உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிநி, தன்னுடைய கொள்ளுப் பேத்தியும், மூத்த மகன் மு.க. முத்துவின் பேத்தியுமான அமுதவல்லியின் திருமணத்தை இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கம் கவின் சோலை யில் நடத்தி வைத்தார். மு.க.முத்து - சிவகாமசுந்தரி தம்பதியரின் மகள் வழிப் பேத்தியும், சி.கே.ரங்கநாதன் - தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும், சண்முக ராஜேஸ்வரன் - சீ.சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் இன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கருணாநிதியின் புதல்வர்களும் அரசியலில் தி.மு.க அடுத்த வாரிசுக்கான போட்டியில் இருப்பவர்களுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மு.க.செல்வம் உள்ளிட்டோரும், பேரன்…
-
- 0 replies
- 408 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் சார்பில் ஜெர்மனியில் தாக்குதல் திட்டம்: 3 சிரியா நாட்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது வடக்கு ஜெர்மனியில் பல வீடுகளில் தீவிர சோதனை நடத்திய 200 போலிஸ் அதிகாரிகள், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பிற்காக தாக்குதல் நடத்த தயாரிப்பு பணிகளை மேற்கொண்டதாக, புலம் பெயர்ந்த மூன்று சிரியா நாட்டு பிரஜைகளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சமீபமாக, தெற்கு ஜெர்மனியில் தொடர் தாக்குதலில் 10 நபர்கள் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குள், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க வழக்கறிஞர்கள் , கைதான இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு வந்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் …
-
- 0 replies
- 333 views
-
-
ஜப்பானில் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன. கொடூர குற்றவாளிகளுக்கு கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மிக கொடூர குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பதை, ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும், இன்னமும், தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது. அந்நாட்டில் புதிய அரசு, கடந்த, டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு, நேற்று தான், முதல் முறையாக, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது…
-
- 0 replies
- 436 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மொசூலை மீட்பதற்கான இராக்கிய இராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி ஓட விழைவதால் உருவாகும் மனித நேய நெருக்கடி குறித்து தொண்டு அமைப்புக்கள் எச்சரிக்கை. * செவ்வாய் கிரகம் உங்களை வரவேற்கிறது; ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்கலம் சில மணி நேரத்தில் அங்கு தரையிறங்கவுள்ளது. * ஒரு பெரும் சுகாதார பிரச்சினைக்கு எளைமையான தீர்வு; ஆப்பிரிக்காவின் வைட்டமின் ஏ குறைபாட்டு பிரச்சினைக்கு தீர்வாகும் சர்க்கரைவெள்ளிக் கிழங்கு.
-
- 0 replies
- 590 views
-
-
-
- 0 replies
- 631 views
-
-
அகதிகளின் வழக்குளை விசாரிக்க அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம்? 32 Views அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவுஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து அவுஸ்திரேலிய உயர் நீத…
-
- 0 replies
- 364 views
-
-
பொஸ்டன் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ்காரருக்கும் அதிபர் ஒபாமாவுக்கும் ரிசின் எனப்படும் நஞ்சை தபால் உறைகளுக்குள் போட்டு அனுப்பிவந்த சந்தேக நபர் இன்று கைதனார். இன்றைய பொஸ்ரன் விசாரணைகள் அமெரிக்க ஊடகங்களுக்கு பலத்த குழப்பங்களை கொடுத்திருந்தது. காலை நேரம் அளவில் மரதன் ஓட்டப்போட்டி தாக்குதல் சூத்திரதாரி கைது செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்தில் அது பிழை என்று அறிவித்தார்கள். இப்போது ரிசின் அனுப்பிய சந்தேகநபர் கைதாகியிருப்பதாக அறிவிக்கிறார்கள். இது அதி பயங்கர எழு கொடிய நஞ்சுகளில் ஒன்றாகக் கருதப்படுவது. 9/11 பின்னர் அந்திராக்ஸ் என்ற விசக்கிருமிகளை ஒருவர் அனுப்பி வந்தார். அதைப் போல இ…
-
- 4 replies
- 801 views
-
-
கொலை செய்வதற்காக குழந்தையை தயார்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி சிரியாவின் டமாஸ்கஸ் நகர தற்கொலைத்தாக்குதலுக்கு 7 வயதான சிறுமியை தயார்படுத்தி அனுப்பிய சிறுமியின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் டிசம்பர் 16 ஆம் திகதி 7 வயது சிறுமி தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார். அவரது தந்தை அபு நிம்ர் அல் சுரி தாக்குதல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. சிறுமிகள் இருவருக்கும் இஸ்லாம் மதப்பெண்கள் அணியும் உடையை அணிவித்து அவர்களின் உடைகளுக்குள் தற்கொலை குண்டை பொருத்தி தாக்குதல் சூத்திரதாரியான சுரி குழந்தைகளுக்கு தற்கொலை தாக்குதல் …
-
- 0 replies
- 311 views
-
-
