Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இணைய தள தாக்குதல்களை ஒரு அரசாங்கம் நாகரிகமாகக் கொள்ள வேண்டும் எதிரிகளுக்கு எதிராக இணைய தள தாக்குதல்களை நடத்துவது பெரிய இழப்புக்களை ஏற்படுத்தாத ஒன்று என்பதால் அதனை ஒரு அரசாங்கம் ஒரு நாகரிகமான தெரிவாகக் கொள்ள முடியும் என்று பிரிட்டிஷ் இராணுவ படைகளுக்கான அமைச்சர் நிக் ஹார்வி கூறியுள்ளார். சிங்கப்பூரில் வருடாந்த பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பேசிய அவர், எதிர்கால மோதல்களில் இத்தகைய இணையத் தாக்குதல்களின் பங்கு அதிகரிக்காலாம் என்றும், இராணுவத்துக்கு மாத்திரமல்லாமல் மொத்த சமூகத்துக்கே அதன் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். கனதியான பாரம்பரிய படைகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது இணையத் தாக்குதல்கள் மூலம் குறைந்த செலவில் தாக்குதல்களை நடத்த முட…

    • 0 replies
    • 520 views
  2. இணைய தளங்களுக்கு தணிக்கை: அமெரிக்கா சீனா உறவை பாதிக்கும் சீனாவில் இணைய தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தணிக்கை விவகாரத்தை அமெரிக்கா விமர்சிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கச் செய்துவிடும் என்று சீனா கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இணைய தேடல் நிறுவனமான கூகுளின் சீன சேவைகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைகளை விதித்துள்ளது. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் மற்றும் பிளாக்குகள் போன்றவற்றை சீன அரசு தடை செய்துள்ளதோடு, அயல்நாட்டு இணைய தளங்களை பார்க்கவும் தடை விதித்துள்ளது. அத்துடன் கூகுள் மூலமான இ மெயில்களை 'ஹேக்' செய்யவும் சீனா முயன்றதாக குற்றச்சாற்று எழுந்தது. இதனால் தாங்கள் சீனாவிலிருந்து வெளியேற …

    • 0 replies
    • 364 views
  3. இணையதள தொழில்நுட்ப வசதி காரணமாக, இன்றைய இளைய தலைமுறையினரின் மூளை, மழுங்கடிக்கப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும், அறிந்து கொள்வதற்கு, அவர்களின் கைகள், "கூகுளை' தான், நாடுகின்றன. இதனால், இன்றைய தலைமுறையினர், சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மாறி வருகின்றனர்,' என, பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், இணையதளங்களுக்கு அடிமையாகிப் போனவர்களின், செவிட்டில் அறைவது போல், கூறியுள்ளார். பிரபல பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர், டிரேவர் பெய்லீஸ். பேட்டரி, மின்சாரம் இல்லாமல், கைகளால் சுற்றி ரேடியோவை இயக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர். "டெய்லி மெயில்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு, அவர் அளித்துள்ள பேட்டி: இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு, எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. எ…

  4. நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். “அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”. இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என…

    • 0 replies
    • 1.8k views
  5. இணையதளம் மூலம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து சர்வதேச சமூகம் கவலை இணையதளம் மூலமாக சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருட்கள் விற்கப்படுவது அதிகரிப்பது தொடர்பாக, தற்போது ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்று வரும் சர்வதேச போதைப் பொருள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இணைய பக்கங்கள் மற்றும் மின் அஞ்சல் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலமாக, போதைப் பொருட்களை விற்பவர்கள், தங்கள் பொருட்களை வாங்கக் கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைந்தது 100 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின், போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது இணைய தளம் மூலமாக புத்தகங்கள், குறுந்தகடுகள் போன்றவற்றை கட…

  6. இணையத் தளங்களைத் தணிக்கை செய்யும் கடும்போக்கு ஆட்சியாளர் தகவல் புரட்சியில், இணையத் தளங்கள் அண்மைக் காலங்களின் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன. ஆனால் அடக்குமுறை ஆட்சியாளர்களின் நாடுகளில் இவை ஆட்சிக்கு எதிரான நிலைமைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக தணிக்கைக்கும் மற்றும் தடைக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய நாடுகளில் இவை எவ்வாறு தணிக்கை செய்யப்படுகின்றன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற விடயங்கள் இன்று உலகெங்கும் பெரிதாக அலசப்படுகின்றன. வடகொரியா, சீனா, இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உட்பட, குறைந்தது கண்டத்துக்கு ஒரு நாடாவது இவ்வாறு இணையத்தை தணிக்கை செய்வதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் தகவல் தளங்களில், தகவல்களைச் சேர்த்ததற்கா…

