உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் . அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத…
-
- 3 replies
- 1.3k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை. இராணுவ நடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க அரசுத்துறை செயலர் கூறுகிறார். *சீனாவின் தூரமேற்கே சிஞ்சாங் மாகாணத்தில் இருந்து சிறப்பு தகவல்.சீனா அங்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடத்துவதாக கூறுகிறது. *நூலிழையில் உயிர் தப்பிய பிபிசி குழு. இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்தபோது அகப்பட்டுக்கொண்டனர்.
-
- 0 replies
- 278 views
-
-
காங்கோவில் 2 ஐ.நா. நிபுணர்கள் தலை துண்டித்து கொலை ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை சேர்ந்த இரண்டு நிபுணர்கள் காங்கோ நாட்டில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். கசாய்: காங்கோ நாட்டில் அரசுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தீவிரவாத இயக்க தலைவரும், மலைவாழ் மக்கள் தலைவருமான காம்வினா சபு என்பவர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து கசாய் பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்ட 40 போலீசார் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா. அமைதிப்படையை சேர்…
-
- 0 replies
- 244 views
-
-
போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக தகவல் நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போகோ ஹராமினுக்கும் 'ISWAP' என்ற மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடந்த மே 18 ஆம் திகதி மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அபுபக்கர் ஷெகாவ், மேற்கு ஆபிரிக்க மாகாணத்தின் இஸ்லாமிய ஆயுதக் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடம் இருந்த வெடி பொருட்களை வெடிக்கச்செய்து போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மேற…
-
- 0 replies
- 368 views
-
-
"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை அணு ஆயுத தாக்குதல் மூலம் திருப்பி தாக்க தயாராக இருப்பதாக தெரித்துள்ள வட கொரியா, கொரிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS வட கொரியாவை நிறுவிய அதிபர் கிம் இல்-சொங்கின் 105வது பிறந்த நாள் நினைவு கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. வட கொரியாவின் வலிமையை வெளிகாட்டும் வகையில், படைவீரர்கள், பீரங்கிகள் மற்றும் பிற ராணுவ ஆயுதங்கள் அனைத்தும் தலைநகர் பியாங்யோங்கில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்றன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES …
-
- 0 replies
- 496 views
-
-
இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன் நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது சிரமமாகவே உள்ளது. Aupito William Sio “உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒ…
-
- 1 reply
- 269 views
-
-
வாஷிங்டன்: வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செயற்கைக் கோள் புகைப்பட ஆதாரத்தையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அணு உலையில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் புளுட்டோனியத்தை தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்ப்ஸ் ஹாப்கின்ஸ் நவீன சர்வதேச ஆய்வு கழகம் இது குறித்து கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில், அந்த அணு உலையிலிருந்து வெண்ணிறப் புகை வருவது தெரிய வந்தது. எனவே இதன்மூலம் அந்த அணு உலை மீண்டும் இயங்குவதாக கருத முடியும். அல்லது செயல்பாட்டுக்குத் தயாராகி விட்டதாக கருதலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அணு உலையில், 6 கிலோ எடை கொண்ட புளுட்டோனியத்தை ஒரு வருடத…
-
- 0 replies
- 1k views
-
-
தலிபான்கள் மீது... தடை விதிப்பது குறித்து, பரிசீலிக்கலாம்: கனேடிய பிரதமர்! தலிபான்கள் மீது தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் குழு தீவிரவாத குழு என்பதில் ஐயமில்லை. கனடா எப்போதோ தலிபான்களை தீவிரவாதிகளை அறிவித்துவிட்டது. அவர்கள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றனர். அதனால் அவர்கள் மீது பல்வேறு தடைகளை விதிப்பது குறித்து நிச்சயமாக பரிசீலிக்கலாம்’ என கூறினார…
-
- 0 replies
- 228 views
-
-
