கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழனையே தாக்குகின்றாய் நீயும் தமிழன் இல்லையடா? தேசியத்துக்கு துரோகம் செயவது நீங்கள் இங்கு ஏனடா ஏன் தான் நாய்கள் போல குரைக்கிறீங்கள் இங்கு ஏனடா கிணத்து தவளை போல நீங்கள் கத்துவது ஏனடா மாரித் தவக்கை போல கத்துவது நீங்கள ஏனடா கடசியில வயிறு வெடித்து சாவதும் நீங்கள் தானேடா தமிழனையே தூற்றுவது நீங்கள் ஏனடா இங்கு தமிழ்தாயின் துகிலை உரிவது ஏனடா?
-
- 9 replies
- 3.1k views
-
-
This is the middle way, this is the eightfold path This is the way to the end of suffering. Right view Right view is the forerunner of the entire path. Right view provides the right practice. Right view leads to a virtuous life. Right view comes at the end of the path. Right view requires you to know that the dying always look up to the sky and therefore get ready to shell hospitals. Right intention Birth is suffering, aging is suffering, Sickness is suffering, death is suffering, Sorrow, lamentation, pain, grief and despair are suffering, Association with the unpleasant is suffering, Separation from the pleasant is sufferin…
-
- 0 replies
- 657 views
-
-
பெறுதல்: ஏதேனும் ஒரு கடவுள் சொர்க்கம் அனுப்புதல்: ஒரு மனிதன் பூமி. காது கேட்காத கடவுளுக்கு, காணவிரும்புபவன் எழுதுவது.... கோரிக்கைகள் பலவைத்தும் கணபொழுதும் செவிசாய்க்காமல் கல்லாய் நிற்பதனால் காது செவிடென நானே கொண்டேன்; பிறகு நான் என்ன செய்ய பரம்பொருளே? முதலில் நாமொரு முடிவுக்கு வருவோம்; நம்மில் சிறந்தவர் யார்? முன் ஆதியில் நீயொரு மனிதனை படைத்தாய் பின்பாதியில் நாங்கள் பலகடவுள்கள் படைத்தோம், உதடுகளை திறந்து உண்மைகளை சொல் நம்மில் சிறந்தவர் யார்? மறைந்திருக்கும் பொருளுக்கு மதிப்பதிகம் என்பதால் புலப்படாத உன்னை பெரியவனாக கொள்கிறேன். உலகத்தை படைத்தாய் சரி உடனே தூக்கிஎரிந்தோட உலகம் என்ன உனக்கு உசிலம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ? ¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ. PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.
-
- 39 replies
- 5.9k views
-
-
ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥ பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன, நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில் அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும் பிராகச மின்னலை உதிரும் விழிகளும் தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!! உன அழகை என்னவென்று சொல்வேன்!! அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அக…
-
- 5 replies
- 1.6k views
-
-
