உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
“காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு! இந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் என்.டி.ரி.வி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகள் எவையும் கூட்டிணையாத நிலையில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் லோக்சபா தேர்தலில், தற்போதையை எதிர்கட்சியான பாரதீயே ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் பாரதீயே ஜனதா கட்…
-
- 7 replies
- 836 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கைஅதிகரிப்பு படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2000 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் சிறையில் இருக்கக்கூடிய பெண்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஷி ஜின்பிங்யுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை படத்தின் காப்புரிமைGETTY IMAGES சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பயணத்தின் இரண்டாவது நாளில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்த…
-
- 0 replies
- 591 views
-
-
காலநிலை மாற்றம்: ஆடு, மாடுகள் ஏப்பம் விட்டால் வரி – நியூசிலாந்தின் புதிய திட்டம் 14 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையானவற்றில் ஒன்றைச் சமாளிக்கும் முயற்சியில், செம்மறி ஆடுகள், மற்றும் மாடுகளை வளர்ப்போருக்கு வரி விதிக்கும் திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது. விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவுக்கு வரி வசூலிக்கும் முதல் நாடு இதுதான். சுமார் 50 லட்சம் மக்கள்தொகை உள்ள நியூசிலாந்தில் சுமார் ஒரு கோடி கால்நடைகள் மற்றும் 2.6 கோடி செம்மறி ஆடுகள் உள்ளன. நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் கி…
-
- 1 reply
- 325 views
- 1 follower
-
-
லண்டனுக்கு வந்த திமிங்கிலம் தேம்ஸ் நதியூடாக லண்டனின் மத்திய பிரதேசத்திற்குள் 5 மீற்றர் நீளமான திமிங்கிலம் உட்பிரவேசித்துள்ளது. வழக்கமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியின் ஆழ்கடல் பிரதேசங்களில் சிறு கூட்டமாக காணப்படும் இந்த சிறிய வகை திமிங்கிலம் தேம்ஸ் நதிக்கு வந்தது அதிசயமாக கருதப்படுகின்றது. இந்த அரிய காட்சியை காண தேம்ஸ் நதியருகே நேற்று பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். இதனை பாதுகாப்பான முறையில் மீண்டும் கடலுக்கு அழைத்து செல்வதற்காக முயற்சியில் கடல் வாழ் உயிரினங்களை காக்கும் அமைப்பு ஈடுபட்டுள்ளது. நேற்று இந்த செய்தியே பிரத்தானிய தொலைக்காட்சிகளில் பரபரப்பான விடயமாக இருந்ததுடன் பல தொலைக்காட்சிகளில் திமிங்கிலம் பயணம் செய்வதை நேரடி ஒளிபரப்பாக காண கூடியதாக இருந்தது. …
-
- 21 replies
- 3.9k views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய இந்து கோடீஸ்வரர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டியை பிபிசி நிருபர் ஜுபைர் அஹ்மத் சந்தித்து உரையாடினார். நான் ஜன சங்கத்தை சேர்ந்தவன். என்னுடைய ஜனாசங்க பின்னணியைப் பற்றி நீங்கள் கேட்கவேயில்லை என்று சொல்கிறார் அபுதாபியில் வசிக்கும் இந்திய மருத்துவர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி. ஜனசங்கத்துடனான அவரது தொடர்பைப் பற்றி நான் கேட்பதற்கு முன்பே அவர் இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டார். பில்லியன்கணக்கான டாலர்களுக்கு அதிபதியான அவர், முஸ்லிம்களுக்காக மசூதி ஒன்றை கட்டிய முதல் ஜனசங்க உறுப்பினராக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அபுதாபியில் உள…
-
- 0 replies
- 619 views
-
-
நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல் உக்ரைன் நாட்டில் ரஷியா திடீரென ஊடுருவி போரை துவங்கியதைத் தொடர்ந்து, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று கருதிய பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன. ஆனால், அவை நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அந்நாடுகளுக்குக் கிடைக்கும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், ‘ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்’ என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்…
