Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை ......... மழைக்கால ஆரம்பம் ,மண் மீது தூறல்கள் ஒவ்வொரு இதயத்திலும் இனம் தெரியாத சோகங்கள். மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது ஈழத்து மக்களின்,வீர வேங்கை களின் நினைவுகளும் பிறந்த தினமும் ஒரு சேர மகிழ்வுற்றா ஒரு பொழுதும் மண்ண்ணில் விதைத்த மாவீரருக்காய் , என்இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி. எத்தனை எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ... கார்த்திகை தோறும் கல்லறைத் தீபங்கள். மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள் இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே சிந்திய குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே .... சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு மண…

  2. என் பேரு விடலை நிற்கிறதோ படலை - பெண்களை கண்டா போடுவேன் கடலை அண்டு பார்த்தன் ஒரு பிகரை கொடுத்தேன் என் உயிரை எழுதினேன் ஒரு மடலை அவளோ அதத் தொடலை பார்த்திட்டான் அவளண்ணன் முனி அண்டு பிடிச்சுது எனக்கு சனி படிச்ாான் என் மடலை உருவினான் என் குடலை அனுப்பினான் சுடலை என் பேரு விடலை இருப்பது சுடலை போடுவேன் மோகினிகள கண்டா கடலை ( குசா மட்டும் தான் கவிதை எழுதுவாரா நாமளும் பிச்சு உதறுவமில்்ல )

  3. காத்திருக்கும் இதயம் கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன் நினைவுகளால் வேகுகின்றன இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும் ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன் நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய் என் உள்ளம் தகிக்கிறது அசைவற்ற வெறு வெளியில் நினைவற்ற ஜடம்போல - என் மனவறையின் சுவர்களில் வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன உன் நினைவு சுமந்த என் இதயம் கனத்துப்போன இரும்பாக மரத்துப்போய்க்கிடக்கின்றது என் பாலைவனத்தின் வெண்மணலில் நீர் வார்க்கும் ஊற்றாக நீ வரும் நாள்பார்த்து - உன் நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால் தவமியற்றும் பற்றற்ற கொக்காக உனக்காக உனக்கேயாக - இன்னும் உயிர் சுமக்கிறேன் - இந்த உணர்வற்ற உடலில்

  4. நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர் மீண்டும் உருப்பெறாத கனவுகள் இரவின் நடு நிசியையும் தாண்டி வருகின்றன கைகள் முளைத்த பல கனவுகள் கழுத்தையும், குரல்வளையும் நெரித்து கொல்கின்றன என் கனவுகளுக்கு மொழிகள் இருப்பதில்லை நிறங்கள் இருப்பதில்லை சத்தம் இருப்பதில்லை மெளனம் நிறைந்த கனவில் நேற்றைய மனிதர்கள் வந்துபோயினர் அவர்களின் கேள்விகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் துயரங்கள் அவர்கள் சொல்லும் உண்மைகள் எதற்கும் ஒலியிருப்பதில்லை ஆயினும் உயிர் துளைத்து ஓராயிரம் யுகங்களைக் கடக்கும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர் வலிய கனவொன்று இரவு கடக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் அச்சமுறுகின்றேன் கண்கள் மேல் படர்ந்த கனவின் சுமையில் பகலின் பொ…

  5. உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…

    • 11 replies
    • 1.9k views
  6. மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…

    • 0 replies
    • 617 views
  7. ____________________ பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி தயாராகவே வைத்திருக்கிறேன். எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும் எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன. எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில் பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது. பார்க்க முடியாதபடி நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன். கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய் நிதிலேகாவையும் குழந்தையையும் மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள். தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம் அவள் எனக்கே தந்திருந்தாள். என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த அவளது குழந்தையை நான்…

  8. புன்னகை செல்வனே... மதி முகம் கொண்ட தமிழ் செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. தானைத் தலைவனின் தம்பியே தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே எங்களை விட்டு எங்கு சென்றாய்.. போர்க்களத்துலும் நீ வீரன் புன்னகையிலும் நீ மன்னன் நீ சிரித்தால் பூமி சிரிக்கும் நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே தாயகத்தை விட்டு எங்கு சென்றாய் கார்த்திகை கரி நாள் வந்ததுவோ காலனே உனக்கு கண் இல்லையோ எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்? தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள் என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..

