Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 'ஆதிகேசவன்' பாணி மோசடி-இரு நைஜீரியர்கள் கைது ஏப்ரல் 10, 2007 சென்னை: வெளிநாட்டு நிதியுதவி பெற்றுத் தருவதாக சென்னை ஆதிகேசவன் பாணியில் ஏமாற்றி பணம் பறிக்க முயன்று, பணம் கொடுக்காத ஆத்திரத்தில், கட்டுமான காண்டிராக்டரை கத்தியால் குத்திக் காயப்படுத்திய நைஜீரிய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், பிசினஸ் வளர்ச்சிக்கு வெளிநாட்டிலிருந்து கடனுதவி பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பல கோடி பணத்தை ஸ்வாஹா செய்து இப்போது கைதாகி கம்பி எண்ணி வருகிறார். அதே பாணியில், சென்னையைச் சேர்ந்த சிலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தப்ப முயன்ற இரு நைஜீரிய இளைஞர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர…

  2. ஈராக்கில் 2003 ஆக்கிரமிப்புக்குப் பின்னர் 50க்கும் மேற்பட்டுள்ள உலங்குவானூர்திகளை(கெலிகளை) இழந்துள்ள அமெரிக்காவுக்குப் போட்டியாக பிரித்தானியாவும் தனது கெலிகளை தொலைக்க ஆரம்பித்துள்ளது..! இன்று மட்டும் இரண்டு பூமா வகை கெலிகள் வீழ்ந்து நொருங்கியுள்ளதுடன் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புப் படைவீரர்கள் இருவர் உயிரிழந்து சில காயமடைந்துள்ளர்.

  3. இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன ஜப்பான் கப்பலொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் முசசி என்ற உலகிலேயே மிகப் பெரிய போர் கப்பலை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில் 1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி குறித்த கப்பல் பிலிப்பைன்ஸ் நாடு அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்க விமான படையினர் இந்த கப்பல் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டதில் கப்பல் மூழ்கியதுடன், அதில் இருந்த ஆயிரம் வீரர்கள் உயிரிழந்தனர். அந்த கப்பல் எந்த இடத்தில் மூழ்கியது என்பது கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது. அமெரிக்காவில் புதைபொருள் ஆய்வு நிறுவனம் ஒன்று இந்த கப்பலை கண்டுபிடிக்க தானியங்கி வாகனங்கள் மூலம் பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் ஆய்வு ம…

    • 0 replies
    • 486 views
  4. புளொரிடா. பேன்சகோலா என்ற இடத்தில் ஏழு கடற்படையினரும் நான்கு படையினரும் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று புளொரிடா கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பயிற்சி திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதெனவும் அனைவரும் இறந்து விட்டதாகவும் ஊகிக்கப்படுகின்றது. புதன்கிழமை 11 சேவை உறுப்பினர்களும் இறந்து விட்டதாக தெரிவித்த தண்ணீருக்குள் சிதைவுகள் கடலோரகாவற் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. UH-60 Black Hawk என்ற இராணுவ தேசிய காவலர் படையை சேர்ந்த ஹெலிகொப்படர் செவ்வாய்கிழமை இரவு 8.30-மணியளவில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாலை 2-மணியளவில் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பணிக்குழுக்குள் தெ…

    • 0 replies
    • 432 views
  5. அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் சீரற்ற காலநிலையால் குறித்த பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 ஆம் திகதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறட்சியான காலநிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்று ஆகியவற்றால் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் குறித்த தீயால் 22 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ பரவிவரும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள…

  6. [Wednesday, 2011-09-07 12:42:48] ராஜீவ் காந்தியின் சிலைகளுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் வரலாறு காணாத வகையில் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சட்டசபையில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் இடைக்காலத் …

