உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் தர்த்ஸ் என்னும் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். தக்னு, தர்சிக், கர்குன் ஆகிய 3 கிராமங்களில் வசிக்கும் இவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகின்றனர். உலகின் பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இவர் களைத்தான் மிக, மிக பழமையான இனத்தவர்கள் என்று ஒத்துக்கொண்டுள்ளனர். சுமார் 2500 பேர் கொண்ட இந்த இனத்தவர்கள்மற்ற வர்களிடம் இருந்து முழுமையாக வேறுபட்டு காணப்படு கின்றனர். நல்ல உயரமாக, அழகாக இருக்கும் இவர்கள் சூரியன் சுழற்சியை கணித்து டிசம்பர் 22-ந்தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். மற்ற இனத்த வர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. 2500 பேரும் ஒருவரை மாற்றி ஒருவரை சார்ந்து வாழ் கின்றனர். பல தாரம் வைத்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு ^50,600 கோடி கடன் வழங்கலாமா என்பது குறித்து உலக வங்கி ஆலோசித்து வருவதாக இந்திய வங்கிகளுக்கான தலைவர் ராபெர்ட்டோ ஜாகா தெரிவித்தார். டெல்லியில் முதலீடு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட வங்கிகளுக்கான இந்திய தலைவர் ஜாகா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கி 69,000 கோடி முதல் ^92,000 கோடி வரை கடன் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் இந்திய அரசு ^50,600 கோடி கேட்டு இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இதே அளவிலான கடன் தொகையை மின்சார வசதி மேம்பாட்டிற்கு உலக வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2…
-
- 6 replies
- 11.6k views
-
-
ஹைதராபாத்: ஒவ்வொரு இந்தியனும் முஸ்லீமாகவே பிறப்பதாகவும், பின்னரே மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதாகவும் மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சி தலைவரான அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார். ஹைதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி அதிரடியான கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பை கிளப்புபவர். இந்நிலையில் 'வீடு திரும்புதல்' என்ற பெயரில் இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சிகள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் ஓவைசி, ஒவ்வொருவரும் முஸ்லீமாகவே பிறந்து அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார். மேலும் "இந்தியா இந்து நாடு" என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியதை குறிப்பிட்டுப் பேசிய அசாதுதீன், " …
-
- 5 replies
- 958 views
-
-
ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் பேசியுள்ளது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.பி. சாக்சி மகராஜ், இந்து மத ஒற்றுமையைப் பலப்படுத்த ஒவ்வொரு இந்து மதப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முந்தைய காலத்தைப் போல ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் 40 குழந்தைகள் எல்லாம் இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் சாக்சி மகராஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பசுவைக் கொல்பவர்களையும், மதம் மாறுபவர்களையும் மரண தண்டனைக்கு ஈடான தண்டனை கொடுத்து தண்டிக்க வேண்டும் என…
-
- 3 replies
- 646 views
-
-
கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்களை அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 297 views
- 1 follower
-
-
ஒவ்வொரு நாளும்... 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள், கொல்லப் படுகின்றனர்! ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மேற்கத்திய பீரங்கி அமைப்புகள் தேவை என அவர் மேலும் கூறினார். ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ரஷ்யப் படைகள் அணுசக்தி அல்லாத அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. கனரக பீரங்கி, பல ரொக்கெட் ஏவுதள அமைப்புகள் மற்றும் விமானப் போக்குவரத்து…
-
- 0 replies
- 240 views
-
-
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்திலுள்ள ஒஷாவா என்ற நகரத்தில் உள்ள ஒர் மிகப்பெரிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அதன் அருகில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல் முதலியவற்றை இறுக்கமாக மூடி, புகையினில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஒஷாவா நகரத்தில் McAsphalt Industries Limited on Farewell Street near Harbour Road என்ற தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கரமாக தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்., ஒன்பது தீயணைப்பு வண்டிகளில் வந்த 39 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து காரணமாக அந்த பகுதியில் பல கிலோமீட்டர் வரையில் ஒரே புகைமண்டலமாக காணப்படுகிறது. …
-
- 1 reply
- 533 views
-
-
ஒஸ்கர் பிஸ்டோரியஸ்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு …
-
- 0 replies
- 460 views
-
-
ஒஸ்கார் பிறிஸ்டோரியஸ் மீது கொலைக் குற்றச்சாட்டு நிரூபணம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தென்னாபிரிக்க தடகள வீரரான ஒஸ்கார் பிறிஸ்டோரியஸ் வேண்டுமென்றே தனது நண்பியைக் கொலை செய்தார் என்று தென்னாபிரிக்க மேன்முறையீட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நண்பியான ரீவா ஸ்டீன்கம்பை, பூட்டப்பட்டிருந்த கதவினூடாக பிறிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் உள்நோக்கமற்ற கொலையையே புரிந்தார் என தீர்ப்பு வழங்கப்பட்டு, ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ஒரு வருட சிறைத்தண்டனையின் முடிவின் பின்னர் அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளார். …
