உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
தாய்லாந்தை 70 ஆண்டுகளாக ஆண்ட மன்னர் காலமானார் தாய்லாந்தின் மன்னர் பூமிபொல் அட்டுலியடேஜ், தனது 88ஆவது வயதில், இன்று வியாழக்கிழமை (13) காலமானார் என, தாய்லாந்து அரச மாளிகை அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருந்த மன்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அரச மாளிகையின் அறிவிப்புத் தெரிவித்தது. உலகில் அதிக காலம் அரச பொறுப்பில் காணப்பட்டவர் என்ற பெருமையைக் கொண்ட மன்னர், தனது சகோதரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 18ஆவது வயதில், மன்னராகப் பொறுப்பேற்றார். மன்னர் பூமிபொலின் 64 வயதான மகன், மகா வஜிரலோங்கொன், புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/183…
-
- 2 replies
- 988 views
-
-
மக்களிடம் மன்னிப்பு கோரி.. கண்ணீர், விட்ட வடகொரிய தலைவர் கிம்! குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், நாட்டு மக்களின் முன்னிலையில் கண்ணீர் விடும் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போதே வடகொரிய தலைவர் மன்னிப்பு கோரினார். அத்துடன், நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். பதிலுக்கு இராணுவ வீரர்களும் கண்ணீருடன் மரியாதை செலுத்தினர். இதன்போது உரையாற்றிய தலைவர் கிம், ‘நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது …
-
- 0 replies
- 537 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். *உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல். *காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.
-
- 0 replies
- 302 views
-
-
பிக் மேக் பர்கரை கண்டுபிடித்த ஜிம் டெலிகட்டி 98வது வயதில் காலமானார் மெக் டொனால்ட்ஸின் பிக் மேக் பர்கரை உருவாக்கிய மைக்கேல் ஜிம் டெலிகட்டி தன் 98 வது வயதில் காலமானார். ஜிம் டெலிகட்டி 1967ல், மைக்கெல் ஜிம் டெலிகட்டி, பன்றி இறைச்சி, லெட்டூஸ் கீரை, ஊறுகாய், வெங்காயம் மற்றும் ஒரு தனித்துவமான சாஸ் இவை அனைத்தையும் ஒரே பர்கரில் இருக்கும்படியான ஒரு சூத்திரத்தை கண்டுபிடித்தார். அமெரிக்காவில் ஜிம், மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முதல் வர்த்தக உரிமையை பெற்று 1950களில் பல மெக்டோனால்ட் உணவகங்களை நடத்தினார். ஜிம் டெலிகட்டியை ''மாபெரும்'' மனிதர் என்றும், தங்கள் பிராண்ட் மீது அவர் ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம்…
-
- 0 replies
- 638 views
-
-
காஷ்மீர் மனித உரிமை மீறல் பற்றிய பதிவு போட்டவுடன் பலர் உள் டப்பியில் (inbox) இது பொய்யான தகவல் என்றும் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆதாரம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள்....கஷ்மீர் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்களிலும் பல மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன....வியாபார நோக்கில் இயங்கும் சுயநல ஊடகங்கள் இவைபற்றி செய்திகளை வெளியிடாமல் தவிர்ப்பதால் உண்மைகள் மறைந்துவிடாது....சில வருடங்கள் முன்னர் வெளிவந்த மணிபூர் பற்றிய ஆவணப்படம் இது....மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் எங்குமே நடைபெறவில்லை என்பவர்கள் இதை முழுமையாக பார்க்கவும்....தேசபக்தியை காரணம் காட்டி இதை மூடி மறைக்க சொல்லும் யாருக்கும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி பேசும் தகுதி இல்லை...…
-
- 1 reply
- 529 views
-
-
அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. "கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது. நீருக்கடியிலுள்…
-
- 3 replies
- 522 views
-
-
* பெர்லினில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் துனிஸிய நபரொருவரை ஜெர்மனிய போலிஸார் தேடுகிறார்கள். * மெக்ஸிகோவின் மிகப்பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட தீயில் முப்பத்தியொரு பேராவது மரணம். * ஆழத்தின் ரகசியம் அறிய முயற்சிக்கும் ஆய்வாளர்கள். ஆர்ட்டிக்கின் பழம் பனி, காலநிலை மாற்றம் குறித்த தகவலை தருமா?