  7. நைஜீரியாவில் இராணுவத்தினர் போக்கோ ஹராமுக்கு எதிராக நடத்திய ஒரு தாக்குதலின்போது கிளர்ச்சிக்காரர்களின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் கிட்டத்தட்ட முந்நூறு பேரை அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் விசாரித்து வருகின்றன. அவர்கள் யார் என்பதையும் எவ்வளவுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள முனைகிறார்கள். ஓராண்டுக்கு முன் சிபொக் என்ற ஊரிலிருந்து கடத்தப்பட்டிருந்த பள்ளி மாணவிகள் தற்போது மீட்கப்பட்டவர்களில் இல்லை. சிபொக் மாணவிகள் கடத்தல் சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். போக்கோ ஹராமுக்கு எதிராக நைஜீரிய இராணுவம் பெரிய நடவடிக்கை எடுத்துவரும் சம்பீஸா வனப் பகுதியில், செயற்கைக்கோள் வழியாக கண்காணித்த…

    • 0 replies
    • 378 views
  8. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் முறுகல் நிலை நீடிக்கின்றது. Written by Seran - Jul 14, 2007 at 04:23 PM இந்தியா அணுசக்தித்துறையில் மிகவேகமாக முன்னேறி வருகின்றது. அது அணுகுண்டுகளைத்தாயாரிப்பதில

    • 1 reply
    • 785 views
  9. அரக்கோணம் அருகே ரயில்கள் மோதல்-15 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம் புதன்கிழமை, செப்டம்பர் 14, 2011, 0:10 அரக்கோணம்: அரக்கோணம் அருகே இரு ரயில்கள் மோதிக் கொண்டதில் 15 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. அரக்கோணத்தில் இருந்து காட்பாடி சென்ற பயணிகள் ரயில் சித்தேரி ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது மருவத்தூரில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் சென்ற ரயில் நின்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதில் காட்பாடி ரயிலின் இரு பெட்டிகளும் வேலூர் ரயிலின் ஒரு பெட்டியும் நசுங்கி கவிழ்ந்தன. இந்த விபத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது…

  10. 22 JAN, 2024 | 03:02 PM ஜேர்மனியில் பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் அந்­நாட்டுப் பாரா­ளு­மன்­றத்­தினால் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன. புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும். இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது. அதே­வேளை, விசேட ஒருங்­கி­ணைப்பு அடை­வு­மட்­டங்­களை பூர்த்தி செய்வோர் இது­வரை 6 வரு­டங்­களில் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க தகுதி பெற்­றி­ருந்­தனர். இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள…

  11. படத்தின் காப்புரிமை Getty Images துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவும், அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலையும் நிலவும் நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லோவாவில் 18 வயது மாணவர் ஒருவர் கல்லூரிக் கட்டடத்துக்கு வெளியே இறந்து கிடந்தார். அந்த எட்டுபேரில் இவரும் ஒருவர். கடுங்குளிர், மற்றும் பனிச்சூழல் வியாழக்கிழமையும் நிலவும். 250 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த துருவச் சுழல் என்னும் கடுங்குளிர் பருவநிலையை அனுபவிக…

  12. படத்தின் காப்புரிமை Getty Images Image caption அல் - அசாரின் இமாம் ஷேக் அகமத் அல்- தயீப் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணையோடு வாழும் வகையில் பலதார மணம் புரிவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என எகிப்தின் உயர் இஸ்லாமிய அமைப்பான அல்-அசாரின் இமாம் தெரிவித்துள்ளார். சன்னி இஸ்லாமியர்களின் உயர் தலைமையிலுள்ள ஷேக் அகமத் அல்-தயீப் இது குறித்து பேசுகையில், ''குரான் பற்றிய சரியான புரிதலின்மை காரணமாகவே பலதார மணம் புரியும் பழக்கம் வந்திருக்கிறது'' என்றார். தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்த…

  13. (தினத்தந்தி) பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புதுப்புது தகவல்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எத…

    • 2 replies
    • 1.7k views
  14. அமெரிக்காவில் 2.4 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி 1.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2000-2011 காலகட்டத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதில் இந்தியர்கள் 2.4 லட்சம் பேர். இந்தப் பட்டியலில் இந்தியா 7-ம் இடம் வகிக்கிறது. இந்தப் பட்டியலின்படி சீனாவைச் சேர்ந்தவர்கள் 28 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில் சீனர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

