Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாலத்தீவு: இந்திய-சீன மல்யுத்தக் களம் மாலத்தீவு நாட்டில் செப்டம்பர் 23 அன்று அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், அந்நாட்டின் அரசியல் மாற்றங்கள் குறித்த கவனம் எழுந்திருக்கிறது. சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டும் மாலத்தீவை இந்தியா எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய சூழலும் உருவாகியிருக்கிறது. சீனாவை நோக்கி மாலத்தீவு நகர்வதற்கு மாலத்தீவின் உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான புவியரசியலின் முக்கியக் களமாக மாறியிருக்கிறது மாலத்தீவு. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இரு நாடுகளும் இன மற்றும் கலாச்சாரரீதியாக மிகவும் நெருக்கமான உற…

  2. தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி மாலத்தீவுகள் அரசாங்கம் ஒரு மாதகால அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மாலத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் அரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்த அவசரநிலை வந்துள்ளது. சுடுகலன்களும் வெடிபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான சதி குறித்தும் தெரியவந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார். அதிபர் மாளிகைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டை தாம் திங்களன்று வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அரசியலமைப்பின்படி ஒரு அவசரநிலைப் பிரகடனம், சில அடிப்படை உரிம…

  3. மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலிராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி ராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல்பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே கோவா நகரில் , கிளர்ச்சியாளர்களுக்கும், பிரான்ஸ், மாலிராணுவ கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் பிரான்ஸ் வீரர்கள் உள்பட 10 பேர் பலியானதாக பிரான்ஸ் ராணு செய்தி தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு துப்பாக்கிச்சண்ட நடந்து வருகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%A…

  4. ஆபிரிக்க நாடான மாலி சர்வதேச நிதியுதவியில் தங்கியுள்ளபோதிலும் அந்நாட்டின் ஜனாதிபதியின் பாவனைக்காக 4 கோடி டொலர் செலவில் விமானமொன்றை வாங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவலை தெரிவித்துள்ளது. '4 கோடி டொலர் செலவில் ஜனாதிபதிக்காக விமானம் வாங்கியமை மற்றும் இராணுவத்தினருக்கான விநியோகங்களுக்காக 20 கோடி டொலர் அரச உத்தரவாதம் வழங்கியமை குறித்து நாம் கவலையடைகிறோம்' என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாலிக்கு 422 கோடி டொலர் நிதியுதவி வழங்கவதற்கு 55 நாடுகள் கடந்த வருடம் உறுதியளித்திருந்தன.அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கெய்ட்டாவின்; பாவனைக்காக கடந்த மாதம் போயிங் 737 விமானமொன்று மாலி அரசாங்கத்தினால் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.…

  5. Jan 10 2013 08:27:16 ஆப்பிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கனடிய ராணுவம் அனுப்பப்பட மாட்டது என்று கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றான மாலியில் தீவிரவாத இயக்கமான அல்குவைதாவுடன் தொடர்புக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் நாட்டின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மாலியின் வடப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கு தீவிரவாதம் பரவும் அபாயம் உண்டாகியுள்ளது. கடந்த மாதம் கூடிய ஐநா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆப்பிரிக்கர் தலைமையில் ஒரு கூட்டு ராணுவத்தை அமைத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதென்று முடிவு செய்தது. இதற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளிக்க…

  6. ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல் குவைடா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரான்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள்ளார். மாலியில் நிலமை மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது. ஆபிர…

    • 31 replies
    • 1.8k views
  7. மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது. ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார். மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ…

    • 1 reply
    • 418 views
  8. மாலியில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் பலி! மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாம்களுக்கு புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று…

  9. 08 SEP, 2023 | 10:15 AM மாலியின் வடகிழக்கில் படகொன்றில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பினரே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் அமைப்பினர் இராணுவமுகாமொன்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டதில் 15 மாலி இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/164075

  10. மாலியில் ஐநா முகாம் மீது தாக்குதல்: 3 பேர் பலி மாலியில் ஐநா முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஆலிவர் சல்காடோ தெரிவித்துள்ளார். மாலியின், வடக்கு கைடல் பகுதியில் உள்ள ஐநா அமைதி காப்பாளர்கள் முகாம் மீது சனிக்கிழமையன்று ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 அமைதி காப்பாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரும் பலியாகினர். மேலும், காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆலிவர் சல்காடோ தெரிவித்தார். கடந்த வாரம் மாலியின் பமாகோவில் ஆடம்பர விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட…