அ ஃ றினை [size=3] படுக்கை விரிப்பு[/size][size=3] சரி செய்யப்பட்டு விட்டன[/size][size=3] மற்ற வாசனை திரவியங்கள்[/size][size=3] எல்லாம் சரியாக பரந்து உள்ளன[/size] [size=3] குளியல்களை இருவரும்[/size][size=3] சரி செய்து விட்டோம்[/size][size=3] பிறகு என்ன[/size][size=3] என்ற பொழுதில்[/size] [size=3] ஒரு அழைப்பு அவளுக்கு[/size][size=3] பொறுமையுடன் நான் பால்கனியில்[/size][size=3] நேரம் ஆக ஆக[/size][size=3] பற்ற வைத்த சிகரெட்[/size] [size=3] அழைப்பை அணைத்து விட்ட[/size][size=3] அவளுக்கு சிகரெட் நெடி[/size][size=3] மூச்சை முற்ற[/size][size=3] ஆஸ்பத்திரிக்கு அவளும்[/size] [size=3] பாருக்கு நானும்[/size][size=3] என்று கழிந்தது[/size]…
-
- 1 reply
- 660 views
-
-
-
அகதி முகாம் கோடைக் கொதிப்பையும் மாரித் தூறலையும் மாறி மாறி வடி கட்டுதே - இந்த அரிதட்டுக் கூரைகள் சூரிய விளக்கையும் பனிமழைத் தென்றலையும் அணைகட்ட முடியாமல் இலவசமாகக் கொடுக்கும் கிடுகுச் செத்தைகள் மீன் பிடி வலைகளாக! பௌர்ணமி வெளிச்சத்தில் எங்கள் சிறுவர்கள், அ....ஆ எழுதிப் பழகும் பால் நிறச் சிலேட்டுக்கள் எங்கள் முற்றங்கள்! குப்பி விளக்கு திரியிற்க்கு வக்கில்லை எண்ணை வார்க்க எதுவுமில்லை நுளம்புக்கு எங்கே கொயில் வாங்குவது....? மனித உரிமை மங்கினாலும் நுளம்பின் உயிருக்கு உரிமையுண்டு அதுதான் அகதி முகாம்கள்...! இருபத்தோரம் நூற்றாண்டிண் எங்கள் யாவருக்கும் புகலிடம் இதுதானா.........?
-
- 8 replies
- 1.3k views
-
-
அகதி கனத்த இதயத்தை கையில் பிடித்து மூச்சு முறிய முண்டியடித்து இழப்புகளுக்குள் இறுகி முன்னுக்கு நிற்கும் முந்நூறு பேரையும் முந்தியதாக நீண்டு நிற்கின்றன கைகள்……… துடிப்பின் துருவங்களுக்கு சென்றிருக்கும் எம் தேசத்தில் பூஜ்ஜியப் பெறுமானம் எனச்சொல்லப்படும் உயிருக்கு உணவையும் ஒலி வரட்சியடைந்து ஒய்ந்து போயிருக்கும் தொண்டைக்கு பருக தண்ணீரையும் பன்னீராய் நாடி…… நீட்டப்பட்ட கைகள் சாமானிய நிலையடையும் அன்றாவது சமாதானம் சாத்தியப்படுமா? அகதி வாழ்கை முற்றுப் பெறுமா? எம்.எஸ்.எம்.சறூக் சம்மாந்துறை. நன்றி - லங்காசிறி இணையம்
-
- 0 replies
- 700 views
-
-
அகதிகளாகி அலைகடல்-ஏறி அக்கரை சேர்ந்த ஓடங்களே.... உடமைகள்--இழந்து உறவினைப்-பிரிந்து உடல்களைச்-சுமந்த ஜீவன்களே.... உங்கள் அழுகையின் கண்ணீர் கடலுடன்-கலந்து உப்பாய்போனதோ சொல்லுங்களேன்.... இடை நடுவில் பகையது வந்து கதையை முடிக்குது பாருங்களேன்.... அவர்கள் உதிரங்கள்-பெருகி கடலுடன் கலந்து மீன்களும் கலங்குதோ சொல்லுங்களேன் .... கரைகள் சேர்ந்த உயிர்கள் கூட சுகந்திரமின்றி முடங்கி இருக்குது பாருங்களேன்
-
- 14 replies
- 1.8k views
-
-
உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம் சீவ சீவ பச்சைபிடித்த பசுமை உயிர் வார்த்த பூமியென - அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்; தெரு தாண்டி தெரு தாண்டி நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில் …
-
- 0 replies
- 525 views
-
-
சொந்த மண்ணில் அகதியாய் அவர்கள் வந்த மண்ணில் அகதியாய் நாங்கள் நாங்களும் அவர்களும் ஒன்றுதான் அங்கே தமிழன் அகதி இங்கே அகதித்தமிழன் இப்படிக்கு அகதித் தமிழன் அனலைதீவன்
-
- 1 reply
- 679 views
-
-