மக்களிடம் உண்மை பேசுமாறு சக அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் அறைக்கூவல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பமான சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் செயலாற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ், தனது சக ராஜிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். பதவி விலகிய ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டனின் தூதரான இவான் ரோஜர்ஸ் எதிர்பாராத வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஒரு கடிதம் மூலம் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 3) அறிவித்த இவான் ரோஜர்ஸ் தனது சக பணியாளர்களை மக்களிடம் உண்மையை பேசுமாறும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியே…
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின் ஆட்சியை இழந்த தலிபான்கள் பாகிஸ்தானின் பழங்குடி பகுதியான வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் தலைவர் வாலி-உர்-ரஹ்மான் அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் மூலம் நேற்று கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/a…
-
- 2 replies
- 417 views
-
-
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு.. கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம். - ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது. கருணா : சொக்கத்தங்கம் சோனியா. - தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்? கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம். - ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!! இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான். சோனியா : இலங்கைத் தமிழர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
மகராஷ்டிர மாநிலத்தலைநகர் மும்பையில் உள்ள மஹிம் நகர் கேடல் சாலையில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. மழை பெய்ததை அடுத்து இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிறைய பேர் அருகில் உள்ள பாபா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு படைப்பிரிவு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பையில் நேற்றிலிருந்து தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_co…
-
- 2 replies
- 406 views
-
-
மீண்டுமொரு பயணத்தடை ஆணையில் டிரம்ப் கையெழுத்து பிரதானமான முஸ்லீம் நாடுகள் சிலவற்றிலிருந்து வருவோரை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுக்கும் புதிய நிர்வாக ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக அதிபரின் அலுவலகம் கூறுகிறது. இது குறித்து அவர் வெளியிட்ட முந்தைய ஆணை அமெரிக்க நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடை ஆறு நாடுகளிலிருந்து புதிய விசா கோருவோரை பாதிக்கும். முந்தைய பட்டியலில் இடம்பெற்ற இராக், இப்போது புதிய பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுவிட்டது. அதன் பிரஜைகள் மீது அதிகரிக்கப்பட்ட சோதனைகளுக்கு அமெரிக்கா உடன்பட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. அமெரிக்காவை பய…
-
- 1 reply
- 383 views
-
-
போர் விமானத்தில் இருந்து, எதிரி இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி முடிந்தவுடன், 2015 ல் ஏவுகணை தாக்குதலில், உலகின் நம்பர் 1 இந்தியா தான் என, இந்த ஏவுகணை திட்ட இயக்குனர் ஏ.சிவதாணுபிள்ளை கூறினார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது: மூன்று டன் எடையுள்ள பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியை விட இரு மடங்கு வேகமாக சென்று, 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை, கடல், தரை வழியாக சென்று, தாக்கக்கூடியது. இது தற்போது, ராணுவம், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, போர் விமானத்தில் இருந்து, இந்த ஏவுகணையை செலுத்தி, எதிரி இலக்கை தாக்கும் வகையில், இதன் எடையை இரண்டரை டன்னாக குறைத்து, மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சுகோய் ரக போர் விமானங்களை மறுவடிவமைப்பு செய்யும் பணி…
-
- 11 replies
- 2.5k views
-
-
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த 22ம் தேதி லண்டனில் உள்ள புனித மேரி ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இங்கிலாந்து அரச வம்சத்தின் புதிய வாரிசை வரவேற்று நாடெங்கிலும் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் இங்கிலாந்து அரண்மனை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குட்டி இளவரசன் பிறந்த 22ம் தேதி இங்கிலாந்து நாட்டில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அரச முத்திரை பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களை அன்பளிப்பாக வழங்குவதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிவித்தது. இதற்காக 2013 வெள்ளி நாணயங்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 2 ஆயிரத்து 500 பெறுமானமுள்ள இந்த நாணயங்களை பெற விரும்புவோர் த…
-
- 11 replies
- 901 views
-
-
குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் ஜேர்மன் அகதிகள் முகாம் தீக்கிரை ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாமின் பெரும்பகுதி தீக்கிரையானதுடன் அகதிகள் சிலர் காயமுற்றனர். ஜேர்மனியின் வட பகுதியின் டன்கிர்க்கில் உள்ள கிராண்ட்-சிந்த்தே என்ற அகதி முகாமிலேயே உள்ளூர் நேரப்படி நேற்றிரவு இவ்வனர்த்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இந்த முகாமின் பல பகுதிகள் மரப் பலகைகளால் ஆனவை. இதனால் தீ எளிதில் பரவியது. இந்த முகாமில் சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குர்து இனத்தவர். எனினும், அண்மைக்காலமாக உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக அதிக எண்ணிக்கையிலான ஆப்கானிஸ்தான் அகதிகளும் இங…
