உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26655 topics in this forum
-
கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. …
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்காவில் நியூஜெர்சி நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றையதினம் நள்ளிரவில் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.இந்த சம்பவத்தில் 13 வயது சிறுமி, 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக நியூயார்க் நகர போலீஸ் இயக்குனர் சாமுவேல் தெரிவித்தார். மேலும் 2 பேர் குண்டு காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்கள் யார்? சம்பவத்துக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=100042&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 393 views
-
-
ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு பகிர்க வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார். அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட …
-
- 2 replies
- 746 views
-
-
உக்ரைன் யுத்தம்: வரலாற்றுப் பின்னணியும் நிகழ்கால விபரீதமும்! மின்னம்பலம்2022-02-25 சைபர் சிம்மன் ஆகாயம், நிலம், கடல் ஆகிய மூன்று மார்க்கங்களின் வழியாகவும் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, ஐரோப்பாவும் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியிலும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. அண்டை நாடான உக்ரைனைத் தாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரஷ்யா மாதக்கணக்கில் மேற்கொண்டு வந்தாலும், அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று சொல்லிவந்ததை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிறப்பு நடவடிக்கை எனும் பெயரில் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்வோம் என உக்ரைன் அறிவித்துள்ள நிலையில் போரும் பாதிப்பும் தீவிரமாகும் என்றே அஞ்சப்படுகிறது.…
-
- 0 replies
- 331 views
-
-
உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்! உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது. சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அ…
-
- 0 replies
- 177 views
-
-
மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்! மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் உள்ள லாஸ் டினாஜாஸ் நகரத்தில் ஒரு கூட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. துப்பாக்கி ஏந்தியவர்கள் சேவல் சண்டைக் குழிக்குள் நுழைந்து பங்கேற்பாளர்களை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் 16 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக மாநி…
-
- 0 replies
- 319 views
-
-
எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !! 16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா? அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் க…
-
- 0 replies
- 528 views
-
-
http://www.youtube.com/watch?v=oAFXMO53d4w சோனியா காந்தி அப்பன் பெயர் தெரியாதவராம்..........
-
- 1 reply
- 550 views
-
-
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது தேசதுரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது பகையாளி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக இவர்கள் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வாரக் கடைசியில் ஆசியக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவைத் தோற்கடித்ததை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்த அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். தேசத்துக்கு எதிரான செயலில் அம்மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறி அப்படியான ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தக் குற்…
-
- 2 replies
- 621 views
-
-
வெறும் கையை வீசிக்கொண்டு வந்த சோனியா உலகின் 6வது பணக்காரர் ஆனது எப்படி? - மேனகா காந்தி கேள்வி. [saturday, 2014-03-22 17:45:53] பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறையானவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:– சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது. லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின் (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன. புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறி…
-
- 9 replies
- 857 views
-
-
ஜப்பானின்.. முன்னாள் பிரதமர், ஷின்சோ அபே மீது... துப்பாக்கி சூடு! ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. உரை நிகழ்த்தும் போது, அவர் தரையில் விழுவதற்கு சற்று முன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் சுடப்பட்ட பின்னர் மார்பில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை ம…
-
- 12 replies
- 779 views
- 1 follower
-
-
மீனவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் நெல்லை: தமிழகத்தில் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் துவங்கியது. நாட்டில் பாதுகாப்பு [^] கருதியும், மீனவர்கள் [^] கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது தவறுதலாக கடல் எல்லையை தாண்டும்போதும் இடர்பாடுகளின் போதும் மீனவர்களுக்கு உதவிடவும், மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மீனவர்களின் கைரேகையுடன் கூடிய மின்னணு அடையாள அட்டை அரசால் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீ்ன்துறை மற்றும் இந்திய மின்னணு நிறுவனம் [^] சார்பில் நேற்று முன்தினம் கடல் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் இடி்ந்தகரை மீனவர் கிராமத…
