உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்கநிலையில் தளர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. குறித்த வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி…
-
- 0 replies
- 231 views
-
-
இங்கிலாந்தின் Tier 2 (General) visa புதிய சட்டத்தால் வெளியேறும் மக்கள்! சமீபத்தில் இங்கிலாந்து அரசு ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அதன் படி 'Tier 2 (General) visa' விசாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஆண்டுக்கு 35 ஆயிரம் பவுண்டுகள் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கு தங்க முடியும். இல்லாவிடில் குடியேறிய 5 ஆண்டுகளுக்கு பிறகு அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 6–ந் திகதி முதல் குடியேறியவர்களுக்கு இப்புதிய சட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 55,589 வெளிநாட்டினர் இங்கிலாந்தில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் 31,058 பேர் இந்தியர்கள். இது அங்கிருந…
-
- 4 replies
- 374 views
-
-
பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம்! புதிய கொரோனா வைரஸ் சட்டங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் காரணமின்றி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் எவருக்கும் 5,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கும் சட்டம், அடுத்த வாரம் நடைமுறைக்கு வர உள்ளது. இன்று (திங்கட்கிழமை) வீட்டில் தங்கும் விதி முடிவடைகின்ற போதிலும், வெளிநாட்டு விடுமுறைகள் தற்போது அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தற்போதைய திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் மக்கள் விடுமுறைக்கு வெளிநாடு செல்லக்கூடிய ஆரம்ப திகதி மே 17 ஆகும். இருப்பினும், ஐரோப்பாவில் கொவிட் நிகழ்வுகளின் மற்றொரு எழுச்சி, ஐரோப்பா முழுவதும் தடுப்பூசிகளின் மெதுவான வெளியீடு ஆக…
-
- 0 replies
- 430 views
-
-
பிரித்தானியாவில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் பிரிஸ்டலில் எம்ஐ வீதியில் ஆயுத மேந்திய காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். வாகனமொன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதை பார்த்தாக ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனமொன்றின் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் நபர் ஓருவரை வெளியே இழுத்ததை பார்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் ஐந்து ஆறு தடவை துப்பாக்கிபிரயோகம் செய்தனர் எனவும் அந்த வாகனத்தை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் எனவும் பின்னர் நபரை வெளியே இழு…
-
- 0 replies
- 400 views
-
-
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்? நால்வர் கைது… பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். West Yorkshire, பிரதேசத்தின் Sheffield and Chesterfield. ஆகிய பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 22, 31, 36, 41 ஆகிய வயதுகளையுடையவ இந்தச் சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதாகவும், இவர்களை, காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளன…
-
- 0 replies
- 388 views
-
-
பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டி…
-
- 0 replies
- 194 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரித்தானியாவிற்குள் குடியேறுவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்றும் அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவிலிருந்து விலகுவதற…
-
- 0 replies
- 392 views
-
-
பிரித்தானியாவில் குண்டுவெடிப்பு!19 பேர் வரை உயிரிழப்பு!50 பேர் வரையில் காயம்!தீவிரவாதத் தாக்குதலென காவற்துறை தெரிவிப்பு! Manchester Arena blast: 19 dead and about 50 hurt. BBC.
