உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
என்னங்க சார் உங்க சட்டம்? - ட்ரம்பை எதிர்க்கும் மார்க் சக்கர்பெர்க்! மார்க் சக்கர்பெர்க் vs பொனால்ட் டரம்ப்! அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப் புதிதாக பல்வேறு சட்டங்களை இயற்றும் முனைப்பில் இருக்கிறார். அவர் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளினாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது. ட்ரம்ப் தேர்தலில் வெ…
-
- 1 reply
- 511 views
-
-
அகதிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்க்கத் தடை! – யேர்மனிய எதிர்க்கட்சி தேர்தல் வாக்குறுதி! 70 Views யேர்மனியின் தீவிர வலதுசாரிக் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறது. குடியேற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக எதிர்த்துவருகின்ற ஏஎப்டி (Alternative für Deutschland-AfD) கட்சி, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான தனது வாக்குறுதிகளில் அகதிகளுக்கு எதிரான கடும் நிலைப்பாடுகளை அறிவித்துள்ளது. ‘இயல்பான யேர்மனி’ (‘Germany. But normal.’) என்ற அர்த்தம் கொண்ட சுலோகத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து யேர்மனியை வெளியேற்றுகின்ற டெக்ஸ…
-
- 0 replies
- 469 views
-
-
10 நாட்கள் இடைவெளியில் 8 பேருக்கு மரண தண்டனை; அமெரிக்க மாநிலம் அதிரடி! அமெரிக்காவின் ஆர்கென்ஸா மானிலத்தில் பத்து நாட்களுக்குள் மரண தண்டனைக் கைதிகள் எண்மருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்படவுள்ளன. ஆர்கென்ஸாவில் மொத்தமாக 34 மரண தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதில், நான்கு கறுப்பினத்தவரும் நான்கு வெள்ளையர்களுமே பத்து நாட்கள் இடைவெளியில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளனர். இவர்கள் எண்மரும் 1989 முதல் 1999ஆம் ஆண்டு காலப் பகுதியில் தண்டனை பெற்றவர்களாவர். இவர்களின் தண்டனை சுமார் இரண்டு தசாப்தங்களாக நிலுவையிலேயே நீண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஆர்கென்ஸா ஆளுனராகப் பதவியேற்ற ஆஸா ஹட்சின்சன் உடனடியாக தண்டனைகளை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார்.…
-
- 0 replies
- 294 views
-
-
யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்? லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் …
-
- 2 replies
- 944 views
-
-
ஆகஸ்ட் 9 முதல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கனடாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மார்ச் 2020 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, கோவிட் -19 பரவுவதைத் தணிக்க கனேடிய அரசாங்கம் அவசியம் என்று கூறியது. "COVID-19 தொற்றுநோய் சாதகமாக இருந்தால், செப்டம்பர் 7 முதல் சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்" என்று கனேடிய அரசாங்கம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கனடாவுக்குள் நுழைவது தடைசெய்யப்படும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிரு…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்: பிரதமர் ஏஞ்சலா அறிவிப்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார் மெக்சிகோ சிட்டி: ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்குகிறபோது, தனது பெரும்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதினார். இதற்காக பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்தினார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருந்த ப…
-
- 0 replies
- 259 views
-
-
சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரத்து நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷம், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டிற்கு, நேபாளம் தலைமை ஏற்க இருந்த நிலையில், தலிபான் பிரதிநிதிகளையும், இந்த மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. தலிபான்களால் ஆளப்படும் போரால் பாதிக்கப்…
-
- 0 replies
- 245 views
-
-
ஆப்கானிஸ்தானில், 2,500 வீரர்களை வைத்திருக்குமாறு... பைடனுக்கு அறிவுறுத்தல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக அமெரிக்க உயர் இராணுவத் தலைவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து மக்களை அவசரமாக வெளியேற்றியமை குறித்து நடத்தப்பட்டுள்ள விசாரணையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 6 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணையில் 2,500 வீரர்களை ஆப்கானிஸ்தானில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியதாக ஜெனரல் மார்க் மில்லி, ஜெனரல் ப்ரான்க் மெக்கன்ஸி ஆகிய இருவரும் கூறினர். ஆனால் அவ்வாறு ஆலோசனை பெற்றதாகத் தமக்கு நினைவு இல்லை என ஜனாதிப…
-
- 0 replies
- 389 views
-
-
வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 243 views
-
-
