Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by காந்தன்,

    பொங்கல் தமிழர் மனமெல்லாம் தவித்து ஏங்க பசியும் பிணியும் உயிர்களை வாங்க துன்பமும் துயரும் தழைத்து ஒங்க மனதின் நம்பிக்கை மெதுவாய் மங்க கடமை மறந்தோர் கண்மூடித் தூங்க எமக்கு மனமேது அரிசியைப் பொங்க?

    • 2 replies
    • 865 views
  2. மெல்ல மெல்லக் கசியும் உண்மைகளிலிருந்து நீண்ட பெருவெளிக் கனவு தற்கொலை செய்து கொள்கிறது..... முட்புதர்களின் அடர்த்திக்குள்ளிருந்து சொட்டுச் சொட்டாய் சேர்த்து வைத்தவையெல்லாம் இரத்தம் குளி(டி)த்துப் பெருத்து நாறிப் பிணங்களாய் மனித எலும்புக் கூடுகளாய் வெளிவருகிறது. நேசித்தவர்களும் நேசிப்பின் நினைவாய் விட்டுச் சென்ற வார்த்தைகளும் ஆள்மாறி ஆள்மாறி அவர்கள் பகிர்ந்தவற்றைப் பகிர்ந்து கொண்டு துயர் வலியில் தடயமறிவிக்காமல் தொடர்பிலிருந்து விடுபடுகிறார்கள். சீருடைகளோடு நிமிர்ந்து நின்ற வீரங்கள் சாவின் நிணம்மாறாத் தடைமுகாம் வேலிகள் பின் தலைகுனிந்து.... யாது நிகழ்ந்திற்று ஏது நடந்திற்றென்று ஏதுமறியா நிலையில் இலக்கத் தகடுகளால் அவர…

    • 9 replies
    • 1.6k views
  3. தமிழர் சொரணை மீட்பு பொங்கல்.. வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க.. ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க.. மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று.. ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க.. இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க.. சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று.. தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று.. தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று.. ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்? காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்? முல்லை பெரியாற்றை உட…

  4. அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…

  5. என் உண்னதக் காதலலுக்கு புண்னைகையாய் வாந்தாய் பூவிழிலி ஓரம் நீர்த் துளி வழிவி என மேல் காதல் கொண்டாய் தேன் உதடால் மோகம் செய்து உருமை கொண்டாடினாய் பூ விரல் கொண்டு என் மேனி வருடினாய் அவள் கூந்தல் ஆண்டவன் செய்த கருநீர் அரிவி யார் இவளோ? தேன் அமுதோ? www.tamil1.tk www.tamil.2.ag

  6. பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …

    • 12 replies
    • 3.2k views
  7. பேய்கள் கூட்டத்தில் இரண்டு பெரிய பேய்கள் சுடுகாட்டை ஆழ்வதற்கு அதில் ஒரு பேயை தெரிவு செய்ய வேண்டும் ஒரு பேய்க்கு நல்லூர் கந்தன் துணை மற்றப் பேய்க்கு கதிர்காமக் கந்தன் துணை இரண்டு பேய்களின் வாய்களிலும் குருதியும் சதையும் பிரண்டுபோயுள்ளது இன்னும் வாயை கழுவக்கூட இல்லை சும்மா சொல்லக் கூடாது எங்கள் சனத்தை இரண்டுபேரும் நல்லாத் தின்றவங்கள் ஏவறை விட்டபடி வலம்வரும் பேய்களில் எமக்குப் பிடித்த பேய் எது? பேய்களில் என்னய்யா பிடிப்பும் வெறுப்பும்? இல்லை தமக்குப் பிடித்த பேய்களை சுட்டிக்காட்டுவது அவரவர் ஜனநாயக உரிமை தானே? நிச்சயமாக எங்கள் விருப்பப் படிதான் எங்களை தின்னவேண்டும் இந்த உரிமையை யாருக்காகவேனும் விட்டுக்கொடுக்க முடியா…

  8. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.

  9. நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும். 1.முதல் கவிதை: நான் லீனா நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில் ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில் வாழ்கிறேன் என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது நாடு கோருபவ்ர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள் புரட்சி வேண்டுபவ்ர்கள் போர் தொடுப்பவர்கள் ராஜாங்கம் கேட்பவர்கள் வணிகம் பரப்புபவர்கள் காவி உடுப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் நோய் பிடித்தவர்கள் எவன் ஒருவனும் வன்புணர்வதற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு கருங்குழியென செத…

