உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளி…
-
-
- 2 replies
- 517 views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு கோலாலம்பூர், மலேசிய தகவல் அமைச்சானது அந்நாட்டு "ரிவி 2' அலைவரிசையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் நாடகங்களை ஒளிபரப்புவதை தடை செய்ய தீர்மானித்துள்ளது. மலேசிய தொலைக்காட்சி இரசிகர்களுக்கு தமிழ் நாடகங்களை தயாரித்து வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருக்கையில் இவ்வாறான தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளதாக முன்னாள் அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான எஸ். சாமிவேலு தெரிவித்தார். இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மலேசிய இந்திய காங்கிரஸ் செயலாளர் நாயகம் மனித வள அமைச்சருமான எஸ். சுப்பிரமணியம் இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக சாமிவேலு கூறினார். தமிழ் நிகழ்ச்சிகளானது 2.6 மில்லியன் மலேசிய இந…
-
- 3 replies
- 1.2k views
-
-
யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் அமெரிக்கா கைச்சாத்து! யுக்ரைனுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. யுக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா அணுகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்தது. குறித்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்படத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், யுக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து மோதல் காரணமாக ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. இந்தநிலையிலேயே, அமெரிக்காவுடனான கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்குத் தயாரென யுக்ரைன் நேற்று அறிவித்தது. இதனையடுத்து அமெரிக்காவும், யுக்ரைனும் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.…
-
- 6 replies
- 457 views
- 1 follower
-
-
"குழந்தைகளுக்கு வன்முறையைப் பழக்குகிறது ஐஎஸ்" இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளிடம் தங்களது சித்தாந்தத்தைப் புகுத்திவருவதாக ஐ.நா. சார்ந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குழந்தைகளை தங்களைவிட தூய்மையானவர்களாக ஐஎஸ் பயிற்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் அவர்களை அடுத்த தலைமுறை பயங்கரவாதிகளாகவும் தற்கொலைப்படை தாரிகளாகவும் உளவாளிகளாகவும் மாற்ற அந்தக் குழு முயல்கிறது. தாங்கள் நிறைவேற்றும் கொலைகளை அந்தக் குழந்தைகளைப் பார்க்கச் செய்வதன் மூலமும் துண்டிக்கப்பட்ட தலைகளை வைத்து கால்பந்து விளையாடச் செய்வதன் மூலமும் வன்முறைக்கு அந்தக் குழந்தைகளைப் பழக்குவதாக சில்ரன் ஆஃப் இஸ்லாமி…
-
- 0 replies
- 422 views
-
-
ஜார்ஜியாவில் பெண் அரசியல்வாதியின் ஆபாசப் படம்: 2 பேர் கைது ஜார்ஜியாவில் முறைகேடாக எடுக்கப்பட்ட ஆபாசப் படம் ஒன்றை வெளியிட்டதாக இரண்டு பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஜார்ஜியாவில் தேர்தலுக்கு முன்பாக இம்மாதிரி படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்நாட்டுத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல்வாதி ஒருவர் சம்பந்தப்பட்ட படம் ஒன்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஃப்ரீ டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரல்லாத ஒருவருடன் உறவு கொள்வது போன்ற படம் யூ டியூபில் வெளியானது. தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இது போன்ற மேல…
-
- 0 replies
- 605 views
-
-
உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த திபெத்தியர்கள், தங்களுக்கென்று உள்ள பாராளுமன்றத்திற்காக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது. இந்த உள்நாட்டு போரின் போது ஏராளமான திபெத்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றனர். சுமார் 90 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் தற்போது உள்ளனர். இவர்களுக்கென்ற மாதிரி பாராளுமன்றம்…
-
- 0 replies
- 239 views
-
-
கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு அபாயங்கள் ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விடயம் குறித்து மருத்துவ நிபுணர்கள் அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கருத்தடை மருந்துகளின் விநியோகப் பற்றாக்குறை நாடு முழுவதும் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளது. அன்றாடம் உள்ளெடுக்கும் மாத்திரைகள் மற்றும் நீண்டகால கருத்தடை ஊசி மருந்து ஆகியவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கருத்தடை மருந்துகளின் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது என்பது தற்போதுவரையிலும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் ஒரு முக்கிய மூலப்பொருள் இப்போது மீண்…
