக்கிற பிள்ளைங்க, கடைசியில் சீக்காகித்தான் திரும்புதுக. இந்த மோசடியான திட்டம் பற்றி, உங்க பத்திரிகையில வெளியிட்டு, அதைத் தடுத்து நிறுத்துங்க..." எனப் பதற்றத்துடன் சொன்னார்கள், நம்மைத் தொடர்பு கொண்ட நபர்கள். அவர்கள் தந்த தகவல்களை உள்வாங்கிக் கொண்டு களமிறங்கி விசாரித்தபோது, நமக்கு பகீர் என்றிருந்தது. காரணம், அத்தனையும் அக்மார்க் நிஜம். இப்படி வேலைக்கு அனுப்பப்பட்ட ஆறு சிறுமிகளைச் சமீபத்தில் மீட்டு வந்திருக்கிறது 'லிட்டில…
-
- 0 replies
- 1.1k views
-