உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை முடக்கியது எகிப்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் பேரில், அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை எகிப்து அரசாங்கம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவான செய்திகளும், பொய்யான தகவல்களும் இடம்பெறுவதாகக் கூறியே இந்த இணைய தளங்களை எகிப்து அரசு முடக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதிசெய்யவோ, மறுக்கவோ முன்வராத எகிப்து அரசு ஊடகம் ஒன்று, ‘அச்செய்தி உண்மையாகவே இருந்தாற்றான் என்ன? இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்படி இணைய தளங்கள் மீது எகிப்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரியவ…
-
- 0 replies
- 266 views
-
-
அல்- ஹலீல்: கடந்த ஞாயிற்றுக்கிழமை (17.06.2012) அல் ஹலீல் பிராந்தியத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைச் சுற்றிவளைத்துக்கொண்ட யூத ஆக்கிரமிப்பாளர் குழுவொன்று, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. வெறிக்கூச்சல் போட்டபடி இரு பலஸ்தீன் இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கடத்திச் சென்ற ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முனையாமல், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாகவும், காயப்பட்ட மற்றொரு பலஸ்தீனரைக் கைதுசெய்து இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கூலித் தொழிலாளிகளான அன்வர் அப்துல் ரப் (வயது 30), நயீம் அல் நஜ்ஜார் (வயது 32) ஆகிய இருவரின் சடலங்களும்…
-
- 0 replies
- 438 views
-
-
இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு பின்னர் அல்-காய்தாவை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒசாமாவை அதிருப்திக்குள்ளாக்கியது. பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா மறைந்திருந்த பதுங்கிடத்தில் இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்தன. அல்-காய்தாவின் ஆள்சேர்ப்புக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஒசாமாவின் குறிப்புகள் இதனை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதாக இருந்தன. ஆள்சேர்ப்பு நடவடிக்கையை எளிமையானதாக மாற்ற, இஸ்லாமியர்களுக்கு மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு பெயரைத் தேர்வு செய்ய அவர் முயற்சித்துள்ளார். அல்-காய்தா இஸ்லாமிய இயக்கமாக அறியப்படாமல், பயங்கரவாத இயக்கமாக அனைவராலும் அறியப்பட்டது ஒசாமாவின் மிகவும் யோசனைக்குள்ளாக்கியது. இது குறித்த ச…
-
- 0 replies
- 317 views
-
-
ஆபிரிக்க நாடுகளில் அல்-காய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அந்நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட உள்ளன. பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்த்து போரிட்டு வரும் அமெரிக்காவை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் மிரட்டல்கள் கவலையடையச் செய்துள்ளது. எனவே, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பி பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாத தொடக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாக உள்ளன. கென்யா, உகாண்டா போன்ற நாடுகள், சோமாலிய…
-
- 0 replies
- 401 views
-
-
அல்-கொய்தாவின் 2 ஆம் தளபதி ஆப்கான் படையினர் நடத்திய தாக்குதலில் பலி! பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்த அல்கொய்தாவின் மூத்த தலைவரான அபு முஹ்சின் அல் மஸ்ரி உயிரிழந்துள்ளார். அமெரிக்க படையினரால் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் ஆப்கான் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிய தேசிய பாதுகாப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அல்-கொய்தாவின் இரண்டாவது தளபதி என்று நம்பப்படும் எகிப்திய நாட்டைச் சேர்ந்த அல்-மஸ்ரி, ஆப்கானின், மத்திய காஸ்னி மாகாணத்தில் நடந்த ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பணியகம் சனிக்கிழமை தாமதமாக வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் அமெர…
-
- 0 replies
- 400 views
-
-
அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தில் 500 பணி இழப்புகள் 1996-ம் ஆண்டில், கத்தார் அரசாங்கத்தின் நிதியுதவில் நிறுவப்பட்ட அல்-ஜசீரா செய்தி ஊடகத்துக்கு உலகெங்கிலும் 70க்கும் அதிகமான அலுவலகங்கள் உள்ளன சர்வதேச ஊடக நிறுவனமான அல்-ஜசீரா கிட்டத்தட்ட 500 பணியிடங்களை நீக்கவுள்ளது. அல் ஜசீராவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கத்தாரிலேயே அனேகமான பணியிழப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் மற்ற இடங்களிலும் பல பணியிழப்புகள் ஏற்படவுள்ளன. 'ஊழியர்களின் வினைத் திறனை மேலும் அதிகரிப்பதை நோக்காகக் கொண்டே' இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அல் ஜசீரா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக எண்ணெயின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, கத்தார் அரசாங்கம் அல்…
