Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அழிக்கப்பட முடியா தேசம் http://www.piraththiyaal.com/ சிறுவயதுக் கரையோரம் கட்டிய மணல் வீட்டை அலை வந்து வந்து அழித்துப் போனது. மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு பின், என்சிறு கிராமக்கோடியில் வியர்வையாலுங் குருதியாலும் கட்டிய என்சிறு குடிலை சிதைக்க முடிந்தது உங்களால் மீண்டும் மீண்டும் கட்டக் கட்ட அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு இப்போ நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும் அழித்துவிட முடியாது என்பதை அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால். ஏனெனெல், ஓர் அகதியின் கனவுகளாலனவை எனது தேசம். -தமயந்தி - http://www.piraththiyaal.com/2012/12/blog-pos…

  2. எல்லாம் என்பதன் அர்த்தம் புரியாதவரை எல்லாம் இங்கே புதுமையாகத்தான் இருக்கிறது. வாரி வழங்கிய கைகள் இன்று வாட்டம் கண்டன. ஏறு தழுவிய மார்புகள் எல்லாம் சோர்வு கொண்டன. ஏர் பூட்டி உழுதிருந்த நெல் வயல்கள் வான் பார்த்துக் காத்திருக்க வாழாவிருப்பதுவே வாழ்க்கையானது. வசந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையிலே வறட்சி மட்டுமே மீதமானது... பட்டினி கிடந்து பழக்கப் பட்டதால் பசி கூடவே எம்மில் ஒட்டிக் கொண்டது நிரந்தரமாக... எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ஏமாற்றங்களாகி இன்னும் வாழ்தல் வேண்டி தொடர்கிறது சீவியம்.

    • 6 replies
    • 1.2k views
  3. நுதலில் உலவும் அளகமே வேய்கொள் தோளுடன் புலவியோ ?? கன்னக் கதுபபுகளில் தவழ்ந்து காதுமடலுடன் கலவி கொள்கிறாய் !! நுதல் - நெற்றி அளகம் - முன்னுச்சி மயிர் வேய்கொள் - மூங்கில் போல் வளைந்த தோள் புலவி - ஊடல்

  4. 'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…

    • 0 replies
    • 1.2k views
  5. அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? _________________________ தீபச்செல்வன்

    • 1 reply
    • 1.2k views
  6. அடங்கிக்கிடக்கிறது. என்றும் இப்படி கிடந்ததில்லை இறகுகோதும் ஓசையாவது கேட்கும். எதுவுமில்லை. நேரம் அறியக்கூட பர்ப்பதுண்டு காலம் தப்பியதில்லை ஒருபோதும். காலம்...?? எங்கே போயிருக்கும், இரைபோதாமல் இன்னும் தூரம் போயிருக்குமோ இணைகூடி இடம் மாறி இருக்குமோ இரையாகி இருக்குமோ இறகு உருத்தியும், எச்சமிட்டும், சுள்ளித்தடிகளை விழுத்தியும், தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும், எங்கே போய் தொலைந்திருக்கும். "சனியன்" என்று வாய்விட்டு திட்டவேண்டும் போல ஒரு உணர்வு. காலம் காத்திருப்பை சேமிப்பதில்லை. சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் தவறி அலைகின்றன. எச்சங்கள் காய்ந்து துகளாகி இல்லாமல் போகின்றன. சந்தங்களால், குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து வெற…

