Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமரின் இவ்விஜயத்தின் போது இராணுவ உதவிகள் உள்ளிட்ட பலவகையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்திய பிரதமர் ஒருவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீனா இந்த சிறிய தீவுகளில் துறைமுகங்கள், மின்நிலையங்கள், வீதிகளை அமைத்துள்ளதுடன் அதன் கடற்படையும் இந்து சமுத்திரத்திற்குள் தனது சுயலாபம் கருதி ஆழமாக ஊடுருவியுள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இலங்கை துறைமுகத…

    • 6 replies
    • 433 views
  2. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது பாமக சென்னை, ஜூலை.27: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பாமக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் அதன் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பலரும் திமுக கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தினர். பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன் பேசுகையில், ஈழத் தமிழர்களுக்கு திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. தமிழர்களின் நலனுக்காக வாழ்த்து கொண்டிருக்கும் கட்சி பா.ம.…

  3. மும்பை: தமிழர்களின் 'தாராவி' மாறுகிறது- குடிசைகளுக்குப் பதில் அடுக்கு மாடி வீடுகள் மே 29, 2007 மும்பை: தமிழர்கள் அதிகம் வசிக்கும், ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி விட்டு அங்கு வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தர மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள இடம்தான் தாராவி. முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய தாராவியில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியாக இது கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். அவர்களில் திருநெல்வேலி, தூத்…

  4. கனடா- ஒன்ராறியோவின் புதிய பாலியல் கல்வி பாடத்திட்டத்தினால் கோபமடைந்த ஆயிரக்கணக்கான பெற்றோர் செவ்வாய்கிழமை குயின்ஸ் பார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை தாங்கிய வண்ணம் காணப்பட்டனர். மாகாண பாரளுமன்ற பிசி உறுப்பினரான ஜக் மக்லரனும் பேரணியில் கலந்து கொண்டார். புதிய திட்டத்தின் பிரகாரம் 3-ம் வகுப்பு மாணவர்கள் ஒரே- பாலின உறவுகள் கல்வியை பெறுவர். 4-ம் வகுப்பு மற்றும் மேற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் கொடுமைப் படுத்துதலின் ஆபத்துக்கள் குறித்தும் 9-ம் வகுப்பில் பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் செய்திகளை செல் பேசி மூலம் அனுப்புவதன் ஆபத்துக்கள் குறித்தும் படிப்பார்கள் என கூறப்படுகின்றது. பூப்படைதல் பற்றிய பாடங்கள் 5-ம் வகுப்பில் இர…

  5. ஆப்கானிஸ்தானில் யுஎஸ் தூதரகம், நேடோ தலைமையகம் மீது தலிபான்கள் பயங்கர தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேடோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர். ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர். பகல் 1 மணியளலில் ஆரம…

  6. 'வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி அதிகாரங்கள் வேண்டும்' ஸ்காட்லாந்து பிராந்தியத்துக்கு புதிய அதிகாரங்களை கோரி ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சியின் (எஸ்என்பி) தலைவி நிக்கோலா ஸ்டர்ஜன் புதிய அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த வாரம் நடந்த பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில் ஸ்காட்லாந்தில் எஸ்என்பி கட்சி பெருவெற்றி பெற்றது. வரி அறவீடு மற்றும் சமூகநல நிதி போன்ற அதிகாரங்களை ஸ்காட்லாந்துக்கு பகிர்ந்தளிப்பதற்கு பிரதமர் டேவிட் கமெரன் முன்னிரிமை அளிக்க வேண்டும் என்று நிக்கோலா ஸ்டர்ஜன் கோரியுள்ளார். டேவிட் கமரெனின் பழமைவாதக் கட்சி (கன்செர்வெட்டிவ்) தனிப் பெரும்பான்மை பலத்துடன் பிரிட்டனில் ஆட்சியமைத்துள்ளது. ஆனால், பிரதமர் கமெரனின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பு தெரிவ…

    • 0 replies
    • 252 views
  7. ஸ்பானியாவில் எருமை மாட்டு போர் முடிவடைகிறது ஸ்பானியாவில் நடைபெறும் மாடுகளை நோக்கி சிவப்புச் சீலையை காண்பித்து கூரிய ஈட்டியால் குத்தி வதைத்துக் கொல்லும் முறை இன்றுடன் முடிவடைவதாக ஸ்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று ஸ்பானியாவின் பார்சிலோனாவில் நடைபெற்ற இறுதி எருமைமாட்டு போர் விளையாட்டில் ஆறு எருமைகள் கொல்லப்பட்டன. எருமைக் கொலைக்கு பெயர்போன வடகிழக்கு ஸ்பானியாவின் கற்றலோவில் மேற்கொண்டு இந்தப் போட்டி நடாத்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 180.000 பேர் இந்த மிருகவதை செயலை நிறுத்துங்கள் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. அதேவேளை மற்றய பகுதிகளில் இந்த எருமை அடக்கும் விளையாட்டு தொடர்ந்து நடைபெறும் என்ற…