-
- 0 replies
- 390 views
-
-
துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு. துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்தார். தற்போது மத்திய மற்றும் மேற்…
-
- 0 replies
- 149 views
-
-
டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கி…
-
- 12 replies
- 2.4k views
-
-
மலைக்கள்ளன் அண்ட் கோ! in அ.தி.மு.க, அதிகார வர்க்கம், ஊழல் - முறைகேடுகள், தி.மு.க, புதிய ஜனநாயகம், விவசாயிகள் “பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.” இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா? கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக, போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாள…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]காவிரியில், தமிழகத்துக்கு தினமும், 9,000 கன அடி தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், பிரதமர் தலைமையில் செயல்படும், காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும், கர்நாடக அரசின் நடவடிக்கையை, கடுமையாகக் கண்டித்தது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின், 19ம் தேதி, டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடந்தது.இதில், தமிழகத்துக்கு அடுத்த மாதம் 15ம் தேதி வரை, தினமும், வினாடிக்கு 9,000 கன அடி வீதம், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட…
-
- 4 replies
- 808 views
-
-
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீற்றர்ஸ்பேர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாகப்பரவி வருவதையடுத்து தொற்றானவர்களைக் குணப்படுத்தும் மருந்தும், வைரஸ் தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்க பெரும்பாலான நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் பீற்றர்ஸ்பேர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் ஆன்ற்ரியோ கம்போட்டா, லூயிஸ் பாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த மருந்தை உருவாக்கியுள்ளது. இதேகுழுவினர் 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும், 2014ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும…
-
- 0 replies
- 928 views
-
-
சார்ஜாவில் 48 மாடி கட்டிடத்தில் தீ விபத்து..!
-
- 3 replies
- 668 views
-
-
விவசாயம் செய்யவா? ,கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமெரோனிடம் வினவிய 6 வயது சிறுமிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் 'விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?' என வினவினர். அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்க…
-
- 0 replies
- 227 views
-
-
லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார். பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்: மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மத மாற்றம் குறித்…
-
- 15 replies
- 3.2k views
-
-
சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம் சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் திரவ எரிவாயு ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. விபத்து ஏற்பட்டதும் டேங்கர் லாரி அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த இடங்கள் இடிந்து விழுந்ததுடன் தீப்பிடித்து எரிந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 166 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் போது சாலையில் சென்ற வாகனங்களும் த…
-
- 1 reply
- 430 views
-
-
தென் கொரியாவில் முதல் முறையாக பெண் அதிபர் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 டிசம்பர், 2012 - 16:48 ஜிஎம்டி புதிய அதிபர் பார்க் ஹ்யாங் ஹே தென் கொரியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள பார்க் ஹ்யாங் ஹேயின் தந்தை ஒரு இராணுவச்சதிப் புரட்சியில் ஆட்சியை பிடித்த பிறகு 18 ஆண்டுகள் நாட்டின் அதிபராக இருந்தார். அவரது தந்தையும் முன்னாள் சர்வாதிகாரியுமான பார்க் யுங் ஹீ 1979 ஆம் ஆண்டு சுட்டிக் கொல்லப்பட்டார். மிகவும் நெருக்கமாக இருந்த போட்டியின் இறுதியில், பார்க் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் மூன் ஜே யின் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். 60 வயதாகும் செல்வி பார்க், தற்போது…
-
- 0 replies
- 664 views
-
-
மலாவி ஜனாதிபதியாகசக்வேரா வரலாற்று வெற்றி! மலாவியின் எதிர்க்கட்சித் தலைவரான மலாவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாசரஸ் சக்வேரா ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் சக்வேரா 59.34% வாக்குகளைப் பெற்று ஜனநாயக முற்போக்கு கட்சியை சேர்ந்த பீட்டர் முத்தாரிகாவை தோற்கடித்தார் எனதேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக நேற்று (27) அறிவித்துள்ளது. மலாவியின் நீதிமன்றம், 2019 மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முத்தரிக்காவின் வெற்றியை இரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து மறு வாக்கெடுப்பு நடைபெற்று, சனிக்கிழமையன்று வெளியான உத்தியோகபூர்வ முடிவைத் தொடர்ந்து, தனது வெற்றி ஜனந…