-
- 0 replies
- 417 views
-
-
வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் , அமெரிக்க அதிபர் பராக் ஒபமா காயம் அடைந்ததாகவும் Associated Press பெயரால் போலி டுவிட்டர் நேற்று அனுப்பப் பட்டது. இதனால் சில முதலீட்டாளர்கள் 250B USD இழந்தனர். மீண்டும் சில நிமிடங்களில் அந்த இழப்பு மீள பெறப்பட்டது. சில முதலீட்டாளர்கள் 250B USD இனை பெற்றனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
பெங்களூரு: கர்நாடக தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மந்திரம் எடுபடவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளதால், கர்நாடகாவில் மோடி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பை தேடித்தரலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடையே நிலவியது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட கர்நாடக தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா 2 ஆம் இடத்தில் கூட அல்லாமல், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சீதாராமையா, …
-
- 0 replies
- 351 views
-
-
இந்தியாவுக்கு எதிராக 3 முறை பாகிஸ்தான் போர் தொடுத்திருக்கும், ஆனால் பாகிஸ்தான் நாட்டின் அணுசக்தி, அணு ஆயுதத் திறமைகளைக் கண்டு அந்தப் போர்கள் தவிர்க்கப்பட்டன என்று பாகிஸ்தானை ஒரு சக்தி வாய்ந்த அணுசக்தி நாடாக உருவாக்கியதாகக் கூறப்படும் விஞ்ஞானி டாக்டர். சமர் முபாரக்மன்ட் தெரிவித்துள்ளார். இவர் ஒரு மூத்த அணு விஞ்ஞானி ஆவார். பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறியதில் இவரது பங்கு அபரிமிதமானது என்று தெ நேஷன் என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது. நேஷன் பத்திரிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: டாக்டர் முபாரக்மன்ட் சமீபத்தில் தி நேஷன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 3 முறை இந்தியாவுடன் போர் தடுக்கப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு சரிசமமான அணுசக்தி நாடாக இருந்த…
-
- 0 replies
- 1.8k views
-
-
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பமிட்டார் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிற்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் வராமல் தடுத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தை பாதுகாப்புதுறைக்கு வழங்கும் ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜேம்ஸ் மாட்டிஸ், நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் பதவியேற்றார். அதன்போதே குறித்த ஆவணத்தில் அவர் கையொப்பமிட்டுள்ளார். குறித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவின் உள்ளக பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், வெளியிலிருந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதிகளை வரவிடாமல் …
-
- 0 replies
- 392 views
-
-
தலிபான் ஆதிக்கத்தை ஒழிக்க முடியாது: பாகிஸ்தான் 6 மாதத்தில் நிலைகுலைந்து விடும்; அமெரிக்க போர் நிபுணர் கணிப்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டேவிட் கில்குலன். தற்போது அமெரிக்க ராணுவ ஆலோசகராக இருக்கிறார். போர் விஷயங்களை கணிப்பதில் உலக அளவில் புகழ் பெற்றவர். பாகிஸ்தானில் தற்போது நிலவும் நிலைமை குறித்து அவர் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கும் நடவடிக்கை சரியான பலனைதராது. சுவாத்பள்ளத் தாக்கில் இருந்து தலிபான்களை விரட்ட போர் நடக்கிறது. அங்கு 5 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகள் மட்டுமே உள்ளனர். ஆனால் வட மேற்கு பிராந்தியம் முழுவதும் கணக்கிடும் போது லட்சக்கணக்கான தீவிர வாதிகள் உள்ளனர். தலிபான்கள் பஸ்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாரீசில் துப்பாக்கிச்சூடு: ஒரு போலீஸ் அதிகாரி பலி - மர்ம நபர் தற்கொலை பாரீசில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாரீஸ்: பாரீசின் வர்த்தக நகரமான சாம்ப்ஸ்-எலிசிஸில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் மற்றொரு நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே மர்ம நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது…
