உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
ஹீத்தர் சோ கொரியன் ஏர் விமான நிறுவனத்தின் தலைவரின் மகளால் அவமதிக்கப்பட்டு, முட்டியிடச் செய்யப்பட்டு, விமானத்தில் இருந்து இறங்கச் செய்யப்பட்டமை குறித்து அந்த நிறுவன விமான சிப்பந்தி ஒருவர் முதல் தடவையாக பேசியுள்ளார். விமானத்தில் கொறிப்பதற்காக மகதமியா பருப்புகளை வழங்குவது வழக்கம். பொதுவாகவே வேர்க்கடலை, முந்திரிகை, மகதமியா போன்றவற்றை விமான பயணத்தில் பரிமாறும் போது அவை கொட்டி விடக் கூடாது என்பதற்காக அவற்றை ஒரு பையில் போட்டு வழங்குவது வழக்கம். ஆனால், தட்டில் அல்லாமல் ஒரு பையில் இட்டு அவற்றை தனக்கு பரிமாறியதற்காக கொரியன் ஏர் விமான நிறுவனத்தில் முன்பு மூத்த நிறைவேற்று அதிகாரியாகவும் முன்பு இருந்த அந்த நிறுவனத்தின் தலைவரின் மகளான ஹீத்தர் சோ என்பவர் மிகுந்த ஆத்திரம் அடைந்துள…
-
- 0 replies
- 945 views
-
-
மனித முகத்துடன் அதிசய மீன்! பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது. 44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.
-
- 0 replies
- 945 views
-
-
மும்பையில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு-பலர் படுகாயம் : 13 ஜூலை 2011 மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயமடைந்தனர். மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் வரை காயமடைந்ததாக ஒரு தகவலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இன்னொரு தகவலும் தெரிவித்தன. தாதர் மேற்குப் பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் குண்டுவெடித்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர். http:/…
-
- 16 replies
- 945 views
-
-
ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு: 45,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம் 1.8 தொன் எடையுள்ள இந்த குண்டு பிரிட்டனில் தயாரிக்கப்பட்டதாகும். ரைன் நதியில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் கடந்தவாரம் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மழைவீழ்ச்சியின்மையால் அந்நதியின் நீர்மட்டம் குறைவடைந்தத்தை தொடர்ந்து இக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் குண்டு 2 கிலோமீற்றர் சுற்றுளவிற்குள் வசிக்கும் மக்களை அனைவரையும் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர். இரு வைத்தியசாலைகள், 7 மருத்துவ சிகிச்சை நிலையங்கள், ஒரு சிறைச்சாலை ஆகியவற்றிலுள்ளவர்களும் வெளியேற்றப்படுக…
-
- 4 replies
- 945 views
-
-
ஈரான்: உலகத்திற்குமே பாரிய பிரச்சனை? ஈரான் பிரச்சனை தெற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்குமே பாரிய பிரச்சனையாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறப்பாக மசகு எண்ணெய் விலை 50 வீதம் அதிரடியாக உயரக்கூடிய பேரபாயம் உள்ளதாக நியூயோர்க் ரைம்ஸ் எச்சரித்துள்ளது. அப்படியொரு நிலை வருமாக இருந்தால் இன்றய பொருளாதார நெருக்கடியில் மீள முடியாத பேரவலத்திற்குள் உலகம் சிக்குண்டு போகும் என்பதும் தெரிந்த விவகாரமே. ஈரான் அணு குண்டை செய்யும் முயற்சியை நிறுத்தாவிட்டால் ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தை உறை நிலைக்கு கொண்டுவந்து, செயற்பட முடியாதவாறு செய்வோம் என்று அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் வெடித்துள்ளது. ஈரான் மீது த…
-
- 1 reply
- 945 views
-
-
திமுக அமைப்பு செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரத்தின் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து தி.மு.க. தலைவர் கலைஞர் பேசினார். அவர், ‘’தி.மு.க.விற்கு தோல்வி என்பது தடை கல் அல்ல. ராஜீவ்காந்தி மறைந்த போது தி.மு.க. மீது பொய் பிரச்சாரம் கூறப்பட்டதால் அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் தோல்வியுற்றது. இருந்தபோதிலும் துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். அதன் பிறகு படிப்படியாக தி.மு.க. பல இடங்களில் போட்டியிட்டு 185 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க.தான். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்காது என்று சொல்கிறார்கள். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும். வெற்றி தோல்வி இய…
-
- 6 replies
- 945 views
- 1 follower
-
-
"கொரோனா சீன வைரஸ் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பில்லை" - உலக சுகாதார நிறுவனம் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்து தான் வந்தது என்பதைக் கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு. "கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை" என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் பீட்டர் பென் எம்பரேக் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 945 views
-
-