-
- 0 replies
- 265 views
-
-
உங்கள் தொலைக் காட்சியில் தெரியும் நிகழ்ச்சிகள் தரக்குறைவாக இருந்தால், அதற்கான பெரும் பொறுப்பு சன் குழுமத்தைச் சாரும். மாற்றத்தை தோற்றுவிக்கச் செய்யும் ஆற்றலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், வணிக நோக்கமும், கட்சி சார்பும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படாமல், மக்களுக்கு நல்லது என்றுபடக் கூடிய நிகழ்ச்சிகளாக அளிக்காதது அவர்களின் தோல்வியே. இரவு 9.30 மணி நிகழ்ச்சிதான் மிகப் பிரபலமானதாம். இந்தியில், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் மக்களைக் கவரும் வண்ணம் தொடராக்கிக் காட்டியது போல, தமிழின் காவியங்களைக் காட்ட ஏன் சன் டிவி முன் வரவில்லை. தேவைப்பட்டால், வணிகம்தான் முக்கியம் என்பது, மற்ற நேரங்களில் தமிழனின் பெருமை என்பது என்று இரட்டைப் பேச்சுதானே அவர்களுக்கு வருகிற…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஐ.நா./புதுடெல்லி: இந்தியாவில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு நடத்திய ஆய்வில், உலகம் முழுவதும் 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் சுமார் 5 கோடியே 80 லட்சம் பேர் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளதாகவும், இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா 10 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக குறைந்துள்ள…
-
- 0 replies
- 374 views
-
-
சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்! டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார். இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வ…
-
- 0 replies
- 968 views
-
-
‘பணக்கார முதல்வர் யார்?’: மாநில முதல்வர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - 'பணக்கார முதல்வர் யார்?' இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சாமானியர்களிடம் மட்டும் இல்லை, மாநில முதல்வர்கள் மத்தியிலும் நிலவுகிறது என்று விவரிக்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவுகளை ஆதாரம் காட்டி வெளிவந்துள்ள தி இந்து நாளிதழ் செய்தி. தேசத்தின் ஏழை முதல்வருடன் ஒப்பிடுகையில் தேசத்தின் பணக்கார முதல்வர் 680 மடங்கு செல்வந்தராக உள்ளார் என்கிறது அந்த செய்தி. நாட்டின் பணக்கார முதல்வர் தெலுங…
-
- 0 replies
- 533 views
-
-
உக்ரைனுக்கு... அமெரிக்கா, 600 மில்லியன் டொலர்கள்... இராணுவ ஆயுத உதவி! ரஷ்யாவுக்கு எதிராக போரிட, உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனாதிபதி வரைவு ஆணையத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உதவியை அங்கீகரித்தார். இது அமெரிக்க பங்குகளில் இருந்து அதிகப்படியான ஆயுதங்களை மாற்றுவதற்கு ஜனாதிபதியை அனுமதிக்கும். இந்த தொகுப்பில் ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ரொக்கெட் சிஸ்டம்ஸ் (ஹிமார்ஸ்), நைட் விஷன் கண்ணாடிகள், கிளேமோர் கண்ணிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் கருவிகள், 105மிமீ பீரங்கிச் சுற்றுகள் மற்றும் 155மிமீ துல்லியமான வழிகாட்டப்பட்ட பீரங்கிச் சுற்றுகள் ஆகியவை அடங்கும் என்று பெ…
-
- 0 replies
- 156 views
-
-
பாகிஸ்தானில் கடும் மழையால் பாலம் இடிந்து வீழ்ந்து 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100 இற்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம் தான் இந்த மழையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மர்தான் நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலத்தை தொட்டபடி சென்றது. இந்த பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அந்த பாலம் திடீர் என்று இடிந்து விழுந்தது. பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் 100 இற்கும் மேற்பட்டவர்கள…