-
- 0 replies
- 540 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய தொழிலாளி பலி முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `எம்.எல்.ஏ-வை தாக்கியவர் பலி` கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வத்தை தர குறைவாக பேசி, தாக்கியதாக கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக செய்தி பிரசுரித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ."கலசப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி. ஆர் பிறந்த நாள் விழாவுக்கான, மேடை அலங்கார பணிகளை வசந்தமணி என்பவர் செய்துள்ளார். இந்தப் பணிக்கான கூலி தொகையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தர வேண்டி இருந்துள்ளது. இதை கேட்டபோ…
-
- 0 replies
- 242 views
-
-
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராம் மும்பையில் தொடரூந்து வலைப்பின்னல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக காவற்றுறையினர் தெரிவிக்கின்றனர். உள்ளூர் நேரப்படி மாலை 6:30(GMT 1300) மணியளவில் புறநகர்ப் பகுதியின் மிகவும் நெருக்கடிமிக்க மேற்குப் புகையிரதத் தடத்தில் முதலாவது குண்டு வெடித்துள்ளது. மேலதிக தகவல்களிற்கு.. http://news.bbc.co.uk/2/hi/south_asia/5169332.stm
-
- 0 replies
- 710 views
-
-
அப்பே சிங்கள வெதமாத்தயா "மகிந்த" கியூபாவில் லான்ட் பண்ணியிருக்கிறாராம்!! வேட்டி அவிழப் போகுது போலக் கிடக்கு!! கழுத்திலை இருக்கிற சுருக்கு வர வர இறுகிற மாதிரியும் கிடக்கு!!!! எது எப்படியோ, மாத்தயோ எஞ்ஜோய் பண்ணு!!! :wink: ஆனா ஒரு உண்மை மட்டும் சொல்லோணும், இந்த வயசிலேயும் மனுசி "லக்ஸன, கீல வடக் நா"!!!!..... :P
-
- 8 replies
- 2k views
-
-
'இந்தியா என்றால் இந்திரா! இந்திரா என்றால் இந்தியா!' எழுபதுகளில் அனைத்திந்தியக் காங்கிரசுத் தலைவராக இருந்த தேவகாந்த் பருவா தந்த முழக்கம் இது. இப்போதெல்லாம் காங்கிரசுக்காரர்கள் தங்கள் கொடியிலிருந்து இராட்டையை அகற்றி விட்டு சோனியா காந்தியின் தலையைப் போட்டுக் கொள்கிறார்கள். சில நேரம் சோனியா + ராகுல் காந்தி தலைகள் இடம் பெறுகின்றன. மாமியார் இந்திராவை விஞ்சிய மருமகள் சோனியா, கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதில்! ஆனால் ஊழல் நெடுங்கணக்கு இந்திராவுக்கு முன்பே தொடங்கி விட்டது. இந்திராவின் கணவர் பெரோசு காந்தி நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய ‘முந்திரா ஊழல்’ கூட நேரு அரசாங்கத்தின் முதல் ஊழலன்று. சரியாகச் சொன்னால், ‘சுதந்திர’ இந்தியாவோடு சேர்ந்தே ஊழலும் பிறந்து விட்டது. இந்தியா ‘வளர …
-
- 0 replies
- 528 views
-
-
அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி…
-
- 0 replies
- 353 views
-
-
சிரியாவில் விசாரணைக்கு சென்ற சர்வதேச குழுவை நோக்கி துப்பாக்கி சூடு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ ரகசிய சந்திப்பு, 86 வயதிலும் பளு தூக்குதலில் அசத்தும் முன்னாள் உலகச் சாம்பியன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 206 views
-
-
நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியல…
-
- 54 replies
- 2.9k views
-
-
தேர்தல் களத்தில் நடிகர் விஜய்? First Published : 04 Feb 2011 07:56:47 PM IST சென்னை,பிப்.4: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இரண்டாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஜெயலலிதாவை எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அதிமுகவில் விஜய் இணைந்து விடுவார் என்றும், தன்னுடைய மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் பேசப்பட்டது. இதன்பிறகு விஜய் தன் மாவட…
-
- 0 replies
- 444 views
-
-
புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது: ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்பட…
-
- 2 replies
- 1.3k views
-
-
இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்தார். இந்…
-
- 3 replies
- 777 views
-
-
சீனா மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அமைப்புகளின் கம்ப்யூட்ரில் முக்கிய உள் கட்டமைப்புகளை முடக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா வின் முக்கிய சேவைகள் வழங்கும் அமைப்புகளின் கம்யூட்டர்களில் சீனா மற்றும் வேறு ஒரு சில நாடுகளின் வைரஸ்ககளை அமெரிக்கா கண்டு பிடித்து உள்ளது. அமெரிக்க்க கணினிகளில் எதிர்கள் உளவு பார்ப்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது இது போல் கண்டறியப்பட்டு உள்ளது. என்று கூறினார். இத்தகைய தாக்குதல் சாத்தியம் உள்ளது என நாட்டின் சைபர் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுவது இதுவே முதல் முறையாகும். அதிகாரி கூறியதில் சீனா தவிர வேறு எந்த நாடுகளின் பெயர்கள் இல்லை என்றாலும் ரஷ்யா, ஈரான், போன்ற நாட…
-
- 0 replies
- 322 views
-
-
அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு அதிகாரிகள் போல் போலியாக நடித்து அமெரிக்கர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலியாக ‘கால் சென்டர்’ ஒன்றை சிலர் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மூலம் அந்நாட்டில் வரி செலுத்த வேண்டியர்கள் குறித்த தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு வரி துறையில் இருந்து பேசுவது போல பேசி மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரை கைவிடுவதாக கூறி…
-
- 0 replies
- 274 views
-