    • 1 reply
    • 875 views
  7. நூற்று ஐம்பது நாடுகளில் கணினிகளை பாதித்த கடந்த வார இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருந்திருக்கலாம் என்று சில கணினி பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். கடந்த காலங்களில் வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கணினி புரோகிராம்கள் இந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டிருப்பது சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. BBC

  8. இணையத்தள வதந்திகளை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம் – சுவிஸ் அரசு எச்சரிக்கை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் பேர்ன்னுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள், ஆரே நதியில் நீந்தும்போது அதன் நீரை அருந்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது. அண்மையில் சுவிட்ஸர்லாந்தின் சுற்றுலா இணையதளங்களில், பேர்னிலுள்ள ஆரே (Aare) நதியின் தண்ணீரை அப்படியே அருந்தலாம் என்றும், அது மிகவும் பாதுகாப்பானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இணைய தகவல்களை நம்பி ஆற்று நீரை அருந்த வேண்டாம், அப்படி அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆரே (Aare) நதியில் தண்ணீர் மிக தூய்மையானதுதான், ஆனால் குடிக்கும் அளவிற்கு அது உகந்ததல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்…

  9. [21 - February - 2007] [Font Size - A - A - A] அண்மைக்காலங்களில் உலகமயமாக்கப்பட்டுள்ள உலகளாவிய சூழலில் வர்த்தக அபிவிருத்தியில் இலத்திரனியல் நன்மைகள் பற்றி விரிவாகப் பேசப்படுகின்றது. உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்குத் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சர்வதேச கணினி வலைப்பின்னல்களைப் பயன்படுத்துவதால் வறுமையைக் குறைக்க முடியும். செல்வந்த நாடுகளுக்கும் வறிய நாடுகளுக்கும் இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க முடியும் எனச் செல்வந்த நாடுகளின் தொலைத் தொடர்புக் கம்பனிகள் பிரசாரம் செய்கின்றன. உலக வங்கி, யுனெஸ்கோ, யு.எஸ்.எய்ட் (க்குஅஐஈ) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இக்கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுக…

  10. டெல்லி: இணைய தளம் மூலம் புலிகளை வாங்கலாம் என அறிவிப்பை வெளியிட்ட http://www.buytigers.com/ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை, 'பெடா' (People for the Ethical Treatment of Animals) அமைப்பு கோரியுள்ளது. இதுகுறித்து பைடைகர்ஸ்.காம் இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1984ம் ஆண்டு முதல் புலிகளை உலகெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இந்த பூமியின் மிகவும் அழகான, ஸ்டைலான விலங்கினை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாங்கள் வழங்கி வருகிறோம். உலகின் எந்தப் பகுதியில் எங்களது வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அவர்களைத் தேடி எங்களது புலிகள் பத்திரமாக வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியுள்ள பெடா, இதுகுறித்து மத்திய…

  11. இணையதளத்தில் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமான மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களை வெளியிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. இணையத்தில் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டுவது போன்ற துஷ்பிரயோகங்கள் அதிகம்இப்போதுள்ள பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கமுடியும். இந்தக் குற்றத்துக்காக இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை அளிக்கப்படுகின்றது. பிரபல இணைய துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றின் தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2014/10/141019_britaintroll

  12. இணையத்தில் ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை வெளியிட்டால் கைது செய்வதற்கு காவல்துறையினருக்கு அதிகாரமளிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ பிரிவை ரத்து செய்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 66ஏ சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் அதனை ரத்துசெய்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இணையத்தில் சில கருத்துக்களை தடை செய்ய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே மரணடைந்த போது, மும்பையில் நடந்த கடையடைப்பைக் கண்டித்து, தாணே மாவட்டத்தில் பால்கர் என்ற இடத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா, ரீனு சீனிவாசன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவுசெய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் 66ஏ பிரிவின் கீ…

    • 0 replies
    • 277 views
  13. எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட் டனர். மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் …

  14. கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் Orkut இணையதளத்தில் சோனியா காந்தியைப்பற்றி அசிங்கமாகவும், தாழ்த்தியும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர். அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை. Crime Branch arrests Gurgaon IT pro for posting obscene remarks about Sonia Gandhi Google's Social Networking website Orkut. com is again in the news as Crime branch has arrested an…

  15. இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுகின்றது April 14, 2019 இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டுத் தீ போல பரவுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு உரையாற்றிய அவர் இணையத்தில் வெறுப்பு பேச்சுகள் காட்டு தீ போல பரவி வருகிறது. நமது கவனம் பாதிக்கப்பட்டவர்கள் மீது செல்ல வேண்டும். இந்த சூழ்நிலைக்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. சமூக ஒற்றுமையை முதலீடு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதம் மற்றும் தீவிர அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் செயல்பட வேண்டும் எனவும் சர்வதேச …

