Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் தனி நாடுகள்: ஐ.நா. ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும்தான் இதுநாள் வரை ஐ.நா. கூறிவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறைக்கு மாறாக, அதன் கிளை அமைப்பான ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்புக்கான இந்திய …

  2. விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கள்கிழமை (ஜூன் 30) காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட்-7 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இதற்கான 49 மணி நேர கவுன்ட் டவுன் சனிக்கிழமை (ஜூன் 28) காலை 8.52 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவப்பட்ட 20 நிமிஷங்களில் 5 செயற்கைக்கோள்களையும் அவற்றுக்குரிய பாதைகளில் நிலை நிறுத்தும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரமும், 230 டன் எடையும் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். விஞ்ஞானிகளுக…

  3. இந்த வார விருந்தினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் & விடுதலைச் சிறுத்தைகள் 'விடைகொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக் காடே, பறவைகள் கூடே, மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? ' என்கிற ஏக்கம் வழிகிற வரிகளின் அர்த்தம் புரிந்து வருந்தாமல், அதன் இலக்கிய நயத்தை வியந்துகொண்டு இருக்கிறோம் தமிழர்களே! வாழ்க்கையைத் தொலைத்து, வந்தேறிகளாக அவமானப் படுகிறவர்களின் மரணக் கூக்குரல் காற்றில் கலக்கிறது ஊமைப் பேரோசையாக! மேற்கத்திய இசை அலறும் கொண்டாட்டங்களிலும், பெருங்குரலெடுத்து இரையும் இயந்திரங்களின், வாகனங்களின் பரபரப்பிலும், அகதிகளின் அவல விசும்பல்களையும் அழுகைச் சத்தத்தையும் காதுகொடுத்துக் கேட்க யாருக்கு இதயம் இருக்கிறது? இரக்கம், கருணை, மனிதநேயம் போன…

  4. குவாட் கவனத்தை திருப்பிய சீனா By VISHNU 10 SEP, 2022 | 07:56 AM ஹரிகரன் “சீனா ‘யுவான் வாங் 5’ கப்பலை அம்பாந்தோட்டையில் நிறுத்திய அதேவேளை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சொலமன் தீவுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய போர்க்கப்பல்கள் நிறுத்துவதையும் தடுத்து நிறுத்தியது” அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுதிஸ்ரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளிவிவகார அமைச்சுக்களின் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் கடந்த 5ஆம், 6ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம்பெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில், மூன்று முக்கிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதில் இ…

  5. ஈரானிய போராட்டக் காரர்களுக்கு... அமெரிக்கா ஆதரவு: இணையக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அறிவிப்பு! பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதிக் கோரி போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் போராட்டக்காரர்களுக்கு உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, போராட்டங்கள் மீதான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஈரான் மீதான இணைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் கூறுகையில், ‘ஈரானிய மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருளில் வைக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உதவப் போகிறோம். இணையக் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்துவது ஈரானியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற…

  6. காலநிலை நெருக்கடி வெப்ப அலைகளை தீவிரப்படுத்துகிறது : ஐ .நா. எச்சரிக்கை By T. SARANYA 11 OCT, 2022 | 01:13 PM காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் பேரழிவுகரமான வெப்ப அலைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சிறந்த நடவடிக்கை தேவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனமான (OCHA )மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரழிவுகளைத் தூண்டும் வகையில் அதிக வெப்பநிலை பதிவானது. இது ஆபத்தான, அடிக்கடி மற்றும் மிகவும் தீவிரமான வெப்பம் தொடர்ப…

  7. வெள்ளிக்கிழமை, 10, டிசம்பர் 2010 (15:34 IST) முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? சீமான் பரபரப்பு பேட்டி தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த …

