கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
தேசத்தின் குரலுக்கு கண்ணீர் அஞ்சலி ********************************* வெண்மேகம் மறைந்தது-இருள்பரப்பி கார்மேகம் சூழ்ந்தது வெண்ணிலவு தண்ணொளியை ஒரு கணம் இழந்தது மின்னிய பின் பேரிடிகள் மேதினியில் தொடர்ந்தது-தமிழ் மேனிகளோ வேதனையால் கண்ணீரை வடித்தது உன் பிரிவால் இத்தனையும் உலகமெங்கும் நடந்தது விண்ணதிர்ந்த சேதிவந்து வேதனையைத் தந்தது அன்னைத்தமிழ் மண்முழுதும் கண்ணீரில் நனைந்தது தேசத்தின் குரலே தேசத்தின் குரலே தமிழீழ தேசத்தின் குரலே உலகெங்கும் தமிழினத்தின் இருள் அகற்றப் புறப்பட்ட சத்தியத்தின் ஜீவனே எங்கே நீ சென்றாய் மூ பத்து வருடங்கள் அயராது உழைத்தாய் -தமிழ் தேசத்தின் துன்பத்தை உலகெங்கும் உரைத்தாய் ஈழத்தை பெறுதற்காய் காலமெல…
-
- 4 replies
- 1.3k views
-
-
எப்போது ஒரு இனம் அழிகிறது ...? ------ விடுதலை போராட்டங்கள் .... எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல.... மடிந்தவர்கள் மண் பொம்மைகளல்ல..... போராடிய காலம் எந்தளவோ.... விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!! எப்போது ஒரு இனம் அழிகிறது ...? பொருளாதார வளங்கள் அழியும்போது .... பொருளாதார தடை விதிக்கும் போது .... பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது.... பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது .... யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் .... இனத்தின் அடையாளங்களை அடமானம் .... வைக்கும்போதும் இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!! தந்து விட்டுப்போன சுதந்திரத்தை .... தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் .... பக்திகொண்டு போராடுவோம் ..... உணவோடு உணர்…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீடிழந்த நிலவிலிருந்து தள்ளி நிற்கிறாள் கொங்கைக் கிழத்தி. முகத்திலே கொற்ற வஞ்சி சருமங்கள் ரொம்ப பிஞ்சு கானல் கவிதை காணின் நாணுவாள்; பேணுவாள் மயிர்க் கிளர்ச்சி கொள்வாள், உயிர்த் தளர்ச்சி வரையிலும். மன்மதன் இவன்; இங்கித மில்லை இவனிடம் கொங்கை மாந்தர் காணின் தங்காது போகும் சடரூபன் சிருங்காரம் மிகுவானன்; அகங்காரம் தகுவானன். யாவும் படைத்த கிங்கிரன்; தாபத்திலே நிகரில்லா இந்திரன். நாணியவள் மேல் கூசம் காணுகின்றான் கூசாது. ஏனெனவோ எங்கெனவோ கேட்காமல் போவாளா அ(ச்)சாது.? குறுஞ்சீலை களைப்பான்; இருகை வைத்தே ஆயிரம் செய்வான் நுனி நாக்கில் குழைப்பான் இனி தடுக்காது போய்விடின். படுக்காது போன நிலவை கொடுங்கீறினான் சொல்லிங்கே சேர…
-
- 4 replies
- 1.3k views
-
-
சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இ…
-
- 6 replies
- 1.3k views
-
-
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! எம் இருதயத்தை பிளந்த யுத்தக் கல்லை பார்த்ததுபோதும் எமை கொன்று வீசிவிட்டு வெற்றிக் கூச்சலிடும் உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும் எம் தேசமழித்து அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே ஒற்றை நாடென நடனமாடும் வரைபட கல்லைப் பார்த்ததுபோதும். எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு வருகவெம் சிங்களச் சகோதரர்களே! வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும் நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும் மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன் போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும் மாண்டவர்களின் துயில் கலைத்து உறங்க இடமறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மலருக்கு மட்டுமல்ல……. ஊருக்குள் புகுந்த இராணுவத்தால் உருக்குலைந்த தெருக்கள் ஊமையாய் அழுதன தெருவில் தேடுவாரற்ற ஒரு கட்டாக்காலி நாயின் தீனமான ஊளைஒலி நிலவுகூட முகம் மறைத்து முக்காடிட்டக் கொண்டது விண்மீன்கள் மட்டும் விட்டுவிட்டு விழிமலர்த்தி என்னை நோட்டமிட்டன சோதிக்கவென்று கொண்டு சென்ற ஏன் அண்ணன் வேலிக்கு அருகில் பிணமாக பள்ளிக்குச் செல்லவென துள்ளிச் சென்ற என் தங்கை வெள்ளி முளைத்த பின்னும் வீடு திரும்பவில்லை வேலைக்குச் சென்ற வேளையில் என் அப்பா ஸெல் அடியில் சிக்கி சிதறிப் போய் விட்டார் அடுப்பங் கரையினிலே ஆரவாரமேதுமின்றி அடுத்த வீட்டுப் பூனையின் அமைதியான தூக்கம் அங்கு அம்மா மட்டும் அசைவதிலிருந்து இன்னும் உயிரிருப்பதை…
-
- 7 replies
- 1.3k views
-
-
எங்கேயோ கேட்கிறது அந்த முனகற் சந்தம்! காரிருள் கவ்விய பொழுதில்... ஈருடல் தழுவிய நிலையாய்... யாருமறியாமல் நடக்கிறது கதகளி! கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளியெடுக்கிறான் திருடன்! மெய்யில் வசப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கிறாள் திருடி! கன்னக்கோல் கன்னம் வைக்க எண்ணம்போல் கன்னம் சொக்க, கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது! கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது! பின்னிப் பிணைந்த அரவங்கள் போல் எண்ணித் துணியும் அவயவங்களுக்குள், சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்! தறிகெட்டுப்போன மனதுக்கும் வெறி முற்றிப்போன உடலுக்கும் விடை கொடுக்கின்றன துகிலங்கள்! பாலாடை நீக்கி பால்பருக... பசியோடு காத்திருந்த பாலகன்போல் மேலாடை விலக்கி அடம்பிடித்து, கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்! …
-
- 11 replies
- 1.3k views
-
-
மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில் பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்!
-
- 4 replies
- 1.3k views
-
-
என்ன நியாயம்??? கட்டிக்கரும்பே மரகத மணியே பவழம் பவழம் எம் இதழ்கள் என்று சொன்னவர்களும் நீங்கள்தான் ....... கயல் விழி என்றும் , எம் விழி அம்பால் பெட்டிப் பாம்பாய் அடங்கினோம் என்று , சொன்னதும் நீங்கள் தான் ........ எங்கள் கொடியிடை அசைவில் , உங்கள் மதி தறி கேட்டுப் போனதாய் சொன்னதும் நீங்கள்தான் ........ பாலைவனமாய் இருந்த உங்கள் வாழ்வில் கோடைத் தென்றலாய் நாங்கள் வந்தோம் என்று சொன்னவர்களும் நீங்கள் தான் ...... இப்பிடி, சும்மா இருந்த எங்களை உங்கள் கற்பனை குதிரைகளால் மேய்ந்து விட்டு !!!!!!!! இப்பொழுது மட்டும் மோகம் கலைந்தவுடன் " இல்லாள் " என்று சொல்வது என்ன நியாயம் ??? பி கு : கிட்டடியிலை இல்லாள் எண்டு சொல்லி பொம்பிளையளை மட்டம் தட்டி …
-
- 12 replies
- 1.3k views
-
-
கரும்புலிகள் என்று பெயர் எடுத்து எமக்காக உயிரை குடுக்க வந்த அன்பு செல்வங்களே.. என்ன என்று எழுவது உங்கள் பற்றி உங்களை பற்றி கவிதை எழுத எங்களால் முடியாது நீங்கள் எமக்காக வந்த தியாக செல்வங்கள் அல்லவா? ஏழு ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் போல் நம் நாட்டின் செல்வங்களை பெற முடியுமா? நம் நாட்டின் தெய்வங்கள் என்று சொன்னால் உங்களை அல்லவா நாங்கள் பூசிக்க வேண்டும் நம் நாட்டுக்காக இன்னூயிர்களை குடுக்க வந்த தியாக செல்வங்களே.. உங்களுக்காய் இரம் கரம் கூப்பி தலை வணங்குறேன்
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜ“ரணிக்க முடியவில்லை; திரும்பத் திரும்ப ரணங்களின் ஜ“ரணம். நாங்கள் சாதாரணங்கள். எங்களுக்கு ஏன் சதா ரணங்கள்?