  11. ஆபிரிக்க நாடான மாலியில் இராணுவத்திலிருந்து பிரிந்து சென்ற சிப்பாய்களைக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.மாலியின் அரசியலமைப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க நிறுவனங்கள் கலைக்கப்பட்டள்ளதாகவும் கிளர்ச்சியாளர்கள் இன்று தொலைக்காட்சி மூலம் அறிவித்தனர். இக்கிளர்ச்சியாளர்கள் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கான தேசிய குழு என தம்மை அழைத்துக் கொள்கின்றனர். மாலியின் நாட்டின் வடபகுதியில் இடம்பெற்றுள்ள கிளர்ச்சியை அடக்குவதற்கு அரசாங்கம் வலுவற்றிருந்தால் இப்புரட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் பமாகோவிலுள்ள ஜனாதிபதி மாளிகையை இன்று கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் அமைச்சர்கள் பலரை…

  12. மாலி நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மாலி அரசுக்கு ஆதரவாக பிரஞ்சு படைகள் களமிறங்கின. சுமார் 7 வாரகாலம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் மாலி படைப்பிரிவு தலைவன் அபு சயீத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட் அதிபர் இத்ரீஸ் டெபி இட்னோ நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட அபு சயீத் (46) என்பவரின் இயற்பெயர் முகம்மது கெடிர். லிபியா நாட்டின் எல்லைப்பகுதியான அல்ஜீரியாவில் பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இஸ்லாமிய போராளி குழுவினருடன் ஏற்பட்ட தொடர்பினால் அல்-கொய்தா இயக்கத்தில் இணைந்து மாலியில் இயங்கி வந்த அவ்வியக்கத்தின் படைத் தளபதியானார். மேற்கத்திய நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுக…

  13. மாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் துப்பாக்கி முனையில் கைது மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி இப்ராகிம், பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை துப்பாக்கி முனையில் இராணுவத்தினர் கைது செய்தனர். பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி இப்ராகிம் மீது தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வந்ததுடன், இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக இரண்டு மாதங்களாக போரட்டம் நடந்து வந்தது. இந்த நிலையிலேயே அவர் இராணுவத்தினரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் உரையாடிய இப்ராஹிம் பவுபக்கர், ‘தமது பதவியை இராஜினாமா செய்வதாகவும் தமது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் ச…

  14. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தங்க சுரங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. அந்த நாட்டில் தென்மேற்கில் கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். திடீரென தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து சிக்கி கொண்டனர். உடனே மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான…

  15. மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்ட இராணுவ அதிகாரி அஸிமி கொய்டா! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவித்துக் கொண்டுள்ளார். அஸிமி கொய்டாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற, இவர் முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. தலைநகர் பமாகோவில் உள்ள இராணுவ அமைச்சகத்தில், உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கொய்டா, இதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நான் என்னை முதலில் அறிமுகம் செய்துகொள்கிறேன். என் பெயர், கர்னல் அஸிமி கொய்டா. நான், மாலி இராணுவப் படையின் தலைவர். இன்று முதல், மாலி அ…

    • 0 replies
    • 497 views
  16. மாலியில் தாக்குதல்: கர்ப்பிணிகள் உட்பட 134 பேர் உயிரிழப்பு மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள கிராம மக்கள் 134 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 55 பேர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதங்களுடன் புகுந்த தோகோன் பழங்குடியினத்தவர்களே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள மொப்டி பிராந்தியத்தில் உள்ள Ogossagou கிராமத்தில் வாழும் புலானி இன மக்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளும் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், வேட்டைக்காரர்களான தோகோன் பழங்குடியினருக்கும், புலானி வ…