அகதித் துயர்வெளி 01. மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில் வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்? அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில் உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில் தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில் எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர் வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும் நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர் அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு …
-
- 2 replies
- 673 views
-
-
அகதிப்பெருந்துயர்... வாடி இலை சொரிந்து வனப்பிழந்து கூடிக்குலாவிடக்குருவிகளற்று ஆடையிழந்து அம்மணமாய் நின்ற மரஞ்செடிகொடிகள் எல்லாம் வாடைக்காற்று வருடிட வலிமை பெற்று பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி புன்னகை செய்யும் இளவேனிற் காலங்களில் நீலம் ஒளித்திட நிலைகொண்ட இருள்கிளித்து பால்வெளி விந்தைகளாய் பரவிக்கிடக்கும் விண்மீன்களும் பால்நிலவும் வானில் உலாவரும் வசந்தகால இரவுகளில் நீலம் உடுத்திவந்து நிலவுடன் கொஞ்சிடும் நீரலைகள் தாலாட்டும் பேரழகுக்கடலின் பெருநீளக்கரைகளில் ஊரே கூடியிருக்கும் உல்லாச நாட்களில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து உயரப்பறக்கும் இனிமைகள் நிறைந்த இரவுப்பொழுதுகளில் நான்மட்டும் தனித்திருந்து உயிர் வத…
-
- 0 replies
- 943 views
-
-
அகதிப்பொன்னியும்..தனித்துப்போன அவளின் கனவுகளும்.... தனிச்சு ஒருத்தியாய்க் காடுவெட்டிக் கல்லுடைத்து வேலிபோட்டுக் கூடுகட்டி கோழிவளர்த்து ஆடுவளர்த்து சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டிய அந்தவீட்டில்த்தான் ஊர்விட்டுப்போயும் போகாமல் வேர்விட்டுக் கிளைபரப்பி எங்கும் வியாபித்திருக்கின்றன போரிற்கு இடம்பெயர்ந்த பொன்னியின் கனவுகள்.... புழுதிவாசம் காற்றிலெழப் புழுங்கிக்கிடக்கும் முற்றத்தில்தான் அகதியாக்கப்பட்ட பொன்னியின் வியர்வைகள் ஆவியாகின.. புழுங்கலும் ஒடியலுமாய்க்காய்ந்த புழுதி முற்றத்தில்தான் சுழிப்பும் முனுமுனுப்புமெனக் கலைக்கும் பொன்னிக்கு அலைத்துத் தண்ணிகாட்டிப் புன்னகையும் சிரிப்புமெனப் புறாக்கள் மேய்ந்துசெல்லும்... ஊற்ற…
-
- 0 replies
- 913 views
-
-
அகதியானவர்கள்... சுதந்திரமடையா இந்தியாவின் தண்டகாரன்யக்காடுகளிலும் பாலஸ்த்தீனத்தின் இடிந்தகட்டிடங்களிலும் குர்தீஸின் குக்கிராமங்களிலும் ஈராக்கின் வீதிகளிலும் விடுதலைக்காக வீழ்ந்தவர்களின் ஆன்மாக்கள் வீடுகளை விட்டு புழுதித்தெருக்களை விட்டு சுதந்திரமாக ஊளையிடும் தெருநாய்களை விட்டு ஞாபகங்களை மட்டும் எடுத்துச்செல்லும்படி விரட்டப்பட்டவர்களின் முகாம்களில் தங்கியிருக்கின்றன ஈராக்கின் எண்ணெய் ஊற்றுக்கள் இல்லாதுபோகும்படியும் வன்னியின் வனங்கள் வாடிப்போகும்படியும் ஆப்கானின் மலைகள் பொடியாகும்படியும் காக்ஷ்மீரின் வீதிகள் பிளந்துபோகும்படியும் ஆகியிருக்கிறது அகதியாக்கப்பட்டவர்களின் துயர்ச்சுமையால் விரட்டப்பட்டவர்களின் …
-
- 6 replies
- 2.1k views
-
-
அகதியாய் அலைந்து ஆழ்கடல் கடந்து இன்னல்கள் சுமந்து ஈழத்தைப் பிரிந்து உறவுகளைத் தேடி ஊட்டி வரை ஓடி எல்லாம் இழந்து ஏங்கித் தவித்து ஐயோ அம்மாவென ஒரு பாத்திரம் கொண்டு ஓடும் எங்கள் நிலை கண்டால் ஒளவைப் பாட்டி மட்டும் ஃமாய் நிற்பார் !