  16. இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பல இயக்கங்களின் உள்ளகத் தகவல்களை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு சுவீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது. இதனை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் ´அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்´ என்று கூறினர். இதை அடுத்து, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசாஞ்சேவை சுவீடன் நாட்டுக்கு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றின் உத்தரவை எ…

    • 0 replies
    • 478 views
  17. இணையவெளி ஊடுருவல்: ரஷ்யாவுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வலையமைப்பில் புகுந்து மின்னஞ்சல்களை திருடியதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் ஆணையிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" - ஒபாமா வலையமைப்பில் புகுந்து நடைபெற்றிருக்கும் தரவு திருட்டு பற்றி ரஷ்ய அதிபர் நன்கு அறிவார் என்பதை குறிப்பிட்டு, "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" என்று ஒபாமா தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட…

  18. சூப்பர் பம்பர் பரிசு ரூ. 10 கோடி தருவதாக கூறி இண்டர்நெட் மூலம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் தமிழக இளைஞர்களை குறி வைத்து தகவல்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. இதைப்பெறுவதற்காக பலர் தொடர்ந்து பணம் கட்டி வருகின்றனர். இதில் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் நமது மாலை மலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்ந்த பரபரப்பு அனுபவம் குறித்து தெரிவித்தனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். திரைப்பட வினியோகஸ்தர். இவரது மகன் பாலாஜி (வயது 22). இவர் இண்டர்நெட் லாட்டரியில் ரூ. 4 கோடி பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தனது அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:- நான் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். தினம…

  19. சிரியாவில் பஷார் அல் அசாத் ஆதரவு படைகளுக்கு எதிரான மோதல் உக்கிரமடைந்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியொன்று பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் கிளர்ச்சியாளரொருவர் அசாத் ஆதரவுப் படை வீரர் ஒருவரின் இதயத்தைக் கிளித்தெடுத்து உட்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறித்த காணொளி உள்ளது. தன்னார்வ அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டுள்ள இக்காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில் காட்டப்பட்டுள்ள நபர் 'பாருக்' எனும் படையணியின் ஸ்தாபகரான அபு ஸகார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் இதயத்தை உன்ணும் முன்னர் “I swear to God we will eat your hearts and your livers, you soldiers of…

  20. சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்ட அதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடி அளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. 'விப்ரோ' நிறுவனத்துக்குக் கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில் வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்கு முன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி! 'கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில் இறங…

  21. ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம்…

  22. இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…

    • 3 replies
    • 424 views
  23. மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா சென்னை சைதாப்பேட்டையில் 28.5.2011 அன்று நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியபோது, ’’என் அன்பு சகோதர்களே ....நான் இப்போது ஒரு குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் அதை வெளியிடப்போகிறேன். ஐநாவின் பொதுச்செயலளாரிடம் மூவர் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அந்த சேனல் -4’ல் இருந்து புதிதாக சில பிரேம்கள் எடுத்து ஈழத்தின் இனக்கொலை இதயத்தில் ரத்தம் ....அந்த குறுந்தகட்டில் இல்லாத காட்சிகள்; அதில் இடம்பெறாத காட்சிகளை எடுத்து நான் குறுந்தகடு தயாரித்திருக்கிறேன். ஐநா மன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையைப்பற்றி நான் சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் வந்துகொண்டேயிருக்கும். 50 நிமிடங்…

  24. மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார். அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons) . இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிக…

  25. இதயம் இனிக்க வேண்டும், கண்கள் பனிக்க வேண்டும். இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” இந்த பிரபலமான வார்த்தைகளைச் சொன்னது யார் ? வேறு யார்…..? கருணாநிதி தான். இந்த வார்த்தைகளை இவர் சொன்ன தருணம் எது தெரியுமா ? மாறன் சகோதரர்கள், தயாளு அம்மாளுக்குப் பிறந்த இவரது மகள் செல்வியின் முயற்சியாலும், போலித் தற்கொலை முயற்சி காரணமாகவும், கருணாநிதியின் முதலைக் குடும்பத்தோடு இணைந்ததுதான் காரணம். சரி. இந்தக் கட்டுரைக்கு இந்தத் தலைப்பை ஏன் வைக்க வேண்டும் ? சவுக்குக்கும், இதயம் இனிக்கும், கண்கள் பனிக்கும். எப்போது. கனிமொழி, திஹார் சிறையில் கால் வைக்கும் போது. எப்போது வைப்பார் ? நாளை தெரியும். இரண்டு வாய்ப்புகள். ஒன்று, கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.