  7. Started by nochchi,

    சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…

    • 8 replies
    • 1.2k views
  8. Started by சொப்னா,

    அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…

  9. அழுவதற்காகவா தமிழினம் பிறந்தோம்....??? இமயங்கள் இமயங்கள் இடிந்தே வீழ்குது இன்றேன் தமிழுக்கு இத்தனை துயரம்...??? கண்ணீர் ஆறுகள் கடலென ஓடுது நெஞ்சத்தில் ரணங்கள் ஏனின்று கூடுது....??? விடுதலை ஊற்றுக்கள் விரைவாய் அடையுது காலனுக்கேன் இத்தனை கடுகதி அவசரம்...??? ஒளியென உதித்த உதயங்கள் எல்லாம் இருளதை அளித்து இறப்பதால் சோகம்.... புயலென எழுந்த விடுதலை வீரர்கள் பகையதை சருகாக்கி அழித்ததால் மகிழ்ந்தோம்... அருகில் இருந்ததால் அடைந்தோம் ஆனந்தம் அவரை இழந்ததால் அடைகிறோம் சோகம்... தீயென எழுந்த தீர வீரர்கள் தீயினில் எரிந்ததால் தேம்பியே அழுதோம்... மார்கழி வந்தாலே மரணத்தின் ஓலம் அழு…

    • 4 replies
    • 1.2k views
  10. மீண்டும் மீண்டும்........ இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால் எங்கே?....... ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தி…

    • 3 replies
    • 1.2k views
  11. Started by slgirl,

    நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???

    • 7 replies
    • 1.2k views
  12. இல்லை...இல்லை... - இரத்தின “மை” Saturday, 13 January 2007 உணவுக்கு மரவள்ளிகூட இல்லை உயிர்காக்க மருந்தில்லை நத்தாருக்கு கேக் அடிக்க மாஜரினில்லை பொங்கலுக்கு சக்கரையில்லை பாறணைக்கு காய்கறியில்லை பள்ளிசெல்லும் பையனுக்கு குமுழ்முனை பேனையில்லை குழந்தைக்கு பால்மாயில்லை எக்ஸ்றே இயந்திரத்துக்கு எனேஜி இல்லை எக்ஸ்போவில் ரிக்கறில்லை ஏரியாகொமாண்டரிடம் கிளியரன்ஸ் இல்லை. ஏ நைனுக்கு விழிப்பில்லை மரக்கறிக்கு உரமில்லை சந்தையில் மீனில்லை விலைவாசிக்கு குறைவில்லை தேரிழுக்க பக்தனில்லை ஏர்பிடிக்க வலுவில்லை மனித உரிமைக்கு மதிப்பில்லை சிந்தும் குருதிக்கு பெறுமதியில்லை விசாரணைகளுக்கு முடிவில்லை மிகிந்தலைக்கு பாதையில்லை மகிந்தரின்…

    • 1 reply
    • 1.2k views
  13. கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி

  14. முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…

  15. 2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக ...…

  16. வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…

  17. மிகத்தெளிவாகத்தான் இருக்கிறேன்- ஆனால் குழப்பங்களுக்கு நடுவில் இருக்கிறேன். ஆயிரம் கேள்விகள் என்னை துரத்துகின்றன, ஓடிக்கொண்டிருக்கிறேன் பதில்களை நோக்கி...!!! சில பதில்களும் கேள்விகள் ஆக மாறி குழப்புகின்றன..!!!! எது சரி? எது பிழை? நேற்று பிழைகள் என்று தெரிந்தவை இன்று சரியாகலாம். இன்று சரியானவை என்று சொன்னவை நாளை பிழையாகலாம். சரியான வழிகளில் சென்றால் சில சமயம் பிழையான இடங்கள் வருகிறது. பிழையான பாதைகள் சில சிலநேரம் சரியான இடங்களுக்கு மாற்றுவழிகளாகிறது. ஆரம்பத்தில் அருகில் இருப்பது முடிவில் தொலைந்துபோகிறது. தொலைந்ததை தேடி வந்தால் மீண்டும் "ஆரம்பம்" தெரிகிறது. முடிவை காணமுடியவில்லையெனில் ஆரம்பத்தில் பிழை என்கிறார்கள் ஆனால் ஆரம்பத்தில் பிழையானது…

  18. POETRY OF THE ANGELS தேவதைகளின் கவிதை . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்று…

    • 1 reply
    • 1.2k views
  19. தேநீர் கவிதை: வழிப்போக்கன் நான் வழிப்போக்கன் வழிகள் என் முகவரிகள் * மழையில் நனைவது எப்போதும் இருக்கும் மழை நீர் அருந்துவது எனக்குப் பிடிக்கும் * இளைப்பாறும் போதெல்லாம் நான் நிழலுடன் பேசுகிறேன் மனம் மரத்துடன் பேசுகிறது * என் பயணம் அடைதலில் இல்லை தொடர்தலில் இருக்கிறது * ‘வெகுதூரம் வந்த பின்னும் வெகுதூரம் இருக்கு இன்னும்’ இந்த வரி அதிகம்…