-
- 4 replies
- 1.3k views
-
-
மகிந்தா ஆட்சிக்கு மரணம்... அழிவின் நிலையில் படைகளே அதனால் உதட்டில் பொய்களே எத்தனை காலம் பொளிந்திடுவீர்-உமை எள்ளி நகை தமிழ் ஆடிடுவார்... காலம் இன்னும் கடக்கவில்லை கரிகாலன் படைகள் தோற்கவில்லை பொறியினுள் வீழந்தார் பகையினரே- இனி பொறிதட்டி நீரும் கொளுத்திடுவீர்... இல்லை புலியென்றா முழங்குகின்றீர் இன்னலில் வீழந்தே கசங்கிடுவீர் காட்சிக்கு வந்த கந்தகங்கள் கரிகாலன் படையது தந்ததுவோ...?? கோமாளி கூட்டத்து கோதபாயா- நீ கொளுத்தியெறிந்த பொய்யிதுவோ...? எம்தமிழ் இதையின்று நம்பவன்றோ..? எம்மிடை பந்தாய் எறிந்தாயின்றோ..? ஆணையிறவினில் தந்ததுவை ஜயா நீரும் மறந்தீரோ...?? அலரிமாளிகை அலருமினி அடியதை கண்டுனி பதறுமினி குந்திட பங்கரை தேடுவாரே…
-
- 7 replies
- 1.3k views
-
-
அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )
-
- 6 replies
- 1.3k views
-
-
பல்லவி தமிழ் மண்ணை முத்தமிடு தமிழா உன் தாய் மண்ணை முத்தமிடு தமிழா ஈழ மண்ணை வட்டமிடு தமிழா - உன் ஈர மண்ணை அள்ளியெடு தமிழா எம் மண்ணை அள்ளித் தின்றேனும் நாம் ஈழத் தமிழனாய் வாழ்வோம் குருதியில் தோய்ந்த பிஞ்சுகளை எதிரியின் குண்டுகள் தின்கிறதே போரிலே பாயும் பிள்ளைகளை பதுங்கிடும் குழிகள் காக்கிறதே சரணம்-1 வீட்டினை இழந்து நாட்டினை இழந்து காட்டிலே நாங்கள் வாழ்ந்திடலாமா உணர்வினை இழந்து உறவினை இழந்து சோற்றிலே கைளைப் புதைத்திடலாமா போரை நிறுத்தென தமிழரின் குரல்கள் உலகத்தின் செவிகளில் ஒலிக்கிறதே செவிகளை விழிகளை மூடிய உலகம் செக்கு மாட்டினைப் போல நகர்கிறதே எதிரிகள் வருகிற திசைகள் பார்த்து ஈழத் தமிழரின் படைகள் பாய்ந்திடுமே சரணம்-2 …
-
- 5 replies
- 1.3k views
-
-
உனக்காக காத்திருக்கையில் என்னைக் கடப்பவர்கள் மட்டும் ராசியானவர்கள் உன் முகத்தை அவர்களில் தேடுகிறேனே * அந்த சூரியனுக்கு யார் என்னைக் காட்டிக்கொடுத்தது பாருங்கள் நிலாவுக்காக காத்திருக்கிறேன் என்ற கோவத்தில் என்னை கறுப்பாக்கி கொண்டிருக்கிறது * உனக்காய் காத்திருந்த இடத்தில் கொஞ்ச நேரம் நி ன் று பார் உன்னைப் பெற என்னை நான் இழந்த வலி புரியும் * தாமதமாய் வருவதையே பழக்கமாய் கொண்டவள் நீ தெரிந்தும் உனக்காய் காத்திருக்க பழக்கப்பட்டவன் நான் * " நிலா" என்று யார் உனக்கு பெயர் வைத்தது உனக்காய் என்னை தேய வைத்துக் கொண்டிருக்கிறாய் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.3k views
-
-