-
- 0 replies
- 675 views
-
-
உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர் ரசாயன ஆயுதங்கள…
-
- 0 replies
- 293 views
-
-
உடையால் பற்றி எரியும் ஈரான் அமெரிக்கா வரை எதிரொலித்த 'ஹிஜாப்' By VISHNU 29 SEP, 2022 | 01:18 PM குமார் சுகுணா மதம் சார்ந்த விடயங்கள் குறித்த மதங்களை பின்தொடர்பவர்களின் நம்பிக்கைகளுக்கு உரியது அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆயினும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கட்டி காப்பாற்றப்படும் சில நம்பிக்கைகள் கால மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் அடையதான் செய்கின்றன. நமது மதங்கள் கலாசாரங்கள் மரபுகள் எல்லாமே பெண்களை விட ஆண்களை ஒரு படி மேல் வைக்கின்றனவாகவே உள்ளன. இவற்றிலும் பல விஞ்ஞான உண்மைகள் மறைந்து கிடப்பதனை நாம் மறுக்க முடியாது. அதனால்தான் சில விடயங்களை ஏற்றுக்கொள்கின்றோம். ஆயினும் ஒரு பெண் எந்த உடை அணிய வ…
-
- 6 replies
- 568 views
-
-
ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்படப்போவது எப்படி? டேவிட் பிரௌன் பிபிசி நியூஸ் விஷுவல் ஜர்னலிசம் குழு 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு அக்டோபர் 16ஆம் தேதி பெய்ஜிங்கில் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங்கின் பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கட்சியில் இரண்டு முறை மட்டுமே பொதுச் செயலாளராக இருக்க முடியும் என்ற விதி கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவர் பொதுச் செயலாளர்…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
அமெரிக்க தடைகளுக்கு எதிராக கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானம் ஐ.நா. சபையில் ஏற்பு! அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளுக்கு எதிராக, கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆய்வு செய்யும் கூட்டத்தில் சிங்கப்பூர், டொமினிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட 185 நாடுகளின் பிரதிநிதிகள், கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவு தெரிவித்தன. அதே சமயம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பிரேசில் மற்றும் உக்ரைன் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் கியூபா சமர்ப்பித்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டது. பிடல் காஸ்ட்ரோ தலைமையில…
-
- 0 replies
- 149 views
-
-
-
பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது? பட மூலாதாரம்,SOPA IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன. உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம். பிபிசி அலுவலகங்களி…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களுக்கு தலிபான்கள் அதிரடி உத்தரவு ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது விவாகரத்துக்கு உள்ளான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது இருந்த போதிலும் கட்டாயப்படுத்தப்பட்டு விவாகரத்து பெற்ற கணவருடன் வாழும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாகவும். அவர்கள் பற்கள் உடைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் தங்களுக்கு தலிபான் ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை என ஆப்கான் பெண்கள் குற்றம் சாட்டி …
-
- 10 replies
- 1.3k views
-
-
முதியோர் துஸ்பிரயோகத்திற்கு முடிவு கட்டுவோம்: காப்பர் சூழுரை தாங்கள் மீண்டும் ஆட்சிக்குவந்தால் முதியோர் துஸ்பிரயோகத்திற்கு முடிவுகட்டும் வகையில் நாட்டினது சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமென்றும் இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெள்ளியன்று காப்பர் அறிவித்திருக்கிறார். நாட்டிலுள்ள முதியவர்களைத் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்கள் யாரோ அவர்கள் கடுமையான தண்டனை வழங்கப்படுமாம். நாட்டினது மூத்த குடிமக்களான இவர்கள்தான் இந்தத் தேசத்தினைக் கட்டியெழுப்பியவர்கள். இதுபோல இந்த மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் எங்களது திட்டத்தினை முன்னெடுக்கும் போது மனதில் புதிய உறுதியும் உத்வேகமும் பிறக்கும்' என்றார் காப்பர். …