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை சந்தித்து பேசினார். காலை 10 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை அரை மணி நேரம் நீடித்தது. முதல்வருடன் நடந்த சந்திப்பிற்கு பின் சிதம்பரம் அளித்த பேட்டி: இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்திருந்த போது, அவரோடு பேசிய செய்திகளை முதல்வருடன் பரிமாறிக் கொண்டேன். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 50 ஆயிரம் பேருக்கு வீடுகட்டி தரும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் துவங்கும் என்று அதிபர் ராஜபக்ஷே வாக்குறுதி அளித்தது குறித்தும், பொதுவான விஷயங்கள் குறித்தும் முதல்வருடன் பேசினேன். …
-
- 4 replies
- 945 views
-
-
ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான் 2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவ…
-
- 2 replies
- 945 views
-
-
அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சவுதி அரேபிய இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி இளவரசரான மஜீத் அப்துல் அஜீஸ் அல் சவுது அமெரிக்காவின் பேவர்லி மலைத்தொடரில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அந்தஸ்து பெற்ற பிரபலங்களுக்கு மட்டுமே இந்த மலைத் தொடரில் தங்க அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தனது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு சவுதி இளவரசர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து இளவரசர் மஜீத் அப்துல் அஜீஸை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பிணைத் தொகையின் பேரில் அப்துல் அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாலியல் வழக்கில்…
-
- 4 replies
- 945 views
-
-
கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு... சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…
-
- 4 replies
- 944 views
-
-
ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. பிடல் காஸ்ட்ரோவுக்கு முடிவுரை எழுத முயன்ற சக்தி, இப்போது நட்பு மூலமாக புதிய முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்விதமாக மாறியிருப்பதை அமெரிக்க அதிபரின் கியூபா பயணம் தெரிவிக்கிறது. எண்ணங்களின் பிரதிபலிப்புகள் என்று ஒரு கட்டுரையை 2009-ல் பிடல் வெளியிட்டார். “கம்யூனிஸ்ட் கட்சியோ அரசோ எடுக்கும் முடிவுகளில் நான் தலையிடப்போவதில்லை” என்று அதில் குறிப்பிட்டார். அதில் ஒபாமாவுக்குப் பெரும் புகழாரத்தையும் பிடல் காஸ்ட்ரோ சூட்டியிருந்தார். கியூப - அமெரிக்க உறவில் இது ஒரு தொடக்கப்புள்ளி என்றாலும், பிடல் காஸ்ட்ரோவ…
-
- 0 replies
- 944 views
-
-
எம்.ஜி.ஆர். தோளில் தூங்கினார்... சிவாஜி மடியில் வளர்ந்தார்... கலைத் தாயின் தவப்புதல்வன்... உலக நாயகன்... என்றெல்லாம் புகழாரம் சூடப்பட்டக் கமலுக்கு, விஸ்வரூபம் இவ்வளவு தலைவலியைக் கொடுக்கும் என அவரே நினைக்கவில்லை! 'விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்-ல் ஒளி பரப்பப் போவதாக கமல் அறிவித்த நாளில் இருந்தே பிரச்னைகளும் ஆரம்பமாகின. தியேட்டர் உரிமையாளர்கள் கமலை எதிர்த்து அறிக்கை விட்டது, போலீஸ் கமிஷனரைச் சந்தித்தது என அடுத்தடுத்தப் பிரச்னைகளுக்கு இடையில்... கடந்த 9-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்துப் பேசினார் கமல். அந்த சந்திப்புக்குப் பிறகு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், '' 'விஸ்வரூபம்’ படம் முதலில் தியேட்டரில் ர…
-
- 1 reply
- 944 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தமிழினத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது 4.5 பில்லியன் டொலர்களாக உள்ள இரு நாட்டு வர்த்தகத்தை …
-
- 0 replies
- 944 views
-
-
போட்டிபோட்டு டிக்கெட் விலையைக் குறைக்கும் இரு விமான நிறுவனங்கள்! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 01:51 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துபாய், யு.ஏ.ஈ: சம்மர் விடுமுறைகள் நெருங்கிவிட்ட நிலையில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிக்கெட் விலை குறைப்பு என்ற அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு, அதன் போட்டியாளர்களைக் கதிகலங்கவும் வைத்திருக்…
-
- 0 replies
- 944 views
-
-
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 944 views
-
-
பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை ஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் …
-
- 8 replies
- 943 views
-
-
யார் இந்த காலித் மசூத்? இயக்கியவர்கள் யார்? லண்டன் தாக்குதலில் டுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Image captionமசூத்தின் பள்ளிப்பருவ புகைப்படம் கிடைத்த நிலையில், அவரது புகைப்படத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது. காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் …
-
- 2 replies
- 943 views
-
-
ஆபாச வீடியோவில் முகத்தை இணைத்து மோசடி: எதிர்த்துப் போராடும் பெண்ணுக்கு நேர்ந்த கதி சாரா மெக்டெர்மோட் மற்றும் ஜெஸ் டாவிய்ஸ் பிபிசி நியூஸ் 9 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கேத் ஐசக் உங்கள் சம்மதம் இன்றி உங்கள் முகத்தை டிஜிட்டலில் எடிட் செய்து ஒரு ஆபாச வீடியோவுடன் அதை இணைத்து இணைய வெளியில் பகிர்ந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஓர் அனுபவத்தை எதிர்கொண்ட ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசினார். கேத் ஐசக் தனது ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தை வழக்கம் போல பார்த்துக் கொண்டிருந்தபோது, இதையும் பாருங்கள் என்ற அவருக…