-
- 0 replies
- 455 views
-
-
அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி 17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின் இண்டியானா மாநில தெற்கு மாவட்ட நீதமன்றம் திங்களன்று தீர்ப்பளித்த பின்னர் பல மரணதண்டனை நிறைவேற்றங்கள் தாமதமாகின. அதாவது அமெரிக்காவின் ஒக்லஹோமாவை மாநிலத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டேனியல் லீ என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 3 பேரை கொடூரமாக கொலை செய்தார். இந்த வழக்கி…
-
- 0 replies
- 262 views
-
-
அந்தமான் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சி லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தியா மட்டுமின்றி பிற அண்டை நாடுகளுடனும் எல்லை பிரச்சினை தொடர்பாக சீனா தகராறு செய்து வருகிறது. அத்துடன் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறது. அத்துடன் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது கடற்படையின் பலத்தை காட்டு…
-
- 0 replies
- 355 views
-
-
உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு: சிவப்பு மண்டலமாக அறிவித்த ஐரோப்பிய நாடு பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்திற்கும் மேல் தாண்டியுள்ள நிலையில், தலைநகர் பாரிசை ஐரோப்பிய நாடு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேக்ரான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி அவசியம் போன்ற பல புதிய விதிகளையும் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தது போன்று தெர…
-
- 0 replies
- 596 views
-
-
ரீடர்ஸ் டைஜஸ்ட் 'திவால்': ரூ.1,900 கோடி காண்ட்ராக்டை இழக்கும் எச்.சி.எல்! Posted by: Chakra Published: Wednesday, February 20, 2013, 11:33 [iST] நியூயார்க்: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளதால் அந்த நிறுவனத்துடனான ரூ. 1,900 கோடி (350 மில்லியன் டாலர்) காண்ட்ராக்டை இந்தியாவின் எச்.சி.எஸ் நிறுவனம் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 4வது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான எச்சிஎல் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் ரூ. 1,900 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அந்த நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் 7 ஆண்டு காண்ட்ராக்ட் அது. இந்த இதழை அமெரிக்காவின் ஆர்டிஏ ஹோல்டிங் கம்பெனி என்ற நிறுவனம்…
-
- 0 replies
- 521 views
-
-
இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் 2 மணி இடைவெளியில் ஏற்பட்ட இரு பூமியதிர்ச்சியினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விஸ்ஸோ நகரில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரு பூமியதிர்ச்சிகள் முறையே ரிச்டர் அளவு கோளில் 5.4 மற்றும் 5.9 ஆக பதிவானதாக இத்தாலி பூமியதிர்ச்சி ஆய்வக மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் இத…
-
- 0 replies
- 322 views
-
-
எப்படி வென்றார் ட்ரம்ப்? ட்ரம்பின் வெற்றி உலகமயமாக்கலுக்கும் சுதந்திர வர்த்தகத்துக்கும் பின்னடைவு சான்பிரான்சிஸ்கோ நகரின் ஃபெரி ப்ளாஸா, உலகின் மிக அழகிய மூடிய சந்தைகளில் ஒன்று. சந்தைக்குப் பின்னால் கடல். ஓரமாக நடந்துபோனால் ‘கோல்டன் கேட்’ பாலத்தை அடையலாம். ட்ரம்ப் வெற்றிக்கு மறுநாள் நானும் என் மனைவியும் ட்ராம் ஒன்றில் ஏறி அங்கு வந்தோம். ப்ளாஸாவுக்கு முன்னால் சில இளைஞர்களைப் பார்த்தோம். கையில் அட்டைகள். ‘ட்ரம்ப் பிஸ்ஸாவை முள்கரண்டியால் சாப்பிடுகிறார்’, ‘ட்ரம்ப் தேசிய அவமானம்’, ‘நாங்கள் வெறுக்க மாட்டோம், எங்கள் நாடு ஒற்றுமையின் சின்னம்’போன்ற வாசகங்களைத் தாங்கியவை. இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் சற்று நேரத…
-
- 3 replies
- 627 views
-
-
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியரான சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. சிறையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் சகோதரி, பாகிஸ்தான் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் ஒரு கோழை. அந்நாட்டிற்கு எதிராக ஒரு போர் நடத்த வேண்டிய நேரம் இது. எனது சகோதரர் சரப்ஜித் சிங் இப்போது தியாகியாகிவிட்டார். ஏனென்றால், அவர் இந்தியர் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டன. இன்று அவரை பாகிஸ்தானில் தேர்தலுக்காக சர்தாரி கொலை செய்த…
-
- 3 replies
- 502 views
-