-
- 0 replies
- 408 views
-
-
அல்-ஜசீராவை மூடு: கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை இம்மாதத் தொடக்கத்தில் இருந்து கத்தார் மீது தடை விதித்திருந்த வளைகுடா நாடுகள் கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கின்றன என்பது குறித்து ஒரு பட்டியலை அளித்துள்ளன. 13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது போன்றவை அடங்கும். கத்தாருக்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டது. சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்…
-
- 0 replies
- 398 views
-
-
அல்-நூர் மசூதி திறக்கப்பட்டது: கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் நியூஸிலாந்து அல்-நூர் மசூதி மீண்டும் இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது. நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி கடந்த 15 ஆம் திகதி வழமைக்கு மாறான சம்பவத்தால் அமைதியிழந்திருந்தது. வெள்ளிக்கிழமை விசேட தொழுகைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் அவுஸ்திரேலியா நபர் ஒருவர் வெறித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் உயிரை இழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அல்-நூர் மசூதி மீண்டும் இன்று திறக்கப்படுகிறது. “தாக்குதலுக்கு பின்னரான முதல் பிரார்த்தனைகளுக்காக நாம் இன்று ஒன்றுகூடியு…
-
- 0 replies
- 553 views
-
-
அல்-ஹைய்தாவின் அச்சுறுத்தலை 2001 இல் அறிந்திருந்த பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவு அல்ஹய்தாவினால் அமெரிக்காவிற்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து பிரான்ஸின் புலனாய்வு பிரிவினர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஒன்பது முறை எச்சரித்திருந்ததாகவும் விமானமொன்று கடத்தப்படலாம் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்ததாகவும் பிரான்ஸின்` லீ மொன்டே' குறிப்பிட்டுள்ளது. அல்ஹய்தாவிற்குள் ஊடுருவிய வெளிநாட்டு புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்பதை நிரூபிப்பதற்கான 328 பக்க ஆவணம் தன்னிடமுள்ளதாக குறிப்பிட்ட செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜனவரி 2001 இல் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயல்வது குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டு இது…
-
- 0 replies
- 688 views
-
-
ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட 18 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …
-
- 1 reply
- 391 views
-
-
அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு! கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார். அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது. இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்ற…
-
- 0 replies
- 393 views
-
-
அல்குவைதாவின் தாக்குதல் பட்டியலில் கனேடியர்கள்! அல்குவைதா அமைப்போடு தொடர்புடைய இணையத்தளமொன்று 100 க்கும் மேற்பட்ட கனடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அராபியர்களை இலக்குவைத்து அவர்களைப் பட்டியலிட்டுள்ளது. முஸ்லிம்களை மதம்மாற்றும் முயற்சியில் ஈடுபடுத்துவதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டு அதிலிருக்கும் சிலரோடு கனடா புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஷுமுக் அல் இஸ்லாம் என்ற இணையத்தளமே இந்த நபர்களின் பெயர்,படம்,விலாசம்,தொலைபேசி இலக்கம், என்பனவற்றை வெளியிட்டுள்ளது. இவர்களுள் அநேகமானவர்கள் எகிப்திய கனேடியர்கள், வெளிப்படையாகவே இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவ…
-
- 2 replies
- 584 views
-
-
அண்மையில் அமெரிக்காவின் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில்உள்ள விமான நிலையங்கள் கடுமையானபாதுகாப்பு வளையங்களுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னிலையில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டுதொலைக்காட்சியில் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காமீது தாக்குதல் நடத்துவதற்கு அல்கெய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது அல்கெய்தா அமைப்பு அமெரிக்காவிற்கு பலவித்த்தில் அச்சுறுத்தலாக உள்ளார்கள். உலகில் எந்த மூலையில் அல்கெய்தா அமைப்பு இருக்கின்றதோ அவர்களை தேடிக்கண்டுபிடித்து அழிப்போம் மக்களை அல்கெய்தாவின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ந…
-
- 0 replies
- 659 views
-
-
அல்கைடா சி.ஐ.ஏயால் உருவாக்கப்பட்டதாம் அதே வேளை லிபிய போராளிகள் (?) அமெரிக்காவின் வேர்ஜினியாவில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாம்.