சேதுக்கால்வாய் உருவாக்கப்படும் கடற்பகுதி சேதுக்கால்வாய் திட்டத்தை தற்போது நிறைவேற்றிவரும் வழியிலேயே நிறைவேற்ற விரும்புவதாக இந்திய நடுவணரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்க சுப்பிரமணியசுவாமிக்கும் தமிழக அரசுக்கும் நவம்பர் வரை அவசகாசம் கொடுத்தது உச்சநீதிமன்றம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் உருவாக்கப்படும் சேதுக்கால்வாய் திட்டம், ஆதம் பாலம் என்று அறிவியலாளர்களாலும், ராமர் பாலம் என்று சில இந்து மத அமைப்புக்களாலும் அழைக்கப்படும் மணல்திட்டுக்களை குறுக்குவெட்டாக கடந்து செல்கிறது. இப்படி சேதுக்கால்வாய் செல்லும் வழியில் தடையாக இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றுவது, ராமர் பாலத்தை அகற்றி அழிப்பதாகவும், இது இந்துக்களின் மத உணர்வுகளை புண…
-
- 0 replies
- 611 views
-
-
தேர்தலில் சாதனை படைத்த பிரிட்டன் பெண் வேட்பாளர்கள்! பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 208 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 'மொத்தமுள்ள 650 இடங்களில், தெரசா மேவின் ஆளுங்கட்சி 315 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 208 …
-
- 1 reply
- 419 views
-
-
ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள் 101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன் குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. இதற்கு எதிராக ஆர்மேனியா மக்கள் உலகளாவிய ரீதியில் போராடிவருகின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதாலோ ஆர்மேனிய இன அழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகாத போரா…
-
- 0 replies
- 341 views
-
-
ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார். முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது. …
-
- 0 replies
- 390 views
-
-
மன்மோகன் சிங்கின் ஆட்சி பிடிக்காதவர்கள் உடனடியாக அமெரிக்காவில் குடியேற விசாவுடன் பாஸ்போர்ட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிக்கிறது. என்ன ஆச்சர்யம்! மறுநாள் காலை அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் வழங்கும் அலுவலக வாசலில் பெரும் வரிசையில் வந்து காத்திருந்தனர். அதில் பெரும் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் என்னவென்றால் வரிசையில் கடைசியாக வந்து நின்றவர் சாட்சாத் மன்மோகன் சிங் அவர்களேதான்! 'என்ன இருந்தாலும் இந்தியநாட்டின் பிரதமராயிற்றே' என்ற மரியாதையில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் வந்து, "பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தாங்கள் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை. முதல் ஆளாக உங்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறோம், உள்ளே வாருங்கள்" என்று மரியாதையோடு கையைப்பிடித்து அழைத்துச் சென்று விசா…
-
- 3 replies
- 721 views
-
-
நியூயார்க்: தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா, அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தேரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதா…
-
- 1 reply
- 788 views
-
-
வாடிகன் நகரில் மேலோங்கும் ஓரினச்சேர்க்கை புனித தலமாய் கருதப்படும் வாடிகன் நகரம் ஓரினச்சேர்க்கைகளால் நிறைந்துள்ளது என முன்னாள் சுவிஸ் காவல் உறுப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் திகதி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பல்லாண்டுகளுக்கு முன்னர் வாடிகனில் காவல் உறுப்பினராக இருந்தபோது பல முறை கார்டினல்களாலும், ஆயர்களாலும்,குருக்களாலும்,பிற அதிகாரிகளாலும் ஓரினச்சேர்க்கைக்கு தூண்டிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 மதகுருக்கள் என்னை தூண்டிவிடும் நோக்கில் சில்மிஷ கோரிக்கைகளை விடுத்து ஓரினச்சேர்கையில் என்னுடன் ஈடுபட முயன்றுள்ளனர். இவ்வகை ஓரினச்சேர்க்கையாளர்கள் மதகுரு என்ற போர்வையில் மக்களை வழிநடத்துபவன் போல் போலி வேடமிட்டு பதவி …
-
- 7 replies
- 984 views
-
-
“வடகொரியாவை நிர்மூலமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை”: ஐ.நா.வில் ட்ரம்ப் கன்னியுரை “சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் முரட்டு ஆட்சியாளர்கள் ஒருபக்கம், பெருகிவரும் பயங்கரவாதம் ஒரு பக்கம் என, உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களைத் தோற்கடிப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியில் அனைத்து நாடுகளும் இணைய வேண்டிய நேரம் இது” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். நூற்று ஐம்பது நாடுகள் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில், தனது முதலாவது ஐ.நா. உரையைச் சற்று முன் நிகழ்த்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது ஜனாதிபதிப் பிரசாரத்தின்போது ஐ.நா.வை ‘செயற்படாத அமைப்பு’ என்று குறை கூறியிருந்…