    • 12 replies
    • 1.5k views
  9. "இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை" என்ற ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை ஒன்றில் இருந்த கவிதை.. இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை உங்களுக்கானதொரு சூரியன் பால்வெளியில் தகதகத்து வந்துகொண்டிருக்கிறது அதிகாலையில் அதன் முதல் கிரணங்கள் உங்களைத் தீண்டக்கூடும் தூங்குகிறவர்களே விழித்துக் கொள்ளுங்கள் விகசிக்கும் அந்த ஒளியெடுத்து கண்களுக்குள் பாய்ச்சிக்கொள்வோம் நூறாண்டுகள் தடித்த இருட்சுவரை கடக்க வேண்டியவரன்றோ நாம்... சிறுகதையைப் படிக்க: http://www.uyirmei.com/2009/08/blog-post_3304.html

  10. சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…

  11. எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?

  12. என் இளவயதில் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் கனவுகள் எல்லேரையும் போலவே எனக்குள்ளும் ஆசைகள் எல்லேரையும் போலவே என் தேசத்தின் மீதான காதல் எல்லேரையும் போலவே எனக்குள்ளான மாற்றங்கள் எல்லேரையும் போலவே என்கைகளிலும் துப்பாக்கி எல்லேரையும் போலவே எனக்கும் நம்பிக்கை எல்லாமே சிதறிப்போன கணங்களில் எதுவுமே நடவாதது போல எல்லோரையும் போலவே நானும் வாழப் பழகிக் கொள்கிறேன்..

  13. இனிய நண்பர்களே! என் மனதில் நட்பின் வலியில் பிறந்த ஒரு கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அன்றொருநாள் ஒரு சின்னப் பையன் மாலைப்பொழுதின் மயக்கும் இசையில் உள்ளம் மகிழ்ந்து ஓடி வந்தான் தென்றல் ஒன்று தவழ்ந்து வந்தது முல்லைச் செடியும் அணைத்துக் கொண்டது எத்தனை வண்ணம், எத்தனை வாசம் தன்னை மறந்து ஒவ்வொரு பூவாய் கட்டி அணைத்து முகர்ந்து கொண்டான் முல்லைச் செடியும் அன்பை பொழிந்தது காலைப் பொழுதில் கண்கள் திறந்து முல்லைப் பூவை கண்டு மகிழ்வான் மதிய நேரம் முல்லை இல்லா உணவும் உண்ணான் அடம் பிடிப்பான் அந்திப் பொழுதில் முல்லை பூவுடன் காதல் பேசி கண்கள் சிமிட்டி நடுநிசி தன்னில் முல்லை செடியுடன் ரகசியம் பேசி தூங்கி போவான் …

  14. Started by இளங்கவி,

    எதுவரை...... கவிதை - இளங்கவி குளிர் நிலவை கைகளில் ஏந்தி.... கோடி மின்மினியை வானத்தில் காட்டி.... அப்பா வந்தால் அடித்திடுவார் சாப்பிடடி என் செல்லம் என்பாள்.... சோறுடன் சேர்த்து தமிழையும் ஊட்டிடுவாள்..... இது ஈழத்து மண் கண்ட இனிய பொழுதுகள்..... இன்று கனவுகளில் மட்டும் நாம் காணும் நினைவுகள்..... வாழ்ந்த நிலங்களெல்லாம் எரி நிலமாய் மாறிவிட..... எமை வாழவைத்த வயல்களெல்லாம் கந்தகத்தில் புதைந்து விட... நம் பிணக்குவியல் மேலே புத்த விகாரைகள் எழுகிறது.... எம்மை அடைத்து வைத்த சிறைகள் பூட்டியே இருக்கிறது.... அன்று உணவூட்ட நட்சத்திரம் அழைத்தாள்..... அருகில் இருத்திட நிலவையும் அழைத்தாள்.... இன்று முகாமில் நட்ச…

