உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26713 topics in this forum
-
உலகளவில் பசிக் கொடுமையை ஒழிப்பதில் எதிர்காலத்தில் மனிதர்களால் உட்கொள்ளக் கூடிய பூச்சிகள் ஆற்றக் கூடிய பங்களிப்பை ஐ நா அறிக்கை ஒன்று முன்னிலைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 200 கோடி மக்கள் தமது உணவில் வெட்டிக் கிளி, வண்டு, எறும்பு உள்ளிட்ட பூச்சிகளை சேர்த்துக் கொள்வதாக ஐ நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது. பெரிய அளவில் பண்ணைகள் வைத்து தொழில் முறையில் பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேகமாக இனப் பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச் சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது. அதேநேரம் பூச்சியை சாப்பிடு…
-
- 3 replies
- 621 views
-
-
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார். இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இதன்போது அவரது உரையில், இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே! யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை …
-
- 0 replies
- 641 views
-
-
இலங்கை வீரர்கள் பங்குபற்றும் ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசு நடத்தாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, இந்தப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்தார். வரும் ஜூலை 3-ம் தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்றார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15074:asian-athletic-competition-and-from-chennai-to-pune&a…
-
- 0 replies
- 446 views
-
-
சுற்றுலாவுக்கா நயாகராவுக்கு வந்த போது தவறி நதியினுள் தவறுதலாக வீழ்ந்த 07 வயது தங்கையை காப்பாற்ற முனைந்து 17 வயது அண்ணணான இளைஞன் பலியாகியுள்ளார். தங்கை நதியினுள் வீழ்ந்தவுடன் இளைஞன் காப்பாற்றுவதற்காக நீரினுள் குதித்து ஒருவாறு தங்கையை மீட்டு கரையினுள் காத்திருந்த ஏனைய 3 சகோதரிகளிடம் ஒப்படைக்க முனையும் போது நதியில் ஏற்பட்ட திடீர் சுழலினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் போது அவர்களை மீட்க முனைந்த இன்னுமொரு 13 வயதான சகோதரியும் நீரினுள் இழுத்துச் செல்லப்படும் போது அங்கிருந்த மீனவர் ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆயினும் 17 வயதான இளைஞனை காப்பாற்ற முடியாது போய், 45 நிமிடங்களின் பின் நீரின் அடிப்பாகத்தில் இருந்து உடலை மீட்டுள்ளார்கள். http://www.ampalam.com/2013/06…
-
- 0 replies
- 574 views
-
-
ஈஃபிள் டவரை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க கண்ணாடி சுவர் இந்த வருடத்தின் இறுதிக்குள், சாத்தியமான பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து பாரிஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தை பாதுகாக்க, அதனைச் சுற்றி வலிமையான கண்ணாடி சுவர் நிறுவப்படவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த யூரோ 2016 கால்பந்து போட்டி நடைபெற்றபோது நிறுவிய உலோக வேலிகளுக்கு பதிலாக இந்த இரண்டரை மீட்டர் சுவர் அமைக்கப்படும் என நகரின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகரத்தின் மிக மதிப்பிற்குரிய இடங்கள் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட வேண்டும் என சுற்றுலாத் துறையின் துணை மேயர் ஷான் ஃப்ரான்சுவா மார்த்தின் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 381 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி வீழ்ச்சி! ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியா பொருட்களின் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 40.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இறக்குமதி 28.8 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் புதிய வர்த்தக விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது. கூர்மையான வீழ்ச்சி இருந்தபோதிலும், இது தற்காலிக காரணிகளின் விளைவாக இருக்கலாம் என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையில், மூன்றாவது முடக்கநிலை நடைமுறைக்கு வந்ததால், ஜனவரி மாத…
-
- 0 replies
- 350 views
-
-
2020ஆம் ஆண்டில் இறப்பு வீதம் ஏழு சதவீதமாக உயர்வு! 2020ஆம் ஆண்டில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதை விட 7 சதவீதம், அதிகமான இறப்புகளை பிரித்தானியா பதிவுசெய்துள்ளது. இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் காட்டுகின்றன. பிரித்தானியாவிற்குள், இங்கிலாந்தின் இறப்பு வீதம் ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த அளவை விட 8 சதவீதம், ஸ்கொட்லாந்தில் 6 சதவீதம், வடக்கு அயர்லாந்து 5 சதவீதம் மற்றும் வேல்ஸ் 4 சதவீதம் ஆகும். 2020ஆம் ஆண்டு இலையுதிர்கால அலைகளின் போது, போலந்து, ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான தரவுகள், இந்த ஆண்டு பிரித்தானியா மற்…
