கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
இது கவிதையல்ல...... வாழ விடு!!! நான் நல்லவனாக வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா? நான் நிம்மதியில்லாது வாழ்வது உனக்கென்ன இன்பம்? மனிதனை மனிதன் மதிப்பது தப்பா? விடு என்னை வாழ விடு.
-
- 28 replies
- 4.3k views
-
-
-
எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…
-
- 28 replies
- 2.3k views
-
-
நரை விழ பதறியடிச்சு.. பூசிட கரிக்கறை தேடும் உலகம்.. எனக்கு இட்ட பெயர் கறுப்பி...! நான் தவறியியும் இட்டதில்ல கறுப்பாய் ஒரு முட்டை..! தலைக்கனத்தில்.. கறை பிடிச்ச படிமானங்கள் சுமந்திடும் மானிடன் மனசெங்கும் இருள்..! இருளில் வாழும் நீ... தோலில் மட்டும் தேடுவது...??! நிறமணிகள் தொலைத்த பின்னடைவுகள் கூட நிறைவடா அங்குனக்கு...! நிறமணிகள் காவும் உன் கண்மணி நானடா.. புரிந்து கொள்..!
-
- 28 replies
- 4.8k views
-
-
தபால் காரனுக்கு என் மீது இரக்கம் அதுதான் எவர் வீட்டு கடிதத்தையோ என் வீட்டில் போடுகிறான் நீ தான் இரக்கமில்லாம இருக்கிறாய் எனக்கு தர வேண்டிய கடிதத்தை இன்னும் எழுதாமல் எழுது எனக்கொரு கடிதம் என்னை நேசிக்கின்றாய் என்றல்ல நீ வேறு எவரையும் நேசிக்கவில்லை என்று அதுவும் உன்னால் முடியாதுவிடில் கையொப்பத்தை மட்டும் நீ போடு கடிதத்தை நானே எழுதுகிறேன் நண்பண் ஒருவனின்ட காதல் சக்சஸ் இல்லாம போச்சு அவன் என்னிடம் ஒரு கவிதை எழுதி தரும்படி கேட்க நம்மளுக்கு தெரிந்த அளவில இதை எழுதி கொடுத்து 2பேரும் சேர்ந்து விட்டார்கள் அது தான் யாழிலையும் போட்டேன் கவிதை மாதிரி தெரியுதா,இல்லாட்டி நக்கல் அடிக்க வேண்டாம்.
-
- 28 replies
- 4k views
-
-
காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன் அந்த இரவுகளில் - நீயோ கருவறையைக் கல்லறையாக்கும் பாடம் படித்துக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒற்றைச் சந்திரனாய் என்னினைவுகள் உன்னையே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு முறையும் காதலால் - உன்னுடன் உயிர்மொழி தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ வெறும் உதடுகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்…
-
- 28 replies
- 3.6k views
-
-
கவிதை எழுதுகிறேன் ரசிகர்கள் ஆயிரம்.. கஞ்சிக்கு அழுகிறேன் கவனிப்பார் யாருமில்லை.! என் தாடியின் ரகசியம் காதல் தோல்வி அல்ல.. வெட்டி மழிக்க காசில்லை..!
-
- 28 replies
- 3.5k views
-
-
போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார் நடந்தது நமக்கே புரியாது தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால் கோட்டையில் எமக்கு இடமேது மக்கள் மனதில் உறுதியடா அதை மாற்றற நினைத்தது கொடுமையடா இனி ஆழ நினைப்பது மடமையடா போனால் போகட்டும் போடா உரிமை உள்ளவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆசையைச் சொல்லி அழுவதனாலே ஆளச் சொல்லித் தருவானா கூக்குரலாலே கிடைக்காது இனி கோட்டுப் போடவும் முடியாது மக்களை மிரட்டுவும் முடியாது போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா மக்களை மிரட்டி வாக்கினை…
-
- 27 replies
- 2.4k views
-
-
என் கவிஞன் எங்கே? ------------------------------ கண்ணாலும் காணவில்லை காதாலும் கேட்கவில்லை உன்னை காணாமல் தேடுகிறேன். என் கவிஞ! நீ எங்கே இருக்கிறாய்? செந்தமிழின் சொல்லெடுத்து உன் பேனா பெரும் செல்லடிக்கும் போதும் எழுதியதே கண்ணால் கண்டு உன்னோடு கதைத்த பொழுதுகள் இன்னும் என் நெஞ்சத்துள் உருகுகிறதே வாழ்வு பெரும் சோகம் வன்னி வாழ்வு பெரும் சோகம் என் மண்ணில் கிடந்து உழன்றெழுந்தாய் எழுதினாய் உன் கவிதைகளை என்கவிஞ! உன் கவிதை கண்டு என்மனம் எப்பொழுதும் ஆறுமடா! ஈழத்து கவிஞன் என்று உன்னை போற்றாதார் யாருண்டு? எதிரவர்க்கு கூட உன்தமிழ் பிடிக்குமடா? இனி அழக்கண்ணீரில்லை என்பதற்கு பிறகு உன்னைக்காணவில்லை …
