உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
மாண்ட 'ஆண்டவர்' பிணவறையில் மீண்டார்! தேனி: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர். உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர். அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஜப்பானிய பிரதமர் கான் பதவி விலகினார் வீரகேசரி இணையம் 8/26/2011 4:34:21 PM ஜப்பானிய பிரதமர் நயோடோ கான் பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதம் ஜப்பானைத் தாக்கிய பூமியதிர்ச்சி, சுனாமிப் பேரலைகளுக்குப் பின்னரான நிலைமையைக் கையாள்வதில் முகாமைத்துவக் குறைபாடு உள்ளதாக பல்வேறு தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவர் பதவி விலகியுள்ளார். அந்நாட்டு ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவர் அப்பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளார். இதன்பிரகாரம் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்படுபவர் ப…
-
- 0 replies
- 460 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் வழங்கு பொருட்களை எடுத்துச் சென்ற ஆளற்ற கலன் ஒன்றுடன் ரஷ்ய விண்வெளி பொறியாளர்கள் தொடர்பை இழந்துவிட்டார்கள் . ப்ரோக்ரஸ் என்ற இந்த சரக்குக் கலன் இப்போது மூன்று டன்கள் எடையுள்ள உணவு மற்றும் கருவிகளுடன் கட்டுப்பாடற்ற வகையில் விண்ணில் சுழன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. ரஷ்ய விண்வெளித் திட்ட விஞ்ஞானிகள் இந்த கலனுடன் மீண்டும் தொடர் ஏற்படுத்த இன்று முயல்வார்கள் ஆனால் இந்தக் கலனின் பேட்டரிகள் இன்னும் ஒரு சில தினங்களுக்குள் செயலிழந்துவிடக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பின்னர், இந்தக் கலன் கட்டுப்படுத்த முடியாத வகையில் இறங்கி, பூமியின் சூழலுக்குள் விழுந்து விடு. ஆனால் சர்வதேச விண்வெளி நில…
-
- 2 replies
- 553 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லெனின் மூளையை அவரது மரணத்திற்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அகற்றினர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பதவி, பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? இந்த மர்மம் பல நூற்றாண்டுகளாக தத்துவவாதிகளையும் விஞ்ஞானிகளையும் கவர்ந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து இந்த மர்மத்தை அவிழ்க்க ஆய்வாளர்கள் முயன்றனர். சோவியத் ஒன்றியத்தின் நிறுவனரான லெனின் என்று அழைக்கப்படும் விளாடிமிர் இலிச் உல்யனோவின் மரணம் வாயிலாக ஆய்வாளர்கள் அக்கேள்விக்கு விடை தேட மு…
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக.. எல்லா பயண அனுமதிப் பத்திரங்களோடும் அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்ட.. நாம் தமிழர் கட்சி என்ற ஜனநாயக அமைப்பின் தலைவர் சீமான்.. அமெரிக்க அதிகாரிகளால் நியோர்க் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டமையானது எந்த வகையில் நியாயமானது. இது அமெரிக்காவின் தமிழர் விரோத போக்கையா இனங்காட்டுகிறது. சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் அல்ல. தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பை கொள்கை ரீதியாக ஆதரவளிப்பது எப்படி பயங்கரவாதமாகும். இந்த அடாவடித்தனமான செயலை அமெரிக்கா செய்யக் காரணம் என்ன..???! அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த கூட்டமைப்பினரை சந்திப்பதில் இருந்து கிலாரி விலகிக் கொண்டார…
-
- 13 replies
- 1.7k views
-
-
பட மூலாதாரம்,REUTERS/YVES HERMAN ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு நேற்று (ஜூன் 30) நடைபெற்றது. பிரான்ஸைப் பொறுத்தவரை அதிபர் ஆட்சி முறை நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகளால் தற்போதைய அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் பதவிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. காரணம் இப்போது நடைபெறும் தேர்தல் என்பது பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே. இதன் மூலம் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஆனால் அதிபரும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அத…
-
-
- 8 replies
- 720 views
- 1 follower
-
-
கமலா ஹாரிஸ் இந்தியரா? கறுப்பினத்தவரா? ட்ரம்ப் சர்ச்சை பேச்சு. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கவுள்ள, கமலா ஹாரிஸ் இந்தியரா? இல்லை கறுப்பினத்தவரா? என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எழுப்பியுள்ள கேள்வி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் சிகாகோவில் அண்மையில் இடம்பெற்ற குடியரசு கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ” கமலா ஹாரிஸ் ஆரம்பத்தில் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்ததாகவும், தற்போது தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருவதாகவும் விமர்ச…