-
- 2 replies
- 805 views
-
-
அல்கைடா தலைவர் ஐமான் அல் சவாஹிரியைக் கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஒசாமாவுக்குப் பின்னர் அல் கைடாவினை வழிநடத்திச் சென்ற அதன் தலைவர் கலாநிதி ஐமான் அல் சவாஹிரியை ட்ரோன் தாக்குதல் ஒன்றின்மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. நேற்று ஆப்கானிஸ்த்தான் தலைநகர்காபூலில் உள்ள மறைவிடம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அல்கைடா தலைவர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இத்தாக்குதலை கண்டித்திருக்கும் தலிபான்கள், இது சர்வதேச நியமங்களை மீறி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் என்றும் கூறியிருக்கிறது. https://edition.cnn.com/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html
-
- 29 replies
- 2.7k views
- 1 follower
-
-
அல்கைடா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார் பாகிஸ்தானிலுள்ள முக்கிய தீவிரவாதக் குழு உறுப்பினர் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் இயாஸ் கஷ்மிரி என்ற தீவிரவாதக் குழு உறுப்பினர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் உட்பட மேலும் ஒன்பது பேரும் நேற்றிரவு தெற்கு வஸிரிஸ்தான் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மும்பாயில் நடத்தப்பட்டதைப் போன்ற தாக்குதல்களை வடிவமைக்கும் குழுவிற்கு இயாஸ் தலைமை தாங்கியதாகவும், அல்கைடா அமைப்பல் முக்கிய தளபதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ப…
-
- 0 replies
- 563 views
-
-
அல்கைதாவின் 'இந்திய கிளை உறுப்பினர்கள்' இருவர் கைது அல்கைதா இயக்கத்தின் இந்தியக் கிளையின் இரண்டு முக்கிய உறுப்பினர்களை கைதுசெய்துள்ளதாக டில்லி பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் கைதுகள் மூலம் அந்தப் பிராந்தியத்தில் அல்கைதாவின் நடவடிக்கைகளுக்கு கணிசமான பின்னடைவுகள் ஏற்படும் என்று டில்லியின் காவல்துறை கூறுகின்றது. கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முஹம்மட் ஆசிஃப் என்றும் அவர் இந்திய துணைக் கண்டத்தில் அல்கைதாவின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தான்- இந்திய எல்லையில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்களில் பயிற்சிபெற்றவர் என்றும் செய்திகள் கூறுகின்றன. அல்கைதா இயக்கத்தின் உலகளாவிய தலைவர், இந்தியாவில் ஜிஹாதிய போருக்கு அழைப்புவிடுத்த…
-
- 0 replies
- 480 views
-
-
அல்கொய்தாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்தும் - ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை வீரகேசரி நாளேடு 2ஃ10ஃ2009 8:13:30 Pஆ - அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதை அனுமதிக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் தடவையாக திங்கட்கிழமை பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பராக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். ""அல் கொய்தா போராளிகள் செயற்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது. ஆப்கானிஸ்தானிய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மலைப்பிராந்தியங்கள் அல்கொய்தாவின் புகலிடமாக மாறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது'' என ஒபாமா …
-
- 0 replies
- 684 views
-
-
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா முஜாகிதீன் இயக்க தலைவர் யாசின் பட்கல் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது. புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல் மற்றும் அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய நேபாள எல்லையில் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட வந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தற்போது அல்கொய்தா இயக்கத்தை வழிநடத்த வரும் ஜவாகிரியுடன் யாசின் பட்கல் தொடர்பில் இருந்தது வந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அமைதியை குலைக்க அல்கொய்தாவின் உதவியை யாசின் பட்கல் நாடியதை…