-
- 2 replies
- 594 views
-
-
வேல்ஸ் இளவரசி... டயானாவின் 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவச்சிலை திறப்பு! கேம்பிரிட்ஜ் மற்றும் சசெக்ஸ் இளவரசர்கள், அவர்களின் தாய் வேல்ஸ் இளவரசி டயானாவின் 60ஆவது பிறந்தநாளில் சிலை ஒன்றை திறந்து வைக்கவுள்ளனர். 2017ஆம் ஆண்டில் சகோதரர்களால் ஆணையிடப்பட்ட இந்த சிலை, கென்சிங்டன் அரண்மனையின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சுங்கன் கார்டனில் நிறுவப்படவுள்ளது. இந்த நேரத்தில், அரண்மனைக்கு வருபவர்களுக்கு ‘அவருடைய வாழ்க்கையையும் அவருடைய மரபையும் பிரதிபலிக்க’ இது உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நிகழ்வின் மூலம், கடந்த ஏப்ரல் மாதம் எடின்பர்க் இளவரசரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். இன்று (வியாழக்கிழ…
-
- 0 replies
- 361 views
-
-
பாட்னா: பீகார் மாநிலம், சாகர்சா அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சிவபக்தர்கள் 37 பேர் விரைவு ரயில் மோதி பலியானார்கள். ஆத்திரம் அடைந்த பயணிகள், ரயிலுக்கு தீ வைத்தனர். பீகார் மாநிலம், சாகர்சா அருகே உள்ள தமாரா ரயில் நிலையத்தில் இன்று காலை உள்ளூர் ரயிலி்ல் இருந்து இறங்கிய சிவபக்தர்கள் குழு ஒன்று, தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, பாட்னாவில் இருந்து வந்த ராஜ்ய ராணி விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் சிவபக்தர்கள் 37 பேர் பலியானார்கள். இதில் பெரும்பான்மையானோர் சம்பவ இடத்திலும், சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள், ராஜ்ய ராணி ரயிலுக்கு தீ வைத்தனர். இதில் இரண்டு பெட்டிகள் எரிந்து நாசம…
-
- 4 replies
- 797 views
-
-
இஸ்ரேலிய மென்பொருளை பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் குறிவைப்பு இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ குழுமத்தால் விற்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி ஆகியோருக்கு சொந்தமான டஜன் கணக்கான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை ஹேக் செய்ய தனியார் இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ் ஸ்பைவேர்' பயன்படுத்தப்பட்டது என்று வொஷிங்டன் போஸ்ட் மற்றும் 16 பிற செய்தி நிறுவனங்கள் நடத்…
-
- 3 replies
- 684 views
- 1 follower
-
-
கொல்கத்தா: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்ததின் பின்னணியில் சீனா இருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை சுற்றிய பகுதிகளை தனியே பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவருகிறது. அண்மையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து கூர்க்காலாந்து போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. ஆனால் மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ இந்தப் போராட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்த நிலையில் அண்மைக்காலமாக கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்திருப்பதன் பின்னணியில் …
-
- 0 replies
- 327 views
-
-
பாரிஸ்: கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சிரியாவில் அரசுப்படைகள் 3 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக சிரியா அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் இடங்களில் இருந்து தடய மாதிரிகளை சேகரித்த ஐ.நா. சபை அதிகாரிகள் அவற்றை ஆய்வகங்களில் பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் சிரியா அரசின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ தாக்குதலில் பங்கேற்பது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் டேவிட்…
-
- 4 replies
- 669 views
-
-
* ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டது குறித்த செய்தித் தொகுப்பு * வட கொரியாவிலிருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க மிகப்பெரும் செலவில் ஏவுணை தடுப்பு திட்டம் ஒன்றை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு * இலங்கையில் சீன முதலீடும் இலங்கை பொருளாதாரத்தின் மீதான அதன் தாக்கம் குறித்தும் ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 313 views
