உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
மெக்ஸிக்கோவில் ஹெலி வீழ்ந்ததால் ஐவர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 01:30 PM மெக்ஸிக்கோவில் ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்ததால் ஐவர் உயிரிழந்துள்ளனர். அகுவாஸ்கலியென்டிஸ் மாநிலத்தில் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் தெரிவித்துள்ளார். அகுவாஸ்கலியென்டிஸ் மாநில பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி போர்பிரியோ சான்செஸ் மென்டோஸாவும் அடங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு விபத்தாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆளுநர் தெரேசா ஜிமேனெஸ் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/140444
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
கேரளாவில் சிறுமிகள் உள்ள வீடுகளுக்குள் பா.ஜ.க -வினர் நுழைய தடை
-
- 2 replies
- 543 views
-
-
மிரட்டல் காரணமாக தாம் வெளியிடும் ஈழமுரசு என்னும் பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் சஞ்சிகையை நிறுத்தப்போவதாக அதனை வெளியிடும், ஊடக இல்லம் என்னும் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கரங்கள் என்று தாம் சந்தேகிக்கும் வகையில் நேரடியான கொலை மிரட்டலும், மின்னஞ்சல் மூலமான மிரட்டலும் விடுக்கப்பட்டதாக அந்த ஊடக இல்லத்தின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கோபிராஜ் என்பவர் தொலைபேசி மூலம் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் கருத்தினை பெற மேற்கொண்ட முயற்சிகள் உடனடியாகப் பலனளிக்கவில்லை. பிரான்ஸில் காணப்படுகின்ற சில குழுக்களுக்கிடையிலான முரண்பாடு காரணமான மிரட்டலே இந்த பத்திரிகை மூடப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுவதையும் கோபிராஜ் மறுத்தார். அவர்…
-
- 1 reply
- 610 views
-
-
ரஷ்ய வீரர்களின் விந்தணுக்களை பாதுகாக்க கோரிக்கை - யுக்ரேன் போருக்கு சென்றவர்களுக்காக கேட்கப்படும் சலுகை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி பதவி,பிபிசி செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் போருக்கு அழைக்கப்பட்ட ரஷ்யப் படை வீரர்கள் தங்களுடைய விந்தணுக்களை கிரையோவங்கியில் (விந்தணுக்களை சேமிக்கும் வங்கி) சேமித்து வைத்து கொள்ளலாம் என ரஷ்யாவின் முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து அரசு செய்தி நிறுவனமான டாஸிடம் பேசிய ரஷ்ய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் இகோர் ட்ரூனோவ், படை வீரர்கள் தங்களது விந்தணுக்களை இலவசமாக சேமித்…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
நியூ யார்க்: அமெரிக்காவில் 10 மாத குழந்தையையும், பாட்டியையும் கொன்ற இந்திய வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்தியாவைச் சேர்ந்த ரகுநாதன் யண்டமூரி(28) என்பவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணம் வைத்து சூதாடும் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகிவிட்ட அவரால், தனது வருமானத்தை வைத்து அமெரிக்காவில் காலம் தள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்து 10 மாத கைக்குழந்தையைக் கடத்திச் சென்றார்.பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினார். கைக்குழந…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 881 views
-
-
அமெரிக்கா,இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியாகள் இந்தியாவில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு பின்பு அமெரிக்கா சென்று விட்டு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என காரணம் கூறி இப்பெண்களை ஏமாற்றி அங்கே உல்லாசமாக வாழ்கிறார்கள்.ஏனெனில் இந்திய சட்டங்கள் இந்நாடுகளில் செல்லுபடியாகது. இதனை பயன்படுத்தி ஏமாற்றுகாரர்கள் தப்பித்துவிடுகிறார்கள். இவ்வாறு இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பஞ்சாப் , கேரளா போன்ற இந்திய மாநிலங்களில் அதிகஅளவில் உள்ளனர். இதனை தடுக்க இந்திய அரசு, அமெரிக்கா, இங்கிலாந்து அரசாங்களுடன் ஏற்கெனவே இந்நாடுகளுடன் இந்திய செய்துகொண்டிருக்கும் சாசனத்தில்(treaty), இந்திய சட்டங்கள், இந்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர்க்கு பொருந்துமாறு(applicab…
-
- 0 replies
- 923 views
-
-
சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) என்ற ஓமானின் அரசர் உடல்நலமின்றி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தற்சமயம் ஜெர்மனியில் புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்து வருவதாகத் தெரிகிறது. ஓமான் சுல்தானின் நலன் விரும்பும் இந்தியர்களின் முயற்சியாக, சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்துகின்றனர். சுல்தான் இஸ்லாமியராய் இருக்கும்போது, இது எப்படி எனக் கேள்வி எழலாம். இந்த யாகம் சுல்தானின் வேண்டுகோளின்படி நடத்தப்படும் யாகம் அல்ல. மாறாக, அவரது நலம்விரும்பிகளால் நடத்தப்படுகிறது. மத நல்லிணக்கத்தைக் கொள்கையாகக் கொண்ட சுல்தா…
-
- 0 replies
- 525 views
-
-
