Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப்…

  2. ஐ.எஸ் தீவிரவாதிகள் 1500 பேரைக் கொன்ற வீரர் இவர்தான் (காணொளி) ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அபு அசாரெல் என்ற ஈராக்கின் ஷியா போராளி வீர ரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘The Angel of Death’ , மரணத்தின் தேவை என வர்ணிக்கப்படும் அவர் கதஹிப் அல்-இமாம் அலி படைப்பிரிவின் தளபதி என தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் போராளிகளின் மனத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் அவர் 1,500 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளாராம். முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் டைக்குண்டோ சாம்பியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.hirunews.lk/tamil/121245/%E0%AE%9…

  3. மனிதர்களை ஆவியாக்கும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ‘காசா’வில் இஸ்ரேல் பயன்படுத்துவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட குறித்த ஆயுதங்களை இஸ்ரேலிய இராணுவம் வடக்கு காசா பகுதியில் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள குடிமக்கள் மற்றும் மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களின்படி இதுவரை கண்டிராத புதியவகை ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆயுதங்கள் மக்களை ஆவியாகச் செய்வதாக காசா சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் முனிர் அல்-புர்ஷ் தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இஸ்ரேலியப் படைகள் இதுவரை அறியப்படாத ஆயுதங்களை பயன்படுத்துகின்றன, இதன் விளைவாக மனித உடல்கள…

  4. கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இங்கிலாந்து இழக்கும் - ஆய்வு இங்கிலாந்து நாடு விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற அந்தஸ்தை இழக்குமென்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. உலகில் இத்தாலிக்கு அடுத்தபடியாக மக்கள் சதவீதத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிப்பது இங்கிலாந்து நாட்டில்தான். தற்போது இந்த நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் இன்னும் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். இது குறித்து இங்கிலாந்து கிறிஸ்தவ ஆலயங்களின் தலைமை அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 150 பக்க அறிக்கையில், பல்வேறு காரணங்களால் இங்கிலாந்தில் பிற சமய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும், அவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் கூட…

  5. சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் ! சவுதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை வழங்க தீர்மானம் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெட்ரோலிய கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து சுற்றுலாத் துறையின் மூலமும் வளர்க்க சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக வெளிநாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை முதல் முறையாக சவுதி அரேபியா வழங்குகிறது. இதுகுறித்து சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதீப் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சவுதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாவுக்…

  6. திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்…

  7. போர்ப்பகுதிகளில் இந்த ஆண்டு 16 மிலியன் குழந்தைகள் பிறப்பு' இந்த ஆண்டு மட்டும் போர் நடக்கும் பகுதிகளில் 16 மிலியன் குழந்தைகள் பிறந்ததாக ஐநா மன்ற சிறுவர் நிதியம், யுனிசெஃப், கூறுகிறது. இது உலகில் இந்த ஆண்டு பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும். இந்தக் குழந்தைகள் ஐந்து வயது அடைவதற்கு முன்னரே இறப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமிருப்பதாக யுனிசெஃப் எச்சரித்தது. அதைத் தாண்டி உயிருடன் இருக்கும் குழந்தைகள் அவர்களின் உணர்வு ரீதியான மேம்பாடு பாதிக்கப்படும் அளவுக்கான அழுத்தத்தை அனுபவிக்கக்கூடும் என்று அது கூறியது. குழந்தைகள் பாதுகாப்புக்கு முந்துரிமை தருமாறு சர்வதேச சமூகத்தை யுனிசெஃப் கோரியது. http://www.bbc.com/tamil/global/2015/12/151217_unwa…

  8. வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…

  9. தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது! சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார…

  10. அசாஞ் மீதான விசாரணையை ஸ்வீடன் கைவிடுகிறது விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மீது 2010 இல் சுமத்தப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ஸ்வீடனில் உள்ள வழக்குரைஞர்கள் கைவிட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அசாஞ், 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடோரியன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளாக சுவீடனுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்த்துள்ளார். 48 வயதான ஆஸ்திரேலியர் ஜூலியன் அசாஞ் மே மாதம் ஈக்வடோர் தூதரகத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிணை நிபந்தனைகளை மீறியதற்காக அவருக்கு 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் (Belmarsh) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொது வழக்கு வ…

  11. நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் வீழ்ந்து விபத்து! நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹெலிகொப்டரில் பயணித்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஸ்பெயினைச் சேர்ந்தது என்றும் ஆறாவது நபர் விமானி என்றும் நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வியாழக்கிழமை (10) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1428323

  12. முன்னாள் விக்டோரியா மாநில பிரதமரும் தொழில் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஸ்டேவே பரக்க்ஸ் எதிர்வரும் சமஷ்டி அரசுக்கான தேர்தலிலும் மற்றும் தொழில் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநில தேர்தகளிலும் கட்சி பலத்த தோல்வியை தழுவும் என்று எச்சரித்து இருக்கின்றார்...... கட்சி மக்களுடன் இணைந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் தொழில் கட்சி தலைவர்கள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் வேண்டுகோள் விடுதிருகின்றார்...... எனக்கு தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாம் சரியாய் வராது ஏன்னா நானை தமிழ்ல ஒரு அரை குறை பிழையா இருந்தா யாரும் தப்பா நினைக்காதிங்க ஏனைய அவுஸ் வாழ் உறவுகளும் இதில் எழுதலாம்