-
- 1 reply
- 378 views
-
-
ராசா வழங்கிய 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் இரத்து! - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!! இந்தியாவின் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும் உச்சநீதிமன்றம் இன்று இரத்துச் செய்துள்ளது. ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த 122 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களையும் 9,000 கோடி ரூபாவுக்கு ராசா விற்றதால், நாட்டுக்கு 1.76 அலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உர…
-
- 1 reply
- 377 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ‘யாரும் என்னை அடக்க முடியாது, அட…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொலை-சந்தேக நபர் கைது! அமெரிக்காவின் சிகாகோவில் புகையிரத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் அந்நாட்டு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 378 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்ட…
-
- 0 replies
- 205 views
-
-
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்குமா?: சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்கா இலங்கை அரசு மீது போர்க்குற்றம் செய்ததாக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து ஐநா சபையில் உள்ள அனைத்து நாடுகளின் ஆமோதிப்பை கேட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் இலங்கை அரசு போர்க்குற்றம் செய்திருக்கிறது என்று தங்களுடைய ஆமோதிப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்திய அரசு அமெரிக்கா கொடுத்திருக்கிற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியினரின் குரல்களும் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களின் மூலமாக வழியுறுத் தப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆளும் மன்மோகன்சிங் அர…
-
- 0 replies
- 511 views
-
-
அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகவர்நிலையம் உலகிலேயே மிகப் பிரமாண்டமான உளவு மையம் ஒன்றை தற்போது நிறுவி வருகின்றது எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவினுள்ளும் உலகின் ஏனைய நாடுகளிலும் மின்னூடகங்கள் வழியே நடைபெறும் சகலவிதமான தொலைத் தொடர்பாடல்களும் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவதே இதன் தலையாய பணியாய் இருக்கும் என மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாத இதழான வயர்ட் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்காவின் ப்ளஃப்டேல் பிராந்தியத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலே இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த உளவு மையம் நிறுவப்பட்டுவருகிறது; இங்கு மிகப் பிரமாண்டமான அளவில் மின்னூடகத் தரவுகளைச் சேகரித்து வைக்கக்கூட…
-
- 0 replies
- 560 views
-
-
இந்தோனிசியத் தலைநகரம் போர்னியோவுக்கு மாற்றப்படுகிறது இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தாவிலிருந்து போர்னியோவுக்கு மாற்றப்படும் என்று ஜனாதிபதி ஜொகோ விடோடோ இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். எங்கள் நாட்டின் தலைநகரம் போர்னியோ தீவுக்கு நகரும் என்றும் இந்த இடம் மத்திய கலிமந்தன், கிழக்கு கலிமந்தன் அல்லது தெற்கு கலிமந்தனில் அமையலாம் என்று ஜொகோ விடோடோ தனது ருவிற்றரில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த அனைத்து அம்சங்களும் ஆழமாக ஆய்வு செய்யப்படுகின்றன. இது எங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய சரியான முடிவு. அடுத்த 10, 50, 100 ஆண்டுகளுக்கு தேசத்திற்கும் மாநிலத்திற்கும் இம்முடிவினால் நன்மை கிடைக்கும் என்றும் விடோடோ கூறியுள்ளார். இந்த நடவடிக்கை நீண்ட காலமாகப…
-
- 0 replies
- 479 views
-
-
லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார். இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்…
-
- 0 replies
- 612 views
-
-
அமெரிக்காவில் சிறுவர்கள் ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறார்கள். America's prisons are overflowing, but many who are kept behind bars, are just children. Thousands of youths are tried as adults in the U.S. every year - and some are given life sentences in the country's harshest jails. Many then find themselves becoming victims of sexual violence, and suicide.