-
- 0 replies
- 291 views
-
-
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 06:38 ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை. மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளு…
-
- 12 replies
- 4.2k views
-
-
ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு! - விரைவில் காங்கிரசில் இணைகிறார்!! on 26-08-2009 08:43 டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய். இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 பேர் திரண்டு புதுச்சேரி காங்கிரசாரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்…
-
- 13 replies
- 2.8k views
-
-
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்…
-
- 0 replies
- 344 views
-
-
பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு... 17 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்! கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை. நமது உணவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். தேசிய உணவு மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோள், முழு பிரித்தானியாவின் உணவு முறையின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது . விவசாயம் மற்றும் உற்பத்தி முதல் பசி மற்றும் நிலைத்தன்மை வரை. இது, அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் இறைச்சி நுகர்வு 30 சதவீதம் குறைய பரிந்துரைக்கிறது. லான்செட் பிளானட்டரி ஹெல்…
-
- 3 replies
- 366 views
-
-
பொதுவாக நான் மைக்கல் ஜக்சன் பாடல்களையும் நடனத்தையும் அதிகம் விரும்பி கேட்டதுமில்லை பார்த்ததும் இல்லை காரணம், இளையராஜா இசை மயக்கம் + ஜான் டென்வர் + லியோ செயர் + ரியோ + க்ளிஃப் ரிச்சர்ட் + ஃபில் காலின்ஸ் + சண்ட்டானா + பார்பரா + 3டிக்ரிஸ் + பில்லி ஜோயல் + எல்ட்டன் ஜான் + பீ ஜீஸ் + பீட்ல்ஸ் + இன்னும் பல கலைஞர்கள். அதில் அவர் மீது கூறிய குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வீசிவிட்டுப் போகும் எனவே புகழ் வந்தபின் அனைவரும் போடும் கூத்துக்களில் இவரின் கூத்து என்றே எண்ணினேன் நீதிமன்றத்தில் இவரை குற்றமற்றவர் என்று விடுவிக்கும் வரை. அவருடைய மரணம் என்னை கருத்து எழுதும் அளவுக்கு கூட தூண்டவில்லை இருந்தும் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது முதல் அவருக்கு மரியாதை செய்து அவர் உடலை அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
எரிமலைக் குழம்பு படிந்து ஜப்பானில் புதிய தீவு உருவானது! எரிமலைகள் தொடர்ந்து வெளியேற்றும் குழம்புகள் படிந்து டோக்கியோவின் தென்கிழக்கே புதிய தீவுத்திட்டு ஒன்று தோன்றியுள்ளதாக ஜப்பானியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மனிதர்கள் நடமாட்டம் அற்ற போனின் தீவுகள் என்று அழைக்கப்படும் ஒகசவாரா தீவுத்தொடரின் அருகில் நிஷிநோஷிமா கடற்கரையை ஒட்டியுள்ள கடற்பரப்பில் இந்த தீவு அமைந்துள்ளது.ஜப்பானின் கடலோரக் காவல்படை மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் ஆலோசகர்கள் இந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்தத் தீவு சுமார் 200 மீ விட்டம் கொண்டதாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையும் சேர்த்து டோக்கியோவிற்கு தெற்கில் உள்ள சுமார் 30 தீவுகளுடன் ஜப்பானும் எரிமலைகள் அதிக சீ…
-
- 2 replies
- 708 views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 242 views
-
-
லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை பாராட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தாலிபன் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு குறித்த செய்தியையும், கடைசி நாளன்று அவர் ஆற்றிய உணர்ச்சிமிகுந்த உரையும் விரிவாக வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள், அவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டின. அத்துடன் சச்சின் இல்லாத கிரிக்கெட் நிச்சயம் பிரகாசமாக இருக்காது என்றும் எழுதியிருந்தன. இந்நிலையில் சச்சினை பாராட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தாலிபன் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷாகிதுல்லா ஷாகித் என்ப…
-
- 1 reply
- 511 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான அரை இறுதி களமாக கருதப்பட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. இதனைத் தமிழகத்தில் கூட்டணி மாற்றங்களுக்கு வலுவான அடித்தளமும் போடப்பட்டு வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த இந்த வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் கருதுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் பாரதிய ஜனதா அணியில் இடம் பிடித்துவிட்டோமே என்று துண்டு போட்டு உட்கார்ந்திருக்கிறது மதிமுக.. இதை உறுதிப்படுத்துவிதமாகவே 4 மாநில தேர்தல் முடிந்த உடனேயே மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். http://tamil.oneindia.in/news/india/modi-wave-after…
-
- 1 reply
- 718 views
-