-
-
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையேயான 34 ஆண்டுகால விரிசலுக்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடிய வகையில் இருநாட்டு அதிபர்களும் நியூயார்க் நகரில் சந்தித்துப் பேச உள்ளனர். ஈரான் ரகசிய அணு உலை மூலம் ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மின்சார உற்பத்தி திட்டத்திற்கு மட்டுமே அணு உலைகளை பயன்படுத்துகிறோம் என்பது ஈரானின் பதில். இதை ஏற்க அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மறுக்கின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் நாட்டின் புதிய அதிபராக ஹசன் ரப்பானி பதவி ஏற்ற பிற…
-
- 0 replies
- 441 views
-
-
அமெரிக்க அரசினால் வெளி நாட்டு பயங்கரவாத அமைப்புக்கள் என வகையிடப்பட்ட அமைப்புக்களில் விடுதலைப்புலிகள் அமைப்பும் , குர்திஸ் தொழிலாழர் அமைப்பும் அடங்கும். இவற்றுக்கு தனி நபர்கள் உதவி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த தடையினை நீக்குவதற்கான முயற்சியில் மனித உரிமை சட்டவாளர்கள் முயன்று வரும் வேளை அந்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்த்து முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஒபாமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 1998 ம் ஆண்டு மனித உரிமைகள் சட்ட தரணிகள் இந்த சட்ட திட்டத்தினை ஆரம்பித்தனர். ஆனால் அதன் பின்னர் முன் நாள் அமெரிக்க அதிபர் அமெரிக்காவில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின்னர் மிகவும் இறுக்கமான சட்டமான தேச பாதுகாப்பு சட்டம் U…
-
- 4 replies
- 3.6k views
-
-
நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் பொய்யுரைத்துள்ளார் – மக்ரோன் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விடயம் குறித்து தன்னிடம் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பொய் கூறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க 37 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்த காரணத்தால் பிரான்ஸ் கோபமடைந்துள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு அவுஸ்ரேலியா பேச்சுவார்த்தை நடத்தயது. கடந்த செப்டம்பரில் இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து வேறுபாடு காணப்படும் நிலையில் G20 உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாட…
-
- 0 replies
- 158 views
-
-
பாட்னாவில் பல்வேறு இடங்களில் நடந்த 6 வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாயி னர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் நிலையம் அருகிலும், நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்திலும் குண்டு வெடிப்புகள் தொடர்ச்சி யாக நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் காந்தி மைதானமே பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் இது குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில அரசு அறிக்கை அனுப்ப உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் http:/…
-
- 22 replies
- 1.6k views
-
-
டிமென்ஷியா வராமல் தடுக்க ஒன்பது வழிகள்! புதிய ஆய்வின் ஆச்சரியமூட்டும் முடிவுகள் குறித்த தகவல்கள், மடகாஸ்கரின் நீலமணிக்கல் சுரங்கங்கள் அபூர்வ விலங்கான லீமாரை வேகமாக அழிக்கிறதா? பிபிசியின் நேரடிச் செய்தித் தொகுப்பு!! மற்றும் சிங்கப்பூரின் அரசியலை சித்திரப்படங்கள் மூலம் சொல்லும் ஒருவரின் படைப்பு காமிக்ஸ் உலகின் உயர்ந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 334 views
-
-
தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய பிபிசி தொகுப்பாளரின் அனுபவம் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நான் பிறந்த நாட்டுக்கு முதன்முறையாகத் திரும்புவது எனக்குள் பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். மேற்கத்த…
-
- 1 reply
- 535 views
- 1 follower
-