  17. மாலியில் நடப்பது யுரேனியப் போர்! By சு. வெங்கடேஸ்வரன் உள்நாட்டுப் போர் "ஏற்படும்' அல்லது "ஏற்படுத்தப்படும்' நாடுகள் தொடர்பாக, மேற்கத்திய நாடுகள் எடுக்கும் நிலைப்பாடு முழுவதும் அவர்களுக்குச் சாதகமானதாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சியாளர்கள் படைக்கு ஆதரவாக ஆயுதங்களுடன் களமிறங்கியுள்ள அதே நாடுகள்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் போரில் ஈடுபட்டுள்ளன. மாலியில், "ஆபரேஷன் செர்வல்' என்ற பெயரில் போர் நடத்தி வருகிறது பிரான்ஸ். மாலி முன்பு பிரான்ஸ் நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கு உள்பட்டிருந்தது என்பதால், அங்கு பிரச்னை ஏற்பட்டால் ராணுவ நடவடிக்…

  18. ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகே யாரையும் செல்ல முடியாதவாறு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151120_mali_attack 180 பேர் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் அல்லாகு அக்பர் என்ற கோசத்துடன் ஆயுத தாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. https://uk.news.yahoo.com/gunmen-attack-hotel-mali-hostages…

  19. மாலியில்... இடம்பெற்ற, பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழப்பு! மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான வீதிகளை கொண்டுள்ள மாலியில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் 26 இறப்புகள் பதிவாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. https://athavannews.c…

  20. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml மாலத்தீவுகளில் விசாரணைகளை முடித்து நாடு திரும்பினர் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மாலத்தீவுகளின் கடற்பரப்பு சில தினங்களுக்கு முன்னர் மாலத்தீவுகளின் கடற்பரப்பில் ஊடுருவிய ஒரு மீன்பிடிப் படகு அந்நாட்டின் கடலோரக் காவல் படையினரால் மூழ்கடிக்கப்பட்டு அதிலிருந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகளுக்காக மாலதீவுகளுக்குச் சென்றிருந்து இந்திய இலங்கை அதிகாரிகள் தமது விசாரணைகளை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். மாலத்தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஐந்து பேரிடம் இவர்கள் தீவிர விசாரணை நடத்தியதாகவும்இ அந்தத் தகவல்களுடன் தமது நாடுகளில் உள்ள ஆதாரங்களை ஒப்பிட்டு பார்த்…

  21. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/former-maldives-leader-abdulla-yameen-jailed-for-money-laundering/

  22. மாலைதீவின் தலைநகரான மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மட் நசீட் சென்றுள்ளமையினால் கலகம் அடக்கும் பொலிஸார் உயர் ஸ்தானிகராலய பிரதேசத்தை சுற்றி வளைத்துள்ளனர். மாலைதீவு நீதிமன்றமொன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரே மாலேயிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினுள் அவர் சென்றுள்ளார். குறித்த பிரதேசத்தை சுற்றி பொலிஸார் மறிப்புக்களை போட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரியில் குற்றச் செயல் நீதிமன்ற பிரதம நீதிபதியான அப்துல்லா முஹம்மடை தடுத்துவைத்தமை தொடர்பாக விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி செல்ல வேண்டியிருந்தது. எனினும் வழக்கு விசாரணைகளில் பங்குபற்றாமையிலால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்தே இந்திய உயர் ஸ்தானிகராலயத்தி…

    • 0 replies
    • 433 views
  23. மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன…

  24. 1980 களின் பிற்பகுதியில் ஹிந்தியாவின் பிராந்திய நலனை முன்னிலைப்படுத்தி.. புளொட் கும்பலை வைத்து.. ஹிந்திய உளவு அமைப்பின் உதவியோடு செய்யப்பட்ட இராணுவப் புரட்சி.. பின் அதை ஒடுக்கப் போவதாகச் சொல்லி மாலைதீவில் இறங்கிய ஹிந்தியப்படை.. இது நாள் வரை அங்கு பல்வேறு இராணுவ விமானப்படை தேவைகளுக்காகத் தங்கி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை வைத்து ஹிந்தியா உலக அரங்கில் தமிழீழ விடுதலைக்காகப் போராடிய.. அனைத்து ஈழத்தமிழ் இயக்கங்களையும் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது மாலைதீவு அதிபராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும். மொகமட் முய்ஸ்சு.. இவ்வாறு தங்கியுள்ள ஹிந்தியப் படைகளை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ளதுடன்.. இந்த அறிவிப்பை சீனா வரவேற்றிருக்கிறது. …

  25. குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. ஆம்! அமைதியாக இருந்த இந்த மாலைதீவில் உண்மையில் நடந்தது தான் என்ன என்று அறிந்து கொள்வதற்கு பலரும் பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.