உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
[size=4]ஒரு ஊரில் ஒரு பெரும் வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி சில காலம் வேறொரு சிறிய வியாபாரியுடன் இணக்கமாக இருந்து வியாபாரம் செய்து வந்தார். சில காலத்திற்கு பின் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்பட்டது. உடனே அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி அவர் மீது புகார் கூறினார். இந்த குற்றச்சாட்டினால் கவலை அடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞர் தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அன்று மாலை அந்த சிறிய வியாபாரி, வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று காத்துக்கொண்டிருந்தார். வழக்கறிஞர் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, தம்ளர், கடிகாரம் ஆகியவை அமெரிக்காவைச்சேர்ந்த ஜேம்ஸ் ஒடிஸ் என்பவரிடம் இருந்தது. நியூயார்க் நகரில் சமீபத்தில் இந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. பிரபல இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, காந்தி பொருட்களை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். காந்தி பொருட்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க மல்லையா முடிவு செய்துள்ளார். இன்னும் சில தினங்களில் மகாத்மாகாந்தி பொருட்கள் இந்தியா வந்து விடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜேம்ஸ் ஒடிசிடம் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியருக்கு கொடுக்க விருப்பம் இல்லை. மீண்டும் நானே வைத்துக்கொள்ளப்போகிறேன் என்…
-
- 3 replies
- 1.4k views
-
-
பஹ்ரைன்: போராட்டங்கள் வலுக்கின்றன பஹ்ரைனில் தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு நிலவி வரும் நிலையில் ஆர்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஷியா முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். இணையதளங்கள், ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்பு ஊடகங்களை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் தலைநகர் மனாமாவிலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை வீதிகளில் இறங்கி போராடுமாறு போராட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர். பஹ்ரைன் சுன்னி இனத்தவர்களான அல் கலீஃபா குடும்பத்தினரால் ஆட்சி செய்யப்படுகிறது. மன்னர் ஹமாத் அரசராக இருக்கிறார். அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க, சிறு ஈய…
-
- 10 replies
- 1.4k views
-
-
பெங்களூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், ப…
-
- 6 replies
- 1.4k views
-
-
ரஷ்யா – உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பெப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. கடந்த 6-ம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் 1,263 சதுர கி.மீ. பரப்பளவை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. அப்போதுமுதல் இரு நாடுகள் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரடோவ் நகரில் 38 மாடிகள் கொண்ட ‘வோல்கா ஸ்கை’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 28-வது மாடியில…
-
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை. இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது. விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவ…
-
- 11 replies
- 1.4k views
-
-
திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பிரச்சினைகளை மாபெரும் தியாகமாகவும் சித்தரித்தார். சான்றாக அவருக்கு நடந்த ‘வரலாற்றுச்’ சிறப்பு மிக்க முதுகுத்தண்டு மைனர் சர்ஜரியைக் குறிப்பிட்டவர், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அவரது 85 வயதைக் குறிப்பிட்டு சிகிச்சை வெற்றிபெற்றால் முதுகுவலி மறையும், தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்களாம். குடும்பத்தினரெல்லாம் அழுது அரற்றி அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று போராடினார்களாம். அதுதானே மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தன்று தலைமாட்டில் ராஜாத்தி அம்மாளும், கால்மாட்டில் தயாளு அம்மாளும் எங்கே பங்கு பறிபோய்விடுமென்ற கவலையுடன் அமர்ந்திருந்தத…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிரியாவில் ரஷ்ய யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது சிரியாவுக்கு மேலே வைத்து ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவுடனான எல்லையின் அருகே தமது வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கிய இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
-
- 22 replies
- 1.4k views
-
-
Wednesday, 31 Dec 2008 ஆந்திராவில் கடந்த 13-ம் தேதி ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவி ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம்,வாரங்கல் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஸ்வப்னிகா மற்றும் பிரானிதா. சீனிவாஸ் (25) என்பவரின் காதலை ஸ்வப்னிகா ஏற்க மறுத்துள்ளார்.இதனால்,ஆத்திரம டைந்த சீனிவாஸ்,தனது நண்பர்கள் சஞ்சய் (22),ஹரிகிருஷ்ணா (24) ஆகியோருடன் சேர்ந்து,மாணவிகள் இருவரும் மொபெட்டில் சென்ற போது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பார்வை பறிபோய்,கவலைக்கிடமாக இருந்த ஸ்வப்னிகா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தாக்குதலை நடத்திய இளைஞர்கள் மூவரையும் போலீஸார் என்கௌன்டரில்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன. ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்…
-
- 5 replies
- 1.4k views
-
-
முக்கிய அறிவித்தல் பிரான்ஸ் அரசாங்கம் உரிய அனுமதியின்றி தனது நாட்டில் தங்கியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக எதிர்வரும் 13.10.2014 ம் திகதியில் இருந்து 26.10.2014 வரை சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கென 18ஆயிரம் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது அகதி தஞ்;சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் Gare de Nord Gare de l’ Est Gare de Lyon Chateau Rouge Barbés Gallieni Airoporte Charles de Galle ஆகிய இடங்களுக்கு இந்த திகதியில் அநாவசியமாக செல்வதை தவிர்ப்பது நல்லது.
