உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து ஒருநாள் கடந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமை நிராகரித்துள்ளது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10- நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் (2 ஆண்டுகள் பதவிக்காலம்) உள்ளன பாதுகாப்புக் கவுன்சிலின் இரட்டை நிலைப்பாடு காரணமாக அதனால் உலக அமைதிக்காக பணியாற்ற முடியாது என்று சுட்டிக்காட்டியே சவுதி அரேபியா அதன் உறுப்புரிமையை நிராகரித்துள்ளது. ஆனால், என்ன வகையான சீர்திருத்தங்கள் என்ற விபரங்களை அந்நாடு வெளியிடவில்லை.பாதுகாப்புக் கவுன்சிலில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சவுதி அரசாங்கம் கோரியுள்ளது. சிரியா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்…
-
- 4 replies
- 583 views
-
-
ஐநா மனித உரிமை ஆணையருடன் அமைச்சர் வேதமூர்த்தி சந்திப்பு ஐநா மனித உரிமை ஆணையர் திருமதி மிக்கெலி பேச்லெட்டை பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அண்மையில் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்தார். அடிப்படை மனித உரிமையை நிலைநாட்டுவதில் மலேசியா காட்டிவரும் முனைப்-பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது புத்ராஜெயா பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியை சந்தித்தார் ஆணையர் மிக்கெலி பேச்லெட். நம்பிக்கைக் கூட்டணி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை பற்றி அமைச்சர் அவரிடம் எடுத்துரைத்தார். அப்போது, மலேசி…
-
- 0 replies
- 357 views
-
-
சிரியா இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான இடங்களில் ஐநா ஆய்வும் விசாரணையும் நடத்த சிரியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய கூட ஒரு குழுவை அனுப்பி சிறீலங்காவில் அதன் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித இனப்படுகொலைகளை (தமிழினப் படுகொலை), மனித உரிமை மீறல்களை விசாரிக்க..ஐநா இன்னும் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை. சிறீலங்காவும் அனுமதிப்பதாக இல்லை. சிரியாவில் மேற்குலக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள் போல்.. புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஐநா சிரியா விவகாரத்தில் சிரிய அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கே அதிகம் முக்கியம் கொடுத்து கையாண…
-
- 3 replies
- 671 views
-
-
நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 என்றழைக்கப்படும் நாடுகளான இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஐநாசபையில் பேசத்துவங்கிய எஸ்எம் கிருஷ்ணாவின் பேச்சை கவனித்த மற்ற நாட்டின் தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். காரணம் தன்னுøடைய பேச்சிற்கு பதிலாக அருகே அமர்ந்திருந்த போர்சுகல் நாட்டு அமைச்சரின் உரையை மீண்டும் படிக்க துவங்கினார்.இதனால் மற்ற நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அ…
-
- 17 replies
- 2.1k views
-
-
சிரியாவுக்குச் சென்ற ரஷ்ய துணை அமைச்சர் சிரியாவில் நடந்த இரசாயனத்தாக்குதல் குறித்து விசாரித்த ஐநாமன்ற விசாரணை அதிகாரிகள், பக்கசார்பான ஒருதலைப் பட்சமான அறிக்கையை தயாரித்திருப்பதாக ரஷ்யா குற்றம் சுமத்தியிருக்கிறது. இந்த இரசாயனத் தாக்குதல்களை சிரிய அரசு நடத்தவில்லை என்றும், அரச எதிர்ப்பாளர்களே இதை நடத்தினார்கள் என்பதற்கு தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு சிரியாவுக்கு சென்று திரும்பிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் செர்கி யப்கோவ், இந்த இரசாயனத்தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்களை சிரிய அரசு தம்மிடம் அளித்திருப்பதாகவும், அவற்றை தாம் ரஷ்ய நிபுணர்களிடம் கையளிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். தொடர்புடைய வி…
-
- 1 reply
- 390 views
-
-
அமைதிப்படைகளில் ஆளில்லா விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் ஐநா சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை சார்பில் செயல்பட்டு வரும் அமைதிப்படை, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய இந்த அமைதிப்படையை மேம்படுத்த ஐநா திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஆய்வு செய்து 119 பரிந்துரைகளை அளித்துள்ளனர். முக்கியமாக ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்; இந்த விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்வதால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என சி…
-
- 1 reply
- 226 views
-
-
பட மூலாதாரம், Guy Smallman/Getty Images படக்குறிப்பு, 2024 டிசம்பர் 14 அன்று லண்டனில், பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர். 22 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு நாடாக இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றக் கூடிய ஒரு பிரதேசம் தான் பாலத்தீனம். அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன. ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லைகளும் இல்லை, தலைநகரமும் இல்லை, ராணுவமும் இல்லை. மேற்குக் கரை இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்ப…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான் அதிரடி! ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும், ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் என்று ஜப்பானிய நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக நிலவி வரும் பிரச்சினைகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பாரிய இடத்தை வகிக்கின்றது. ஆனால் இதற்கு நேர் எதிராக மக்கள் தொகை குறைந்து வருவதால் ஜப்பான் நாடு பெரும் அதிருப்தியில் உள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970 களில் இருந்த மக்கள் தொகையை விட ஜப்பானிலேயே …