-
- 7 replies
- 939 views
-
-
முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி : செளதி மன்னர் ஆணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டில் முதல்முறையாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் ஆணையொன்றை செளதி அரேபியா மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP விளம்பரம் இது குறித்த அறிக்கைகளை அரசு அமைச்சரவைகள் 30 நாட்களுக்குள் தயார் செய்யவுள்…
-
- 0 replies
- 334 views
-
-
-
கனடாவில்... சக்திவாய்ந்த புயலால், இறந்தவர்களின் எண்ணிக்கை... 8ஆக உயர்வு! இந்த வார இறுதியில் கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு மாகாணங்களில் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8ஆக உயர்ந்துள்ளது. மேலும், அரை மில்லியன் மக்களுக்கு மின்சாரத்தை மீட்டெடுப்பதற்காக அவசரகால குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த புயல்கள் மற்றும் சூறாவளியினால், ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கின் சில பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. மணிக்கு 132 கிமீ (82 மைல்) வேகத்தில் வீசிய காற்று, மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் என அனைத்தையும் அடியோடு சாய்த்தது.…
-
- 0 replies
- 218 views
-
-
கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/05/01/60-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%…
-
- 0 replies
- 424 views
-
-
இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவில் பாலியல் தொழிலில் தள்ளப்படும் நேபாள பெண்கள், கை கால்களை இராணுவ பணியில் இழந்தும் விளையாட்டில் அசத்தும் உக்ரைன் துணை மருத்துவர் உள்ளிட்ட பல உலகச்செய்திகளை இன்றைய செய்தியறிக்கையில் காணலாம்.
-
- 0 replies
- 196 views
-
-
பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம், வைகோவை ராஜசபா உறுப்பினர் ஆக்கி பாராளுமன்றுக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக தெரிய வருகிறது. போதிய அளவு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், தமிழ் நாட்டுக்கு வெளியே, உள்ள ஓர் மாநிலம் மூலமாக இந்த ஏற்பாடினைப் செய்வதன் மூலம், அனுபவம் மிக்க, வைகோ போன்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப முடியும் என்ற கருத்து உயர் மட்டத்தில் நிலவுவதாக பெயர் குறிக்க விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தாக 'தி ஹிந்து' பத்திரிகை தெரிவிக்கின்றது. வைகோ தோல்வி குறித்து தென் இலங்கை அரசியல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள வேளையில் இச் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தனது மச்சான், சுதிஸ், தோத்து விட்டார் என நொந்து போயிருந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
நாளிதழ்களில் இன்று: பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் விழாவுக்கு நியாய விலைக்கு கடைகள் மூலம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன தமிழகத்தில் உள்ள 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தினத்தந்தியின் முதல் பக்க செய்தி கூறுகிறது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 210 கோடி செலவிடவுள்ளது. தினமணி கால்நடைத் தீவன வழக்கில் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் நிரூபணம் செய்ய…
-
- 0 replies
- 213 views
-
-
BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு பகிர்க ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார் இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைய…
-
- 0 replies
- 284 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் தாம் தவறாக அர்த்தப்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர் ஆஃப்ரிக்க நாடுகள் குறித்து விவரிக்கும் போது `மலவாய்` என்ற பதத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய அவர் நான் முழுவதுமாக தவறாக அர்த்தப்படுத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தாக்குதல் வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு தலைமை தாங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விமான ஓட்டியை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைய…
-
- 0 replies
- 205 views
-