கோயில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரனாய் காத்திருக்கிறேன் உன் வீட்டு வாசலில் உன் புன்னகைக்காய் * தயவு செய்து இனி நீ குளிக்கும்போது பஞ்சாயத்தில் அறிவித்தல் கொடுத்து விட்டு குளி ஏனெனில் நீ குளிக்கும் போது ஊர் கிணறு எல்லாம் வைற்றி விடுகிறது * நீ ஊர் கோயிலில் பாடிய தேவாரத்தை கேட்டு சாமியாக ஆசைபட்டதில்லை நீ யாரோ ஒரு அனாதையின் இறந்த வீட்டில் பாடிய புராணத்தை கேட்டுத்தான் அனாதையாய் இறந்து போக ஆசைப்பட்டேன் * நீ படிக்கும் கல்லூரியில் ஆண்களும் சேர்ந்துதான் படிக்கிறார்கள் நீ வராத நாட்களில் மட்டும்தான் பெண்கள் கல்லூரியாய் மாறுகிறது * களைப்பில் எந்த இடத்திலும் இளைப்பாறி விடாதே அந்த இடத்தில் இளைப்பாறியே களைத்து …
-
- 7 replies
- 1.3k views
-
-
-
சாவை நேருக்கு நேர் சந்திக்கும் அந்த நிமிடம் யாருக்குமே உடல் ஒருமுறை நடுங்கும் ஆனால் பாலச்சந்திரா ! சாவு உன்னை சந்தித்த அந்த நிமிடம் சாவு தானடா உன்னைக்கண்டு நடுங்கி இருக்கும் ! செத்தவர் என்று உன்னை சொல்வோமா இந்த ஜென்மத்தில் நினைத்திட மறப்போமா குத்துவிளக்கது நீயல்லவோ நாம் கும்பிடும் தெய்வமும் நீயல்லவோ நித்தமும் வாழுவாய் பாலச்சந்திரா எங்கள் நெஞ்சுகளில் என்றும் மாவீரனாய்...! - - ஈழ மண் வாசம் - முக நூல்
-
- 10 replies
- 1.3k views
-
-
சிறு துளி பெருவெள்ளம் உன் கூந்தல் துவட்டிய பின்னும் தூறும் துளிகள் எனக்கு * உன்னைக் காதலித்ததால் அல்ல நீ என்னை காதலிக்காததால்தான் ஆனேன் கவிஞனாய்.... * விரும்பித்தான் காதலித்தேன் உன்னை விரும்பாமல் காதலிதுக்கொண்டே இருக்கிறது கவிதைகள் மட்டும் என்னை * நீ சூடும் பூவுக்கு எப்படி கற்றுக்கொடுத்தாய் நீ சிரிக்காத போதும் சிரிக்க * உன் கண்களில் படித்துவிட்டுத்தான் வெளியிடுகிறேன் என் ஒவ்வொரு கவிதைகளையும் பல கண்களுக்காய் * உன்னைக் காதலித்ததால் தலைக்கனம் எனக்கு நீ காதலிக்காததால் தலைக்கனம் என் கவிதைகளுக்கு -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.3k views
-
-
நீ எழுதும் கவிதை அழகுதான் அதற்காக யார் கண்ணையும் நம்பி என்னைக் கைவிட்டுவிடாதே * நீ இல்லாத தருணங்களில் வாடிப்போகும் எனக்காக நீ கொடுத்த பூச்செடிதான் என்னை மலரவைத்துக் கொண்டிருக்கிறது * எதுவும் கேக்காமலே என் மடியில் நீ உறங்கியபோதுதான் தெரிந்தது உன் அன்பின் ஏக்கம் அதற்காக உன் குழந்தைதனத்தை கையிலுமா வைத்திருப்பாய் என்னை பிடித்தவாறே உறங்குகிறாய் * எவ்வளவு அவசரமாய் வாசல் கடக்கையிலும் உன்னை ஞாபகப்படித்தி விடுகிறது முதல் முதல் சந்திப்பில் நான் வரும்வரை நீ சாய்ந்து நின்ற வீதிச்சுவர் * நீ பிரியும்போது கவனமாய் இரு என்று சொன்னதற்கு பதிலாய் உன்…
-
- 4 replies
- 1.3k views
-
-
சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் நீ எனக்காக ஒவ்வொரு முறையும் இறக்குறாய் , கட்டத்தில் அடைக்க முடிய வில்லை உன் கரை கடந்த அன்பை வார்த்தைகளை தேடி வலு விழந்து போகிறது மனசு உன் ஏக்கங்களே எனது காபரன்களாய் எக்காளிக்கும் கூட்டங்களை தாண்டி வளர்கின்றேன் உன்னாலே . தூக்கம் தொலைத்த இரவுகளில் விம்மி வெடிக்கிறது மனசு விபரம் தெரிந்த