-
- 6 replies
- 1.7k views
-
-
அகப்பை ஆக்கவும் காய்ச்சவும் அள்ளி பரிமாறவும் நாங்கள் தேவை. இவற்றை செய்வதற்கு பானையில் இருக்க வேண்டும் பானையில் இருப்பதையே நாங்கள் எடுப்போம் நாங்கள்; பானை பிடிக்கும் பாக்கிய சாலிகள் தொண்டுழியர்கள் அப்போதெல்லாம் மங்கையர் கைகளில் மட்டுமே இருந்தோம் இப்போதெல்லாம் மணவாளன் கையிலும் இருக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில் செங்கோலாகவும் [ஆண்களுக்கெதிராக] பயன் படுகிறோம். செங்கோல் எனும் சொல்லும் போது பல ஆண்கள் அடி வேண்டியிருப்பார்கள் போல உது பற்றி உங்கள் கருத்துக்கள்
-
- 10 replies
- 4.8k views
-
-
அகரமெனும் சிகரம் அள்ளி எடுத்தேன் அழகுமயில் அணங்கவளை துள்ளி விழுந்தாள் துவண்டாள் என் அணைப்பில் கள்ளி நீதான் என்று கன்னம் வருடி நின்றேன் உன் பள்ளி அறையினிலே பாசமுடன் விளையாட எனக்கோ கொள்ளை ஆசையென்று கொஞ்சு மொழி உரைத்தாள் நெஞ்சம் முழுவதுமே மஞ்சு மேகமதாய் பஞ்சாய்த் தான் மிதந்து அஞ்சுகமாய் சிறகடித்தேன் நீல வானத்தில் நித்தம் பவனி வரும் கோல வெண்ணிலவும் கொஞ்சம் நாணி நின்றாள் என் பாவை எழிற்கோலம் பார்த்த காரணத்தால் வானத் தாரகையும் வெட்கித் தலை குனிந்தாள் “என் அன்பே உன் பெயரை அறிய ஆவல்”என்று அநேக தரம் கேட்டும் அவளோ மௌனித்தாள். “உன் பெயரைக் கூறாவிடினும் என்னுயிரே உன் பிறந்த இடம் ஏதென்று” பிரியமுடன் கேட்டேன் “என் பிறந்த இடம் பொதிகை வளர்ந்த இடம் மது…
-
- 6 replies
- 1.4k views
-
-
அகர வரிசை அடுக்காக்கி அன்பே அமுதே அழகே என்று அடுக்கு மொழி பேசிலேன் அன்னைக்கு அடுத்ததாய் அகத்திலொரு அணியாய் கொண்டேன் அருகிருந்து நீ அன்பு வளர்க்க - இன்று அவதிப்படுகிறேன்..! அழகிய மலராய் அகிலம் வந்தாய் அகத்திலும் வந்தாய் அருகிருக்க மட்டும் அனுமதி மறுக்கிறாய் அன்பான உறவுக்கு அவசரம் ஏனோ அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...! அவலம் இவன் அன்பு தாழ் திறக்க அவதிப்படுவது அறியாயோ அருமலரே....! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்று அரிவரியில் அவசரமாய் உச்சரித்தது அர்த்தமாய் இன்று அதிர்கிறது மனத்திடலெங்கும்..! அது கேட்டு அரங்கேறத் துடிக்கிறது அன்பான குருவியதன் அருங்கவி..! அது ஒரு ஜீவகவி …
-
- 87 replies
- 12.4k views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...அகங்காரம் கொண்டவளே நீ அழகு ....அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....அகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!!அகம் முழுதும் நிறைந்தவளே .....அகமதியால் காதலை இழந்தவளே....அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!!அச்சப்படாதேயடா என்னவனே .....அச்சுதனடா என்றும் நீ எனக்கு .....அகந்தையும் அகமதியுமில்லை ....அடர்த்தி கொண்டதடா நம் காதல் ......அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!!அடைமழை போல் இன்பம் தந்தவளே ....அந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....அகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...!!!…