-
- 0 replies
- 709 views
-
-
ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை - இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து Published By: RAJEEBAN 29 JUL, 2025 | 10:41 AM ஒஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனியர்களை பற்றிய குறுந்திரைப்படத்தை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றிய பாலஸ்தீனர் ஒருவர் மேற்கு கரையில் யூதகுடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ஒடே முகமத் ஹடாலின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள கிராமமொன்றில் இஸ்ரேலிய குடியேற்றவாசியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் ஹடாலின் தனது செயற்பாடுகளால் மிகவும் பிரசித்தமானவர். மசெவெர் யட்டாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீ…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 02:28 PM ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்ட் என்ற விவரணச் சித்திரத்தின் இயக்குநரை hamdan ballal இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். ஹம்டான் பலாலின் வீட்டை முகக்கவசம் அணிந்த யூத குடியேற்றவாசிகள் தாக்கியதை தொடர்ந்தே இவரை இஸ்ரேலிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். மேற்குகரையில் கிராமங்கள் அழிக்கப்படுவதை பதிவு செய்த இயக்குநர்களில் ஒருவரான ஹம்டான் பலாலை 15க்கும் மேற்பட்ட யூத குடியேற்றவாசிகள் முகக்கவசம் அணிந்தவாறு தாக்கினார்கள் என இந்த சம்பவத்தை நேரில் பார்த்த யூத அமெரிக்க செயற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். ஹெப்ரோனின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் பாலஸ்தீனியர்களை நோக்கி கற்களை வீசதொடங்கினார்கள், ஹம்டானின் வீ…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
ஒஸ்ரேலிய சீன பல் முனைப் போட்டி -வேல் தர்மா 15 Views அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது. அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழங்களை சீனா நிறுத்தப் போவதாக 2016இல் அறிவித்தது. பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் சீனாவிற்கு பயணம் செய்து அமெரிக்காவுடனான தமது நட்பை “விவாகரத்து” செய்வதாக அறிவித்தார். பின்னர் சீனா பிலிப்பைன்ஸ்லி இருந்து அதிக வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதுடன் பிலிப்பைன்ஸில் 24பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் அ…
-
- 0 replies
- 572 views
-
-
ஒஹியோ மாநில பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் காயம் அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் கொலம்பஸில் அமைந்துள்ள ஒஹியோ மாநில பல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸ். அமெரிக்காவின் 15-வது மிகப்பெரிய நகராமான இங்கு ஒஹியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழத்தில் இன்று காலை (அமெரிக்க நேரப்படி) துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் அபாய கட்டத்தில் இருந்து மீண்டு விட்டனர். மற்றவர…
-
- 1 reply
- 335 views
-
-
உசிலம்பட்டியில் ஸ்டாலின்அழகிரி கோஷ்டி பயங்கர மோதல் அடிதடி, 'மிதியல்' ஏப்ரல் 11, 2006 உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டசபைத் தொகுதியில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பெரும் வன்முறை மூண்டது. ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு நாறினர். உசிலம்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக, பார்வர்ட் பிளாக் (வல்லரசு பிரிவு) தலைவர் கதிரவன் போட்டியிடுகிறார். இவருக்கு அழகிரியின் முழு ஆதரவு உள்ளது என்பதால் சீட் கிடைக்காத ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். இத்தொகுதி திமுகவுக்கே கண்டிப்பாக கிடைக்கும் என ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டியன், அவரது அப்பா ராமசாமி ஆகியோர் எதிர்பார்த்திருந்தனர். இருவரும் சீட் …
-
- 1 reply
- 953 views
-
-
ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் சென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராக களமிறங்கிவிட்டனர். காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர்; இலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர்? முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்கள…
-
- 1 reply
- 847 views
-
-
ஓ பக்கங்கள் நன்றி : குமுதம் ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா? `மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது. உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர…
-
- 0 replies
- 749 views
-
-
*சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும். o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது. ம.ஞானபிரகாஷ்,
-
- 9 replies
- 1.8k views
-
-
ஓகஸ்ட் 31க்குப் பின்னர்... அமெரிக்கா, தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது- தலிபான்கள் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க விமானங்களில் 10 ஆயிரத்து 400 பேரும் அதன் 61 நட்பு நாட்டு விமானங்கள் மூலம் 5 ஆயிரத்து 900 பேரும் காபூலை விட்டு வெளியேறினர். மேலும் பல ஆயிரம் பேர்களை வெள…
-
- 0 replies