-
- 16 replies
- 1.4k views
-
-
அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு அறுவை சிகிச்சை வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் புஷ் நெற்றி பொட்டில் இருந்த இரண்டு கரும்புள்ளிகள் சிறு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. அந்த கரும்புள்ளிகள், புற்று நோய்க்கான அறிகுறியா என்பது குறித்து அறிய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் புஷ் தனது இடது நெற்றி பொட்டில் சிறிய கரும்புள்ளி இருப்பதாக கடந்த வாரம் குடும்ப டாக்டரிடம் தெரிவித்தார். அப்போது, அந்த டாக்டர் மற்றொரு கரும்புள்ளி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதையடுத்து, நேற்று முன்தினம் வால்டர் ரீட் மருத்துவ மையத்தின் தோல் நோய் நிபுணர் ஸ்டீவ் கிரிவ்டா, அதிபர் புஷ்ஷுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து அந்த இரண்டு கரும்புள்ளிகளையும் அகற்றினார். முன்னதாக அதிப…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜி ஸ்பெக்ட்ரம்: இன்று சிபிஐ 2வது குற்றப் பத்திரிகை; தயாளு அம்மாள்-கனிமொழி பெயர்கள் இடம் பெறுமா? டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசில் இருந்து திமுக தனது அமைச்சர்களை வாபஸ் பெறவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முறைக…
-
- 7 replies
- 1.4k views
-
-
பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக சென்னை, மே 13: சட்டப் பேரவைத் தேர்தலில் 27 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ள தேமுதிக பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறுகிறது. 13-வது சட்டப் பேரவையில் (2006-2011) பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தது. அந்த இடத்தை இப்போது தேமுதிக பிடித்துள்ளது. அதிமுக அணியில் இடம்பெற்ற தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியாகிறது: பேரவையில் ஒரு கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வேண்டுமென்றால் சில விதிகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்று இருக்க வேண்டும். பேரவைக் கூட்டம் ந…
-
- 10 replies
- 1.4k views
-
-
பெண்களுடன் சதா உல்லாசம்.. மன்னருக்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள்.. தாய்லாந்தில் எமெர்ஜென்சி பிரகடனம் பாங்காங்: தாய்லாந்தில் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கார்ன் பெரும் உல்லாச விரும்பி. அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் அழகிய இளம் பெண்களுடன்தான் தனது நேரத்தை செலவிடுவார். இந்நிலையில் வஜிரலோங்கார்ன், நேற்று தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியிலிருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார். பதவி விலக வலியுறுத்தல் ஏற்கனவே கோபத்திலிருந்த மக்கள், ஒன்று கூடி வஜிரலோங்கார்னுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மன்னரின் ஆட்சியில் சீரமைப்புகள் கொண்டு வரவேண்டும்,…
-
- 11 replies
- 1.4k views
-
-
-
திண்டுக்கல்: மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ்-க்கு ஆண் குழந்தை மீது ஆசை வந்தது. இதனால் வளர்மதி மீண்டும் கர்ப்பம் ஆனார். வளர்மதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என காத்திருந்த ரமேஷ்-வளர்மதி தம்பதிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் வருத்தம் அடைந்த ரமேஷ் தனது பல சரக்கு கடையை கூட கவனிக்காமல் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் ஆர்.எம். காலனி அருகே விஷம் அருந்திய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரை …
-
- 0 replies
- 1.4k views
-
-