  20. Started by nunavilan,

    ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். இறைவனுக்கு என்னோடு வா! இறைவா! என்னோடு வா! அழைக்கின்றேன் - உன்னை துதிக்கின்றேன் உன்னை அருள் தரும் வாழ்வு - இனி புதுசுகம் தரும் வாழ்வு மனிதத்தை விதைத்து நேசத்தை வளர்ப்போம்!! மாயத்தைக் களைந்து உண்மையை உடுப்போம்!!! போர்களை ஒழிப்போம்! புதுமைகள் செய்வோம்! பாவங்களை மன்னிப்போம்! பகைவர்களை நேசிப்போம்!! பயந்துவிடாதே! மரங்கள் இல்லை இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!

    • 2 replies
    • 1.2k views
  21. முத்துக்குமாரா! முத்துக்குமாரா! தொப்புள் கொடி தந்த உறவே! நீ செத்துவிட்டதாகத்தான் சொல்கின்றார்கள் எல்லோரும்! இல்லைத்தம்பி நீ சாகவில்லை! உயிர்கொண்டும் பிணமாகத் திரிகின்ற பலரில் உணர்வோடு தமிழானாய் உயிரும் மானமும் எனத் தமிழ் விடுதலைக்கோர் கருவானாய்! தியாகத்தின் தீபமே உன்னைத் தீ எரிக்குமா? நீ மூட்டிய தீயிலே குருடர் கண் திறக்குமா? இருட்டிய கிழக்கது இனியாயினும் வெளிக்குமா?! உயிருன்னைச் சுடும் என உணர்ந்திட்ட பொழுதிலும் உண்மையை உரத்துச்சொன்னாய் உயிராயுதம் ஆகியே உன்னதம் ஆகிவிட்டாய்! தமிழ் அது உடையல்ல உணர்வென்று நீ உலகுக்கு காட்டிவிட்டாய்! தன்மான நெருப்பிற்கு எங்கள் தம்பியே நீ நெய் ஊறிவிட்டாய்! ஆட்சியே பெரிதென்று எண்ணுவோர் மத்தியில் தமிழன் மானத்தை நாட்டிவிட்ட…

    • 2 replies
    • 1.2k views
  22. ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-

    • 2 replies
    • 1.2k views
  23. பொதுநூலகப் புதுநூலகம் (அன்றொருநாள் ஐபிசித் தமிழுக்காய் எழுதியது) நல்லளவையூரான் நானுரைக்கும் கவிபார்த்து சொல்லிற்படு குறை களைந்தே ஆய்ந்து நறும் வித்தகரே வியம்பிடுவீர் வாஞ்சையுடன் ஏற்றிடுவேன் இத்தினம் சித்தமாய் இயம்புகின்ற அடியேனும் துன்பமாய்க் கலந்தழியும் நெஞ்சகன் ஆகி மின்தளம் வழியே விரும்பிடு யாழ்நகர் நூலகக் கருவினைச் சார்ந்தே பொதுநூலகத்தில் புதுநூலகமாம் என்ற கருக் கொண்டே மதிதனில் இருத்தி மாண்புறு தமிழால் பெருமை கொண்டு சோர்வகற்றி வரைக்கின்றேனீங்கு!! தங்கு யாழ்நகர் தருநல் வரமென யாங்கொரு காலத் தோங்கிய தாகி மேருவில் மேலுறு பயனதாய் மிளிர்ந்து பெருமைசேர் அறிவுநூல் பலவுடன் வெண்மையாய் பாவலர் முதலாய் பைந்தமி ழறிவோர் த…

  24. தை - திருமகளே வருக வருக .... தைரியம் சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

  25. மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.