-
- 0 replies
- 413 views
-
-
14 ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்குக் கிடைத்த அங்கீகாரம்! இலஞ்ச ஊழல் குறைந்த உலக நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் லஞ்ச ஊழல் விவகாரங்களைக் கண்காணிக்கும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு வெளியிட்டுள்ள கடந்த ஆண்டுக்கான லஞ்ச ஊழல் கண்ணோட்டக் குறியீட்டு அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக இருந்த நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முன்னேறியுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலக அளவில் 180 நாடுகளில் மூன்றாம் இடத்துக்கு சிங்கப்பூர் வந்திருப்பது, 2020…
-
- 0 replies
- 184 views
-
-
பிரான்ஸ் வீதிகளில் படுத்துறங்கும் 700 சிறார்கள் குறித்து அரசுக்கு எச்சரிக்கை! பிரான்ஸின் வீதிகளில் படுத்துறங்கும் சுமார் 700 க்கும் மேற்பட்ட இருப்பிடமற்ற சிறார்கள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மனுஃபெஸ்ரோ (manifesto) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தத் தகவலை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்ஸிக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுத்துறங்குவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களுக்கு முறையான தங்குமிடங்களை அரசாங்கம் துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளி…
-
- 5 replies
- 673 views
-
-
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கைதுசெய்யப்பட்ட, அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் 4 பேரை பிரிட்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் வெள்ளியன்று பிணையில் விடுவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் வாண்ட்ஸ்வொர்த் சிறையிலிருந்தபடியே, வீடியோ தொடர்பு மூலம் நீதிமன்ற விசாரணைகளை அவதானித்தார்கள். அவர்களில் ஒருவரான அருணாசலம் கிருஷாந்தக்குமார் என்ற சாந்தன் மீது, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு திரட்ட கூட்டங்களை ஒழுங்கு செய்தார் என்று ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்புப் பிரிவின் தலைவர் சாந்தன் என்று வர்ணித்து, ஆயுதங்கள் மற்றும் குண்டு தயாரித்தல் ஆகியவற்றுக்கு வேண்டிய பயங்கரவாத த…
-
- 0 replies
- 814 views
-
-
http://www.dinamalar.com/pothunewsdetail.a...ow3&ncat=IN
-
- 1 reply
- 1.4k views
-
-
நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது. நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர். இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்பட…
-
- 1 reply
- 422 views
-
-
23 APR, 2025 | 04:02 PM “புத்தகங்களே மிகவும் அமைதியான மற்றும் நிலையான நண்பர்களாவார்கள். அதேபோல் அவை புத்திசாலியான ஆலோசகர்கள் மற்றும் பொருமையான ஆசிரியர்களும் கூட” - சார்ல்ஸ் வில்லியம் எலியட் (Charles William Eliot) இன்று, சர்வதேச புத்தக தினம் ஆகும். புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், சர்வதேச புத்தக தினம் கொண்டாடப்படுகின்றது. வாசிப்பு ஒன்றே மனிதனை பூரணப்படுத்தும். நல்ல புத்தகங்களே நல்ல நண்பர்கள் என்பார்கள். ஆக…. மனிதன் பலதரப்பட்ட புதிய விடயங்களைக் கற்றுக் கொள்ளவும், தன் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுவது நல்ல புத்தகங்களே என்றால் அது மிகையல்ல. இப்படி, மனிதனின் வாழ்வை ஒழுங்குபடுத்தக்கூடிய புத்தகங்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே சர்வ…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
மசகு எண்ணெய் விலை 139 டொலராக அதிகரிப்பு [08 - June - 2008] மசகெண்ணெய் விலை பரலொன்று 139 டொலராக அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடுகள் மானியங்களை குறைத்துக்கொள்ள வேண்டுமென்றும் சக்தி வளத்துறையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா நேற்று சனிக் கிழமை வலியுறுத்தியிருக்கிறது. அதே சமயம் எண்ணெய் உற்பத்தி நாடுகள் தமது உற்பத்தி அளவு மட்டத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வாஷிங்டன் கூறியுள்ளது. உலக எண்ணெய்விலையானது கேள்விக்கும் நிரம்பலுக்கும் இடையிலான பிரச்சினையாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க சக்தி வளத்துறை அமைச்சர் சாமுவேல் பொட்மான் கூறியுள்ளார். எண்ணெய் உற்பத்தியானது 2005 இலிருந்து நாளொன்றுக்கு 85 மில்லிய…
-
- 0 replies
- 675 views
-
-
ஜப்பானில் மக்கள் தொகை குறைவால் கவலைகள் ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளது என புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் காட்டுகின்றன. ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த 1920ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது இப்போதுதான் பதிவாகியுள்ளது. எனினும் மக்கள்தொகையியல் வல்லுநர்கள் நீண்டகாலமாகவே இந்தப் போக்கு இருக்குமென எதிர்பார்த்திருந்தனர். ஜப்பானில் குறைந்துவரும் பிறப்பு வீதம் மற்றும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வது ஆகியவை குறைந்ததே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும்…
-
- 0 replies
- 349 views
-
-
யேமன் நாட்டில் உள்துறை அமைச்சகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்போது பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர். இராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் சிலரே அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை அறிந்த பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த சண்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். தகுந்த பாதுகாப்பு வலயத்தினைத் தாண்டி தீவிரவாதிகள் எப்படி இராணுவ சீருடையில் உள்துறை அமைச்சக கட்டடத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது http://www.virakesari.lk/news/hea…
-
- 1 reply
- 384 views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற முக்கிய தருணங்களைத் தொகுத்துள்ளோம். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித் திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். சரி... இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் என்ன பிரச்சனை? அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் உருவா…
-
- 0 replies
- 743 views
-