  10. உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …

  11. ஒருகணம் வழித்தடம் திரும்பி... வீறுகொண்டெழுவோம்! 2010.. இது புத்தாண்டு! வாசல் திறந்து வரவேற்கின்றோம். ஆனால்... வண்ணக்கோலமிட முடியவில்லை. வளைதோரணம் கட்டவும் இயலவில்லை. வாசல் தொலைத்து வாடிக்கிடக்கின்றோம். அந்நியன் வாசலில் யாசகம்செய்து – ‘புத்தாண்டே வாராய்!’ என்று இரு கரம்நீட்டி அழைக்கின்றோம். பத்தோடு பதினொன்றாக ஆண்டுகள் வருவதுண்டு. வந்தவழியே திரும்பிப் போவதுமுண்டு. நாங்களும் வரவேற்போம் - முந்நூற்றறுபத்தைந்து நாட்கழித்து ஒவ்வோராண்டும் கடந்து சென்றுவிடும். 2009 வந்தது. உள்ளம் பட்டாம் பூச்சியாக சிறகு விரித்துப் பறந்தது. கண்கள் அகலத்திறந்து வாசல் நோக்கி விரிந்தது. இது எங்கள் ஆண்டு! இது எங்களுக்கான ஆண்டு! என்றன்றோ அப்பொழுது திளைத்தோம்?…

  12. கடந்து செல்லும் 2009....... -------------------------------------------- கடந்து செல்லும் 2009 மறந்திட முடியாத துயர ஆண்டு தமிழினம் குருதியும் சதையுமாய் கொடுமையைச் சுமந்த துயர ஆண்டு துயரங்கள் வாழ்வின் பகுதியானது துவண்டு நாம் வாழ்ந்திடல் பயன் தராது ! இழப்பின் வலிகளை இதயத்தில் பதிவோம் இனியென்ன உள்ளது என்றே நிமிர்வோம் பணியெங்கள் பணியது தேசம் மீட்பதே என்பதை எங்கள் இதயத்தில் பதிவோம் கனியெங்கள் கைகளில் வருமோர்நாளென்று காரியம் ஆற்றிடும் வலிமையை பெறுவோம்! கையைக் குலுக்கியே முதுகிலே குத்தினார் அவரைக் கட்டித் தழுவியே முகத்திலே அறையும் நல் தந்திரங்களை நாமும் தேடுவோம் நாளைய ஆண்டினை எமதாய் மாற்றுவோம்! நம்பிக்கையோடு எம் மனங்களை இணைப்போம் நாளையென்பதை…

  13. ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை வெளியே எடுத்து - நீ தானே.. நீ தானே… என கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்……………… நீ போராளி? நான் தீவிர வாதியா?????? பாருங்கள் உலகத்தீரே.. எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது அப்படி வேடிக்கை பார்கிறீர்களே, ரத்தம் உலகத…

  14. உறுதியெடுப்பீரா?

  15. உன்னைப் பற்றி எழுதியே கவிதையாகி விடுகிறது என் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் * என் முதல் கவியை நினைக்கும்போதெல்லாம் நான் மறப்பதில்லை உன் முதல் முத்ததை * என்னை கிறுக்கனாக்கிக் கொண்டிருக்கிறது உன்னை பார்த்த என் கவிதைகள் * நீ மிக அழகானவள் என்பதற்கு உன் மேல் பொறாமைப்படும் என் கிறுக்கல் ஒன்று போதாதா * எனக்கான உன்னை எப்படியாவது மிஞ்ச வேண்டும் என்பதே என் கவியின் தவம் -யாழ்_அகத்தியன்

  16. தளபதிகள் தவறு செய்வதில்லை! அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும் உரிமைப் படுத்தப் படுகின்றன. அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும் சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும் அவர்களையே சாருகிறது. தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர். எனவே, அவர்கட்கு எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது. என்ற போதும், அதே தவறுகள், நாள் தவறாமல் திரும்ப திரும்ப நிகழ்கின்றன. ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும் அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன. அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில் அவர்கள் தளபதிகள். தளபதிக…

  17. பிஞ்சு நிலவு கவிதை - இளங்கவி.... பருவ ஏக்கத்தில் படுக்கைகள் நனைய...... என் கனவு பேரழகித் தேர்வுக்காய் பாதச் சுவடுகள் நடந்தன.... நிலவை மட்டும் தேடும் நேசக் கண்களுக்கு... என் மனதைக் குளிரவைக்க ஓர் நிலவு இன்னமும் கிடைக்கவில்லை.... சிறு தூரம் நடக்கிறேன்.... நடு நிசியின் நட்சத்திரக் கூட்டம் போல் வீதியோ ஜொலி ஜொலிக்க என் வேதனைக்கு விருந்தாக ஓர் வெண்ணிலவு... ஆம்.. அவள் ஓர் வெள்ளை நிலவு.... இவள் வேண்டாம்.... எனக்கு என் சொந்த மண்ணீன் காந்த நிலவு வேண்டும்... என் நடை தொடர சின்னச் சிரிப்பொலியொன்று என்னைச் சிறிதாய் கவர்ந்திழுக்க திசை நோக்கிப் பார்க்கிறேன் நம் தேசத்தது நிலவு அவள்.... அவள் கண்களோ பேசியது பல கதைகள்.... …