  15. மணிக்கூட்டுக் கோபுர வளைவில் மெதுவாக தலை நிமித்தும் என் சைக்கிள் உச்சி பிழக்கும் வெய்யில் நாற்பது நிமிடம் விடாமல் வலித்த‌ களைப்பு நாக்கு வறண்ட‌ ‌ தாகம் அத்தனையும் முற்ற வெளியில் பஞ்சாய் பறக்கிது உன் தரிசனம் கிடைக்கும் என்ற அந்த ஒரு நினைப்பில் மாத்திரம் விடுதியை விட்டு புறப்பட்டு சுப்பிரமணியம் பூங்காவை தாண்டிவிட்டாயா பொல்லாத பௌதிகம் என்று லைபிரரி வாசிப்பறையிலேயே படுத்துவிட்டாயா படித்தது பத்தாது என்று முனியப்பரின் சன்னதியில் வரம் கேட்டு நிற்கின்றாயா எல்லாம் முடித்தாச்சு என்று றீகலில் நண்பிகளுடன் ஆங்கில சினிமாவிலா என்ன நடந்தது இன்று வளைவில் வந்தவுடனே கண்ணுறும் உனை இன்று என் …

  16. அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை தீபச்செல்வன் ____________________ அரசனின் நகரம் இரவு முழுவதும் சிரித்துக்கொண்டிருக்கிறது. நண்பனே, உரையாடலின் பின்னர் கடற்கரையில் வெகு நேரமாய் காத்திருந்தேன். அங்கிருந்து அகற்றப்பட்டு தங்கியிருந்த வாடி வீட்டிற்கு முன்னால் கடற்கரையுடன் முடிந்தவற்றை உனக்கு சொல்லியனுப்பிக்கொண்டிருக்கிறேன். நான் இனி என்ன செய்வது என்பதை உன்னால் கூற முடியுமா? கடற்கரை எதையோ செல்லிக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் பெருஞ்சிரிப்பு கடலை கடந்து எல்லாத் திசைகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. கடல் மகிழ்ச்சியடையவில்லை. அது எல்லாப் பக்கங்களுக்கும் அலையை தள்ளி எதையோ பேசிக்கொண்டிருந்தது. விண்ணப்பங்கள் நிரம்பிய எல்லாக் கடிதங்…

  17. ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின் அருகாய் அருகாய் துப்பாக்கிகள்….. *அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று* கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து சொட்டிய துயர்….. கனவுகளைத் துரத்திக் கொண்டு இரவுகள் அலைகிறது…… கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்….. சொல்லால் வசியம் செய்து சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்…… ‘எனக்குத் தெரியாது‘ எத்தனையோ தரம் எழுத்துமூலமும் வாக்குமூலமும் எடுத்த பின்னாலும் கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்….. *பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் பே…

    • 12 replies
    • 1.9k views
  18. போர்த்திட்டாண்டா.. தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..! காலம் காலமாய் வரலாறாய் எழுதி வைத்து.. தமிழினத்தை.. அழித்து துன்புறுத்தியவனுக்கே சொந்த இனத்தை.. ஊரை விட்டே துரத்தி அடித்தவனுக்கே.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா.. பாரடா பார்.. உலக மைந்தா. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! மானம் கெட்டதுகள் வாழ்ந்தென்ன வீழ்ந்தே தொலையட்டும் என்றே அன்னை சோனியாவின் எடுபிடிகளாய் வடக்கிருந்து வந்து.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா சிங்களத் தானைத் தளபதிக்கு பொன்னாடை போர்த்திட்டாண்டா..! வாழ்க தமிழ் வீரம் எழுக தமிழக புதிய வரலாறு.. காட்டிக் கொடுப்பதில் காக்கவன்னியன…