    • 7 replies
    • 974 views
  13. குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!வெள்ளிக்கிழமை, ஜூன் 13, 2008 பிரசவத்திற்கு முன்பு, பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக கர்ப்பிணிப் பெண் மது அருந்தியதால், அவருக்குப் பிறந்த குழந்தை குடி போதையுடன் பிறந்தது. அந்தத் தாய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சர்ச்சையில் சிக்கியுள்ள அந்தப் பெண் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 38. லண்டனில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக மது அருந்தியுள்ளார். பிரசவத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையைப் பார்த்த டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது மது போதையுடன் பிறந்…

  14. தினமலரில் வெளியான செய்தியின் ஒரு பகுதி இங்கே இணைக்கப்படுகிறது. தமிழ்த்தாய் இச்செய்தியால் குற்றுயிராக்கப்படாமல் சிற்சில திருத்தங்கள். (தமிங்கலத்தில் உள்ளவை தனி ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன.) தமிழில் "Left, Right' போட்ட ம.தி.மு.க.,: ம.தி.மு.க., சென்னை மண்டல மாநாடு, தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாலை 3.30 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து, சீருடை அணிந்த தொண்டர் அணியினரின் பேரணி துவங்கியது. மன்றோ சிலை அருகே ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, பேரணியை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேடைக்கு 3.45 மணிக்கு வந்துவிட்ட வைகோ, 5 மணி வரை பேரணியை பார்வையிட்டார், பின்னர் மாநாட்டுத் திடலுக்கு சென்றார். மாநாடு மற்றும் பேரணியை முன்னிட்டு சில…

  15. போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்! இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்ம…

    • 1 reply
    • 446 views
  16. ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டொலர் சேதம்! ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்ததுடன் குறிப்பாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்க…

  17. பிரித்தானியா செல்லும் தொழிலாளர்கள் மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியம்! பிரெக்ஸிற் பிந்தைய விதிகள் நடைமுறைக்கு வருவதனால் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவதற்கு மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்பது அடுத்த ஆண்டு முதல் அத்தியாவசியம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வெளியேறினாலும் சிறிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான காலம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக செல்ல முடிகின்றமையினால் நாட்டிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பெருமளவான பிரித்தான…

  18. விடுதலைப்புலிகளிற்கு ஆதரவானவர்கள் என குற்றம்சாட்டப்பட்ட 12 பேரிற்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கு மலேசிய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடரவேண்டிய தேவையில்லை என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என சட்டமாஅதிபர் டன் சிறீ தொமி தோமஸ் தெரிவித்துள்ளார். 12பேருக்கும் எதிரான 34 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிற்கு எதிராக தண்டனை வழங்குவதற்கான யதார்த்தபூர்வமான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். நபர்களை துதிப்பதும் போற்றுவதும் கொண்டாடுவதும் வழமையான விடயம் …

  19. அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் …

  20. 25 JUL, 2025 | 06:44 PM ஆர்.சேதுராமன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. 'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்…

  21. இன்றைய நிகழ்ச்சியில் * எக்வடாரின்ன் மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 270 பேர் பலியான நிலையில் உயிர் தப்பியவர்களை மீட்கும் பணிகள் இரண்டாவது நாளாக தீவிரம்; * பிரேசில் அதிபர் டில்மா ரொசெஃபை குற்றம்சாட்டி பதவிநீக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தின் கீழவையில் நிறைவேறியது; பிரேசிலின் தேசிய நிற ஆடைகளணிந்து அவரது எதிர்ப்பாளர்கள் இதைக் கொண்டாடினாலும் அதிபரின் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்; * போலியோவுக்கு எதிரான புதிய நோய்த்தடுப்பு மருந்து அறிமுகம்; உலக வரைபடத்தில் அழிவின் விளிம்பிலுள்ள போலியோ நோய் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் தொடர்வது ஏன்? ஆகியவற்றைக் காணலாம்.

  22. இன்றைய நிகழ்ச்சியில் - துருக்கிய மக்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் விசா இல்லாமல் அனுமதிக்கும்படி ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை. ஆனால், ஐரோப்பிய நாடுகளிடம் ஒருமித்த ஒப்புதல் இல்லை. - வடகொரிய பல்கலைக்கழகத்துக்குள் சென்ற பிபிசி செய்திக்குழு, அந்த ரகசிய நாட்டின் கல்வி முறையால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தது. - பிரஞ்சு நவநாகரிக அடையாளமான ''சனல்'' நிறுவனம் கம்யூனிஸ கியூபாவில் தமது நவநாகரிக ஆடை அணிகல நிகழ்வை மேடையேற்றியது.

  23. லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத…

  24. எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் …

  25. இன்றைய நிகழ்ச்சியில்.. *பெரும் சாத்தான் என்று வர்ணித்த அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இருந்திருக்கிறார் இரானின் முன்னாள் அதியுயர் ஆன்மீகத்தலைவர்; பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரங்கள்! *பயங்கரவாத எதிர்ப்பு மறுசீரமைப்புக்களை முன்வைக்கிறது ஜெர்மனி; ஜெர்மனியிலுள்ள அகதிகளை கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் இலக்கு வைப்பதாக அந்தநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கவலை *பிரிட்டிஷ் தெருக்களில் அதிகரிக்கும் குரூரமான நாய்ச்சண்டை; இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகும் கொடூரத்தை நிறுத்தக் கோரும் விலங்கு பாதுகாப்பாளர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.