-
- 27 replies
- 8.8k views
-
-
என் வாழ்க்கைப் பயணங்களில் சுமந்த பொதியாய், என் வலிகளும் கூடவே வந்தன! எனக்கிந்த சாபம் எதுவரையென... எனக்குத் தெரியவில்லை இதுவரை! நம்பிக்கைகளை சாகடித்தபடியே... துரோகங்கள் என் பாதையை மாற்றியமைக்கிறது! வலிகளும், மாறும் வழிகளும் எதுவானாலும்... என் பாதம் நேர்வழி மட்டுமே தொடரும்! இன்னும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் நானிருப்பேன், தன்னம்பிக்கை எனக்கிருக்கு! சிறகெரிந்த வாசத்தில் மூச்சுத்திணறிய பீனிக்ஸ் பறவை, விழ விழ எழுவதுபோல்... நானும் எழுவேன்! வரைகின்ற வட்டம் போல... சுற்றிவரும் புள்ளிகளில், இரு முகங்கள் சந்தித்துக்கொள்ளும்! பயணங்களின் காரணங்கள் ஒரு வட்டத்துக்குள், முழுநிலவாய் சிரிக்கும்போது... நேற்று வந்த முழுநிலவுதான் என் ஞாபகத்தில் வரும…
-
- 27 replies
- 3.6k views
-
-
மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல, சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை! அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்! என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு கவிதையாய் உங்களுக்கு.......... (வயது வந்தவர்களுக்கு மட்டும்) உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ , உடல் முழுதும் பரவிச்செல்ல... கடல் மீது மிதக்கும் கப்பலானது, தேகங்கள் இரண்டும்...! மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக... அமைதியான கடலும், ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்... அடங்காக் குணங்கொண்டது...! நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்... வள்ளமும் கள்ளமாய் செல்லமாய், கொஞ்ச ... மோக வேகமெடுத…
-
- 27 replies
- 5.3k views
-
-
-
- 27 replies
- 4.3k views
-
-
நேற்று மொட்டாய் நின்று... இன்று பூத்த பூவது! கட்டுக்குள் அடங்காத காளையை, கட்டியிழுத்த தேரது! இழுத்தலும் பூத்தலும் பூவின் புன்னகைக்குள், தேனாய் இனித்தது! தேன் குடிக்கப் போன வண்டு தேருழுத்துக் களைத்தது! காரிருளில் கதவடியில், கண்ணான கண்மணி கண்ணருகே நின்று நெஞ்சருகே வந்தாள்! தொட்ட இடமெல்லாம் சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்! பதைபதைத்த நெஞ்சம் தப்பி வந்த முயல் போல் தாவி நின்று மூச்சுவிட, மேவிவிட்ட உச்சந்தலையில் ஈரப்படுத்தியது என்னிதழ்! பூச்சூடிய குங்கும வாசம் வாவென்றழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பூவிதழோடு போராடி வெற்றிகண்ட வண்டு, கட்டிலறைத் தேன்கூட்டே கவர்ந்து சென்று ஆறுதலாய் ரசித்து ருசித்து... முழித்தேனும் முழுத்…
-
- 27 replies
- 3.4k views
-
-
-
- 27 replies
- 6.7k views
-
-
போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல்லவும் ஆசை முதல் நாள் …
-
- 27 replies
- 3.7k views
-
-
அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? …
-
- 27 replies
- 3.7k views
-
-
யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…
-
- 27 replies
- 3.4k views
-
-
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை, கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்க…
-
- 27 replies
- 4.6k views
-
-