  19. ____________________ லூர்த்தம்மா! காலம் பற்றி என்ன சித்தரிப்புக்களை நான் செய்ய வேண்டியிருக்கிறது? நாறி வதைத்துக்கொண்டிருக்கும் எல்லாச் சொற்களையும் உனக்காக அசைத்து கொட்டுகிறேன். மழைக் காலத்திற்கிடையில் நமது காணியில் மேடு ஒன்றில் வீடு ஒன்றை அமைப்பதற்காகவே இரவுகளில் கற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களிடம் சொன்னேன் குழந்தைகள் ஒரு பொழுதும் விரும்பி துப்பாக்கிளை தூக்கி வரவில்லை என்பதை. அபிராஜிடம் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக சொல்லுகிறார்கள். அபிராஜை இன்னும் நான் பார்க்கவிலை. வெயில் கொட்டிக்கிடந்த நாளில் மிகத் தெலைவுக்குச் சென்றும் அவனை பார்க்கமுடிவில்லை. யாரையும் குறைகூறக்கூடாது? எதைப் பற்றியும் விபரிக்க முடியாதிருக்கி…

  20. இரவல் உணர்வுக் கவிஞனின் கண்ணீர்..... கவிதை - இளங்கவி.... இரவல் உணர்வுக் கவிஞனின் இதயத்து வலிகள் சில வரிகளாய்....... சுமங்களாவின் தங்கையின் சோகத்தில்... அமங்களமான எங்கள் தங்கைகளைப் பார்க்கிறேன்..... மாலைச் சூரியன் மறையும் நேரம் நம் தங்கைகளின் இதயங்களோ இடைவிடாமல் படபடக்கும்.... மரணத்தின் வாசலில் கழியப்போகும் பல மணி நேரங்கள் வந்து நிற்கும்..... நிமிடங்கள் செல்லச் செல்ல அவள் நிழலே தன்னைப் பயமுறுத்தும்.... நீண்ட ஓர் இரவுக்காய் அவள் நெற்றியோ வியர்த்து நிற்கும்..... எம் தங்கைகளின் அம்மணக் கிடக்கைகள்.... அவன் மதுவெறியில் கிடக்கும் சந்தனப் படுக்கைகள்.... தற்காலிக விடுதலையின் பின் அவள் உடையெல்லாம் இரத்தங்கள்...... போருக்கு…

  21. Started by putthan,

    தொண்டர்களாள் வளர்ந்த தலைவனுக்கு சரித்திரம் உண்டு தொண்டர்களாள் வளர்ந்த எதிர்கட்சி தலைவனுக்கும் சரித்திரம் உண்டு தொண்டா உனக்கு உண்டோ ஓர் சரித்திரம். ரசிகர்களாள் வளர்ந்த கதாநாயகனுக்கு சரித்திரம் உண்டு. ரசிகர்களாள் வளர்ந்த வில்லனுக்கும் சரித்திரம் உண்டு. ரசிகா உணக்குண்டோ சரித்திரம். பக்தரால் வளர்ந்த சாமிகளிற்கு சரித்திரம் உண்டு பக்தரால் வளர்ந்த ஆசாமிகளிற்கும் சரித்திரம் உண்டு. பக்தா உனகுண்டோ சரித்திரம். வாசகர்களாள் வளர்ந்த எழுத்தாளரிற்கு சரித்திரம் உண்டு வாசகா உனகுண்டோ சரித்திரம். போராட்ட குழு தலைவனுக்கு சரித்திரம் உண்டு ஒட்டுகுழு தலைவனுக்கும் சரித்திரம் உண்டு. போராளி உனகுண்டோ சரித்திரம். உனக்கு நீயே நாயகனாக,தலைவன…

  22. வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது.. வளைய முட்கம்பிகள் வற்றியொடுங்கிய உடலும் முகமும் வயதையும் வடிவையும் வைத்து விடிய விடிய நடக்கும் விசேட விசாரணைகள் நாளைய பொழுதாவது நன்றாய் விடியாதாவென நாட்களை எண்ணி புரளும் நள்ளிரவென்றில் மப்படித்த சிப்பாயின் கைகள் என்னை தட்டியிழத்துப்போகும் கைத்துவக்கின் அடி கவட்டுத்துவக்கின் இடி கசக்கப்படும் முலைகளில் கடி அடி...இடி...கடி.. அடுத்தடுத்து விசாரித்தில் அடிவயிற்றில்வலி மெல்லப்பெய்த மழையில் மகிழமரத்தில் …

  23. தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…

  24. ____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …

  25. மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.