-
- 9 replies
- 1.1k views
-
-
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியம் By T. SARANYA 07 OCT, 2022 | 01:18 PM பிரித்தானியாவில் எரிவாயு விநியோகம் குறைந்தால் குளிர்காலத்தில் மூன்று மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என தெரிவித்துள்ளதுடன் நெருக்கடி அதிகரித்தால் விநியோக குறுக்கீடுகள் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது. மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தேவை உள்ள நேரங்களில், ஒருவேளை காலை அல்லது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வ…
-
- 5 replies
- 818 views
- 1 follower
-
-
கடந்த செம்ரெம்பர் மாதம் இலண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைதான மொங்கோலிய நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் Khurts (41) என்பவரை ஜெர்மன் நாட்டிடம் கையளிப்பது தொடர்பான வழக்கு விசாரணை, இன்று புதன்கிழமை இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த மொங்கோலிய பிரசை ஒருவரை, ஜெர்மனி ஊடாக மொங்கோலியாவுக்கு கடத்தியது தொடர்பாக இவர்மீது ஜெர்மனிய காவற்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்ததுடன் இவர்மீது சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்திருந்தது. கடத்திச் செல்லப்பட்டவர் மொங்கோலிய அமைச்சர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையவர் என்றும் பிரான்சிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பின்னர் இவர் மொங்கோல…
-
- 0 replies
- 516 views
-
-
பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்பு 26,097 – முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளியீடு April 29, 2020 பிரித்தானியாவில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாக 26,097 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டிருந்தது. முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, மருத்துவமனை இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 21,678 ஆக இருந்த நில…
-
- 3 replies
- 521 views
-
-
பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்.. 61,000 புதிய தொற்றுக்கள் பதிவாகி.. மொத்த கொவிட்-19 மரணம்.. மே 8 வரை 40,000 ஆயிரத்தை எட்டி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்.. பிபிசி இச்செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்து வருகிறது. Coronavirus death toll passes 40,000 in the UK https://www.telegraph.co.uk/news/2020/05/19/coronavirus-death-toll-passes-40000-uk/ More than 60,000 new Covid-19 infections are happening a week in England, according to official figures. https://www.standard.co.uk/news/health/coronavirus-statistics-england-infections-a4446976.html
-
- 5 replies
- 996 views
-
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸைக் குறைப்பதற்காக புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது ஜேர்மனிய செய்திகளின்படி பிரித்தானிய பிரதமர் மூன்று வாரங்களுக்கு மக்களை வீட்டிற்குள் முடங்குமாறு அறிவித்துள்ளார்
-
- 3 replies
- 669 views
-
-
பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை - புதிய கட்டுப்பாடுகள் சாத்தியம் பிரித்தானியா கொவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் "இப்போது இரண்டாவது அலைகளைக் காண்கிறது" எனவும் "நாட்டில் இதைப் பார்ப்பது தவிர்க்க முடியாது." எனவும் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஜோன்சன் இறுக்கமான சமூக இடைவெளி விதிகள் அவசியமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதிய மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பொது நிகழ்வு…
-
- 80 replies
- 9k views
-
-
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் சிறுபான்மையினர் தொடர்பான ஆய்வறிக்கை! பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றால் மரணிக்கும் ஆபத்து, கறுப்பின மக்கள் மற்றும் சிறுபான்மை இன சமூகங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதார சேவை தரவுகளின் கல்வி ஆய்வின்படி, இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் பல்கலைகழக கல்லூரி (யு.சி.எல்) நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் பாரம்பரிய மக்களின் இறப்பதற்கான சராசரி ஆபத்து 3.29 மடங்கு அதிகமாகும். ஆபிரிக்க கறுப்பின பின்னணியில் இது 3.24 மடங்கு அதிகமாகவும், பங்களாதேஷுக்கு 2.41 மடங்கு அதிகமாகவும் உள்ளது. கறுப்பின கரீபியன் சமூகங்கள் 2.21 மடங்கு அதிக ஆபத்தில் உள்ளன. இந்திய சமுத…
-
- 0 replies
- 280 views
-
-
பிரித்தானியாவில் சமூக வலைத்தளங்களுக்கு தடை எச்சரிக்கை! தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிடின் பிரித்தானியாவில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். ஒளிப்படப் பகிர்வுத் தளமான இன்ஸ்டாகிராமே தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்ததாக தந்தையொருவர் குற்றச்சாட்டினை முன்வைத்தார். குறித்த குற்றச்சாட்டைத் தொடர்ந்தே சுகாதார அமைச்சரின் இக்கருத்து வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்த அமைச்சர், ”இந்த அற்புதமான தொழில்நுட்பம் நல்ல விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுவதை உறுதிபடுத்த வேண்டும். மாறாக இளைஞர்களையும், யுவதிகளையும…
-
- 0 replies
- 444 views
-
-
பிரித்தானியாவில் சரிந்து விழுந்த ரோலர் கோஸ்டர்: 4 பேர் படுகாயம் (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 03 யூன் 2015, 05:51.54 மு.ப GMT ] பிரித்தானியவில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் ஆல்டன் டவர்ஸ் பூங்காவில்(Alton Tower Theme park) உள்ள ரோலர் கோஸ்டரில் வழக்கம் போல பலர் சவாரி செய்து விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். அப்போது,ரோலர் கோஸ்டரானது தரையிலிருந்து 25 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது 16 பேர் ரோலர் கோஸ்டரில் இருந்ததாக கூறப்படுகிறது, இதில் 4 பேர் படுகாயமடைந்தனர், மேலும் பலர் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர். …