$300 மில்லியன் மதிப்புள்ள போதைபொருள் கடத்திய மூன்று கனடியர்கள் மெல்போர்னின் அதிரடி கைது. $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய கனடா நாட்டை சேர்ந்த மூன்று நபர்களை நேற்று ஆஸ்திரேலியா போலீஸ் அதிரடியாக கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 650 கிலோ எடையுடையது என்றும் தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்த Catherine McNaughton, 30, Edmond Proko, 46, and James Kelsey, 27 ஆகிய மூன்று நபர்கள் நேற்று மெல்போர்ன் நகரில் ஒரு மர்ம காரில் சந்தேகத்துக்கு இடமாக சென்று கொண்டிருந்தபோது, அவர்களை ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 650 கிலோகிராம் எடையுள்ள சுமார் $300 மில்லியன் மதிப்புள்ள போதைப்ப…
-
- 0 replies
- 320 views
-
-
ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுவதை அந்நாட்டு பிரதமர் யுசுப் ரசா கிலானி மறுத்துள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுணைச் சந்தித்துப் பேசிய பிறகு நடந்த செய்தியாளர் மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். ஒசாமா பின் லேதனைக் கண்டுபிடிக்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டவில்லை என்று கோர்டன் பிறவுண் சென்ற வாரம் கூறியிருந்தது பற்றி கேட்டபோதே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்தார். தெற்கு வாசிரிஸ்தான் போன்ற பகுதிகளில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய நாட்டு இராணுவம் வெற்றி பெற்று வருவதாகவும் அவர் கூறினார். மூலம்: http://www.inneram.com/200912054909/2009-12-05-05-26-37
-
- 0 replies
- 352 views
-
-
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னர் பயணிகளுக்கு கட்டாயமாக பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த இறுக்கமான கட்டுப்பாடுகள் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என சுகாதார அமைச்சின் செயலாளர் சஜித் ஜாவிட் தெரிவித்தார். அதன்படி 12 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைவரும் புறப்படுவதற்கு அதிகபட்சம் 48 மணிநேரத்திற்கு முன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நாட்டுக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் கொரோனா தொற்று இல்லை என்பதை கண்டறியும் வரையே தனிப்பட…
-
- 0 replies
- 438 views
-
-
உக்ரைனின்... எல்லையோர மாகாணத்திலுள்ள மழலையர் பாடசாலையின் மீது குண்டுவீச்சு: போருக்கு வழிவகுக்குமா? உக்ரைனின் எல்லையோர மாகாணமான டான்பஸ் மாகாணத்தில் மழலையர் பாடசாலையின் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் அமைந்துள்ள மழலையர் பாடசாலையின் மீதே நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, ஒரு ஆசிரியரும், காவலாளியும் காயம் அடைந்தனர். 32 குண்டுகள் நகரின் மீது விழுந்ததாகவும், ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும், மின்சார விநியோகம் தடைபட்டதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்காவில் 20…
-
- 1 reply
- 343 views
-
-
3 சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்! உக்ரைன் தலைநகர் கீவில் செவ்வாய்க்கிழமை காலை மூன்று முறை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 20 ஆவது நாளாகத் தொடர்கிறது. தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை மற்றும் பீரங்கி தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் உக்ரைனின் முக்கிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள் என முக்கிய இடங்களை குறிவைத்து ரஷியப் படைகள் தாக்கி வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷியப் படை ஆக்கிரமித்துள்ளது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் துறைமுக நகரமான கொ்சனில் நேற்று விடிய விடிய குண்டு சப்தம் கே…
-
- 0 replies
- 331 views
-
-
புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வர் என்று உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியுள்ளார். டெல்லியில் டென்மார்க் நாட்டு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட விவகாரத்திலும், வரதட்சணைக் கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் உயிரோடு கொளுத்திய பிரச்சினையிலும், டெல்லியில் உகாண்டா நாட்டு பெண்கள் தங்கி இருக்கும் ஒரு பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விபசாரம் நடப்பதாக எழுந்த புகார் தொடர்பான பிரச்னையிலும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மாநில அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த பிரச்னையில் 4 போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மியினர் டெல்லில் தர்ணா போராட்டம் நடத்த…
-
- 4 replies
- 493 views
-
-