காற்று வந்து காது துடைத்து கலைத்துப் போகும் பஞ்சு மேகம்...!! விண்ணில் கோடி விதைகள் கொண்டு விதைத்த பருத்தி பஞ்சு மேகம்...!! நட்சத்திர மழலை கண்ணாமூச்சி ஆட வைக்கும் பிஞ்சு பஞ்சு மேகம்..!! நனைந்த நிலவு நுதல் முற்றும் சுற்றிக் கொள்ளும் பஞ்சு மேகம்...!! பகலவன் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் சொகுசு பக்கணம் பஞ்சு மேகம்...!! கடலோடு மணம் கொண்டு கருவாகி மழை ஈன்று பஞ்சரிக்கும் பஞ்சு மேகம்...!! வானத்தோடு மின்னல் சண்டை அமைதித் தூது வெளிர் பஞ்சு மேகம்...!! அண்டையோடு சண்டையிட்டும் அன்பு குழகி ஆர்ப்பரிக்கும் தரணி மெச்சும் பஞ்சு மேகம்...!! அர்த்தங்கள்: பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்…
-
- 27 replies
- 6.2k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
கவிதை எனும் பெயரில்.... நண்பர்களே, கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்; கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்! பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால் பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள். மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின் முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல? கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா? நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை; நயமான கற்பனைகள் கொண்டதில்லை; சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல; சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை! ஆனாலும் முகநூலில் எழுது…
-
- 27 replies
- 3.2k views
-
-
நான் தனிய இல்லை தலைநகராம் கொழும்பில் காலையில் குண்டுவெடிப்பு தொலைக்காட்சி பார்த்ததில் மலைத்து போனேன் வலைப்பின்னலில் கண்களை சுழல விட்டதில் கண்டுகொண்டேன் மீண்டும் பல செய்திகளை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கையை விட தேடிப்பிடித்த தமிழர்களின் தொகையோ பன்மடங்கு என ஒவ்வோர் இடமாக தேடி வெவ்வேறு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை நினைக்கையில் பகலவனுக்கே தாங்க முடியாமல் இருளைக் கக்கினான் வெண்ணிலவும் மங்கலாக உருண்டது வானமதில்.. அடையாள அட்டையை எடுத்து தலையணைக்கடியில் வைத்து ஆடம்பரமின்றி ஆனால் அழகாக ஆடை அணிந்து படுக்கையில் புரண்ட போது உறக்கம் எனக்குள் தூரவாகிப் போனபோதும் உறங்கினேன் என்னையும் மறந…
-
- 27 replies
- 4.4k views
-
-
பெண்ணே நீ.. மலரல்ல வாட... மானல்ல இரையாக... கண்ணல்ல கரைய.. நிலவல்ல எட்ட வைக்க... தேனல்ல எறும்பு மொய்க்க.. வண்டல்ல ஏமாற..! பெண்ணே நீ மதுவல்ல மயங்க... தண்ணியல்ல அடிக்க.. மஞ்சமல்ல தூங்க.. தங்கமல்ல கிண்ட... புதையலல்ல தோண்ட... மாவல்ல பிசைய... "குவிட்" அல்ல போர்த்திக்க.. பொன்னல்ல பதுக்கி வைக்க தேசமல்ல கட்டிக் காக்க...! பெண்ணே நீ புயலல்ல வீச.. எரிமலையல்ல வெடிக்க.. பறவையல்ல பறக்க.. கூண்டுக் கிளியல்ல விடுவிக்க.. ஈழமல்ல சுதந்திரம் வாங்க..! பெண்ணே நீ சரக்கல்ல திருட... சக்கரையல்ல ருசிக்க.. பிகரல்ல மாட்ட... பாடமல்ல படிக்க.. முத்தல்ல மூழ்கித் தேட சிப்பியல்ல திறக்க..! …
-
- 27 replies
- 5.6k views
-
-
அம்மம்மம்மா! மண்ணில் இருந்து விண்ணுக்கு நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை என்னுள் சில விதைகளை விதைத்துச் சென்றுவிட்டாய்! இதோ உன் நினைவு மலரில் நம் உறவுச் செடி வேர் ஊன்றுகிறது மெது மெதுவாக! மறக்க முடியவில்லை! மின்னலாய் தோன்றி மறைந்த நம் 24 வருட உறவை! நடந்தவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா! கிள்ளிப்பார்த்தேன்.... வலிக்கிறது அம்மம்மா! அம்மம்மா என்னும் ஆடையை உனக்குடுத்தி பேத்தி என்னும் சட்டையை எனக்குடுத்தி காலன் தைத்த உறவில் நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன! அம்மம்மா உன் அன்பை ஆழ்ந்து அனுபவித்த முதல் பாக்கியசாலி நான்! வெளிமனம் அறியாது உன் அருமைகளை! உள்மனம் மறவாது நீ அருளிய வரங்களை! உன் குழந்தைகள…
-
- 27 replies
- 4.2k views
-