-
- 1 reply
- 334 views
-
-
பிரித்தானியாவில் சிறீலங்கா தேசியக் கொடி தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது! By Seelan - 16 hours ago Share இனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். “உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் …
-
- 3 replies
- 644 views
-
-
பிரித்தானியாவில் ட்ரம்புக்குப் பிரமாண்ட அரச விருந்து 18 Sep, 2025 | 06:32 PM பிரிட்டனுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பிரமாண்டமான அரச விருந்து அளித்துள்ளனர். விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில், 155 அடி நீளமுள்ள மேசை அமைக்கப்பட்டது. இந்த மேசை முழுக்க, வெள்ளிப் பாத்திரங்கள், தங்க நிறத்திலான பொருட்கள், மற்றும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள் இடம்பெற்றிருந்தன. விருந்திற்காக பிரிட்டன் இராணுவத்தின் பாதுகாப்புப் பிரிவினர், அரண்மனையின் ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, அமெரிக்கா - பிரிட்டன் இட…
-
- 0 replies
- 169 views
-
-
பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 326பேர் உயிரிழப்பு! பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்ட 326பேர் உயிரிழந்துள்ளதாக மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஃபைஸர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 90 பேரும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் என்றும், கொரோனா தடுப்பூசியால்தான் உயிரிழந்தனரா என்பது உறுதியாகவில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் தற்போதுவரை சுமார் 13 மில்லியன் பேருக்கு கொரோனா த…
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் தமிழீழக் கொடிக்குத் தடை இல்லை. www.Tamilkathir.com
-
- 0 replies
- 492 views
-
-
நாளை (30-11-2011) பிரித்தானியாவில் தலைமுறை கண்டிராத பெரும் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி சுமார் இரண்டு மில்லியன் பொதுத்துறை ஊழியர்கள் வேலையை பகிஸ்கரிப்பர். நாடு பூராவும் சுமார் 1000 ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பிரித்தானிய அரசுகள்.... பொதுச் சேவைகளில் தொழில் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக இறங்கி உள்ளன. தற்போது.. பொதுத்துறையினரின் ஓய்வூதியத்திலும் அவை கைவைக்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதியம் பெற நீண்ட காலச் சேவையும் (ஓய்வூதிய எல்லை 67 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.) சம்பளத்தில் கூடிய ஓய்வூதியக் கழிவுத் தொகையும் (ஓய்வூதிய வரி) செலுத்த அரசு கேட்டுக் கொண்ட…
-
- 5 replies
- 970 views
-
-
பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு... 17 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்! கடந்த தசாப்தத்தில் பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வு 17 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அந்த குறைப்பு ஒரு முக்கிய தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லை. நமது உணவின் சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதே இதன் நோக்கம். தேசிய உணவு மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோள், முழு பிரித்தானியாவின் உணவு முறையின் மதிப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது . விவசாயம் மற்றும் உற்பத்தி முதல் பசி மற்றும் நிலைத்தன்மை வரை. இது, அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியாவில் இறைச்சி நுகர்வு 30 சதவீதம் குறைய பரிந்துரைக்கிறது. லான்செட் பிளானட்டரி ஹெல்…
-
- 3 replies
- 370 views
-
-
பிரித்தானியாவில் தினமும் 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது APR 08, 2015 | 7:58by பிரித்தானியாச் செய்தியாளர்in செய்திகள் பிரித்தானியாவில் நாளொன்றுக்கு 40 சட்டவிரோத குடியேற்றவாசிகள், கைது செய்யப்படுவதாக, அந்த நாட்டின் குடிவரவுத்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி, தி ரெலிகிராப் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் நுழைவிசைவு காலாவதியான பின்னர், அல்லது நுழைவிசைவு இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கண்டுபிடிக்க, இலங்கை, இந்திய, சீன உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கார் கழுவும் இடங்களில் தினமும், சோதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய இடங்களிலேயே சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், இந்த இடங்களில் சோதனைகள…
-
- 2 replies
- 318 views
-
-
பிரித்தானியாவில் திருமண பந்தத்தில் இணைந்த முதல் முஸ்லிம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த ரெஹானா கவுசார் (34) மற்றும் சோபிடா கமார்(29) ஆகிய இருவரும் பதிவாகியுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் லீட்சிலுள்ள திருமணப்பதிவாளர் அலுவகத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் உடனடியாக அங்கேயே புகலிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தங்களது சொந்த நாட்டு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கூறியே இருவரும் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானின் லாஹூர் மற்றும் மிர்பூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்கள் இருவருக்கும் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தல்கள்…
-
- 18 replies
- 1.3k views
-