-
- 0 replies
- 648 views
-
-
ஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான் லெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால், எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக லெபனான் முழுவதும் வீதிகளை முடக்கி, டயர்கள் மற்றும் தளபாடங்களுக்கு தீ வைத்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று புதுப்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் லெபனான் நாணயத்தின் சரிவு குறித்த கோபத்தின் மத்தியில் எழுச்சி பெற்றது. லெபனானின் நாணய சரிவின் விளைவாக விலைகள் கூர்மையாக அதிகரித்துள்ளன, அதே போல் எரிபொருள் ஏற்றுமதிகளின் வருகையும் தாமதமாகி, நாடு முழுவதும் அதிக மின்வெட்டுக்கு வழிவகுக்கி…
-
- 0 replies
- 503 views
-
-
ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேர் படுகொலை! - சிரியாவில் நடப்பது என்ன? சிரியாவில் பஷர் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இறந்துள்ளனர். எப்படி ஆரம்பித்தது சிரியா உள்நாட்டு யுத்தம்? சுமார் 30 வருடங்களாகச் சிரியாவை ஆட்சி செய்தவர் ஹஃபெஸ் அல் ஆசாத். இவர், 1990-ல் ‘எதிர்க் கட்சிகளுக்கான சட்ட அங்கீகாரம் ஒருபோதும் கிடையாது’ என வெளிப்படையாக அறிவித்தார். இதனால், எதிர்க் கட்சிக்காரர்களின் பகையை அதிக அளவில் சம்பாதித்து வைத்திருந்தார். அப்போது, சில உள்நாட்டுப் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்தன. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்த…
-
- 1 reply
- 596 views
-
-
ந்து நாட்களிற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து அவருடன் சேர்ந்து படமெடுத்துக்கொண்ட பிரேசில் அதிகாரியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பிரேசில் ஜனாதிபதியின் தொடர்பாடல் செயலாளரான பாபியோ வஜ்ன்கார்ட்டென் பிரேசில் ஜனாதிபதயுடன் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார். அவர் டிரம்புடன் படமும் எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டஅந்த அதிகாரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காணப்படும் படத்தை ரொய்ட்டர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட படத்தில் அந்த நபர் டிரம்பிற்கு அருகில் தொப்பியுடன் காணப்படுகின்றார். https://www.virakesari.lk/article/77687
-
- 2 replies
- 670 views
-
-
இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. இதுபற்றி திரு நெடுக்காலபோவான் அவர்களின் ராமர் பாலம் பற்றிய ஆய்வு சம்பந்தமான திரியில் கருத்துச் சொல்லியிருந்தேன். அதற்கு திரு நெடுக்ஸ் அவர்கள் சாத்தியமே என்பது போலப் பதிலளித்துள்ளார். இது ஒரு தனி விடயமாக ஆராயப்பட வேண்டிய பொருளாக எனக்குப்படுவதால் இதை ஒரு தனித்திரியாகத் தொடங்கியிருக்கிறேன். இப்போது சிறிது அறிவியல் ரீதியாக இந்தப் பொருளை அலசுவோம். இது சாத்தியமான ஒரு கட்டுமானமாக இருக்குமா என்பதை இன்றுள்ள மிக வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அலசுவோம். பாலத்தின் நீளம் : 34 கி.மீ. எடுத்துக்கொண்ட நாட்கள்: 5 இப்போது ஒரு நாளில் 6.8 கி.மீ. என்பது அசாதாரணமானது. …
-
- 81 replies
- 9.1k views
-
-
'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள். 1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போ…
-
- 0 replies
- 480 views
-
-
ஐந்து பெண் மனித உரிமை ஆர்வலர்களிற்கு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்படலாம்? சவுதிஅரேபியா ஐந்து பெண் மனித உரிமை பணியாளர்களிற்கு மரண தண்டனையை விதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் இரகசிய பயங்கரவாத தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது ஐந்து பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என சவுதி அரேபியா அரசின் சட்டத்தரணிகள் வாதாடியுள்ளனர். இஸ்ரா அல் கொம்ஹம் என்ற பெண்ணும் மரண தண்டiiயை எதிர்கொண்டுள்ளார். மனித உரிமை பணிகளிற்காக மரணதண்டனையை எதிர்கொள்ளும் முதல் பெண் இவர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 449 views
-
-
ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன? உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் …
-
- 0 replies
- 631 views
-
-
புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மிசோராமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு பின்னர் நடைபெற்ற நடைபெற்ற கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. டெல்லி, மிசோராம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. கடைசிக் கட்டமாக டெல்லி சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தோரிடம் இந்தியா டுடே மற்றும் ஓ.ஆர்.ஜி. நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், டெல்லியில் தொங்கு சட்டசபை அமையலா…
-
- 0 replies
- 992 views
-
-