மலைக்கள்ளன் அண்ட் கோ! in அ.தி.மு.க, அதிகார வர்க்கம், ஊழல் - முறைகேடுகள், தி.மு.க, புதிய ஜனநாயகம், விவசாயிகள் “பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.” இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா? கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக, போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாள…
-
- 0 replies
- 1.4k views
-
-
போப் பிரான்சிஸ் பேய் ஓட்டினாரா... : வாட்டிகனில் குழப்பம் Posted by: Jayachitra Published: Wednesday, May 22, 2013, 13:10 [iST] வாட்டிகன்: பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப்பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம். இதன்மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஏடுபடுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந…
-
- 0 replies
- 1.4k views
-
-
தொழில்நுட்ப வளர்ச்சியில் எத்தனையே சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வரும் இன்றைய நவீன காலத்திலும் பேய், மாந்திரீகம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பணம் பறித்து செல்லும் சம்பவங்களும் நமது தேசத்தில் எங்கோ ஒரு மூலையில் அரங்கேறி வருகிறது. அதேப் போல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:– உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார். இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
குண்டு புரளி: சிக்கிய 6 வயது சிறுமி, சிறுவன்!!! நவம்பர் 21, 2006 சென்னை: சென்னை பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெடித்துச் சிதறப் போவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2வது வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியும், 5வது வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் 10 வயது அண்ணனும் போலீசாரிடம் மாட்டினர். சென்னை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. தீவிரவாதிகளை விட விளையாட்டுக்காக மிரட்டல் விடுப்போர்தான் அதிகரித்து வருகின்றனர். இதனால் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டபோது, சென்னை காவல்துறை கலங்கி…
-
- 7 replies
- 1.4k views
-
-
வீடியோ இணைப்பு - இஸ்ரேல், காசா மீது நேற்று மேற்கொண்ட தாக்குதல் இடம்பெற்ற சுமார் 24 மணித்தியாலங்களில் மீண்டும் இன்று பாரிய தாக்குதல்களை தொடுத்துள்ளது. இதனால் 255 பேர் வரை பலியாகியும் 600 பேர் வரை காயமடைந்ததாகவும் CNN செய்திகள் தெரிவிக்கின்றன. 60 வருடங்களின் பின் பலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட மிகவும் இரத்தம் தோய்ந்த நாளாக இது அமைவதாக வருணிக்கப்படுகிறது.வீடியோ இணைப்பு
-
- 2 replies
- 1.4k views
-
-
தாய்லாந்தில் இராணுவ ஆட்சி? தாய்லாந்தின் தலைநகரில் இராணுவ ராங்கிகள் நிலைகொண்டிருப்பதாகவும், தாய்லாந்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நிறுத்தப்பட்டு அரசகுடும்பம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 4 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பாக சென்றார் கடாபி? இரண்டு வாகன தொகுதிகள், முதலாவது தொகுதியில் கூடுதலான வாகனங்கள் சென்றன. இவற்றில் அதிகளவில் பணமும் தங்கமும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவர்களை நேட்டோ படையினர் தெரிந்தே செல்லவிட்டனர் எனக்கூறப்படுகின்றது. மேலும், இவர்களுக்கு நைஜர் நாட்டு இராணுவமும் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதேவேளை கடாபி குடும்பத்தினர்கள் இன்னொரு ஆபிரிக்க நாடான புர்கினோபாசோவுக்கு செல்லலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது உலகசட்டத்திற்கு முரணானது என சொல்லப்படுகின்றது. Large Libyan armoured convoy arrives in Niger About 250 vehicles enter country, as Libyan fighters hol…
-
- 4 replies
- 1.4k views
-