-
- 0 replies
- 681 views
-
-
"நான் அப்படிச் சொல்ல வரவில்லை": ரஷ்ய விவகாரத்தில் தலைகீழாக டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற அமெரிக்க உளவு நிறுவனங்களின் கருத்துக்கு மாறாக, ரஷ்ய அதிபரின் கருத்தை ஆதரித்துப் பேசிய டிரம்ப், அமெரிக்காவில், குறிப்பாக சொந்தக் கட்சியில் எழுந்த அதிருப்திகள், கண்டனங்களை அடுத்து, தான் அப்படிச் சொல்லவரவில்லை என விளக்கம் அளித்துள்ளா…
-
- 0 replies
- 351 views
-
-
இதே அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான் அன்று எம்மை வயது குறைந்த சிறுவர்களை படையில் இணைத்தார்கள், இவர்கள் பயங்கரவாதிகள் என்று நாளுக்கு நூறு முறை கண்டித்து தங்கள் ஊடகங்களில் கூச்சலிட்டு விட்டு , இன்று அதே சர்வதேசம் தான் இந்த சிறுவனின் உரிமைக்கு விளம்பரம் கொடுக்கின்றன . https://www.facebook.com/video/video.php?v=10152454926092217 "Now is not the time for school." This teenage Yazidi boy says he has taken up arms to protect his family from Islamic State militants. Months after thousands of Iraqi Yezidis escaped from Mount Sinjar, BBC News talks to civilians still trapped on the mountain: http://bbc.in/16eIkrP
-
- 0 replies
- 415 views
-
-
சென்னையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து விலகி மதிமுக ஆரம்பிக்கப்பட்டது. மதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நிற்க முடியாத சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி. பின்னர் அதிமுகவுடன் கூட்டணி. கைது செய்யப்பட்டது. அதிமுகவை விமர்சித்தது. மீண்டும் அதிமுகவிடம் கூட்டணி வைத்தது. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதிமுகவிடம் கூட்டணி வைத்தோம். கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் அதை விரும்பினார்கள். இதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். அசிங்கப்பட்டேன். தூற்றினார்கள். ஆனால் இந்த தேர்தலில் மதிமுக நேர்மையான…
-
- 4 replies
- 733 views
- 1 follower
-
-
கனடா- யு.எஸ்சில் மிச்சிக்கன் என்ற இடத்தில் பனி காரணமாக 123-வாகனங்கள் குவிந்ததால் வானவேடிக்கைகள் மற்றும் அமிலம் கொண்டு சென்ற டிரக் வண்டி தீப்பிடித்ததால் மிச்சிக்கன் மாநிலத்தில் கனடிய டிரக் சாரதி இறந்துவிட்டார். வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒட்டாவாவை சேர்ந்த டிரக் சாரதி இறந்து விட்டதுடன் குறைந்தது 23-பேர்கள் வரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என மிச்சிக்கன் மாநில பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளாகிய வாகனங்களில் பெரும்பான்மையானவை மேற்குபகுதி பாதைகளில் சென்றவை என கூறியுள்ளார். மோதலின் போது அபாயகரமான பொருட்கள் எரிந்துள்ளதாக விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் அதிகாரிகள் அருகாமையில் வசிக்கும் குடியிருப்பாளர்களை வீட…
-
- 1 reply
- 355 views
-
-
வெடிகுண்டு பயங்கரம் தப்பித்த மாணவர்கள்! அணுகுண்டு ஒன்று விமானத்தில் இருந்து போடப்பட்டது போன்ற பேரதிர்வு. காதுகளைப் பிளந்து கொண்டு சென்ற அந்தச் சத்தம் கேட்டு "குய்யோ முய்யோ' என்று மக்கள் அலறியடித்து ஓடினார்கள். பிய்ந்த சதைகள் மரத்தின் கிளைகளிலும், சாலைகளிலும் சிதறிக் கிடந்ததைப் பார்த்து ஸ்பாட்டிற்கு சென்ற அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் கலங்கி நின்றனர். ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்ட அந்தப் பயங்கர வெடி விபத்தில் விழுந்தது ஏராளமான சடலங்கள்.....! பலரும் காயம் அடைந்து கடுமையான உயிர் போராட்டத்தில் புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். திண்டிவனத்திலிருந்து கடந்து சென்றால் கூட்டேரிப்பட்டு என்ற கிராமம். அதற்கு அரு…
-
- 0 replies
- 836 views
-