    • 1 reply
    • 691 views
  8. கோலாப்பூர்: சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண் குற்றவாளிகள் யாருக்கும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில், முதன்முறையாக மகாராஷ்ட்ராவை சேர்ந்த 2 சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த ரேணுகா கிரண் ஷிண்டே மற்றும் அவரது சகோதரி சீமா மோகன் காவிட் ஆகிய 2 சகோதரிகளும், கடந்த 1990 முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஏழை சிறுவர், சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை கட்டாயப்படுத்தி திருட வைத்துள்ளனர். பின்னர் அந்த குழந்தைகள் சற்று பெரிதாக வளர்ந்துவிட்டால் அவர்களை கழுத்தை நெரித்தோ அல்லது இரும்பு கம்பியால் தலையால் அடித்தோ கொன்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் 13 குழந்தைகளை கடத்திச் சென்று, அதில் 9 பேரை கொன்றதாக தொடரப்ப…

  9. திருப்பி அடிங்க... இந்திய ராணுவத்துக்கு, ராஜ்நாத் சிங் உத்தரவு. டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்கினால் நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீரிக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைப்பதற்காக இந்த செயலில் அது ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் தொடர்ந்து இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் …

    • 9 replies
    • 758 views
  10. சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது YouTube சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்இஎஸ் தியேட்டர் வளாக…

  11. 300 சொற்களில் கொரிய நெருக்கடியை புரிந்துக்கொள்ளுங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுத போரை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகாலமாக நிலவி வரும் இந்த பிரச்சனை குறித்த அடிப்படை விடயங்களை கா…

  12. இஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? பகிர்க படத்தின் காப்புரிமைMOHAMMED ABED 25 மைல். அதாவது 41 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அளவுக்கு அகலமும் கொண்டு இஸ்ரேல், எகிப்து, மத்திய தரைக்கடல் ஆகியவற்றுக்கு இடையே சூழப்பட்டிருக்கும் ஓர் உறைவிடம்தான் 19 லட்சம் பேருக்கு வீடாக இருக்கிறது. அப்பகுதிதான் காஸா. எகிப்தால் முதலில் இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 1967-ல் நடந்த மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் இப்பிராந்தியத்தை கைப்பற்றியது. 2005-ல் தனது படைகள் மற்றும் 7000 குடியேறிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வரை இஸ்லாமியவாத தீ…

  13. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் உயிரிழப்பு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தத…

  14. சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் …

  15. பெங்களூரு மத்தியச் சிறைச்சாலையில் பெண் குற்றவாளிகளைக் கட்டாயப்படுத்தி ஆண் சிறைப் பாதுகாவலர்கள் உடலுறவு வைத்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் 15 பெண் கைதிகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், 3 பெண் கைதிகள் சாதாரணத் சிறைத்தண்டனையும் அனுபவித்து வருகின்றனர். இந்த சிறைச்சாலையில் செக்ஸ் தொல்லைகளும் பல்வேறுக் கொடுமைகளும் நடப்பதாக அங்குள்ள பெண் கைதிகள் கர்நாடகத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். குறைத் தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்துள்ளனர். ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம் லஞ்சம் பெறும் வார்டன்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த க…

  16. ஈரானிய ஆயுதங்களுடன் படகை கைப்பற்றியதாக பிரிட்டன் தெரிவிப்பு Published By: SETHU 02 MAR, 2023 | 05:19 PM ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின் போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருப்ப…

  17. சோனியா வாழ்த்துடன் திமுக அணி வெல்லும்:திருமா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்துகளுடன், வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். ஜெயலலிதாவின் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கல் நடவடிக்கைகளும், ஆடம்பர செயல்களுமே அவரது சாதனைகள் என்று குறிப்பிட்ட அவர்,…

  18. காப்பரின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் முன்னாள் பிரதமர்கள் லிபறல் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்திய இரு முன்னாள் பிரதமர்கள் தற்போது ஸ்ரீபன் காப்பரின்பொருளாதாரக் கொள்கையை விமர்சித்துள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்தை முறியடிப்பதற்காக போல் மாட்டின் மற்றும் ஜீன் செறற்றின் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்து கருத்துக்கணிப்புக்களில் தெரியவந்ததுடன் காப்பரும் அந்தத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு கூட்டங்களில் பேசும்போது ஜி எட்டு நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் கனமாவின் சிறந்த பொ…