    • 1 reply
    • 433 views
  15. 29 NOV, 2024 | 08:30 PM சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அந்த நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவை நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர். சிரியாவின் வடமேற்கில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தாக்குதலை மேற்கொண்டு அலப்போ நகரிற்குள் நுழைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹயாட் டஹ்கிரிர் அல் ஷாம் என்ற அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் இட்லிப்பிலிருந்து இந்த வாரம் தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் அலப்போ நகருக்குள் நுழைந்துள்ளனர் என துருக்கியின் செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நகரின் புறநகர் பகுதிகளில் ஏவுகணைகள் விழுந்து வெடிக்…

  16. மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார். முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பர…

  17. சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள் 8 டிசம்பர் 2024, 03:48 GMT Getty Images அதிபர் வெளியேறியதனை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் 'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன. ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒ…

  18. வெளிநாட்டு குற்றவாளிகளையும், பயங்கரவாத சந்தேக நபர்களையும் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தும் ஏறத்தாழ 900 சந்தர்ப்பங்களை பிரான்ஸில் அமைந்துள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்ற நீதிபதிகள் தடுத்துள்ளதாக பிரிட்டிஷ் ரெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் மத தீவிரவாதியான அபு கட்டாடா பிரிட்டனிலிருந்து ஜோர்டானுக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் “சர்ச்சைக்குரிய 39ஆவது சட்டத்தைப் பாவித்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்ற நீதிபதிகள் இத்திட்டத்தை இடைநிறுத்தினர். இச்சட்டத்தை பாவித்து சோமாலிய குற்றவாளிகளும் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழரும் பிரிட்டனில் தொடர்ந்து தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற …

  19. மனதில் என்ன நினைக்கிறாரோ... அதனை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடும் வழக்கம் உள்ளவர் இயக்குநர் அமீர்! ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்துத் தமிழ் சினிமா உலகத்தினர் ஆவேசமாக உண்ணாவிரதம் நடத்தி முழங்கிக்கொண்டு இருக்கையில், இயக்குநர் அமீர் உண்ணாவிரதம் குறித்து தனது கருத்தாக தொலைக்காட்சிக்காக பேசிய பேச்சு, பலரையும் சலசலக்க வைத்தது. நடிகர் ரஜினிகாந்த்தைக் குறிவைத்து மேடையில் பேசி, சிலர் பரபரப்பு கிளப்பியபோது, அதற்குஆட்சேபணை தெரிவிக்கும் விதமாக அமீர் சொன்ன சில கருத்துக்களும் அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன அமீரை நேரில் சந்தித்தோம். ''உண்ணாவிரதப் போராட்டத்தில் உங்கள் பேச்சு சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறதே... …

    • 6 replies
    • 1.7k views
  20. குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின் அராபிய செய்தி பிரிவு பணிப்பெண்கள் அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது. பிபிசி இதனை அம்பலப்படுத்த…

  21. மேற்க்கு தய்லாந்தில் யானைகள் மேல் அமர்ந்து கொக்கி விளையாட்டு................ வீடியோ பார்க்க..................... http://isooryavidz.blogspot.com/2008/04/po...os-at-play.html

    • 0 replies
    • 798 views
  22. ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடை ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றியுள்ளது. ஹொங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் முதல் சட்டமூலம் ஹொங்கொங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும் பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும். அதே போல் “ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலத்தில் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும். அத்துடன் இந்த சட்டமூலங்கள் ஹொங்கொங்கில் மனித உரிமை மீறல்களுக்கு …

  23. டெல்டா விமான விபத்து; பயணிகளுக்கு $30,000 இழப்பீடு! இந்த வாரம் டொராண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் புதன்கிழமை (19) அறிவித்துள்ளது. எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைப் பெற்றால், அது விமான நிறுவனத்துக்கு மொத்தம் $2.3 மில்லியனுக்கும் மேலான செலவாக அமையும். கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபா…

  24. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி! [Sunday 2016-01-24 09:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது. இதனிடையே ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலை ரஷ்யாவின் போர் விமானங்கள் நடத்தியதாக சிரிய கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.