  18. இறந்தால் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை வாழும்போது தந்து கொண்டிருப்பவள் நீ * யார் சொன்னது கண்பட்டால் வாழமுடியாது என்று என்னவள் கண் பட்டதால்தானே வாழ்கிறது என் கவிதைகள் * உன் மூக்குத்தி மின்னுவதில் தெரிகிறது வானவில்லின் அழகு * உன் பாதச்சுவடெங்கும் தேங்கிய மழை நீரில் உன் முகம் காட்டுகிறது நிலா * வாடாத உன் புன்னகை கண்டு பொறாமைப்படுகிறது பூக்கள் எல்லாம் * உன் வருடலுக்காய் ஏங்குகிறது என் நரைமுடிகள் -யாழ்_அகத்தியன்

  19. கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …

  20. தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …

    • 3 replies
    • 1.1k views
  21. வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …

  22. காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ

  23. வெள்ளைக் கூடுகள்.... கவிதை - இளங்கவி... இறுதியாக எங்கள் மனிதப் படுகொலைகள் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் காகமும் குஞ்ச்சுகளும் பேசுவதாக ஓர் கற்பனை.... நம் புதுவீடு வெள்ளையாய் பளிச்சென்று இருக்கம்மா...! வெள்ளைமரக் குச்சிகள் இங்கே புதிதாகக் கண்டாயா....? இல்லையடா செல்லம்... இது இங்கே மரணிடத்த மனிதர்களின் எலும்பச் சிதறல்கள்.... மழையுடன் புயலும் தாங்கும் மாமிசச் சிதறல்கள்.... நாம் வானத்தில் பறந்ததால் ஓர் வழியாகத் தப்பித்தோம்... இவரோ பூமியில் வாழ்ந்ததால் புதைகுழியில் சிதறிக் கொண்டார்.... அவர் எலும்புச் சிதறல்களில் உமக்கு அழகாய் வீடமைத்தேன்... அவர் வாழ்ந்த இடமெல்லாம் நீர் விளையாட வழியமைத்தேன்... சரி..சரி சிங்க…

  24. காதலில் தொலைந்தேன்...... கவிதை வலியாக- -இளங்கவி அந்திப் பொழுது அழகன பூஞ்சோலையில்... ரோஜா குளியலில் நான் திழைத்திருக்க மல்லிகைக் குவியலாய் என் மனங்கவர அவள் வந்தாள்.... என் முன்னால் முட்செடியில் ரோஜாக்கள்... முழு நிலவாய் அவள் முகம்... மூன்றாம் பிறை நிலவு... நான் முனிவனா என்ன முகங்குனிந்து செல்ல...! சனங்கள் நெரிசலிலும் அவள் நடையை அழகாய் ரசித்திருக்க...... யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என் மணிபேசை... அதைத் தேடவா..? அவளைத் தொடர்வதா...? மனதில் உடன் பதில் உடனே தொடர் என்று.... காரணம்..கணப்பொழுதில் உன் கண்களினால் உன் மனதைச் சென்றடைந்தவள்... அவளுக்காய் உனை மறந்து உன் உடமையைத் தொலைத்தவன்... எனவே அவள் …

  25. உங்கள் வீரம்...... இனத்தின்நெஞ்சை நிமிர்த்தியது உலகின் புருவங்களையும் உயர்த்தியது சொந்த ஆசைகளைத் துறப்பது ஒன்றுதான் உங்கள் ஆசையா? வித்(து)த‌கரே சிந்தனைக்குள் விடுதலை வெப்பம் செறிந்த‌ மின்சாரம் பாய்ச்சிய‌ தலைவனை மட்டுமல்ல உலக‌ தமிழனையும் தலைநிமிர்த்திய உங்கள் செயல்களின் ஒவ்வொரு அசைவிற்கும் தலைவணங்குகின்றோம் உயரிய இலட்சியத்திற்காக‌ உயிரை உருக்கிய‌ உன்னத்த்தினை, உலகம் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் பொருள் கொடுத்ததுதான் பாரிய பயங்கரவாதம் உயரிய தீவிரவாதம் கனவுகள் அழிந்திடுமோ என்று அழும் உங்கள் ஆன்மாக்களின் குரலால் அதிருகின்றது எங்கள் உணர்வு பத்ருகின்றது உள் மனது கவலை விட்டு உறங்கிடுங்கள் கண்மணிகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.