-
- 3 replies
- 422 views
-
-
கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் சவுதி இளவரசி மெஷேல் அலய்பான் என்பவரை போலீஸ் கைது செய்துள்ளது. 30 வயதுடைய கென்யா நாட்டுப்பெண் ஒருவரை வீட்டு வேலைக்காக அவரது விருப்பத்திற்கு விரோதமாக பலவந்தமாக வீட்டில் வைத்திருந்தார் என்பது இவர் மீதுள்ள குற்றசாட்டாகும். 42 வயதாகும் இந்த இளவரசி தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுவார் என்று கலிபோர்னியா போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பேசிய சம்பளத்தையும் கொடுக்காமல் அந்தக் கென்ய பெண்ணை உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்படுத்தியுள்ளார் இளவரசி. அதாவது கூடுதல் நேரம் வேலை வாங்குவது மற்றும் விடுப்பு என்பதே கிடையாது. வெளியில் செல்ல அனுமதியும் இல்லை!! கடைசியில் வீட்டை விட்டு தப்பித்து வந்த அந்த கென்ய பெண் …
-
- 1 reply
- 423 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், மொசூலில் இருந்தால் அழிவீர்கள் என்று இஸ்லாமிய அரசு என்று அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எச்சரிக்கை. நகரின் மேற்கு பகுதியை இராக்கிய இராணுவம் நெருங்குகின்றது. சீன அரச எதிர்ப்பாளர்கள் பலரை சிறையிலடைத்தது சென்ற ஆண்டின் சாதனைகளில் ஒன்று என்கிறார் சீன உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. சீன நாடாளுமன்ற உரையில் பெருமிதம். இந்தோனேஷிய நச்சுப்புகைக்கு காரணமான காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடும் செயற்பாட்டாளரின் முன்னெடுப்பு.
-
- 0 replies
- 238 views
-
-
மைக்கேல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடு இளவரசி டயனாவுக்கு அடுத்ததாக, உலகம் இதுவரை பார்த்திராத வகையில், அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக, மைக்கேல் ஜாக்ஸனின் சவ ஊர்வலம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும், டி.வி.பார்வையாளர்களும் அதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இளவரசி டயனாவின் சவ ஊர்வலத்தில் தான் அதிகம் பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள. 12 வருடங்களுக்கு முன் இறந்த டயனாவின் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்ள, சுமார் 2,50,000 பேர் ஹைடல் பார்க்கில் மட்டும் கூடி இருந்தார்கள். இது தவிர பிரபல அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரஸ்லே 1977 ல் இறந்தபோது 75,000 ரசிகர்கள் கூடியிருந்தார்க…
-
- 4 replies
- 1.9k views
-
-
உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு கேபரான்: உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள…
-
- 15 replies
- 1.3k views
-
-
குரங்கம்மை பாதிப்பு: அமெரிக்காவில் 200 பேரை தேடிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் 27 மாகாணங்களில் 200 பேருக்கும் மேற்பட்டோர் அரிய வகை குரங்கம்மையால் (Monkey pox) பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புள்ள 200 பேரைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் நைஜீரியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸிற்கு வந்த ஒரு நபர் மூலம் மக்களுக்கு இது பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்ட முதல் நபர் இவர்தான் என்று கருதப்படுகிறது. அந்த நபர் மருத்துவமனையி…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
உலகளாவிய ரீதியில் பாரிய இணையவழித் தாக்குதல் ; முடங்கின பல அரசாங்க அமைப்புகள் உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணையவழித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 99 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த இணையவழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரித்தானியாவின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால்…
-
- 2 replies
- 504 views
-
-
இன்றைய (23/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேன்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் பலி; 59 பேர் காயம்; இசை கேட்கச்சென்று உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இளம்பிராயத்தினரும் அடக்கம். * இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு மேன்செஸ்டர் தாக்குலதலுக்கு பொறுப்பேற்பு; 23 வயதுடைய நபர் இது தொடர்பில் கைது. * பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் சமாதானம் உருவாக்க தன்னால் முடிந்ததையெல்லாம் செய்வேன் என்று அறிவிப்பு.