- 323 views
-
-
அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரின் புறநகர்ப் பகுதிகளின் ஊடாக மாபெரும் டொர்னேடோ சுழற்காற்று வீசியதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய பக்கங்கள் படங்களில்: டொர்னேடோவின் கோரத் தாண்டவம் உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. இந்த டொர்னேடோவில் சிக்கி அழிந்த ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றின் பிள்ளைகள் இருபது பேரும் இறந்தவர்களில் அடங்குவர். மூன்று அடி உயரத்துக்கு கிடக்கும் இடிபாட்டுக் குவியல்களின் அடியில் வேறு பல மாணவர்களும் சிக்குண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்கள் சக…
-
- 0 replies
- 518 views
-
-
பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதை உலகிற்கு எடுத்துக் காட்டிய நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஷெர்வுட் ரோலண்ட், 84, நேற்று காலமானார்.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள், பூமியில் நேரடியாகப் பட்டுவிடாமல் ஒரு வலையைப் போல் பாதுகாத்து வருவதுதான் ஓசோன் மண்டலம். இந்த மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானி பால் கிரட்ஸனின் ஆய்வின் அடிப்படையில், ரோலண்டும், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மரியோ மொலினாவும் மேலும் சில ஆய்வுகளை நடத்தினர். வீடுகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு ஸ்பிரே பொருட்கள் மூலம் வெளியேறும் குளேரோபுளோரோகார்பன் என்ற வேதிப் பொருள், இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வெளியேறினால், அது ஓசோன் மண்டலத்தைச் சீர் குலைத்து பூமியின் அழிவு…
-
- 0 replies
- 377 views
-
-
ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் விடுதி ஊழியர் சுட்டுக்கொலை August 19, 2019 விடுதியில் ஓடர் செய்த உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஒருவர் விடுதி ஊழியரை சுட்டுக்கொன்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் உள்ள மிஸ்ட்ரல் என்ற விடுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உணவு வரத் தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் தர்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் துப்பாக்கியால் சுட்டதால் தோள்பட்டையில் காயமான 28 வயதான விடுதி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துளார். இதனையடுத்து வாடிக்கையாளர் அங்கிருந்து த…
-
- 0 replies
- 487 views
-
-
ஓடி ஒளிக்க முயன்ற தமிழக தலைவர்களை போட்டியிடுமாறு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு! [Friday, 2014-03-14 18:21:55] தமிழ்நாட்டில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறது. மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்த போது, வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பிடிக்க கடும் போட்டி இருந்தது. இந்த முறை தனியாக நிற்பதால் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பலமுறை தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றவர்கள், பல்வேறு பதவிகளை வகித்தவர்கள், மந்திரிகளாக, எம்.பி.க்களாக இருப்பவர்கள் கூட தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தயங்குகிறார்கள்.மத்திய மந்திரி ஜி.கே.வாசன், ‘மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். …
-
- 5 replies
- 524 views
-
-
தட்சிணாமூரத்தி : தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. வேலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும் நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும். கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடு…
-
- 1 reply
- 1k views
-
-
முசாபர்பூர் (பீகார்) பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த 22 வயது பெண். இவரது கணவர் அமித். இவர்களுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. கணவர் அமித் நேபாளத்தில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அமித் தனது குடுமபத்துடன் உள்ள தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தார். கடந்த சில மாதங்களாக போனிலும் தொடர்பு கொள்வது இல்லை. இந்த நிலையில் மனைவி வேறு ஒரு மொபைல் நம்பரில் அமித்துடன் வேரு ஒரு இளம்பெண் பேசுவது போல் தொடர்பு கொண்டார். இதை அறியாத அமித் தொடர்ந்து இளம் பெண்ணுடன காதல் வசனங்கள் பேசி வந்தார். கடந்த 6 மாதங்களாக இளம் பெண்ணுடன் பேசி வந்துள்ளார். 6 மாதங்களும் தான் பேசுவது தான் பிரிந்துவந்த மனைவி என்பதை அமித் உணர தவறினார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை உத்தரபிரதேச மாநிலம் கோ…
-
- 7 replies
- 930 views
-
-
ஓடு பாதையில் இருந்து விலகி மண்ணில் சிக்கிய டெல்லி விமானம்: 169 பயணிகள் உயிர் தப்பினர் புதுடெல்லி, ஏப். 9- தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று டெல்லி வந்தது. 169 பயணிகள் இருந்தனர். சர்வதேச விமான நிலையத்தில் காலை 6.26 மணிக்கு தரை இறங்கியது. அப்போது விமானத்தின் சக்கரங்களை இயக்கும் கியர் சரியாக வேலை செய்ய வில்லை. இதன் முன் சக்கரத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டது. இதனால் விமானம் ஓடு பாதையைவிட்டு விலகி மண்ணில் ஓடி நின்றது. ஓடு பாதையைவிட்டு விலகி ஓடினாலும் விமானம் வேறு எந்த பொருளிலும் மோதவில்லை. நிலை தடுமாறி கவிழவும் இல்லை. சக்கரங்கள் மண்ணில் சிக்கி அப்படியே நின்று விட்டன. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிர் …
-
- 0 replies
- 620 views
-