Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. துருக்கி – சிரியா நிலநடுக்க மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்! துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் துருக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617 ஆகவும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 3,500 ஐயும் தாண்டியுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் மீட்பு பணியாள…

  2. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ…

  3. சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு அமல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 34 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் விதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலாகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதனால், வர்த்தகப் போரில் பதிலடி கொடுப்பதற்கான காரணம் ஆசியாவில் உருவாகுவது உறுதியாகியுள்ளது. …

  4. பாம்பன் கடலில் அதிசய நட்சத்திர மீன் * மீனவர்கள் வலையில் சிக்கியது ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் மீனவர் வலையில் அதிசய நட்சத்திர மீன் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவர் தனது படகில் மீனவர்கள் ஸ்டாலின், பாக்கியராஜ் ஆகியோருடன் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அரியவகை கடல் தாமரை ( சீ அனிமூன் )மற்றும் நட்சத்திர மீன் (ஸ்டார் பிஷ் )ஒன்றும் உயிருடன் வலையில் சிக்கியது. மீன்களுடன் சிக்கிய நட்சத்திர மீன் மற்றும் கடல் தாமரையை கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் மத்திய கடல்வாழ் உயிரின அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். நட்சத்திர மீனுக்கு ஐந்து வால்கள் இருக்கு…

  5. கடலூர்: கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி, பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி …

  6. 400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்…

  7. லண்டன் வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இப்போது அறிவித்துள்ளனர். எனினும் ஹீத்ரோ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவைகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பாதிக்கப்படும் எனவும் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகின்றன. சில விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றிவிடப்படுகின்றன. முந்தையச் செய்தி கணினி கோளாறு காரணமாக லண்டன் வான்பரப்பு உள்ளூர் நேரம் இரவு 7 மணி வரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். லண்டன் வான்பரப்பு கணிணி கோளாறு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுஐரோப்பாவில் விமானப் போக்குவரத்தின் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த யூரோ கண்ட்ரோல் இணையத்தளத்தில் இந்…

  8. இந்தோனீஷியாவின் சுற்றுலா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சீனாவின் தொலைதூர கிராமத்தில் காந்திய வழியில் வாழும் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. பொம்மை துப்பாக்கியுடன் சென்ற இருவர், துரத்திய சென்னை போலீஸ் - சுவாரஸ்ய சம்பவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். கேரள பெரு வெள்ளம், காவிரியில் கரை புரண்டு ஓடும் நீர் குறித்த செய்திதான் அனைத்து தமிழக பதிப்பு நாளிதழ்களிலும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்ப…

  10. கொரிய தீபகற்பத்தின் பதற்றம் தணிகிறது: கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன! கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு, வட மற்றும் தென்கொரிய எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. இருநாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய தமது எல்லையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை தென்கொரிய படையினர் அகற்றி வருகின்றனர். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், கொரிய நாடுகளுக்கிடையில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Joint Security Area எனப்படும் இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் த…

  11. மக்ரோனின் சீர்திருத்தங்களை எதிர்த்து பாரிஸ் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் திட்டமிடப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகர வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமரசத்திற்கு இணங்காத CGT போன்ற தொழிலாளர் சங்கங்களின் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையில் பிரான்ஸ் முழுவதும் ஆதரவலைகளை தேடும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களை வியாபிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மக்ரோனின், பிரான்ஸ் பொது சேவை மற்றும் வரவு-செலவுத் திட்ட சீர்திருத்தங்கள், மருத்துவமனை, பல்கலைக்க…

    • 0 replies
    • 826 views
  12. தமிழகத்தின் அடுத்த முதல்வர் கனிமொழி என்று திமுக பேச்சாளர் வாகை முத்தழகன் பேசியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில், தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீதசபாவில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யாதது தான். மாவட்டத்தில் குறிப்பிட்ட ஜாதியினருக்குத் தான் கட்சியில் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்கள் இன்றைக்கு நெல்லை மாவட்ட அமைச்சரான இசக்கி சுப்பையாவின் பின்னால் அணிவகுத்து செல்கிறார்கள…

    • 0 replies
    • 789 views
  13. தாக்க வரும் எதிரியின் கரத்தை இராணுவம் துண்டித்து வீசும் என்கிறார் ஈரான் ஜனாதிபதி தாக்க வரும் எதிரிகளின் கைகளை தங்கள் நாட்டு இராணுவத்தினர் துண்டித்து எறிவார்கள் என ஈரான் நாட்டு ஜனாதிபதி முஹமது அகமதிநிஜாத் எச்சரித்துள்ளார். ஈரான் நாட்டு இராணுவ தினம், புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி முஹமது அஹமதிநிஜாத் பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு; நமது இராணுவத்தின் வசம் உள்ள திட்டங்களும், ஆயுதங்களும் நாட்டின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், இவை அனைத்தும் எதிரிகளின் கைகளை துண்டிக்க தயாராக உள்ளன. நீங்கள் (இராணுவத்தினர்) அனைவரும் ஒவ்வொரு தினமும் மிகுந்த விழிப்புணர்வோடும், எச்சரிக்கையாகவும் இருப்பது …

  14. வடஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைகடலை கடக்க முயன்ற 300 ற்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய அளவிலான துயரம் நிகழ்ந்துள்ளதாக யுன்எச்சீஆர் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை தேடிப்புறப்;படுபவர்களுக்கு கடலில் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வடஆபிரிக்காவிலிருந்து நான்கு சிறிய படகுகளில் பயணம் செய்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இத்தாலிய கடலோர காவற்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓன்பது பேரை மீட்டுள்ளனர். இவர்கள் 100ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த இரு படகுகளில் இருந்தாக தெரிவித்துள்ளனர். இரு நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி இவர்கள் அவதியுற்றுள்ளனர். குறிப்ப…

  15. சவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு! சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசன் முகம்மது பின் சல்மானை அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன் சவுதியின் தலைநகர் றியாதில் சந்தித்துள்ளார். சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை குவித்து கொண்டிருக்கும் தருணத்தில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன், சவுதி இளவரசரைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புலிலுள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோக்கி, அலுவலகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா மீது துருக்கி குற்றஞ் சுமத்தியிருந்தது…

  16. மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்! Posted by இரும்பொறை on 15/07/2011 in உலகம், செய்தி மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின. ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம்.

கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள்.

வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல…

  17. ஹட்சன்: அமெரிக்காவில் குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து குழந்தையை கொடுமைப்படுத்திய தந்தையை போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோஷ்வா மால்டின். 19 வயதாகும் மால்டினுக்கு பிறந்து 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. தனது குடும்பத்தினருடன் டெக்ஸாஸ் மாநிலம், கால்வெஸ்டன் நகருக்கு சுற்றுலா வந்திருந்தார் மால்டின். வந்த இடத்தில் தான் தங்கியிருந்த ஹோட்டலில், தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவன் அடுப்பில் வைத்து சித்திரவதை செய்துள்ளார் மால்டின். இதுதொடர்பாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில் மால்டின் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மால்டின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதி…

    • 5 replies
    • 1.7k views
  18. பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு இயக்கமான ஜுன்டாலா செய்ததாக பின்னர் அறிக்கை வெளியிட்டது.பாகிஸதானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது டாக்டர் ஷகில் அப்ரிடி என்பவர் அப்பகுதியில் போலி தடுப்பு ஊசி மருத்துவ முகாம்களை மேற்கொண்டு, பின்லேடன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பகுதியை அமெரிக்க அதிரடி படையினர் …

  19. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது. மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி …

    • 0 replies
    • 173 views
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய அமைச்சரின் இந்த அறிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்ரேலின் வலதுசாரிக் கட்சி உறுப்பினரும் இஸ்ரேலிய அமைச்சருமான அமிச்சாய் எலியாஹு, ஹமாஸுக்கு எதிராக 'காஸா பகுதியில் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். எலியாஹு, இஸ்ரேல் அரசின் பாரம்பரியத் துறை அமைச்சர். அவர் ஓட்ஸ்மா யெஹூதித் (யூத அதிகாரம்) எனும் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது இந்தக் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரி…

  21. அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார். அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவின் 803-ம் ஆண்டு உருஸ் விழா விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், உருஸ் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த தர்காவில் உள்ள கோபுரத்தின் மீது போர்த்துவதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார். அந்தப் போர்வையை அஜ்மீர் தர்காவின் தலைமை காதிமிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தலைமைத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஒப்படைத்தார். பிரசித்தி பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவுக்கு தெற்காசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் போர்வைகளை காணிக்கைய…

    • 0 replies
    • 244 views
  22. அமெரிக்காவை எச்சரிக்கவே சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது – வடகொரியா. அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிம் ஜொங் உன் மேற்பார்வையில் மிக சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்ததாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் எங்கும் சென்றடையும் திறன் கொண்ட இந்த இந்த ஏவுகணை பரிசோதனை நேற்று இடம்பெற்றதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்திருந்தது. https://athavannews.com/2023/1363660

  23. இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் திருச்சி, ஜூலை.15-: இலங்கை தமிழர் பிரச்சினையில், அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திருச்சி, லால்குடி மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை, போர் தீவிரமாகும் சூழ்நிலையால் அங்குஉள்ள தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. சிலர் காடுகளுக்கு சென்று உணவு இல்லாமல் தவ…

  24. பட மூலாதாரம்,TOMAS TERMOTE படக்குறிப்பு, முதல் உலகப்போரில் UC கப்பல் மற்றும் அதன் குழு உறுப்பினர்கள் 27 மார்ச் 2024, 10:51 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரின் போது காணாமல் போன ஜெர்மன் யு-படகு (நீர்மூழ்கிக் கப்பல்) இருக்கும் இடத்தை டைவர்ஸ் (ஆழ்கடல் நீச்சல் வீரர்கள்) கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அதன் மர்மம் விலகியுள்ளது. 1917 ஆம் ஆண்டில், ஆங்கிலக் கால்வாயில் ராயல் கடற்படையின் 'லேடி ஆலிவ்' கப்பலுக்கும், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் UC-18 க்கும் இடையில் நடைபெற்ற போரின் போது இந்த UC-18 நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது. அதோடு சேர்த்து …

  25. நியூசிலாந்தின் சவுத் ஐலாண்ட், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகள் ஆகியவற்றில் ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் எனப்படும் அற்புதமான ஆகாயக் காட்சி தென்பட்டது. இந்த அபூர்வ ஒளிக் காட்சியைப் படம் எடுப்பதற்காக கடும் குளிரையும் மீறி நியூசிலாந்துக்காரர்கள் துருவப் பகுதியில் குவிந்தனர். பூமியின் துருவப் பகுதிகளில் சூரிய ஒளித் துணுக்குகளால் ஏற்படும் அபூர்வமான ஒளிக் காட்சியே ஆரோரா என்று அழைக்கப்படுகிறது. தென்துருவப் பகுதியில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா ஆஸ்த்ரேலிஸ் என்றும் வட துருவத்தில் தோன்றும் ஒளிக்காட்சி ஆரோரா போராலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. தென்துருவத்தில் தோன்றிய இந்த ஒளிக்கட்சி, வழக்காகத் தோன்றுவதைவிட சற்று வடக்கில் தோன்றியது. வியாழக்கிழமையன்று இரவில் மீண்டும் இந்தக் காட்சி தோன்றக்கூடும் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.