-
- 0 replies
- 365 views
-
-
இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம் அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு, கடந்த 23ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு அமைய, வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். …
-
- 1 reply
- 687 views
-
-
ரஷ்ய அமைச்சர் யெவ்கேனீ பலி - தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபம் BBCCopyright: BBC யெவ்கேனீ ஸீனிட்செஃப்Image caption: யெவ்கேனீ ஸீனிட்செஃப் ரஷ்யாவின் அவசரகாலத்துறை அமைச்சர் யெவ்கேனீ ஸீனிட்செஃப், நோரீல்ஸ் என்ற இடத்தில் உள்ள செங்குத்தான பாறையில் கால் தவறி கீழே விழுந்த நபரை காக்கும் முயற்சியின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 55. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதி, ஏழு பிராந்தியங்கள் முழுமையாக நீளுகிறது. அந்த பிராந்தியத்தின் வளர்ச்சிப் பணிகளை கவனிப்பது யெவ்கேனீயின் பொறுப்பு. இந்த நிலையில அந்த பிராந்தியத்தில் ஆபத்து காலங்களில் மக்கள் எதிர்கொள்வது எப்படி என்ற ஒத்திகையில் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து சுமா…
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குதல நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவை எச்சரித்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, அதிபர் டிரம்பின் பயணத்தடைக்கு ஒரு பகுதி ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த தகவல்கள் மற்றும் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான எஹ்.எம்.எஸ் குவீன் எலிசபெத் கப்பல் சோதனைக்காக முதல் முறையாக கடல் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 303 views
-
-
7 தடவைகள் போர்மியுலா 1 காரோட்டப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற முன்னாள் காரோட்டப் பந்தய வீரர் மைக்கேல் ஷுமாக்கர் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் சற்று முன்னர் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள் - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3583#sthash.nmraM1Pc.dpuf F1 champion Michael Schumacher 'critical' after ski fall Michael Schumacher, seven-time Formula 1 world champion, is in "critical condition" after a ski ac…
-
- 2 replies
- 478 views
-
-
கனடாவானது 5,000 வரையிலான புதிய குடிவரவாளர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறது எனவும், இந்தப் புதிய குடிவரவாளர்கள் கனடாவில் வதிபவர்களின் பெ;றறோர்கள், மற்றும் தாத்தா, பாட்டி போன்றவர்களை ஏற்றக்கௌ;ள விரும்புகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட உறவினர்களை வரவழைப்பவர்கள் சில கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள் எனவும் தெரியவருகிறது. கனடிய குடிவரவுத்துறை அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இவ்வாறான நடவடிக்கையானது மிகவும் துரிதமான செயற்பாடாக இருக்கும் எனவும் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் காவலிருக்க வேண்டிய காலத்தின் அளவு குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார் எனக் கனடிய ஊடகமான சிபிசி செய்தித்தாபனம் வெள்ளிக்கிழமை அன்று தெ…
-
- 0 replies
- 260 views
-
-
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் இன்று தெரிவித்தார். http://www.maalaimalar.com/2014/01/08132805/Parliament-meets-for-the-first.html
-
- 0 replies
- 238 views
-
-
கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி. சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன. சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடு…
-
- 4 replies
- 3k views
-
-
ரஷ்யாவின் படையெடுப்புக்கு... எதிரான போராட்டத்தில், உக்ரைன் தனியாக இல்லை: பிரித்தானியா ஆதரவு! ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘விளாடிமிர் புடின் உக்ரைன் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் போது பிரித்தானியா அதை வேடிக்கை பார்க்காது. நாங்கள் கைவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் நிற்கிறோம். உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை அதிகரிக்க வேலை செய்யும் …
-
- 0 replies
- 179 views
-
-
ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார். இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை…
-
- 40 replies
- 2.6k views
-
-
விபத்துக்குள்ளாகி கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள, போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் நரம்பியல் பரிசோதனைகளின்போது அறிவுறுத்தல்களுக்கு பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவரால் கண்சிமிட்ட முடிவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டிசெம்பர் 29 ஆம் திகதி பிரான்ஸின், அல்ப்ஸ்மலையில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த மைக்கல் ஷூமாக்கர் பிரெஞ்சு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்துக்குள்ளான தினத்திலிருந்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ள மைக்கல் ஷூமாக்கரை கோமா நிலையிலிருந்து விழித்தெழச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, கோமா நிலையில் வைத்திருப்பதற்கு வழங்கப்படும் மருந்துக…
-
- 0 replies
- 383 views
-
-
மரியுபோல் நகரம் முற்றிலும் அழிப்பு – ரஷியா மரியுபோலின் முழு நகர்ப்புறமும் உக்ரைனிய படைகளில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது, மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என ரஷியா கூறுகிறது. data:;base64,<svg xmlns= மரியுபோல் நகரின் முழுப் பகுதியும் உக்ரைனின் படைகளிடம் இருந்து அகற்றப்பட்டது என்றும் மேலும் சில வீரர்கள் மட்டுமே அதன் புறநகரில் உள்ளனர் என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. மரியுபோலில் எவரும் நுழையவோ புறப்படவோ தடை விதிக்கப்படலாம் என்று அந்த நகரின் முழு கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுள்ள ரஷிய படையினர் முடிவு செ…
-
- 3 replies
- 467 views
-