தனது நண்பனைக் காப்பாற்ற முயன்ற நபர் சுட்டுக்கொலை பிறம்ரன் பாங்குவெற்றில் சனிக்கிழமையன்று சுட்டுக் காயமடைந்த நபர் இன்று இறந்துள்ளார். 28 வயதுடைய இந்த நபர் காயமடைந்தவுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதும் அன்று பிற்பகலே அவர் இறந்துவிட்டார் என பீல் பிராந்தியப் பொலிசார் தெரிவிக்கின்றனர். சூதாட்டப்போட்டி இடம்பெற்ற றொஸ் விடுதியில் இந்த நபர் இருந்தபோது அடையாளங்காணப்படாத இருவர் நடாத்தி துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த நபர் கொல்லப்பட்டார். சண்டையை நிறுத்துவதற்கு முயன்றபோதே பிரஸ்தாப நபர் நெஞ்சில் காயமடைந்தார். கொல்லப்பட்டவரின் பெயர் கீகி எனவும் அவர் தனது நண்பனுக்கு உதவுவதற்கே முயன்றாரெனவும் சாட்சியம் ஒருவர் தெரிவித்தார். இந்த சூதாட்டப் போட்டியில் துப…
-
- 0 replies
- 670 views
-
-
சாகும் ஆண் நண்பரை காப்பாற்றாமல் படம் பிடித்த பெண் பகிர்க ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த 'ஸ்னாப்சாட் குயின்' பற்றிய கதைதான் இது. படத்தின் காப்புரிமைCENTRAL NEWS Image caption'ஸ்னாப்சாட் குயின்' ஃபாத்திமா ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். ஃபாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று கூறியது. நடந்தது என்ன? 2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று லண்டனின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டிரம்ப் மீது முன்னாள் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரானமைக்கேல் கோவன் 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திய நிதி தொடர்பாக சட்டத்தை மீறியதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். படத்தின் காப்புரிமைGET…
-
- 0 replies
- 403 views
-
-
ரஷ்ய ரகசியங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மொஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷ்யாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும். “ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்…
-
- 2 replies
- 468 views
- 1 follower
-
-
பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே சமயம் உக்ரேனும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளுக்கு இடையேயும் இடம்பெற்றுவரும் போரானது உக்கிரமடைந்து வருகின்றது. குறிப்பாக நேற்றைய தினம் உக்ரேனின் Kryvyi Rih நகரில் ரஷ்யா மேற்கொண்ட வான் வழித் தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் உக்…
-
- 75 replies
- 5.5k views
-
-
பட மூலாதாரம்,WWW.GA-ASI.COM படக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம் கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திரா ராவ் பதவி,பிபிசி செய்திகள் 55 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்…
-
- 29 replies
- 2.1k views
- 1 follower
-
-
மலேசியாவில் உலக தமிழ் பண்பாட்டு மாநாடு ஏப்ரல் 03, 2007 சென்னை: உலக தமிழ் பண்பாட்டு மாநாடு மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதுக்குறித்து உலகத் தமிழ் பண்பாடு மாநாட்டின் இந்திய ஒருங்கிணைப்பாளர் அறவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பண்பாட்டு இயக்கம் மற்றும் மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலேசிய நாட்டு தலைநகரான கோலாலம்பூரில் உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடு ஜூலை மாதம் 20,21,22 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. கட்டுரையாளர்கள் இந்த மாநாட்டுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி அனுப்பலாம். உலகத் தமிழர்களின் நிலை என்ற பொதுத் தலைப்பிலும், புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை அன்று முதல் இன்று வரை என்ற சிறப்பு தலைப்பிலும் …
-
- 0 replies
- 976 views
-
-
தூக்கி எறிந்தது மக்கள்தான்... இளங்கோவனுக்கு புரிகிறதா? 'கூடா நட்பு கேடாய் முடியும் என்று கருணாநிதி சொல்லவேண்டிய இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். தைரியம் இருந்தால் வெளிப்படையாக காங்கிரசை விமர்சிக்க வேண்டும். உயர்மட்டக்குழு என்று யாரை பயமுறுத்த நினைக்கிறீர்கள்'' என்று சென்னையில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு இப்படி பேசி இருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய போர் முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தியா நடத்தியது என்று எல்லோம் அறிந்த, தெரிந்த விஷயம். அப்படி இருக்கும…
-
- 0 replies
- 640 views
-
-
வீரகேசரி இணையம் 6/21/2011 9:53:44 PM டுனீசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜினி-அல்-அபிடின் பென்அலி மற்றும் அவரது மனைவிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்கள் சேர்த்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது டுனீசியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அந்நாட்டு அதிபராக 23 ஆண்டுகள் பதவியில் இருந்த ஜினி-அல்-அபிடின் பென்அலி கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளர். இவர்களுக்கு சிறை தண்டனைக்கு மேலதிகமாக 90 மில்லியன் டுனீசியன் தினார் (65.5 மில்லியன் டொலர்) அபராதமும் விதிக்கப்பட்டது. வர…