ஐந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் மூன்று பேரின் உயர் நிகர சொத்துக்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணத் தடையும் விதிக்கப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரித்தானியா அந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரித்தானியாவில் வைக்கப்பட்டிருக்கும் 3 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் இங்கு பயணிக்கவும் தடை விதிக்கப்படும். இங்கிலாந்தில் உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் அவர்கள் எந்த விதமான தொடர்புக் கொள்வதற்கும் தடை செய்யப்படுகிறது. மேலும், ரஷ்ய வங்கிகளான ரோசியா, ஐஎஸ் வங்கி, ஜெனர…
-
- 0 replies
- 293 views
-
-
படத்தின் காப்புரிமை Sergei Bobylev / Getty குடிக்க தண்ணீர் கொடுக்காமல், கடும் வெயிலில் சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து வயது பெண் குழந்தையை உயிரிழக்க செய்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர் ஜெர்மனியில் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 27 வயதான ஜெனிஃபரும் அவரது கணவரும், கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த இராக்கின் மொசூல் நகரத்திலிருந்து அந்த சிறுமியை தங்களது வீட்டின் "கொத்தடிமையாக" கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் உடல்நிலை பாதிப்படைந்த சிறுமியை, ஜெனிஃபரின் கணவர் வீட்டிற்கு வெளியே சங…
-
- 0 replies
- 872 views
-
-
ஐந்து வருட காலமாக அவ்(f)கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தினால் பயணக் கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி, அமெரிக்க தேசத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க வீரரான பேர்க்டால் என்பவரின் விடுதலை, மிகவும் பயங்கரமான ஐந்து தலிபான் இயக்கத்தினரை தலிபானிடம் கையளித்ததன் மூலம் சாத்தியப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் மிகவும் முக்கிய எதிரிகளான தலிபான் இயக்கப் புரட்சிக்காரர்களில் ஐந்து பேரும், குவன்ரனமோ சிறைச்சாலையில் இதுவரை காலமும் சிறைவைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட ராணுவவீரரை விடுதலை செய்யும் வேலைத் திட்டத்தை, பென்ரகன் தொடர்ந…
-
- 0 replies
- 465 views
-
-
Published By: RAJEEBAN 29 APR, 2023 | 10:47 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் ஜூலி சங் குறித்து இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் இருந்து கலிபோர்னியாவிற்கு ஜூலி சங் 1977ம் ஆண்டு குடிபெயர்ந்தவேளை அவருக்கு 7 வயது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அவ்வேளை அவர் ஒரு ஆங்கிலவார்த்தை கூட தெரியாதவராக காணப்பட்டார். அவரது தந்தைக்கு பொறியல் நிறுவனத்தில் வேலை கி…
-
- 9 replies
- 601 views
- 1 follower
-
-
செய்திக் குறிப்பு -------------------- ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் திருவாய் மலர்ந்திருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் விரோத சோனியா காங்கிரஸின் திமிர்வாதப் போக்கையே ரெட்டியின் அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம். இந்த பெட்ரோல் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - என்று காங்கிரஸ் அறிவித்த ஒரே வாரத்தில் ரெட்டியின் விசித்திர விளக்கம் வெளிவ…
-
- 0 replies
- 936 views
-
-
ரஷ்ய ரகசியங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மொஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷ்யாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும். “ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்…
-
- 2 replies
- 463 views
- 1 follower
-
-
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவிட்டால் 25% வரி விதிக்கப்படும் ! ட்ரம்ப் எச்சரிக்கை! ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை. இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து…
-
-
- 7 replies
- 693 views
- 1 follower
-
-
ஐம்பது புலம்பெயர்ந்தோர்... ருவாண்டாவுக்கு, திரும்ப அனுப்பப்படுவார்கள்: பிரதமர் பொரிஸ் ஜோன்சன்! அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய மீள்குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாக கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு முதலில் ஐம்பது புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படவுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். டெய்லி மெயிலுக்கு அளித்த செவ்வியில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இந்த எண்ணிக்கையை வெளிப்படுத்தினார். ஒரு புதிய ஒப்பந்தத்தின்படி, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் இப்போது ருவாண்டாவிற்கு மீள்குடியேற்றத்திற்காக விமானம் மூலம் அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த கொள்கையை 160க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கேன்டர்பரி பேராயர், எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்…
-
- 1 reply
- 311 views
-
-
முடியல்ல... இந்த அரசியல்வாதிங்க மட்டும் எப்படி இப்படி.. அடுத்தவனை கொப்பி பண்ணுறதில.. அவ்வளவு அவசரமா இருக்காங்க. அதுவும் இப்ப மேற்குலக அரசியல்வாதிங்களுக்கு பாடம் எடுப்பது.. ஹிந்திய மோடி.. சொறிலங்கா மைத்திரி. உலகம் உருப்பட்ட மாதிரித்தான். Election 2015: David Cameron sets out plan for 'first 100 days' David Cameron has said wages, welfare, housing and childcare will be at the heart of the Conservatives' programme for government in its first 100 days. http://www.bbc.co.uk/news/election-2015-32470837
-
- 7 replies
- 624 views
-