-
- 0 replies
- 258 views
-
-
Published By: RAJEEBAN 08 JAN, 2024 | 11:26 AM இஸ்ரேலின்தாக்குதலில் ஏற்கனவே தனது குடும்பத்தவர்கள் பலரையும்இழந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் வயல்டாவ்டோ இஸ்ரேலின் தாக்குதலில் பத்திரிகையாளரான தனது மகனை இழந்துள்ளார். காசாவின் கான்யூனிசில் இடம்பெற்ற இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் வயல்டாவ்டோவின் மகன் ஹம்சாவும் ( 27) முஸ்தபா டுரையா என்ற ஊடகவியலாளரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவின் தென்மேற்கில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள அல் மவசிக்கு அருகில்உள்ள பகுதியை நோக்கிவாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவீச்சினால் இடம்ப…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது 35 Views பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். தமது காலனீய காலத்துக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பிரெஞ்சு அரசின் கொள்கையில் இது மிக அண்மைக்கால முயற்சியாகும். அலி பூமென்ஜெல்லின் (Ali Boumendjel) நான்கு பேரப்பிள்ளைகளைச் சந்தித்த மக்ரோன், குறிப்பிட்ட சட்டத்தரணி தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டு 1957ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி அல…
-
- 1 reply
- 669 views
-
-
அல்ஜீரிய படையினரின் அதிரடித் தாக்குதிலில் 600 பணயக் கைதிகள் மீட்பு-34 பேர் பலி Published on January 17, 2013-8:51 pm · No Comments அல்ஜீரியாவில் அல்கைதாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஒன்றினால் வெளிநாட்டவர் உட்பட பலர் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்படடிருந்த பிரிட்டிஸ் பெற்றோலியம் நிறுவனத்தின் மீது அல்ஜீரிய படைகள் இன்று காலை அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளன. ஏற்கனவே அந்த வாளாகத்தினுள் 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக் கைதிகளான பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் 600 பேர் இந்த இராணுவ நடடிவடிக்கையில் மீட்கப்பட்டிருப்பதாகவும் அல்ஜீரியாவின் தேசிய ஊடக நிறுவனத்தை மேற்கோள் காட்டி பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
- 2 replies
- 938 views
-
-
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது. ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140724_algeria.shtml
-
- 5 replies
- 721 views
-
-
இஸ்லாமிய தீவிரவாதிகள் வெளிநாட்டு பணயக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் சஹாரா பாலைவனத்தில் உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது அல்ஜீரிய இராணுவத்தின் சிறப்புப் படையினர் இறுதித் தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இராணுவம் 11 தீவிரவாதிகளைக் கொன்றதாகவும், ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் 7 பணயக் கைதிகளைக் கொன்றுவிட்டதாகவும் அல்ஜீரிய அதிகாரிகளை ஆதாரம் காட்டி சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், இந்தச் தகவல்களை சுதந்திரமாக உறுதி செய்ய முடியவில்லை. இதேவேளை, தீவிரவாதிகளோ அல்லது பணயக் கைதிகளோ எவராவது உயிருடன் இருக்கிறார்களா என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால் முன்னதாக, தான் பிடித்து வைத்திருக்கும் 7 கைதிகளை விடுவிக்க முயற்சிகள் ஏதும் மே…
-
- 1 reply
- 456 views
-
-
அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி…
-
- 0 replies
- 357 views
-