-
- 0 replies
- 447 views
-
-
அல்-ஹைய்தாவின் அச்சுறுத்தலை 2001 இல் அறிந்திருந்த பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவு அல்ஹய்தாவினால் அமெரிக்காவிற்கு உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து பிரான்ஸின் புலனாய்வு பிரிவினர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் ஒன்பது முறை எச்சரித்திருந்ததாகவும் விமானமொன்று கடத்தப்படலாம் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்ததாகவும் பிரான்ஸின்` லீ மொன்டே' குறிப்பிட்டுள்ளது. அல்ஹய்தாவிற்குள் ஊடுருவிய வெளிநாட்டு புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்பதை நிரூபிப்பதற்கான 328 பக்க ஆவணம் தன்னிடமுள்ளதாக குறிப்பிட்ட செய்தித்தாள் தெரிவித்துள்ளது. ஜனவரி 2001 இல் தயாரிக்கப்பட்ட ஆவணமொன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானத்தை கடத்த முயல்வது குறித்து சுட்டிக் காட்டியுள்ளது. 2000 ஆம் ஆண்டு இது…
-
- 0 replies
- 688 views
-
-
அமைச்சரவை புதிய லிஸ்ட் தயாராகிறது; பிரதமர்- சோனியா சந்திப்பு: நாளை மறுநாள் இறுதி முடிவு ஊழல் புகாரில் சிக்கி மத்திய அமைச்சர்கள் பலர் பதவி இழந்த பின்னர் புதிதாக அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாருக்கு எந்த பொறுப்பு வழங்குவது, எந்த அமைச்சர்களிடம் உள்ள கூடுதல் துறையை பறிப்பது உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் முழுக்கவனத்துடன் பரிசீலித்து வருகிறார். பட்டியல் தயாரிக்கும் பணியில் பிரதமர் இறுதி முடிவு எடுக்கவுள்ள நிலையில் காங்., தலைவர் சோனியா, மூத்த அமைச்சர்கள் கபில்சிபல்( மனிதவளம்) , ஜெய்பால்ரெட்டி (பெட்ரோலியம் ) ஆகியோரிடமும் இன்று (சனிக்கிழமை) அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சரவையில் முக்கியஸ்தர்களாக கருதப்படும் பிரணாப்முகர்ஜி( நிதித்துறை) , ப.சிதம…
-
- 2 replies
- 520 views
-
-
மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி ! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார். ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பாயி…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு November 6, 2018 ஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையிலேயே இவ்வாறு புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவர்களால் இந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்களுக்கான காரணத்தினை கண்டறிய முடியவில்லை. உயிரிழந்த 12 குழந்தைகளிலும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்…
-
- 0 replies
- 378 views
-
-
வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன் இரவில் துாங்காமல் விழித்திருக்கும் விசித்திரம் மேட்டூர் : பிறக்கும் போதே வெண்மையான கருவிழியுடன் பிறந்த சிறுவன், நான்கு ஆண்டுகளாக இரவில் துõங்காமல் விழித்திருப்பதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்த சிறுவன் பிறவியிலேயே ஊமை என்பதும் வேதனைக்குரியது.மேட்டூர் அருகே, காவேரிகிராஸ், மெயின்ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் வேலை செய்கிறார். வெங்கடேசனுக்கும், அவரது அக்கா மகள் ரேவதிக்கும் ஏழு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு நான்கு ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்ததால் தம்பதியர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், குழந்தையின் கருவிழி மட்டும் வெண்மை கலந்த கருப்பு நிறத்தில்…
-
- 12 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capital கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, U.S.Capitol கட்டிடத்தைச் சூழவுள்ள பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தற்கொலையென காவற்துறையினர் அறிவித்திருக்கின்றனர். எனினும் முற்பாதுகாப்பிற்காக அந்தப் பகுதி மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கப்பிற்றல் கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி தொடர்பாகவும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். அமெரிக்க கொங்கிரஸ் இன்று செயற்படாததால், அங்கு பெருமளவிலான உறுப்பினர்கள் இருக்கவ…
-
- 0 replies
- 265 views
-
-
சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்க நாசா விண்வெளி மையத்திற்குச் சொந்தமான ஐந்து தொன் எடையுள்ள 20 ஆண்டுகள் பழமையான செயற்கைக் கோள் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி நெருங்கி வரும் நிலையில்.. அது பூமியின் வாயு மண்டத்தில் பிரவேசிக்கும் போது.. துண்டுகளாகி.. பூமியில் மக்கள் வாழும் இடங்கள் உட்பட எங்கு வேண்டுமானாலும் விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இம்மாதம் (செப்டம்பர்).. வரும் 24ம் திகதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக.. மக்கள் அதிகம் பரந்து வாழும்.. மத்திய கோட்டுக்கு.. வடக்குத்.. தெற்காக.. 57 பாகை விஸ்தீரணம் கொண்ட பூமியின் எப்பகுதியிலும் இது விழக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாசா உலகிற்கு வழங்கியுள்ளது. இதற்கிடையே.. இந்த செயற்கை…
-
- 4 replies
- 1.7k views
-