  8. ஏவுகணைகளை பாதுகாக்க விமான நிலையங்களை பயன்படுத்துகிறது வடகொரியா:ஐ.நா குற்றச்சாட்டு அணு ஆயுதங்களை தயாரித்து உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வந்த வடகொரியா, சமீபத்தில் அமெரிக்காவுடன் இணக்கமான உறவை காட்டியது. இதன் தொடர்ச்சியாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சந்தித்தனர். குறித்த சந்திப்பில்,வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார். இச் சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. …

  9. ஆசியாவிலேயே இந்திய அதிகார முறைமை தான் மிக மோசமானது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 10 இடங்களில், இந்தியாவுக்கு 9.21 வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில், வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறியுள்ளன. ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஆசிய நாடுகளில், எந்த நாட்டில் அதிகார முறைமை சிறந்த முறையில் செயல்படுகிறது, எந்த நாட்டில் மிக மோசமாக செயல்படுகிறது என்பதைக் கண்டறிய சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதன் படி, மொத்தம் 10 இடங்களில், 2.25 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மலேசியாவை அடுத்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந…

  10. டெல்லி: வங்கதேசத்தைச் சேர்ந்த பிளாக் ஹாட் ஹேக்கர்ஸ் எனும் குழுவினர் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் இணையதளம் உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை முடக்கி, கிட்டத்தட்ட ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தங்களது இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அக்குழு, வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நியாயமற்ற படுகொலைகளுக்கு பழிவாங்கும் வகையிலேயே www.bsf.nic.in உட்பட 20 ஆயிரம் இந்திய இணையதளங்களை சீர்குலைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் தமது பேஸ்புக் தளத்தில், "இந்தியாவுடன் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் கொடூரமான கொலைகளே இப்படி செய்ய தூண்டியது" என்று குறி…

  11. "எண்ணெய்த் தாங்கிக் கப்­பலை தடுத்து வைத்­துள்­ளமை அச்­சு­றுத்தும் செயற்­பாடு" ஈரா­னிய எண்ணெய்த் தாங்கிக் கப்­பலை பிரித்­தா­னியா கடந்த வாரம் முதல் தடுத்து வைத்­துள்­ளமை அச்­சு­றுத்தும் தவ­றான செயற்­பாடு என ஈரா­னிய பாது­காப்பு அமைச்சர் அமீர் ஹதாமி நேற்று திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்ளார். அவ­ரது உரை அந்­நாட்டு அர­சாங்க தொலைக்­காட்சி ஊட­கத்தில் நேரடி ஒளிப­ரப்புச் செய்­யப்­ப­ட்­டது. மேற்­படி ஈரா­னிய எண்ணெய் தாங்கிக் கப்பல் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை­களை மீறி கடந்த வியா­ழக்­கி­ழமை சிரி­யா­வுக்கு எண்­ணெயை எடுத்துச் செல்ல முயற்­சித்த போது பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்டு ஐபீ­ரிய தீப­கற்­பத்­தி­லுள்ள பிரித்­த…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்) எழுதியவர், ரூஹான் அகமது பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது. பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்…

  13. நோர்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பொதுமக்களை கொன்ற சம்பவத்தில் குற்றஞ்சாட்ட நபர், தன்மீது சுமத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத நடவடிக்கை மற்றும் கூட்டுக் கொலைகளுக்கான' குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் ஆந்தூஸ் பேரிங் பிரேய்விக் குண்டுத்தாக்குதல் மற்றும் அதன்பின்னர் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பல கலாச்சாரங்களிலிருந்தும் இஸ்லாத்திலிருந்தும் நோர்வேயை பாதுகாப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் நேற்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது எல்லோரும் எப்படி கொல்லப்பட்டார்கள், மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தபோத…

    • 1 reply
    • 419 views
  14. ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிப்பு! ஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் இந்த நவீன கருவியினை தயாரித்துள்ளது. அத்துடன், குறித்த அதிநவீன கருவியினை 16.28 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்க இராணுவம் கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அவற்றை வீழ்த்த முடியும் என கூறப்படுகின்றது. இதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என அமெரி…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES …

  16. அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், வெறிநாய் போல் அடித்து கொள்ளபட வேண்டுமென வடகொரிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா-அமெரிக்கா இடையேயான உறவு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங்கை கொலைகார சர்வாதிகாரி என, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள வடகொரிய அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம், அதிகாரத்தின் மீது ஆசைகொண்ட ஜோ பிடன் போன்ற வெறிநாயை விட்டுவைப்பது பலருக்கும் ஆபத்தானது, தாமதிக்காமல் அவரை அடித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/88830/அமெரிக்காவின்-முன்னாள்துணை-அதிபரை-வெறிநாய்-போல்அடி…

  17. Published By: RAJEEBAN 19 FEB, 2025 | 10:36 AM ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைனே காரணம் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் யுத்தத்தை ஆரம்பித்திருக்க கூடாது என தெரிவித்துள்ளார். ரஸ்ய ஜனாதிபதியை தான் சந்திக்ககூடும் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சவுதிஅரேபியாவில் அமெரிக்க ரஸ்ய அதிகாரிகளின் சந்திப்பு இடம்பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனிற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் என்னிடம் இருப…

  18. ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புடன், இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (27) சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் முன்னதாக சந்தித்திருந்த போதிலும், 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஆறாவது தலைவர் ஸ்டார்மர் ஆவார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரேனின் வெள்ளை மாளிகை விஜயத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பயணம் அமையவுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு…

  19. மகிழ்ச்சிக்கு ஒரு அமைச்சகம், சகிப்புத்தன்மைக்கு ஒன்று - ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் மகிழ்ச்சிக்காக ஒரு அமைச்சகம் , ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உருவாகியிருக்கிறது. மகிழ்ச்சிக்கான புதிய அமைச்சகத்தை அறிவித்தார் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் அரசின் அமைச்சகங்களில் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக வரும் இதனை அறிவித்த ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டோம், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான துணை அமைச்சர் , சமூக நலன் மற்றும் திருப்திக்கான கொள்கைகளை வகுப்பார் என்றார். சகிப்புத்தன்மைக்கான புதிய துணை அமைச்சர் பதவி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பல அமைச்சரவைகள் ஒன்றிண…

  20. Published By: RAJEEBAN 03 APR, 2025 | 02:22 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. கத்தார் குறித்து இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும், இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் இஸ்ரேலின் அரசியலின் உயர்பீட…

  21. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா? நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது. காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார். 79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ( அமெரிக்க உச்சநீதிமன்ற ந…

  22. கிரிமியா மற்றும் ரஷ்யா இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து அதில் சென்ற முதல் ரயிலில் அந்நாட்டு அதிபர் புதின் பயணித்தார். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியது சர்வதேச ரீதியில் விமர்சனத்துக்கு ஆளானது. இந்நிலையில் ரஷ்யாவின் தாமன் வளைகுடா பகுதியிலிருந்து கிரிமியாவின் கெர்ச் வரையிலும் 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ($3.60 billion) அமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைத்து, முதல் ரயிலில் புதின் பயணித்தார். https://www.polimernews.com/dnews/94146/கிரிமியா,-ரஷ்யா-இடையே-ரயில்பாதையை-திறந்து-வைத்தார்அதிபர்-புதின்

  23. பள்ளிச் சிறுமி ஸ்ருதி பரிதாப பலி- தாம்பரத்தில் கடையடைப்பு- மக்கள் கண்ணீர் அஞ்சலி-உடல் இன்று தகனம் 26 ஜூலை 2012 பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்ததது- குழந்தையை ஏற்றிச் சென்ற ஓட்டை பஸ் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமாக தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தால் தாம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடல் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வீடு வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை மக்களை பெரிய அளவில் உலுக்கி விட்டது ஸ்ருதியின் பரிதாபச் சாவு. ச…

  24. 8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்! கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம். அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான். அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்…

  25. அமெரிக்கா: வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப், ஹில்லரி முன்னிலையில் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன் ஆகிய இருவரும் வரும் அதிபர் தேர்தலில் அவரவர் கட்சியில் அதிக ஆதரவுபெற்ற வேட்பாளர்களாக தங்களின் நிலையை மீண்டும் உறுதிசெய்து கொண்டுள்ளனர். இரண்டு கட்சிகளினதும் அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய உட்கட்சி போட்டியாக பார்க்கப்பட்ட, நேற்றைய 'சூப்பர் டியூஸ்டே' வாக்குப்பதிவில் இருவரும் தங்களின் கட்சி உறுப்பினர்களிடையே அதிக ஆதரவு பெற்றவர்களாக தங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் வேட்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.