நாளில் இருந்து வடிவாக பார்த்ததில்லை எந்நாளும் கடமையில் நீ ஒரு கர்ம வீரி , வீட்டையே உனது உலகமாக்கி யுகம்களை கணமாக்கும் சாமர்த்தியசாலி . இருபத்தியிரண்டு வருடங்கள் இருக்கவில்லை உன்னருகில் , காலங்களே பாரங்களாகி கனக்கிறது இதயம் , இருக்கும் பொது யாருக்கும் தெரிவதில்லை அருமை காலமும் என் வாழ்க…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழனுக்கு தமிழன் ஆளும் கட்சி எதிர்க் கட்சி கைவிடப்பட்டு கடித்துக் குதறிய சமாதான தீர்வுகளும் சமரச பேச்சக்களும்....... கொதித்தென்ன? குமுறியென்ன? பட்டினியும் சித்திரவதைகளும் மரணமும் . . முலைப்பால் இல்லாது முடிந்துபோன சிசுக்களும் . . அநாதை குழந்தைகளும் . . அபலைப்பெண்களும் - தான் எங்கள் தலைவிதியென வாழும் மக்கள் . . . . . பௌத்த மொட்டையர்களும் இனவெறி அரசியல்த்தலைவர்களும் கூடிச்சேர்ந்து அலசி ஆராய்ந்து . . . தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காத மலட்டுச் சிங்களத்தின் மதியிழந்த அரசியல்த்தீர்வுகள் . . . . . . இதையும் ஆதரித்து. . சிலர் நீளமான யுத்தத்தின் நிழலிலே குளிர்காயும் நேற்று வந்த எட்டப்பர்கள் நேத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
சட்டெனத் தூறிய மழைத்துளியில், முற்றாக நனைந்து போனேன்...! சாயம் போனவன் போலாகி... - காயமாகி, அம்மணமாய் அழுது நின்றேன்! வழமையாய்... நான் பேசினால், பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...! ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய், எங்கேயோ தொலைந்து போனேன் ..! என் தாயின் முகம் மலர... மாற்று நாமம் சூடிக்கொண்டேன்! பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால், உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்! நெருப்பாய் இரு... எரிக்காதே! கனலாய் இரு ...கருக்காதே! கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில், அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் ! என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்! என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
''மண்ணை மீட்க யுத்தம் மூட்டு'' தமிழா உனக்கென்ன நாடா....??? கேட்குது சிங்களம் கேடா.... இனி என்ன தமிழா நீ மோடா....??? யுத்தத்தை மூட்டடா போடா.... நாளரை ஆண்டுகள் நீயடா... பேசியே கண்டது என்னடா...??? ஈர் பத்து ஆண்டுகள் மேலடா.... இன்னல்கள் சுமக்கிறோம் நாமடா... எத்தனை பேச்சுகள் நீயடா.... பேசியே போனது பாரடா.... ஆனாலும் இன்றது நீயடா.... கண்டது தீர்வது என்னடா....??? அகதியாய் எம்மவர் தானடா.... அலைகிறார் நித்தமும் பாரடா.... எத்தனை கொலைகள் இன்றடா.... எம் தமிழ் மீதினில் ஏனடா....??? செய்யிறான் சிங்களம் கேளடா..... இனி என்ன …
-
- 4 replies
- 1.3k views
-