    • 0 replies
    • 779 views
  19. Published By: RAJEEBAN 06 APR, 2023 | 11:05 AM நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் எழுச்சியூட்டும் உரையுடன் அரசியலில் இருந்து விடைபெற்றுள்ளார். மேதாவிகள் கூக்குரலிடுபவர்கள் மற்றும் கட்டியணைப்பவர்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். நீங்கள் கவலையடைந்தவராக உணர்வுபூர்வமானவராக இரக்கமுள்ளவராக காணப்படலாம்,நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துபவராக இருக்கலாம்,நீங்கள் ஒரு தாயாகயிருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்,நீங்கள் ஒரு மேதாவியாக கட்டித்தழுவுபவராக அழுபவராகயிருக்கலாம் ஆனால் நீங்களும் ஒரு நாள் தலைமை தாங்க முடியும் என கண்ணீருடன் அ…

  20. ஜேர்மனி நாட்டில், ‘’பெஜிடா’’ என்ற பெயரில் வளர்ந்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு எதிராக ஜேர்மனியின் ஜூதர்களுக்கான மத்திய கவுன்ஸிலின் தலைவர் பேசியுள்ளார். ஜேர்மனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்துக்கு யூத தலைவர் கண்டனம் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் ஒட்டுமொத்தமாக அந்த மதத்தையே இழிவுபடுத்த பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜேர்மனிய பத்திரிகை ஒன்றுக்கான செவ்வியில், ஜோசப் ஜூஸ்டர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கான பெஜிடாவின் திட்டங்கள் குறித்து ஜேர்மனியில் உள்ள றோமன் கத்தோலிக்க திருச்சபையும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அந்த இயக்கம் தோன்றிய இடமான ட்ரெஸ்டனில் திங்களன்று நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றில் பல்லாயிரக் கணக்கானோர…

  21. Manipur On Fire: என்ன நடக்கிறது மணிப்பூரில்? ஏன் தொடங்கியது கலவரம்? முழு களத்தகவல் இதோ! 05 May 2023, 8:34 IST நிலைமை சீராகும் வரை ரயில் இயக்கத்தை நிறுத்துமாறு மணிப்பூர் அரசு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து ரயில் சேவையை வடகிழக்கு ரயில்வே நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெய்டேய் சமூகத்தை பட்டியலிடப்பட்ட பழங்குடிகள் (எஸ்.டி) பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து மாணவர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தத…

    • 1 reply
    • 945 views
  22. உலகிலேயே மிகப் பழைமையான செய்தித்தாள் என்ற பெருமையைப் பெற்ற Wiener Zeitung தனது வெயியீட்டை நிறுத்திக்கொண்டது. ஒஸ்திரியாவின் வியன்னாவை தளமாகக் கொண்டு இயங்கிய Wiener Zeitung, நேற்று (30) தனது இறுதி செய்தித்தாளை வௌியிட்டது. கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த, அரசுக்கு சொந்தமான Wiener Zeitung செய்தித்தாள் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. Wiener Zeitung வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாட்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என அச்சிட்டு, தனது செய்தித்தாளுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்…

  23. வட மேற்கு பாகிஸ்தானில் பனி மழையால் பலர் மரணம் [03 - April - 2007] பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்துவரும் பனி மழை காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிட்டிரால் பிராந்தியத்தின் வசிஜ கிராமத்தில் சனிக்கிழமை பல வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 24 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர். கடந்த ஒரு வாரகாலமாக மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பனி மழை காரணமாக 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 வீடுகள் புதையுண்டுள்ளதுடன் 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தினக்குரல்

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், நிகோலஸ் யோங் பதவி, பிபிசி நியூஸ், சிங்கப்பூர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி. 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்திய வழக்கில் 45 வயதான சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மூன்றே நாள்களில் …

  25. பொலிஸாரின் தடுப்புக் காவலிலிருந்தவர் இறந்ததால் மாலைதீவில் பதற்ற நிலை மாலைதீவில் பொலிஸாரின் தடுப்புக் காவலில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட நபரை பொலிஸாரே கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ஹூசைன் சனா என்பவரின் உடல் தலைநகரின் துறைமுகப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அரசாங்கம் குறிப்பிட்ட நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட பின்னரே அவர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் அலைந்து திரிவதாகவும் பலரை கைது செய்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அமைதியின்மையை உருவாக்கின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.