-
- 0 replies
- 943 views
- 1 follower
-
-
லிபியாவில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் அதிபர் கடாபியின் மகன், பேரன்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லிபியாவில் ராணுவ புரட்சி மூலம் 1969ம் ஆண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது அல் கடாபி. 42 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கடாபி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் விரட்டப்பட்டதும், லிபியாவில் மக்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது ராணுவ டேங்க்குகள், விமானங்கள் மூலம் குண்டு வீசினார் கடாபி. இதற்கு உலக நாடுகள் விடுத்த கண்டனத்தையும் கடாபி கண்டுகொள்ளவில்லை. இதனால் லிபியா மீது நேட்டோ படை நடவடிக்கை எடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதியளித்தது. இதையடுத்து லிபியா மீது நேட்டோ படை கடந்த மாதம் முதல் வ…
-
- 0 replies
- 943 views
-
-
அமேசன் நிறுவனர் ஜெவ்ப், விவாகரத்து £105 பில்லியன் டொலர்களுடன் உலகின் முதலாவது பெரும் பணக்காரராக, அமேசன், மைக்கிரோசொப்ட்டினை முந்திய சில நாட்களிலேயே மனைவி மக்கன்சியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததுள்ளார். நியுயோர்க் நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை ஒன்றை பெறவதற்காக, நேர்முக தேர்வுக்காக ஜெவ்ப் சந்திக்க வந்து வேலை பெற்றுக் கொண்ட மக்கன்சியை அடுத்த வருடமே மனைவியாக்கி, இருபத்தைந்து வருடத்தில் நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகியதுடன் உலகின் மிகப்பெரிய நிறவனத்தையும் மனைவி உதவியுடன் அமைத்தார். திருமணத்துக்கு பிறகே, நிறுவனம் உருவாகியதால், ஜெவ்ப் சொத்தில் பாதி மக்கன்சியை சேரும் என்பதால், அவர் உலகின் பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருந்து கீழ் இறங்குவார்.
-
- 3 replies
- 943 views
-
-
ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை மேற்கொண்ட சீனா ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் சீனா பல மாற்றங்களை செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இது நகரத்தின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீர்திருத்தங்களின் நோக்கம் "தேசபக்தி" புள்ளிவிவரங்கள் மட்டுமே அதிகார பதவிகளுக்கு இயங்க முடியும் என்பதை உறுதி செய்வதாகும். 2020 ஜூன் மாதத்தில் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டம் திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய நிதி மையத்தின் மீது பெருகிய முறையில் சர்வாதிகார பிடியை பலப்படுத்த பீஜிங்கின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். இது கருத்து வேறுபாடுகளை நசுக்குவதற்கான ஒரு கருவியாக விமர்சகர்கள் கருதுகின்றனர். 2019 ல் அரசாங்க எதிர்ப்ப…
-
- 5 replies
- 943 views
-
-
கோடீஸ்வரராகப் போவதாக எதிர்வு கூறியவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 2,337 கோடி ரூபா பரிசு பிரிட்டனைச் சேர்ந்த நீல் ட்ரொட்டருக்கு யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் (சுமார் 2,337 கோடி இலங்கை ரூபா) பரிசு கிடைத்துள்ளது. 41 வயதான நீல் ட்ரொட்டர் கார் மெக்கானிக் ஆவார். பகுதி நேரமாக பந்தய காரோட்டத்திலும் ஈடுபடுபவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீட்டிழுப்பில் இவருக்கு 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது. இச்சீட்டிழுப்பு நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 'நாளை இந்நேரம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பேன்' என தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நீல் ட்ரொட்டர் எதிர்வு கூறினாராம். 'வியாழனன்று எனது தந்தையின் அலுவலகத்…
-
- 3 replies
- 943 views
-
-
சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 09:40 GMT ] [ அ.எழிலரசன் ] "கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [international Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது. கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief …
-
- 4 replies
- 943 views
-
-
ராசா கைதோடு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து தி.மு.க.வின் பெயர் விடுபட்டு விடும் என்றுதான் தி.மு.க.வினர் நினைத்திருந்தனர். ஆனால் ராசா கைதுக்குப் பிறகு, க ருணாநிதி குடும்பத்தினர் பெயர் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்க, கதிகலங்கிப் போயுள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவை சி.பி.ஐ. கடந்த வாரம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என பாட்டியாலா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால் காங்கிரஸ் தன்னைக் காப்பாற்றும் என தி.மு.க. நம்புகிறது. அதே நேரத்தில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடு …
-
- 0 replies
- 943 views
-