-
- 2 replies
- 1.5k views
-
-
அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....!!! அகம் முழுதும் நிறைந்தவளே ..... அகமதியால் காதலை இழந்தவளே.... அகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ...... அகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் .... அக்கினியால் கருகுதடி நம் காதல் ....!!! அச்சப்படாதேயடா என்னவனே ..... அச்சுதனடா என்றும் நீ எனக்கு ..... அகந்தையும் அகமதியுமில்லை .... அடர்த்தி கொண்டதடா நம் காதல் ...... அகிலம் போற்றும் காதலாகுமடா ....!!! அடைமழை போல் இன்பம் தந்தவளே .... அந்தகாரத்தில் வந்த முழுநிலவே ..... அபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி .... அகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் .... அகத்திலே நீ அத்திவார…
-
- 3 replies
- 1.7k views
-
-
அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்
-
- 2 replies
- 730 views
-
-
கவிதை: அகல் விளக்கு சேரன் கடவுளர்க்கு நிழல் உண்டா? இருந்தாலும் யார் கண்டார்? எம் நெருப்புக்கும் கண்ணீருக்கும் இல்லை. சுக்கிலத்தாலும் குருதியாலும் வெற்றியை எழுதியவர்க்குப் பதிலாக நாம் அனுப்பும் கணை எதுவெனத் தேடிக் காட்டுக்குள் போக முடியாது. காடும் எரிகிறது. ஒற்றைக்காலில் தவம் செய்ய முடியாது இருப்பதே ஒரு கால் உருவற்ற கவிதையின் உயிரை தேடாதே தீ பெருகும் என்றாள் பெருகுவது எல்லாம் நன்மைக்கே எனத் தொடர்ந்து நடந்தேன் கடலோரம் வழி விடா நீர் வழி தரும் மொழி குருதிப்பணம் திரட்டி பொய்யில் நினைவேந்தல் செய்தால் கண்ணீர் நிறையாது மழை பெய்து தீபத்தை இருளாக்கும் அலைகளிலா ஒலியில் ஓலம் எழுந்து புலம்பெயர் உலகின் காற…
-
- 0 replies
- 697 views
-
-
வைரஸாய் தொற்றிக் கொண்டு கன்னித் தமிழை கணணித் தமிழாய் கனிவிக்க கனவோடு வந்தவன்... தமிழ் பொடியாய் சிறக்க சில சிக்கல் சிலர் தர... சிறகு விரித்தான் குருவிகளாய் நட்புகளின் கூட்டுறவில்..! நீண்டு நிலைத்த காலமதில்... எண்ணற்ற எண்ணங்களுக்கு எழுத்துரு.. இலத்திரன்களால் ஒழுங்கமைத்து ஓவியம் தீட்டி பச்சை தீட்டிக் கொண்டவன் யாழது.. இயல்பாகினன். தொல்லையொன்றை இனம் மொழி இணைந்து காண.. மீண்டும் வெடித்த சொற் போரில் பிறந்தது நெடுக்கால போகும் காலம்... நீண்டது நிலைத்தது. இயல் இசை நாடகம் தமிழோசை அடங்கிய தமிழ் மூன்று.. யா…
-
- 10 replies
- 1.2k views
-