உண்மைக் குற்றவாளியைப் பாதுகாக்கும் காங்கிரசு பாசக அரசுகளும், ஹிந்திய காவிப் பத்திரிக்கைகளும். ராஜீவ் கொலையாளி சு.சாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரணை : நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” [ஏளனமாக] “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.” “தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?” என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள். நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.” சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பி.க்கள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பதை போலவும் ஒரு நினைப்பு. அலட்ச…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரே இரவில்.... 1,053 உக்ரேனிய இராணுவ தளங்களை, தாக்கியதாக... ரஷ்யா கூறுகிறது ஒரே இரவில் 1,053 உக்ரைன் இராணுவ தளங்களை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 106 பீரங்கி தாக்கும் நிலைகளை அழித்ததாகவும், ஆறு உக்ரேனிய ஆளில்லா வான்வழி வாகனங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை உக்ரைனின் 73 இராணுவ சொத்துக்களை குறிவைத்தும் ரஷ்ய படைகள் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கை தொடர்வதாக ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2022/1277642
-
- 1 reply
- 260 views
-
-
அமெரிக்காவின்... பெலோசியை, கியூவில் சந்தித்ததாக... உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு கியூவில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியுடன் ஒரு சந்திப்பை நடத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். சுதந்திரத்துக்கான உக்ரேனியர்களின் போராட்டத்திற்கு நன்றி தெரிவித்த பெலோசி, போராட்டம் முடிவும் வரை தமது ஆதரவு இருக்கும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1279375
-
- 7 replies
- 399 views
-
-
மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. இன்று இதன் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. சாட்னா மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதிஇ அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியாவின் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14இ133 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66இ810 வாக்க…
-
- 0 replies
- 334 views
-
-
லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள் ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/130637
-
- 1 reply
- 301 views
-
-
#LiveUpdates 100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில…
-
- 3 replies
- 778 views
-
-
இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! :idea: தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
70 வயதில் புகைப்பட கலைஞர்: உலகம் சுற்றும் கொள்ளுப்பாட்டி நிக்கோலா பிரையன் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JENNY HIBBERT வயது வெறும் எண்ணிக்கைதான் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வாழ்ந்து காட்டி நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜென்னி பாட்டி. மனவலி நிறைந்த தமது விவாகரத்துக்குப் பின், தன்னை ஒரு புகைப்பட கலைஞராக மாறிய அவர், அந்த புகைப்படக்கலையே பிற்காலத்தில் தன்னை உலகம் முழுக்க சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்லும் என்றோ, உலகின் மிகப்பெரிய கொன்றுண்ணிகளை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் என்றோ எண்ணவில்லை. ஆனால் இந்த அனுபவங்கள் தன்நை தொடர…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் ஜூன் 12-ம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உலககோப்பைக்கு எதிரான பிரேசில் மக்களின் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தாங்கள் வறுமையில் வாடும் பொழுது, பிரேசில் அரசு கால்பந்து போட்டிகளுக்காக பலகோடிகளை வாரி இறைப்பதை கண்டித்து மக்கள் தெருவிலிறங்கி போராடி வருகிறார்கள். இந்தியாவை போன்ற ஏழைகளின் நாடான பிரேசில், உலககோப்பைக்கு என இதுவரை சுமார் $11 பில்லியன்(ரூ. 65,274 கோடி) வரை செலவிட்டுள்ளது. இதில் பழைய மைதானங்களை புதுப்பிப்பதற்கு என சுமார் 3.6 பில்லியன் வரை (ரூ.21,362 கோடி) செலவாகியுள்ளது. இது தவிர புதிதாகவும் மைதானங்கள் கட்டப்படுகின்றன. தலைநகர் பிரேசில்லாவில் கட்டப்பட்டு வரும் மே கிரின்ச்சா மைதானத்திற்கான செ…
-
- 3 replies
- 808 views
-
-
ஈராக்கின்... உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஊடுருவி, நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்! நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை உடைத்து ஈராக்கின் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்துள்ளனர். சக்திவாய்ந்த ஈராக்கிய மதகுரு மொக்தாதா அல்-சதரின் ஆதரவாளர்கள் பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதை எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த குழு பாக்தாத்தின் நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்திற்குள் ஊடுருவியது. இது தூதரகங்கள் உட்பட தலைநகரின் மிக முக்கியமான கட்டடங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. சதரின் அரசியல் கூட்டணி கடந்த ஒக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலில் அத…
-
- 3 replies
- 361 views
-